Soup லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Soup லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 ஏப்ரல், 2011

ஆப்பிள் சூப்


தேவையானவை:
ஆப்பிள் 1
தக்காளி 2
பால் 1 கப்
மைதாமாவு 1 டீஸ்பூன்
மிளகுதூள் 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையானது
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்


செய்முறை:

ஆப்பிளைத் துருவி பாலில் வேகவைக்கவும்.

தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்துக் கொள்ளவும்.

வேகவைத்த ஆப்பிளையும்,தக்காளியையும் மிக்சியில் அடிக்கவும்.

மைதாமாவை லேசாக வறுத்து ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்கவைக்கவும்.

அதனுடன் ஆப்பிள்,தக்காளி விழுதை சேர்க்கவும்.நன்றாக கிளறவும்.

பின்னர் உப்பு,சீரகத்தூள்,மிளகு தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

இறக்கிய பின் வெண்ணையை மேலே போடவும்.

Thanks to : annaimira.blogspot.com

புதன், 2 மார்ச், 2011

ஓட்ஸ் சூப்



தேவையானவை:

ஓட்ஸ் ஒரு கைப்பிடி அளவு
பால் ஒரு கப்
பூண்டு 3 பல் (விரும்பினால்)
மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
வெண்ணெய் 2 டீஸ்பூன்
உப்பு சுவைக்கேற்ப.

செய்முறை:

பூண்டுப் பல்லை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். வெண்ணெயை உருக்கி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அதில் ஓட்ஸை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்குங்கள்.

2 கப் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வேகவிட்டு பால், உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மிளகுத்தூள் சேர்த்து பரிமாறுங்கள்.

செவ்வாய், 2 நவம்பர், 2010

பாகற்காய் சூப்

தேவையான பொருட்கள்

பெரிய பாகற்காய் - 1
எலுமிச்சம்பழம் - 1 மூடி
காய்ச்சிய பால் - 1/2 கப்
நெய் ‍ 1 தேக்க‌ர‌ண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
சூப் பவுடர் - 1 தேக்க‌ர‌ண்டி
தாளிக்க -
சோம்பு - 1/4 தேக்க‌ர‌ண்டி
மிளகு - 1/4 தேக்க‌ர‌ண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்க‌ர‌ண்டி
பட்டை - 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை

பாகற்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் அலச வேண்டும். சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக விட வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு சோம்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இத்துடன் வெந்த பாகற்காய், சூப் பவுடர் சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும். அதனுடன் உப்பு சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும். கடைசியாக பால் சேர்த்து கொத்துமல்லி தூவி பரிமாற வேண்டும்.

நண்டு மிளகு சூப்

தேவையான பொருட்கள்:

தேவையானப் பொருட்கள் பெரிய நண்டு - 2
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோள மாவு - ஒரு தேக்கரண்டி
சோளம் - ஒரு டின்
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ள வேண்டும். நண்டு கறியில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து பிறகு அதில் சோளம், சோள மாவு, உப்பு மற்றும் மிளகு சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.

கொதித்த பிறகு முட்டையின் மஞ்சள் கருவை அடித்து ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கலக்க வேண்டும். அதன் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவையும் சேர்த்து சிறிது நேரம் கலக்கி அடுப்பில் இருந்து இறக்கி பரிமாற வேண்டும்.