Kitchen Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Kitchen Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 டிசம்பர், 2010

சமையல் பொருட்கள், காய்கறிகளின் ஆங்கில பெயர்கள்.


தமிழ் ENGLISH
1
பாதாம் பருப்பு ALMOND
2
பெரும் சீரகம் ANISE SEEDS
3
கொட்டை பாக்கு AREACANUT
4
அவல் அரிசி BEATEN RICE
5
கடலை பருப்பு BENGAL GRAM DAL
6
கடலை மாவு BENGAL GRAM FLOUR
7
பாக்கு BETEL NUT
8
உளுத்தம் பருப்பு BLACK GRAM DAL
9
உளுத்தம் மாவு BLACK GRAM FLOUR
10
புழுங்கல் அரிசி BOILED RICE
11
பொறிக்கடலை BOILED BENGAL GRAM DAL
12
மொச்சை பருப்பு BROKEN BEANS
13
வெண்ணெய் BUTTER
14
மோர் BUTTER MILK
15
சூடம் CHAMPHOR
16
ஏலக்காய் CARDAMOM
17
முந்திரி பருப்பு CASHEWNUTS
18
விளக்கெண்ணெய் CASTOR OIL
19
லவங்கபட்டை CINNAMON
20
கிராம்பு CLOVES
21
நாட்டு சக்கரை COUNTRY SUGAR
22
கொத்தமல்லி விதை CORIANDER SEEDS
23
தயிர் CURD
24
சுக்கு DRY GINGER
25
வெந்தயம் FENUGREEK SEEDS
26
பூண்டு GARLIC
27
நெய் GHEE
28
நல்லெண்ணெய் GINGELLY OIL
29
எள் GINGELLY SEEDS
30
இஞ்சி GINGER
31
பாசி பருப்பு GREEN GRAM DAL
32
வேர்கடலை GROUND NUT
33
கடலை எண்ணெய் GROUND NUT OIL
34
ஊது பத்தி INCENSE STICKS
35
வெல்லம் JAGGERY
36
மண்ணெண்னை KEROSENE
37
காராமணி LENTIL BEANS
38
பால் MILK
39
கடுகு MUSTARD
40
வேப்பம் பூ NEEM FLOWER
41
ஜாதிக்காய் NUTMEG
42
நெல் PADDY
43
புழுங்கல் அரிசி PAR BOILED RICE
44
மிளகு PEPPER
45
கசகசா POPPY SEEDS
46
திராட்சை RAISINS
47
மிளகாய் வத்தல் RED CHILLIES
48
துவரம் பருப்பு RED GRAM DAL
49
அரிசி RICE
50
அரிசி மாவு RICE FLOUR
51
குங்குமப்பூ SAFRON
52
ஜவ்வரிசி SAGO
53
உப்பு SALT
54
சேமியா SEMOLINA
55
சக்கரை SUGAR
56
கல்கண்டு SUGAR CANDY
57
புளி TAMARIND
58
ஓமம் THYME SEEDS
59
துவரம் பருப்பு THOOR DAL

60 மஞ்சள் TURMERIC
61
மஞ்சள் பொடி TURMERIC POWDER
62
சேமியா VERMICELLI
63
கோதுமை WHEAT
64
கோதுமை மாவு WHEAT FLOUR
65
பூசணிக்காய் ASH GOURD
66
கீரைத்தண்டு AMARANTH STEM
67
வாழை பழம் BANANA
68
வெற்றிலை BETEL LEAVES
69
இலந்தை பழம் BHIR FRUIT
70
பாகற்காய் BITTER GOURD
71
சுரைக்காய் BOTTLE GOURD
72
கத்திரிக்காய் BRINJAL
73
முட்டைக்கோஸ் CABBAGE
74
கொத்தவரங்காய் CLUSTER BEANS
75
குடை மிளகாய் CAPSICUM
76
தேங்காய் COCONUT
77
சேப்பங் கிழங்கு COLOCASIA
78
கொப்பரை தேங்காய் COPRA
79
கொத்தமல்லி CORIANDER LEAVES
80
வெள்ளரிக்காய் CUCUMBER
81
கறிவேப்பிலை CURRY LEAVES
82
பேரிச்சம் பழம் DATES
83
முருங்கைக்காய் DRUMSTICKS
84
சேனைக்கிழங்கு ELEPHANT YAM
85
நெல்லிக்காய் GOOSEBERY
86
பச்சை மிளகாய் GREEN CHILIES
87
பச்சை பட்டாணி GREEN PEAS
88
வெண்டைக்காய் LADIES FINGER
89
எலும்பிச்சம் பழம் LIME FRUIT
90
மாம்பழம், மாங்காய் MANGO
91
மாவடு TENDER MANGO
92
வெங்காயம் ONION
93
வாழைக்காய் PLANTAIN
94
வாழைப்பூ PLANTAIN FLOWER
95
வாழைத்தண்டு PLANTAIN STEM
96
உருளைக்கிழங்கு POTATO
97
பரங்கிக்காய் PUMPKIN
98
முள்ளங்கி RADISH
99
பீர்க்கங்காய் RIBBED GOURD
100
அவரைக்காய் SABRE BEANS
101
புடலங்காய் SNAKE GOURD
102
சக்கரவள்ளி கிழங்கு SWEET POTATO
103
தக்காளி TOMATO
104
கருணைக்கிழங்கு YAM
105
மரவள்ளி கிழங்கு TAPIOCA

செவ்வாய், 12 ஜனவரி, 2010

26 things u can do with toothpaste....

Although the primary use of toothpaste is to clean and improve the aesthetic appearance and health of teeth, there are also 26 other things that you can use it for. Every household has one and every household uses it at least twice a day. And because of the common availability of toothpaste, you can try everything below. Remember, use only white paste.

1.Removes stain from cloth

To take out all kinds of stain like ink or lipstick. Squeeze some on the spot, scrub and rinse.

2.Even out scratches on CD / DVD

If the screen freezes, take out the disc, put some toothpaste on it, scrub and clean it off.

3.Cleans diamond ring

Just squeeze a little on a used toothbrush, wet the ring, scrub gently, rinse and your diamond ring should be look sparkling new.

4.Cleans silver

Toothpaste can be used to polish any kind of silver. It really does bring out the shine in silverwares.

5.Placate burns

Right after you get burnt, put it on. It helps to relieve the sting.

6.Removes crayon from painted walls

Rub the marks with the toothpaste and a damp rag. Wipe with water to get rid of residue.

7.Remove carpet stains

Squeeze some onto the carpet, scrub, rinse and let it dry.

8.Relieves insect bites

Spread a little over either of these and you’ll feel soothed and no itches. Mosquito, flea and ant bites work especially well.

9.Keep girl babies’ bows in their hair

If they don’t have much hair this is particularly useful. It doesn’t pull it out, it just washes out.

10.Clean your nails

Teeth and nails are made of the same material. To clean your nails, squeeze some on top of a toothbrush, wet your nails and brush them thoroughly. Be amazed by the sparkle.

11.Clean shoes

Scrubbing toothpaste with a wet toothbrush over the boots, working shoes and rubber part of sneakers will work. It can also be used to remove scuffs.

12.Put up posters

You can use toothpaste to put up posters without damaging the wall. However, avoid using it for collector posters. It can damage the ink over time.

13.Use it to temporarily seal holes

Can be used as a spackle to fill nail holes. This sounds evil, but you can use it right before you move out of your rented apartment. =P

14.Clean around the bathroom

Use it to clean shower doors and rings around the bath tub. It has an abrasive so that is why it works good.

15.Clean your vehicle’s headlight lenses

Put some toothpaste in a bowl with some water. Use a buffer pad and clean off fog caused by dirt and bugs hitting them.

16.Clean model cars

Hobbyists who collect and build model cars, robots and action figures can certainly use toothpaste to make them nice and shiny.

17.Remove scratches on your watch crystal

Dab some on the watch and scrub it with tissue.

18.Treat acne

Be very careful when using this. Use it at most once a week. Just dab a small amount on a pimple before bed, wake up and it will dry up.

19.Prevent fog in your swimming goggles

Just wipe it on, clean it off. Works well for me.

20.Clean piano keytops

A dab of toothpaste, a soft cloth and some rubbing will usually clean piano keytops and turn them white again.

21.Deodorize smelly hands

Wash your hands with a dab of toothpaste and it will remove smells like onions and other unpleasant odors.

22.Remove scratches on glassware

Polish with a squeeze of toothpaste. Your glassware should be shining in no time.

23.Remove beach tar

Getting that black beach tar on your feet can put a small crimp in your vacation, but it is easy enough to remove. Just rub it with some non-gel toothpaste and rinse.

24.Deodorize baby bottles

Works for sour smelling baby bottles. Scrub with toothpaste and a bottle brush and the bottles should end up smelling clean and fresh.

25.Cleans clothes iron

The mild abrasive in non-gel toothpaste is just the ticket for scrubbing the gunk off the bottom plate of your clothes iron. Apply the toothpaste to the cool iron, scrub with a cloth, then rinse clean.

26.Remove water marks from furniture

To get rid of those telltale watermark rings left by sweating beverages, gently rub some non-gel toothpaste on the wood with a soft cloth.

சனி, 21 மார்ச், 2009

வினிகர்

பொடுகுக்கு
தலையில் பொடுகால் அவதிப்படுபவர்கள், ஒரு தேக்கரண்டி வினிகரில் 3 தேக்கரண்டி தண்ணீர் விட்டு கலந்து, சிறிது சூடு பண்ணி தலையில் மசாஜ் செய்து, 15 நிமிடங்களுக்கு பின் குளித்தால் பொடுகு தொல்லை குறையும். வாரம் இரு முறை செய்தால் நல்ல பலன் தெரியும்.


for Baby - Pamper rash போக

குழந்தையை குளிப்பாட்டியபின் சிறிது நேரம் வினிகர் ஊற்றிய(2 ஸ்பூன்) தண்ணீரில் உட்கார வைத்தால் rash வராது.

ஜன்னல் பளபளக்க:

ஒரு லிட்டர் தண்ணீரில் 1டம்ளர் வினிகர் ஊற்றி ஜன்னல் கம்பிகளை துடைத்துவிட்டு ஒரு பேப்பர் கொண்டு துடைக்கவும்.

பாத்திரம் கழுவும்போது:

எதாவது பாட்டிலில் பாதியளவு தண்ணீர், பாதியளவு வினிகர் கலந்து பாத்திரம் கழுவ்வ பயன்படுத்தவும்.

குக்கரில் துர்நாற்றதை போக்க:
டம்ளர். குக்கர், பிளஸ்க் கறையாகவும், துர்நாற்றம் அடிக்கும் இதை போக்க வினிகர் கலந்து கழுவவும்.

பித்தாளை பாத்திரங்கள் பளபளக்க:

ஒரு பங்கு வினிகர் 5பங்கு தண்ணீர் கலந்து சுத்தம் செய்யவும்.

பெயின்ட் கரை போக்க:கண்ணாடிகளின் உள்ள பெயிண்டை போக்க சூடான வினிகர் கலந்து துடைக்கவும்.

மைக்ரோ ஓவனின் வாடை போக்க:

இறைச்சி செய்த பின்பு வரும் வாடையினை போக்க ஒரு கப்பில் சிறிது வினிகர் ஊற்றி 1 நிமிடம் ஹையில் வைத்து ஆப் செய்யவும்.

தரை பளபளக்க:

வீட்டின் தரைகளை சுத்தபடுத்தும் போது வினிகர் கலந்து துடைக்கவும்,

கேஸ் ஸ்ட்வ்வை சுத்தம் செய்ய

வினிக்ரை துணியில் ஊற்றி துடைக்கவும்.

பசை,கோந்து முதலியவை கட்டிவிட்டால் சிறிது வினிகரை கலந்து இறுக்கம் தளர்ந்து மீண்டும் உபயோகப்படுத்தலாம்.

வாஷ்பேசின் கறைகள் போக்குவதற்க்கு துணியில் வினிகர் முக்கி துடைத்தால் போதும்.

ஜன்னல் கண்ணாடியில் பெயின்ட் பட்டிருந்தால் வினிகர் சூடாக்கி தேய்க்கவும்

இறைச்சி சமைக்கும் போது

மீன்களை எண்ணெயில் பொறிக்கும்போது...

மீன்களை எண்ணெயில் பொறிக்கும்போது அதன் வாசனை அடுத்தடுத்த வீடுகளுக்கும் செல்லும். அடுத்த வீட்டுக்காரர்கள் சைவம் என்றால் அவர்கள் மிகவும் சங்கடப்படுவார்கள். இதைத் தவிர்க்க மீன்களைப் பொறிக்கும் பொழுது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவர்த்தியைப் பொருத்தி வைத்துக் கொள்ளலாம்.

இறைச்சி மிருதுவாக இருக்க...

இறைச்சி மிருதுவாக இருக்க அதனை வினீகரில் சிறிது நேரம் வைத்தால் போதும்

கோழித் தோலை எளிதாக உரிக்க...

கோழித் தோலை உரிக்கும்முன் சிறிதளவுத் தோலை மட்டும் முதலில் உரித்து அதனை ஒரு பேப்பரால் இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளவும். தோல் தானாக பேப்பருடன் ஒட்டிக்கொள்ளும்.

கோழிக்கறி சமைக்கும்போது...

கோழிக்கறியை சமைக்கும்போது அதிலுள்ள கொழுப்பை நீக்க வேண்டுமானால் சுத்தம் செய்யும்போதே கோழியின் தோலை நீக்கவும். இவ்வாறு செய்வது உடல் எடையையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும்.

கறியை விரைவாக சமைக்க

கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும்.


புதன், 11 மார்ச், 2009

Kitchen Tips - 2

* டீ போடும் போது, டீத்தூளுடன் சர்க்கரையை சேர்த்து கொதிக்க விடாதீர்கள்; டீயின் சுவை குறைந்து விடும்.

* கீரை மசியல் செய்ய, கீரையை கடையும் போது, அதனுடன் கால் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கடைய, கீரை தனி சுவையுடன் இருக் கும்.

* சாம்பார் மணக்க வேண்டுமா? சாம்பாரை இறக்குவதற்கு முன், ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் மல்லி, ஒரு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொரித்து, சிறிது கரகரப்பாக அரைத்து கலக்கினால், சாம்பார் "கம... கம...'வென இருக்கும்.

* வெங்காயக் குழம்பு, புளிக்குழம்பு தயாரிக்கும் போது, கடுகுடன் சிறிது சோம்பு சேர்த்து தாளிக்கவும். வாசனையுடன் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.

* சோடா உப்பை அடிக்கடி உணவில் சேர்க்காதீர்கள். வயிற்று உபாதைகளை ஏற்படுத்தக் கூடும்.

* ரவா தோசை ஓட்டலில் கிடைப் பது போல் "மொறுமொறு'வென இருக்க வேண்டுமா? ரவை, மைதா, அரிசிமாவு 1:1:1 என்ற விகிதத்தில் கலந்து மிளகு, சீரகம், பெருங்காயம், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சுடவும்.

* ரசத்தை இறக்கி வைத்ததும், ஒரு துளி நெய் சேர்த்து பச்சை கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கிப் போடுங்கள். மணமும், ருசியும் எடுப்பாய் இருக் கும்.

* ரஸ்க் அல்லது ட்ரை பிரட்டை மிக்சியில் நன்றாகப் பொடி செய்து, ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெயில் வறுத்து வைத்துக் கொள்ளுங்கள். வறுவல், கிரேவி போன்றவற்றில் உப்பு அதிகமாகிவிட்டால், ரொட்டித்தூள் சிறிது தூவி அதிகப்படி உப்பை சரிகட்டி விடலாம். சாதாரணமாகவே, வறுவல், கிரேவி போன்றவற்றிற்கு சுவை கூட்ட இந்த வறுத்த ரொட்டித்தூள் ஒரு ஸ்பூன் சேர்க்கலாம்.

சுகமான தூக்கத்திற்கு...

* தூங்கும் போது தலைக்கு இரண்டு தலையணை வைத்துக் கொள்ளாதீர்கள். முதலில் சுகமாய் இருக்கும் காலப்போக்கில் கழுத்து வலி நிச்சயம்.

* தலையணையே வைக்காமல் படுப்பது நல்லது. மூளைக்கு ரத்தம் சீராகச் செல்லும். கழுத்து வலியும் ஏற்படாது.

* பழகியாச்சே என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? அதிக உயரம் இல்லாத மெலிதான தலையணை வைத்துக் கொண்டு தூங்கப் பழகுங்கள்.

* அடுத்தது படுக்கை விஷயம். மிருதுவான மெத்தை நல்லது அல்ல. கடினமான மெத்தையே முதுகுக்கு நல்லது.

Kitchen Tips -1

நம் முன்னோர், உணவே மருந்தாக இருக்கும் வகையில் சமையல் செய்தனர். அதனால் தான் அவர்கள் மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்தனர். தனியே மருந்து என எதுவும் அவர்களுக்கு தேவைப்பட வில்லை. இங்கு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் சில பொருட்களும், அவற்றின் மருத்துவக் குணங்களும் கொடுக்கப் பட்டுள்ளன. உணவுப் பொருட்களின் தன்மைக்கேற்ப அவற்றை நாம் பயன்படுத்தினால், நாமும் மருத்துவர்களை நாட வேண்டியதில்லை என்பது நிச்சயம்.


பூண்டு: பூண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பூண்டிற்கு கபத்தை வெளிக்கொணரும் தன்மை உள்ளது. இது, ஜலதோஷம் மற்றும் இருமல் போன்ற பொதுவான நோய் தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது. நோய் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது பூண்டு. இது, வாய் மற்றும் பல் ஈறுகளுக்கு மிகவும் நல்லது.


தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு பல் பூண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது. அது மட்டுமின்றி, உணவிலும் சிறிது பூண்டு சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வதால், பல் ஈறுகளில் நோய்த் தொற்று ஏற்படுவது தவிர்க்கப்படும். மேலும், பல்களில் ஏதேனும் அடர்ந்த கறைகள் படிந்திருந்தாலும், அவற்றைப் போக்குவதற்காக கடுமையாக பல் துலக்கக்கூடாது.


கேரட்: கேரட்டில் புரதச்சத்து, கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்-பி மற்றும் இரும்பு சத்து ஆகியவை காணப்படுகிறது. கண் தொடர் பான பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க கேரட் சாப்பிடுவது நல்லது. கேரட்டை சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம். மேலும், கேரட்டை பச்சையாக கடித்து உண்பதால் பல் ஈறு பலப்படுகிறது. தினமும் கேரட்டை பச்சையாகச் சாப்பிட்டால், ஒருவருக்குத் தேவையான கால்சியம் சத்தை எளிதில் பெற முடியும். அது மட்டுமல்லாமல், குறைந்த எடையுடைய குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்கவும் கேரட் உதவுகிறது.


தக்காளி: தினமும் ஒரு டம்ளர் தக்காளிச் சாறு குடித்தால், உடல் நலத்திற்கு மிகவும் நல்லது; இது, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தக்காளியில் காணப்படும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் லைக் கோபீன் போன்ற ரசாயனங் கள், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், புற்றுநோய் செல்கள் உருவாவதை எதிர்த்து போராடவும் உதவுகிறது. தக்காளி, வைட்டமின் ஏ, சி மற்றும் கே, பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவற்றை உடலுக்கு அளிக்கிறது.


ஒரு சாதாரண மனிதனுக்கு தினசரி தேவைப்படும் வைட்டமின்-சி சத்தில் பாதியை, ஒரு நடுத்தர அளவிலான தக்காளி சாப்பிடுவதால் கிடைக்கிறது. ஸ்ட்ரோக் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுவதையும் தக்காளி தடுக்கிறது. ஒரு நடுத்தர தக்காளியில் 20 கலோரிகள் மட்டுமே காணப்படுகிறது.நன்கு சிவந்த தக்காளிகளைப் பயன்படுத்துவதே நல்லது. அதிக சிவப்பு நிறத்திலான தக்காளியில் தான், அதிகளவில் பீட்டா கரோட்டின் மற்றும் லைக்கோபீன் காணப்படுகிறது. தக்காளியை குறைந்த அளவிலான எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும்.