ஞாயிறு, 11 நவம்பர், 2012
புதன், 16 மே, 2012
கலர்ஃபுல் அரிசி கொழுக்கட்டை
தேவையானவை:
பு.அரிசி - 200 கிராம்
தேங்காய் - 3 தேக்கரண்டி
முந்திரி பருப்பு சிறிது
கடலை பருப்பு சிறிது
மிளகாய் - 2
கடுகு, உ.பருப்பு தாளிக்க
பெருங்காயம் சிறிது
கேரட் - 1
உப்பு தேவையானளவு
செய்முறை:
புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உ.பருப்பு, கடலை பருப்பு , மிளகாய், பெருங்காயம் போட்டு தாளிக்கவும். அத்துடன் முந்திரி பருப்பு, கேரட் துறுவல் மற்றும் தேங்காய் போட்டு வதக்கவும்.
ஒரு பங்கு அரிசிக்கு ஒரு பங்கு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும். தண்ணீர் கொத்திக்கும் போது, அரைத்து வைத்துள்ள மாவை போட்டு கிளறவும்.
மாவு பதத்திற்க்கு வந்த பின், அடுப்பை நிறுத்தவும். இட்லி பாத்திரத்தில் இந்த மாவை பிடித்து வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
சுவையான கலர்ஃபுல் அரிசி கொழுக்கட்டை ரெடி.......
செவ்வாய், 15 மே, 2012
ஜவ்வரிசி கஞ்சி
தேவையானவை:
ஜவ்வரிசி 50கிராம்
மோர் சிறிது
உப்பு தேவையானளவு
செய்முறை:
ஜவ்வரிசியை எண்ணெய் இல்லாமல் வறுத்து ஆற வைக்கவும். இதை மிக்ஸியில் போட்டு பொடி பண்ணவும்.
இதில் தண்ணீர் ஊற்றி கஞ்சி பதத்திற்க்கு காய்ச்சவும்.
ஆறிய பின்பு சிறிது மோர் மற்றும் உப்பு போட்டு குடிக்கவும்.
வெயிலுக்கு ஏற்ற குளுமையான உணவு.
Special பூரி
கோதுமை 1 கப்
ரவா - 2 ஸ்பூன்
சிறிது தயிர்
தேவையான அளவு உப்பு, எண்ணெய்
செய்முறை:
தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, அரைமணி நேரம் ஊறவைத்து, விரும்பிய வடிவத்தில் பிரட்டி எடுத்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பூரி நல்ல உப்பி வர, ஒரு ப்ரட் ஸ்லைஷ் ஓரம் நீக்கி மிக்ஸியில் பொடியாக்கி மாவுடன் சேர்க்கவும்.
திங்கள், 14 மே, 2012
மசாலா சப்பாத்தி
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி
பச்சைமிளகாய் -1
இஞ்சி - சிறிதளவு
உப்பு தேவையானளவு
சிறிது தயிர் (புளிப்புக்காக)
செய்முறை:
கொத்தமல்லி தழை, புதினா, பச்சைமிளகாய், இஞ்சி இவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
கோதுமைமாவு,தயிர், உப்பு இவற்றுடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து, அரை மணி நேரம் ஊரவைத்து, சப்பாத்தி போடவும்.
மிகவும் சுவையான மசாலா சப்பாத்தி தயார்.
சனி, 18 ஜூன், 2011
செல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்

- முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.
- ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.
- குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.
- உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
- காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
- தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
- நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
- செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
- செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
- செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
- செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.
- போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.
வடைக்கதையும் வைரமுத்துவும்...!
எங்கே சென்றது? அது ஒரு தாவணி மேகங்கள் சூழ்ந்த காடு; பொன்மாலைப் பொழுது. பச்சைப் புல்வெளி ஓரம், பன்னீர்க் குடங்களின் சாரம்! ஒரு ரோஜாப்பூ ஆளான நேரம். அங்கே சென்றது காகம்!
விதைக்குள் இருந்து வந்த விருட்சம், அங்கே வளர்ந்து நின்றது பல வருஷம். அதன் கிளைகளில் சென்று அமர்ந்தது அந்தச் சொப்பனக் காகம்!
அந்தக் கனவு வடையைத் தன் வீரிய விரல்களுக்கு இடையே வைத்து, நேரிய நயனத்தால் சுற்றுமுற்றும் பார்த்தது; கூரிய அலகால் கொத்திச் சாப்பிட முனைந்தது. அப்போது...
பூவுக்குள் பூகம்பம் போல் புறப்பட்டு வந்தது ஒரு நரி! அந்த நரி, நர்த்தக நரி! நாலடியார் நரி! நீதியறிந்து சேதி சொல்லும் போதிமரத்துச் சாதி!
நர்த்தக நரி கார்மேக காகத்தைப் பார்த்தது; உடல் வியர்த்தது. நரியின் மனத்தில் ஒரு வெறி வேர் விட்டது! அந்த ராஜ வடையை அபகரிக்க, அதன் நந்தவனத்து மூளை நாச வேலை செய்தது. நரி அதுவாகக் காகம் அருகே மெதுவாக... ஒரு இதுவாகச் சென்றது!
“ஓ, உலக அழகியே! உள்ளூர் மோனலிஸாவே! கறுப்பு முந்திரியே! கந்தர்வ சுந்தரியே! நீ பார்க்கவே எவ்வளவு அழகு! நீ மட்டும் கானம் இசைத்தால், எருதுக்கும் விருது கிடைக்கும். சர்ப்பம்கூட கர்ப்பம் தரிக்கும்!” என்றது.
இந்த இடத்தில்தான் சரித்திரம் பிறக்கிறது; பூகோளம் புரள்கிறது. நரியின் தேவ எண்ணத்தில் ஈட்டி பாய்ந்தது. கார்மேகக் காகம் நரியை வெறுத்தது; பாட்டை ஒறுத்தது; அது பின்வருமாறு பதிலிறுத்தது...
“நான் வைரமுத்துவின் வீட்டு வாசலில் வளர்ந்த காகம். மெட்டிருந்தால்தான் பாடுவேன்; இல்லையேல் இல்லை!” என்று சொல்லிப் பறந்தது; நரியின் சூது இறந்தது!
கதை முடிவில், பாரதிராஜாவின் குரலில் வைரமுத்துவின் வாசகங்கள்...
‘ஓ, புழுதியின் புத்திரர்களே! இது ஒரு யுகப் புரட்சி! இன்னும் இருநூறு வருஷங்களுக்கு இந்த வாடகை வடை கதை வைரமுத்துவின் வாசலுக்கு விலாசம் சொல்லிக்கொண்டே இருக்கும். அங்கு ஆனந்தங்கள் பரவசம்! அனுமதி இலவசம்!’
திங்கள், 6 ஜூன், 2011
இஞசி - கொத்தமல்லி சாறு
பிரெட் சமையல்
வியாழன், 26 மே, 2011
வாழைத்தண்டு ரசம்
வாழைத்தண்டு 1/2 அடி துண்டு ஒன்று
துவரம்பருப்பு 1/2 கப்
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
பொடி பண்ண:
மிளகாய் வற்றல் 2
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
--------
செய்முறை:
வாழைத்தண்டை பொடியாக நறுக்கிக்கொண்டு சிறிது தண்ணீர் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் துவரம்பருப்போடு (இரண்டையும் தனித்தனி அடுக்கில்) வைத்து வேகவைக்கவும்.
மிளகாய் வற்றல்,மிளகு,சீரகம் மூன்றையும் சிறிது எண்ணையில்வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சைமிளகாயை நீட்ட வாக்கில் கீறிக்கொள்ளவும்.
------
குக்கரில் இருந்து எடுத்த வாழைத்தண்டை அதிலிருந்த தண்ணீருடன் மிக்சியில் நன்கு அரைத்து வடிகட்டவேண்டும்.
வெந்த துவரம்பருப்பை நன்றாக கடைந்துகொண்டு அதனுடன் வாழைத்தண்டு சாறு,தக்காளி,பச்சைமிளகாய்,அரைத்த பொடி,தேவையான உப்பு
எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் கடுகு,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை தாளித்து அரிந்த கொத்தமல்லித்தழையை சேர்க்கவும்
செவ்வாய், 24 மே, 2011
மனம் மகிழுங்கள் - 41 : குறையற்ற மனம் - அளவற்ற மகிழ்வு
ஒருவர் உத்தியோகம் செய்கிறார்; ஆனால் அதில் அவருக்கு அறவே விருப்பமில்லை; அவருக்குச் சம்பந்தமில்லாத வேலை. இன்னொருவர் - அவரது தகுதிக்கேற்ற ஊதியமில்லை; விருப்பத்திற்கேற்ப ஓய்வோ விடுமுறையோ கிடைப்பதில்லை. மனம் லயிக்கும் கலை, விளையாட்டு எதையும் கற்க இயலவில்லை; மனதிற்குப் பிடித்த காரியம் எதுவும் செய்ய முடியவில்லை; இல்லை... முடியவில்லை... என்று ஏகப்பட்ட ‘லை’ களுடன் ஒவ்வொருவருக்கும் தனிமை; மன அழுத்தம்; விரக்தி.
ஒருவர் இத்தகைய பரிதாபகர நிலைக்கு ஆட்பட்டுவிடுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.
பட்டியல்!
அவர் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் பட்டியல்!
அரசாங்கத்தின்மீது குறை; மனைவி மீது குறை; தம் குழந்தைகளின் மீது குறை; நாள் நட்சத்திரத்தின் மீது குறை; முதலாளி மீது குறை; பொருளாதாரம், தம் துரதிருஷ்டம், குறைவான கல்வித் தகுதி, மாமன், மச்சான், மாமனார் என்று குறை... குறை... கூடை நிறையக் குறை.
குறைகளில் நியாயம் இருக்கலாம்; அநியாயத்திற்கு அபத்தக் களஞ்சியமாக இருக்கலாம். அதன் அலசல் இங்கு கருப்பொருளன்று.
இந்தக் குறைகளெல்லாம் சேர்ந்து சேர்ந்து அவரது மனதில் ஒரு தீர்மானம் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம். ‘குறைகள் என் வாழ்க்கையில் வற்றாத ஊற்று என்றாகிவிட்டது. எனவே நான் வாழ்க்கையில் துயருற்றுக் கிடக்க எனக்குப் போதுமான நியாயம் இருக்கிறது...’ என்று விரக்தி! கன்னத்தில் கை!
தப்பு! இது பெரும் தப்பு! நமது எண்ணத்திற்கு ஏற்பவே வாழ்க்கை அமைகிறது. செயலுக்கு ஏற்பவே முடிவு அமைகிறது.
முழ நீளத்திற்கோ, சென்னையின் நூறடி ரோடு அகலத்திற்கோ உங்களிடம் குறைகளின் பட்டியல் இருக்கலாம். அவை வெற்று லிஸ்ட்! இணைய விரும்பும் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் இருக்க, தன்னிஷ்டத்திற்குத் தயாரித்துக் கொள்ளும் வேட்பாளர் பட்டியல் போல் அது உபயோகமற்ற பட்டியல். நீங்கள் விரும்பியவாறு உங்களால் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இயலாவிட்டால், விரும்பிய செயல் புரிய இயலவிலலை என்றால், எத்தகைய சாக்குப்போக்குச் சொல்லியும் பயனில்லை.
ஏன்?
தலையைச் சுற்றிப் பாருங்கள்; அல்லது ஊரைச் சுற்றிப் பாருங்கள். நொடிதோறும் எத்தனை பேர் எத்தனை சவால்களை வென்று கொண்டிருக்கிறார்கள்?
கல்வித் தகுதி இல்லாதவர் கூடச் சாதனையின் விலாசத்தைச் சுமந்து கொண்டு திரிகிறார்.
‘உலகப் பொருளாதாரமே சுணங்கிக் கிடக்கிறதாம்; அதனால் நான் இன்று வேலைக்குப் போக மாட்டேன்’ என்றெல்லாம் மனைவியிடம் வம்பு பண்ணாமல் சிரமப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பவர் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
ஏகப்பட்ட பிள்ளை குட்டிகளுடன் இருப்பவர் உற்சாகமாய் இருக்கிறார்;
மனைவியுடன் சண்டைக் கோழியாய் வாழ்ந்தவர் ஒரு சந்தர்ப்பத்தில் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு அணுதினமும் காதல் என்று இல்லறத்தை மகிழ்வாய் மாற்றிக் கொண்டுவிட்டார்.
தெருவுக்குத் தெரு இப்படி நிறைய உதாரணங்கள் காணலாம்.
இவர்களெல்லோரும் நமக்கு என்ன உணர்த்துகிறார்கள்? வாழ்க்கையில் அவர்கள் அவர்களுக்கான தேவைகளைச் சாதிக்க நினைத்தார்கள். அதைச் சாதிப்பது முக்கியம் என்று தங்களது மனவோட்டத்தை ஒருமுகப்படுத்திக் கொண்டார்கள். அதில் லயித்துச் செயல்பட்டார்கள். அவ்வளவுதான்!
சூழ்நிலைகளையும் மக்களையும் நாம் குறை சொல்லிக் கொண்டேயிருந்தால் நமது மனோபாவம் மாறிவிடும் அதற்கேற்ப நமது மன மகிழ்வின் விகிதாச்சாரம் நேரெதிராய் அமைந்துவிடும். எந்த அளவு குறையோ அந்த அளவிற்கு மன மகிழ்வு குறையும்.
நமக்கு வாழ்க்கை என்பது ஒரு முறையே. அந்த ஒரேயொரு வாய்ப்பில் ‘என்னால் ஏன் மன மகிழ்வுடன் இருக்க முடியவிலலை’ என்று குறைகளின் பட்டியலைப் பக்கம் பக்கமாய் எழுத ஆரம்பித்தால், விஷயம் ஒன்று மட்டுமே!
நீங்கள் மன மகிழ்வடைய முயலவில்லை.
அதையெல்லாம் ஓரமாய் ஒதுக்கிவிட்டு மகிழ்வுடன் வாழ்வதற்கான வழிவகைகளைத் தேடினால் போதும். உங்கள் மனம் தயாராகிவிடும். கொஞ்சம் முயன்று பாருங்கள். “அட! மனம் மகிழத் தயார்” என்பதை உணர்வீர்கள்.
திங்கள், 2 மே, 2011
ஹம்மூஸ்
வெள்ளை கொண்டை கடலை - ஒரு கப்
கொண்டை கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து மசிக்கவும்.
மனம் மகிழுங்கள் -40- கேளுங்கள் ராசாவே!
நாம் விரும்புவதை அடைய வேண்டுமானால் கேட்க வேண்டுமாம். ‘கேட்டுப் பெறு’ என்கிறார்கள்.
‘என்ன கேட்க வேண்டும்; எதைக் கேட்க வேண்டும்’ என்கிறீர்களா?நம்மிடம் பொதுவாய் ஒரு குணம் உண்டு. யாரிடமும் எதையும் கேட்கக் கூச்சம். கூர்ந்து ஆராய்ந்து, கூறு போட்டு அதைத் தயக்கம், பயம் என்று விதவிதமாகவும் சொல்லலாம்.
அதே நேரத்தில் நேர் எதிர்மாறாய், எங்கெல்லாம் கேட்கக்கூடாதோ அங்கெல்லாம் கூச்சம் மறந்து போகும்!
லஞ்சம், கமிஷன், டொனேஷன், எதற்கெடுத்தாலும் இலவசம் இத்தியாதி. இதையெல்லாம் பார்த்து ‘ஆமாமாம், இந்த நாடே உருப்படாது’ என்று சலித்துக் கொள்பவர்கள் பெண் வீட்டில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு, டௌரி, சீர், செனத்தி, கார், நகை, நட்டு, லொசுக்கு என்று கேட்க வெட்கப்படுவதில்லை.
வேடிக்கையாய் இல்லை?
கேட்டுப் பெறுதல் நம் உலக வாழ்வின் செயல்பாடுகளுக்கு, சாதனைகளுக்கு அவசியம். ஆனால் அதை முறையாய்ப் பின்பற்றாமல் போவதில் நிகழ்கிறது பிழை.
வாழ்க்கையில் நாம் வேண்டுவதெல்லாம் நடப்பதில்லை என்று பலரும் அங்கலாய்க்கிறோம்; நம்பிக்கை இழக்கிறோம். ஆனால் நமக்குத் தேவையான உதவிகளை உரிமைகளை கேட்டுப்பெற ஏன் மறுக்கிறோம்; தயங்குகிறோம்?
"பிறருக்கு உதவுவது எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் எனக்கு ஏதாவது வேண்டுமென்றால்தான் பிறரிடம் கேட்கப் பிடிக்காது" ஏன் அப்படி?
நம் மனமறிந்து தாமாய் அனைவரும் நமக்கு உதவ வேண்டும் என்றால் அது சாத்தியத்திற்கு அப்பாற்பட்டது. கடைக்கு மளிகை வாங்கச் சென்று ஓரமாய்க் கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தால், "ஸார் முகத்தைப் பார்த்தால் அவருக்கு ஒரு கிலோ சர்க்கரை தேவை போலிருக்கிறது" என்று கடைக்காரர் நமக்குத் தேவையான பொருள்களைக் கட்டிக் கொடுத்துவிடுவாரா என்ன?
நமக்கு வேண்டியதை நாம் கேட்டுப்பெறுவதில் தப்பே இல்லை. அதற்குரிய நியாயங்கள் பல உள்ளன.
தேவையான உதவிகளை வேண்டிப் பெறுவது அதற்கு நாம் தகுதியுடையவர்களே என்ற நம்பிக்கையை உங்களது மனதில் அது ஏற்படுத்துகிறது.
கேட்டுப் பெறுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. நீங்கள் பிறரிடம் உங்களது தேவைகளைத் தெரிவிக்காதபோது அவர்கள் அதை அறியாமல் போகக்கூடும். அல்லது தாமாகவே அறிந்திருந்தாலும் மறந்து போய் உங்களைத் தவிர்த்துவிடக் கூடும். விளைவு? உங்களது மனதில் ஏமாற்றம். உங்கள் மனதிலுள்ளதை நீங்கள் வெளிப்படுத்தாதபோது வயிற்றுக்குள் ஏதோ ஓர் அசௌகரியம் ஏற்பட்டுப்போய் அதன் தாக்கம் பிறகு மனதில் வந்து தங்கும்.
கேட்டுப் பெறுவது என்பது உங்களது மனதில் உள்ளதை நீங்கள் முறையுடன் வெளிப்படுத்தும் முதல் செயல். இறைவனிடம் கையேந்திக் கேட்டால்தானே பிரார்த்தனை! மனதிலுள்ளதை அறியும் இறைவனே "கேள் கொடுக்கிறேன்" என்று சொல்லும்போது மனிதர்களிடம் நம் மனதிலுள்ளதைக் கேட்கத்தானே வேண்டும்? உங்களின் முதலாளி, குடும்பம், நண்பர்கள் என்று யாரிடம் உங்களுக்கு என்னத் தேவையோ நீங்கள் அதை வெளிப்படுத்த வேண்டும். வேண்டுமானால் "இன்னிக்குப் பூரியும் தக்காளித் தொக்கும் செய்து கொடேன்" என்று மனைவியிடம் கேட்டுப் பாருங்கள். பெருமையுடன் சமைத்துப் பரிமாறுவார். கோபமாய்த் திட்டு வந்து விழுந்தால் அது வேறு பிரச்சினை.
‘நீங்கள் உதவிகள் கேட்டுப் பெறும்போது உங்களுக்கு உதவுபவர் மனதில் அது ஓர் அலாதி மகிழ்வைத் தருகிறது. அதனால் கேட்காமல் இருப்பது உங்களது சுயநலம்’ என்று திட்டுகிறார் ஓர் உளவியலாளர். ‘நீங்கள் மட்டும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறீர்கள்; அதனால் மனம் மகிழ்கிறீர்கள். எனில் அந்த வாய்ப்பைப் பிறருக்கும் அளித்து அவர்களும் மனம் மகிழ நீங்கள் உதவ வேண்டாமா?’ என்கிறார்.
கர்ப்பிணிப் பெண்களைக் காணும்போது மக்களிடம் ஏற்படும் மாறுதல்களைக் கவனித்திருக்கிறீர்களா?
ஒருவர் அடித்துப் பிடித்து பஸ்ஸில் ஏறி ஸீ்ட் பிடித்திருப்பார். அப்பொழுது கூட்ட நெரிசலில் அமர இடம் இல்லாமல் நிற்கும் கர்ப்பிணியைக் கண்டால் அவரது நல்லுள்ளம் விழிப்படைந்து உடனே எழுந்து, "நீ உக்காந்துக்கோம்மா". பிரதியுபகாரமற்ற அந்த உதவி அவருக்குப் பெருமை.
மீட்டருக்குச் சூடு வைத்துக் கொதிக்கக் கொதிக்க ஓடும் ஆட்டோக்களின் முதுகில் பார்த்தால் "பிரசவத்திற்கு இலவசம்".
தொழிலோ, திருமணமோ, கார் வாங்க வேண்டுமோ, வேலை தேட வேண்டுமோ, என்ன காரியமோ - சிலர் தாங்கள் நினைத்ததை நினைத்தபடியே வெற்றிகரமாய் அடைவதைக் காணலாம். அதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, அவர்கள் தங்களுக்கு வேண்டியதை யாரிடம் எப்படிக் கேட்டுப் பெறவேண்டும் என்று அறிந்து வைத்திருப்பதே!
தேவைப்படும் உதவிகளைப் பிறரிடம் கேட்பதில் கௌரவக் குறைச்சல் இல்லை என்பதை உணர வேண்டும். இன்று பைக் ரிப்பேர் எனில் அலுவலகம் செல்ல நண்பர்களிடம் ‘லிஃப்ட்’ கேட்கிறோமில்லையா?
ஆனால் முக்கியமான ஒன்று! கேட்டுப் பெறுவதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
கேட்கக் கூடாதது யாசகம், கையூட்டு, வரதட்சணை, இலவசம் போன்றவை. ‘பெண்களிடம் வயது’ என்று வால்தனமாய்க் குறும்பர் யாரேனும் பின்னூட்டம் இடலாம். எதற்கெடுத்தாலும் பிறரைத் தொணதொணத்து ஏதாவது கிடைக்குமா என்று பிறாண்டுவது என்பதெல்லாம் கேட்டுப் பெறுவதல்ல. மக்கள் அதை விரும்புவதில்லை. பிறகு உங்களைப் பார்த்தாலே ஓட்டப் பந்தயம் ஆரம்பித்து விடுவார்கள்.
மனமறிந்து தானாய் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்தால் அது சொற்பமாய் யதேச்சையாய் நடக்கலாம்; எப்பொழுதுமே நடக்காது.
எனவே, தேவைகளை, உதவிகளை, உரிமைகளைக் கேட்டுப் பெறுங்கள். ‘வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்.’
சனி, 23 ஏப்ரல், 2011
மாணவர்களுக்கு பயன்தரும் இணைய தளங்கள்
என தேடி செல்ல வேண்டி இருந்தது. இன்று அவ்வாறு இல்லை இணையம் மூலம் அத்தனையும் உங்கள் உங்களின் இல்லத்திலே பெறமுடியும்.
அந்த வகையில் மாணவர்களுக்கு பயன்தரும்
இணைய தளங்களை பட்டியலிடுகிறேன்.
1 . http://www.textbooksonline.tn.nic.in/ இதனை
தமிழ அரசின் கல்வி அமைச்சு இதனை உருவாக்கியுள்ளது .
இதிலே 12 ம் வகுப்பு வரை தமிழ் , அறிவியல் ,
கணக்கு என பாடப்புத்தகங்கள் சேமிக்கப்பட்டுள்ளன,
2 . http://www.alfy.com/ இதில் சிறுவர்களுக்கான
விளையாட்டுக்கள், மற்றும் நிறம்திட்டுதல்
வீடியோ கிளிப்ஸ் என விளையாட்டுடன்
கற்றலை மேம்படுத்துகிறது. இந்த தளம் .
3 . http://www.coolmath4kids.com/ இந்த தளம்
குழந்தைகளின் கணித அறிவு ஆற்றலை
விளையாட்டுடன் கற்று தருகிறது.
4 http://kids.yahoo.com/இது குழந்தைகளுக்காக
யாஹூ நிறுவனத்தின் படைப்பாகும்.
5 . http://kalvimalar.dinamalar.com/tamil/default.asp இது
தினமலர் நாளிதழின் கல்விக்கான படைப்பாகும்
இதிலே மாணவர்களுக்கான தகவல்கள் குவிந்து
இருக்கின்றன .
6 . http://www.educationatlas.com/படிக்கும் திறனைச்
சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து
கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல்,
உங்களுடைய தனிப்பட்ட படிக்கும் திறன் குறித்து
அறிந்து கொள்ளுதல் அவற்றினை மேம்படுத்துதல்
போன்றவற்றினை இத்தளம் சிறப்பாக கூறுகிறது.
7 .http://www.learn-english-online.org/LessonA/LessonA.htm
ஆங்கில அறிவினை ஆரம்பத்தில் இருந்தே வளர்த்து
கொள்வதற்கான தளம்.
8. http://www.tamilnotes.com/ தமிழ் இலக்கண அறிவை வளர்த்து
கொள்வதற்கான இணையம்
Egg சப்பாத்தி ரோல்
- எண்ணெய் - 4 ஸ்பூன்
- கடுகு, உளுந்து, கருவேப்பிலை - கொஞ்சம்
- பெரிய வெங்காயம் - 2 - பொடியாக அரிந்தது
- பச்சை மிளகாய் - 1
- முட்டை - 3
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- உப்பு
- மிளகு தூள் - 2 ஸ்பூன்
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- முட்டை அனைத்தையும் உடைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முட்டை வேகும் வரை வதக்கவும்.
- கடைசியாக மிளகுதூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடலாம்.
- சப்பாத்தி
- லெமன் ஜூஸ்
- பொடியாக அரிந்த வெங்காயம்
இயற்கை கலரிங் செய்முறை !
“பொதுவாகவே, தலைக்கு அடிக்கடி கலரிங் பண்ணுகிறவர்களுக்கும் ஹேர்டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு, வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி நரைத்தல் என்று பல பிரச்னைகள் ஏற்படும். இந்த கூந்தல் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு உண்டு.
“கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் முடி நார்மல் நிலைக்கு வரவேண்டும் அதற்கான சிகிச்சை இது…..
1. டீயை வடிகட்டி, அதன் டிகாஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம் இருமுறை தலைக்குக் குளியுங்கள். முதல் தடவை டிகாஷனை மட்டும் தேய்த்துக் குளியுங்கள். இரண்டாவது தடவை டிகாஷனுடன் 2 கடுக்காய் தோலையும் போட்டு கொதிக்க வைத்து, உபயோகியுங்கள்.
2. இதுபோல் ஒரு மாதம் தொடர்ந்து குளித்து வந்தாலே முடியின் வறட்டுத்தன்மை போய்விடும். கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக கருமையாகவும் மாறும். டிகாஷன் சிகிச்சை முடிந்த பிறகு இதைத் தொடங்குங்கள்.
*
3. அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்!
தேங்காய்க் கீற்று 2
வெள்ளைமிளகு 1 டீஸ்பூன்
இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதமான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன் பொடுகுத் தொல்லையும் போகும்.
*
4. கூந்தல் கருகருவென்று வளருவதற்கு:
இளம் மருதாணி இலை 50 கிராம்
நெல்லிக்காய் கால் கிலோ
வேப்பங்கொழுந்து 2 கிராம்…
மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக்குங்கள். இந்த விழுதை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுங்கள். எண்ணெய் தெளிந்து தைலமாகிவிடும். தினமும் தலை வாரும் முன் இந்த தைலத்தைத் தடவி வந்தால் எல்லா பாதிப்பும் மறைந்து, கூந்தல் கருகருவென வளரத் தொடங்கும்.
*
5. இயற்கை கலரிங் முறை:
சீயக்காயுடன் ஒரு பீட்ரூட்டின் சாறை கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.
இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து பாருங்கள். மூன்றே மாதத்துக்குள் உங்கள் கூந்தல் மினுமினுப்பதை உணர்வீர்கள். அதன் பிறகு ஹேர்டையோ, கலரிங்கோ செய்ய வேண்டிய அவசியமே வராது.
அவசரகால முதலுதவிகள்!
திடீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினால் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான காலகட்டங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் ஆபத்திலிருந்து நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும்.
மாரடைப்பு:
மாரடைப்பிற்கான அறிகுறிகள்:
நெஞ்சுவலி. நெஞ்சினைக் கசக்கிப்பிழிவதுபோல் திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே தோன்றுதல்.
இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுதல்.
கத்தியால் குத்துவது போன்று மார்பில் வலி ஏற்படுதல்.
படபடப்பு. மூச்சுவிடச் சிரமப்படுதல் வாந்தி அல்லது கடுமையான அஜீரணம் ஏற்படுதல். காரணம் இல்லாமல் வியர்த்துக் கொட்டுதல். தலைசுற்றுதல் மற்றும் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு.
முதல் உதவி சிகிச்சை:
மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவரைப் படுக்க வையுங்கள். ஆம்புலன்சை வரவழையுங்கள்.
ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் குடிக்கச் செய்யுங்கள். நாக்குக்கு அடியிலும் ஒரு சார்பிட்ரேட் மாத்திரையை வையுங்கள்.
பாதிக்கப்பட்டவருக்கு சுவாச மூச்சு நின்று போயிருந்தால் செயற்கை சுவாசம் கொடுக்க ஆரம்பியுங்கள். தலையைப் பின்பக்கம் உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி மூச்சுக்குழலை நேராக இருக்குமாறு செய்து பாதிக்கப்பட்டவரின் மூக்கின் இரு நாசித்துவாரங்களையும் அழுத்தி மூடிக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள் வாயைப் பொருத்திக்கொண்டு மெதுவாக காற்றை உட்செலுத்துங்கள்.
நாம் காற்றை உள்ளிழுக்கும் போது நம் மார்புப்பகுதி மேல் நோக்கி அசைவதுபோல பாதிக்கப்பட்டவரின் மார்புப்பகுதி மேல்நோக்கி அசைகிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், மேற்கண்ட முறையில் மீண்டும் மீண்டும் செயற்கை சுவாசம் கொடுங்கள். பாதிக்கப்பட்டவர் மூச்சுவிடத் தொடங்கும் வரை இப்படி தொடர்ந்து கொடுங்கள்.
தீக்காயத்திற்கான முதல் உதவி:
சாதாரண தீக்காயமாக இருந்தால் அதற்குரிய களிம்பு மற்றும் ஸ்பிரே மூலம் குணப்படுத்தலாம்.
தீக்காயத்தில் தொடர்ச்சியாக தண்ணீரை ஊற்றிக் குளிர்ச்சியாக வைத்திருங்கள்.
பாதிக்கப்பட்டவருக்குத் தலைசுற்றல், தளர்ச்சி, தாங்கமுடியாத ஜுரம், நடுக்கத்தோடு உளறுதல் மற்றும் உடல் வியர்த்து, விரைத்து குளிர்ந்துபோனால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
வெட்டுக்காயம்:
சின்னஞ்சிறு வெட்டுக்காயமானால் காயத்திலுள்ள தூசித் துகள்களை அப்புறப்படுத்திவிட்டு ஆன்ட்டிபயாட்டிக் களிம்பினைக் காயத்தின்மீது போடலாம். காயத்தை சுற்றிக் கட்டு போடுங்கள். தினமும் புது பேண்டேஜ் துணிகொண்டு கட்டுப் போடுங்கள்.
வெட்டுக்காயம் நீண்டநாட்களாக ஆறாமல் இருந்து, அதிலிருந்து சீழ் வடிதல், மற்றும் ஜுரம் வந்தால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
குறிப்பு:
கண்ணாடிப்பிசிறு போன்றவை ரொம்ப ஆழத்தில் உள்ளே சென்றிருந்தால் அதை அகற்ற நீங்கள் முயற்சி செய்யவேண்டாம்.
எலும்பு முறிவு:
கையிலோ அல்லது காலிலோ அடிபட்டு எலும்பு முறிவு ஏற்படும்போது கை அல்லது கால் விரல்களில் உணர்ச்சி இருக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், நரம்பு மண்டலம் அல்லது முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டிருக்கும். அதனால், உடனடியாக பாதிக்கப்பட்டவரை டாக்டரிடம் கொண்டு செல்ல வேண்டும். டாக்டர் பார்க்கும் வரை கை கால்களை அசைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கைவிரல் அல்லது கால் விரல்களில் காயம்பட்டிருந்தால் விரல்களை அசைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
எலும்புமுறிவுக் காயத்தில் எலும்பு வெளியே தெரிந்தால், அதைச் சுத்தமான துணியால் மூடி டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் அழுத்தி நீவுதலோ அல்லது வெளியில் தெரிகின்ற எலும்பினை உள்ளே பழைய நிலைக்கு அமுக்கி வைக்கவோ, நேரே நிறுத்தி வைக்கவோ முயற்சி செய்யாதீர்கள். எலும்புமுறிவுக் காயத்திற்கு மேல் அல்லது கீழ் உள்ள மூட்டுக்களை ஆட்டவோ அசைக்கவோ கூடாது.
டாக்டரை பார்ப்பதற்கு முன்னால், எலும்புமுறிவு ஏற்பட்டவருக்கு தண்ணீரோ வேறு எந்த நீராகாரமோ அல்லது உணவோ கொடுக்கக்கூடாது.
Thanks to : Dinakaran.com





