Sweets லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sweets லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

இருட்டுக்கடை அல்வா

தேவையான பொருள்கள்:
சம்பா கோதுமை – 200 கிராம்
சர்க்கரை – 750 கிராம்
நெய் – 400 கிராம்

thirunelveli iruttuk kadai halwa (ready for sales)
செய்முறை:
  • சம்பா கோதுமையை முதல் நாளே தண்ணீரில் ஊறவைத்து கிரைண்டரில் நன்றாக அரைக்க வேண்டும்.
  • நைசாக அரைக்க அரைக்க கோதுமை பாலாக வர ஆரம்பிக்கும். அதை ஒரு துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
  • அடுப்பில் அடிகனமான கொஞ்சம் பெரிய வாணலியாக வைத்து, அதில் பாலை ஊற்றிக் காய வைக்கவும்.
  • பால் லேசாகச் சூடானதும், சர்க்கரைச் சேர்த்துக் கிளற ஆரம்பிக்க வேண்டும். கிளறுவதை இனி நிறுத்தவே கூடாது.
  • கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெய்யைச் சேர்த்துக் கிளற வேண்டும்.
  • விடாமல் கிளறிக்கொண்டே இருந்தால், அல்வா நல்ல குங்குமச் சிவப்பில் வரும்.
  • இறுகலான பக்குவத்தில் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும், இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி, ஆறவைத்து உபயோகிக்கலாம்.
* கல் உரல் அல்லது கிரைண்டரில் தான் அரைக்கலாம். மிக்ஸியில் அரைக்கக் கூடாது
* முந்திரி மாதிரி பருப்புகள், கலர் எதுவும் சேர்க்கக் கூடாது.

புதன், 9 பிப்ரவரி, 2011

அசோகா






தேவையானவை

பாசி பருப்பு : 1 கப்

கோதுமை மாவு : 1 கப்

மைதா ; 1 /2 கப்

சர்க்கரை : 4 கப்

நெய் : 1 கப்

ஏலக்காய் தூள் : 2 ஸ்பூன்

கேசரி பவ்டர் : 1 சிட்டிகை

முந்திரி : 20 ,

ஜாதிக்காய் : சிறிது

குங்கும பூ : சிறிது


செய்முறை

பாசி பருப்பை வாசம் வரும் வரை வறுத்து குக்கர்ரில் போட்டு வேக வைத்து (3 விசில்) குழைய மசித்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்து கொள்ளவும். மைதா,கோதுமை மாவை கலந்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு வாசம் வரும் வரை ரோஸ்ட் ஆக வறுத்து கொள்ளவும், ஆறிய உடன் இதை ஒரு கப் தன்நீர்ரில் சிறிது கேசரி கலர் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் கொஞ்சம் நெய் விட்டு முந்திரி வருத்து அதில் வேகவைத்த பருப்பு ,சக்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.

சர்க்கரை உருகி திரண்டு வரும் போது ஸிம்மில் வைத்து கொண்டு இப்ப மெதுவாக கரைத்து வைத்து உள்ள மைதா,கோதுமை மாவு கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிளறவும். கட்டி இல்லாமல் நன்றாக கிளறி கொண்டு இருக்கவும்.தண்ணீர் இல்லாமல் கெட்டியாக வரும் வரை அடுப்பை சிறு தீயில் வைத்து நெய் முழுவதயும் சேர்த்து கிளறி நெய் பிரிந்து வரும் போது அடுப்பை நிறுத்தி ஜாதிக்காய், பாலில் கரைத்த குங்குமபூ, ஏலக்காய், வறுத்த திராட்சை தூவி இறக்கவும்.

சூப்பர் அசோகா அல்வா ரெடி! விசேசங்களுக்கு ஏற்ற ஸ்வீட் !

செய்து பார்த்து சுவைத்து பின்பு உங்கள் கருத்துகளை கூறுங்கள்