Beauty Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Beauty Tips லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 ஏப்ரல், 2011

இயற்கை கலரிங் செய்முறை !



“பொதுவாகவே, தலைக்கு அடிக்கடி கலரிங் பண்ணுகிறவர்களுக்கும் ஹேர்டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு, வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி நரைத்தல் என்று பல பிரச்னைகள் ஏற்படும். இந்த கூந்தல் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு உண்டு.


“கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் முடி நார்மல் நிலைக்கு வரவேண்டும் அதற்கான சிகிச்சை இது…..


1. டீயை வடிகட்டி, அதன் டிகாஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம் இருமுறை தலைக்குக் குளியுங்கள். முதல் தடவை டிகாஷனை மட்டும் தேய்த்துக் குளியுங்கள். இரண்டாவது தடவை டிகாஷனுடன் 2 கடுக்காய் தோலையும் போட்டு கொதிக்க வைத்து, உபயோகியுங்கள்.


2. இதுபோல் ஒரு மாதம் தொடர்ந்து குளித்து வந்தாலே முடியின் வறட்டுத்தன்மை போய்விடும். கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக கருமையாகவும் மாறும். டிகாஷன் சிகிச்சை முடிந்த பிறகு இதைத் தொடங்குங்கள்.

*

3. அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்!

தேங்காய்க் கீற்று 2
வெள்ளைமிளகு 1 டீஸ்பூன்

இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதமான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன் பொடுகுத் தொல்லையும் போகும்.

*

4. கூந்தல் கருகருவென்று வளருவதற்கு:

இளம் மருதாணி இலை 50 கிராம்
நெல்லிக்காய் கால் கிலோ
வேப்பங்கொழுந்து 2 கிராம்…

மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக்குங்கள். இந்த விழுதை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுங்கள். எண்ணெய் தெளிந்து தைலமாகிவிடும். தினமும் தலை வாரும் முன் இந்த தைலத்தைத் தடவி வந்தால் எல்லா பாதிப்பும் மறைந்து, கூந்தல் கருகருவென வளரத் தொடங்கும்.

*

5. இயற்கை கலரிங் முறை:

சீயக்காயுடன் ஒரு பீட்ரூட்டின் சாறை கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.

இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து பாருங்கள். மூன்றே மாதத்துக்குள் உங்கள் கூந்தல் மினுமினுப்பதை உணர்வீர்கள். அதன் பிறகு ஹேர்டையோ, கலரிங்கோ செய்ய வேண்டிய அவசியமே வராது.

Thanks to :azhkadalkalangiyam.blogspot.com

புதன், 9 பிப்ரவரி, 2011

இயற்கை கலரிங்...


"பொதுவாகவே, தலைக்கு அடிக்கடி கலரிங் பண்ணுகிறவர்களுக்கும் ஹேர்டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு, வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி நரைத்தல் என்று பல பிரச்னைகள் ஏற்படும். இந்த கூந்தல் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு உண்டு.

"கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் முடி நார்மல் நிலைக்கு வரவேண்டும் அதற்கான சிகிச்சை இது.....

டீயை வடிகட்டி, அதன் டிகாஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம் இருமுறை தலைக்குக் குளியுங்கள். முதல் தடவை டிகாஷனை மட்டும் தேய்த்துக் குளியுங்கள். இரண்டாவது தடவை டிகாஷனுடன் 2 கடுக்காய் தோலையும் போட்டு கொதிக்க வைத்து, உபயோகியுங்கள்.

இதுபோல் ஒரு மாதம் தொடர்ந்து குளித்து வந்தாலே முடியின் வறட்டுத்தன்மை போய்விடும். கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக கருமையாகவும் மாறும். டிகாஷன் சிகிச்சை முடிந்த பிறகு இதைத் தொடங்குங்கள்.

அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்!

தேங்காய்க் கீற்று 2
வெள்ளைமிளகு 1 டீஸ்பூன்

இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதமான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன் பொடுகுத் தொல்லையும் போகும்.

கூந்தல் கருகருவென்று வளருவதற்கு:

இளம் மருதாணி இலை 50 கிராம்
நெல்லிக்காய் கால் கிலோ
வேப்பங்கொழுந்து 2 கிராம்...

மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக்குங்கள். இந்த விழுதை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுங்கள். எண்ணெய் தெளிந்து தைலமாகிவிடும். தினமும் தலை வாரும் முன் இந்த தைலத்தைத் தடவி வந்தால் எல்லா பாதிப்பும் மறைந்து, கூந்தல் கருகருவென வளரத் தொடங்கும்.

இயற்கை கலரிங் முறை:

சீயக்காயுடன் ஒரு பீட்ரூட்டின் சாறை கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.

இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து பாருங்கள். மூன்றே மாதத்துக்குள் உங்கள் கூந்தல் மினுமினுப்பதை உணர்வீர்கள். அதன் பிறகு ஹேர்டையோ, கலரிங்கோ செய்ய வேண்டிய அவசியமே வராது
.

ஜலதோஷம் பிடிக்காத மருதாணி!


"மருதாணி போடுவதால் வெள்ளை முடி நிறமாகும். தொடர்ந்து நரைக்காது. அதோடு, முடி கொட்டுவதும் நின்று போகும். ஆனால், வெறும் மருதாணி, முடியை வறட்சியாக்கிவிடும். மருதாணியுடன் மேலும் சில அயிட்டங்களை சேர்த்தால் கூந்தல் மிருதுவாகும். சளி பிடிக்காது. சைனஸ் பிரச்னை இருப்பவர்களும் பயன்படுத்தலாம்.

இந்த மருதாணி பேஸ்ட்டை இரண்டு முறைகளில் தயாரிக்கலாம்.

மருதாணி பவுடர் கால் கிலோ
கடுக்காய் 25 கிராம்
துளசி பவுடர் 25 கிராம்
நெல்லிக்காய் 50 கிராம்
டீத்தூள் டிகாஷன் 50 கிராம்
2 எலுமிச்சம்பழங்களின் சாறு
யூகலிப்டஸ் ஆயில் 4 துளி
ஆலீவ் ஆயில் 4 டீஸ்பூன்

இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கிரைண்டரில் அரைத்து பேஸ்ட்டாக்குங்கள்.

இதை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். மூன்று அல்லது நான்கு மாதம் வரை கெடாது. இந்த "பேக்"கை வாரம் ஒரு முறை தலைக்குப் போட்டு, அரை மணி நேரம் கழித்து அலசுங்கள்.

மருதாணி இலை 250 கிராம்
கொட்டை நீக்கிய கடுக்காய் 25 கிராம்
சுத்தம் செய்யப்பட்ட துளசி இலை 25 கிராம்
கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய் 25 கிராம்

இவற்றை நன்றாக நசுக்கி கிரைண்டரில் அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் யூகலிப்டஸ் ஆயில் 10 துளி, ஆலீவ் ஆயில் 4 டீஸ்பூன், 2 எலுமிச்சம்பழங்களின் சாறு, டீத்தூள் டீகாஷன் 100 கிராம் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.

இந்த "பேக்" இரண்டு மாதம் வரை கெடாது.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ஹோம் ஃபேஷியல்

ஹோம் ஃபேஷியல் (சமையலறையில் இருக்கு ஃபேஷியல் அயிட்டம்)

(க்ளென்சிங் மில்கிற்கு பதிலாக)

சிறிதளவு பால், கொஞ்சம் கோதுமை மாவு, கொஞ்சம் சர்க்கரை

பேக் போடுவதற்கு

முட்டையின் வெள்ளைக் கரு
முல்தானி மட்டி சிறிதளவு (பன்னீரில் கரைத்துக்கொள்ள வேண்டும்)

கஸ்தூரி மஞ்சல்
தேன் - 1 ஸ்பூன்
லெமன் ஜூஸ்

அனைத்தையும் நன்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.பேஷியல் ஆரம்பிக்கும் முன் ப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.

பேஷியல் செய்முறை :

1) தலை முடியை நன்றாக வாரி உச்சியில் கொண்டையாக க்ளிப் செய்து விடுங்கள். முதலில் கழுத்து, முகத்தை நன்றாக சோப் போட்டு கழுவுங்கள்.

2) முதலில் பாலை 2 விரல்களால் தொட்டு, அடுத்து கோதுமை மாவில் தொட்டு, பிறகு சீனியில் தொட வேண்டும். இதனை கழுத்து, முகத்தில் தடவ வேண்டும். ஒவ்வொரு முறையும் பால்,மாவு, சீனீயை இவ்வாறு தொட்டு கன்னங்களில் வட்ட வடிவமாகவும். மூக்கின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு விரல்களினால், மேலும், கீழுமாகவும், நெற்றியில் வட்ட வடிவமாகவும், தாடையில் அடிப்பகுதியை கீழ்ப்புறமாகவும், மேல் பகுதியை வட்ட வடிவமாகவும் தடவுங்கள். கழுத்தில் மேல் புறமாக தடவுங்கள்.

3) இப்போது கண்ணங்களை வட்ட வடிவமாகவும், கண்களை சுற்றி வட்டமாகவும், மெதுவாகவும், தாடையை கீழிருந்து மேலாகவும், நெற்றியில் நடுவில் ஆரம்பித்து புருவம் முடியும் வரை கீழாகவும், மீண்டும் கன்னங்களை மேல் புறமாக நன்றாக அழுத்தமாகவும் , உதடுகளில் வட்ட வடிவில், உதடுகளின் ஓரங்களில் நீள்வட்டமாகவும் மசாஜ் செய்யுங்கள். கழுத்தில் எப்போதும் மேல் புறமாக செய்யுங்கள். மசாஜ் செய்யும் போதே முகத்தை செல்லமாக கிள்ளுவது போல செய்யுங்கள்.

4) ஒரு பாத்திரத்தில் கொதிக்கின்ற தண்ணீர் எடுத்து அதில் முகத்தை காட்டி போர்வையால் நன்றாக மூடி ஆவி பிடியுங்கள். முகத்திலிருந்து தண்ணீர் வியர்வையாக வெளிவரும் வரை ஆவி பிடியுங்கள். பின்பு மூக்கின் ஓரங்களில் மெதுவாக அழுத்துங்கள். மூக்கின் நுனியில் இருக்கு பிளாக் ஹெட்ஸை ஒரு டிஷ்யூ கொண்டு துடைத்து விடுங்கள்.இவ்வாறே தாடையில் இருக்கும் அழுக்கையும் நீக்குங்கள்.

5) பிரிட்ஜிலிருந்து பேக்கை எடுத்து கழுத்து, முகத்தில் போடவும். பேக் காயும்வரை வைத்திருந்து கழுவவும். பேக் போட்டு இருக்கும் போது அதிகம் பேசவோ, சிரிக்கவோ கூடாது, பேஷியல் செய்த பிறகு 8 மணி நேரம் முகத்திற்கு எதுவும் போடாதீர்கள்.

செய்து பாருங்கள் ரொம்ப ஈஸி without side effect

புதன், 17 ஜூன், 2009

Black Heads Removal - Easy Way

மூக்கின் இருபக்கமும், மூக்கின் நுனியிலும் இருக்கும் பிளாக் ஹெட்சை போக்க சில வழிகள்
பிளாக் ஹெட்ஸ் முகத்தில் வர காரணமே முகத்தில் வியர்வை,தூசியினால் முகத்தில் சேர்ந்த அழுக்கு வெளி வராமல் அங்கங்கே தங்கிவிடும். இதனால் முகத்தில் கருமை வருகிறது.. இது மூக்கின் மீது சிறு முடி போல் இருக்கும்.
பியூட்டி பார்லரில் இதுக்குனு ஒரு கம்பி வைத்து மூக்கில் அழுத்தி தேய்ப்பாங்க। அது மூக்கில் தழும்புகள் வந்துவிடும்॥ ஆகையால் அப்படி செய்யவேண்டாம்

அரிசி மாவு, தயிர் கலந்து மூக்கின் மீது நன்றாக தேய்க்கவும். ஒருவாரம் தொடர்ந்து இதை போல் செய்தால் பிளாக் ஹெட்ஸ் மறைந்து போகும்.

வீட்டிலே செலவே இல்லாமல் ஓர் டிப்ஸ்
நன்றாக கொதிக்கும் நீரில் (ஆவிபிடிக்கும் பதம்) மூக்கை மட்டும் நன்றாக காட்டி வியர்வை வர சின்ன சில்வர் ஸ்பூனின் பின் பகுதியினை (கூர்மையான
வளைந்த பகுதி) மூக்கின் பிளாக் ஹெட்ஸ் மீது அழுத்தி இழுத்தால் அதில் வந்துவிடும். வெள்ளை துணியில் துடைத்து பார்த்தால் அதில் இருக்கும்.

இந்த குறிப்பு இணையத்தில் இருந்து சேகரித்தது.

கைகளை பளபளப்பாக்க

தேவையான பொருட்க்கள்

1/2 கப் தேங்காய் எண்ணெய்

1/2 கப் சர்க்கரை

1 எலுமிச்சை பழம் (சாறு பிழிந்து)

காட்டன் கை உறை (gloves)

செய்முறை (இரவு தூங்குவதுக்கு முன்பு):

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் (கை உறை தவிர) ஒரு கோப்பையில் போட்டு, கையை 1 நிமிடம் உள்ளே வைத்து, கழுவுவது போன்று செய்யவும். ஒரு நிமிடத்திற்க்கு பிறகு, கையை வெளியே எடுத்து, சர்க்கரை துகள்கள் ஒட்டியிருந்த்தால், அதை ஒரு பேப்பர் டவல் எடுத்து துடைக்கவும்.

அதன் பிறகு, காட்டன் உறைக்குள் கையை விட்டு ஒரு இரவு முழுதும் அப்படியே வைக்கவும். விடிந்து பார்த்தால், மெருகேறிய உங்கள் கைகள் உங்களுக்கு நன்றி சொல்லும்!

திங்கள், 18 மே, 2009

இஞ்சி இடுப்பளகா(கி)

இடுப்பளவு குறைய வேண்டும் என்பது இன்றைய மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. நம் நாட்டில் பெரும்பாலும் ஆண்களோ, பெண்களோ தங்கள் இடுப்பளவைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. அப்படியே எப்போதாவது நினைத்தாலும், சரியான பயிற்சி என்ன என்பது நிறைய பேருக்குத் தெரிவதில்லை.

இடுப்பளவு, வயிறு அளவு ஆகியவற்றை ஏன் குறைக்க வேண்டும்?

இந்தக் கேள்வி சிலருக்குத் தோன்றலாம்.

ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால் இடுப்பு, வயிறுப் பகுதில் உள்ள கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால் மாரடைப்பு அதிகம் வருகிறது என்கிறார்கள். ஆகவே இந்த இடுப்பு, வயிறு அளவுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது மிக அவசியம்.

இடுப்பளவை எப்படிக் குறைக்கும் வழிகள்:

1. ஹிந்து ஸ்குவாட்ஸ் - (சாதாரண ஸ்குவாட்ஸ்தான்) - இந்தப் பயிற்சியானது ஆக்ஸிஜன் தேவையை அதிகப்படுத்தி கொழுப்பை சக்தியாக எரிப்பதனால் இடுப்பில் உள்ள கொழுப்பு குறைகிறது. இதற்கு எந்த விலையான உபகரணங்களும் தேவையில்லை.

நேராக நிற்கவும். பின் அப்படியே தோப்புக்கரணம் போட உட்காருவது போல் கீழே (சிட்அப்ஸ்) குதிகால்வரை அமர்ந்து மறுபடியும் எழுந்திருக்கவும். ஆரம்பத்தில் சிரம்மாக இருந்தாலும் கொஞ்சம் பழகினால் ஈஸியாக வரும். நாம் பள்ளியில்
செய்ததுதானே!

இதனை 100 தடவை வேகமாக 5 நிமிடத்துக்குள் செய்தால் நல்லது.

மறுபடி 100 தடவை 10 நிமிடத்தில் செய்ய வேண்டும்!

2. மேடான பகுதியில் ஏறுதல் - மேடான சாலையிலோ, அல்லது ட்ரெட்மில்லில் 10-15 டிகிரி உயர்த்தி வைத்தோ 15 நிமிடம் நடக்கவும். எளிமையாகத் தெரிகிறதா? செய்து பாருங்கள்.

3. இந்தப் பயிற்சியில் தொப்புள் பகுதி குழிவாக மூச்சை உள்வாங்கி தொப்புள் பகுதி முதுகெலும்பை தொடுவதுபோல் மூச்சை இழுத்துப் பிடிக்கவும். 15-லிருந்து 60 வினாடி வரை அவ்வாறு வைத்து இருக்கவும். 1.75 இன்சிலிருந்து 3 இன்ச் வரை ஒரு மாதம் தொடர்ந்து செய்தால் இடுப்பளவு குறையும்.

4. பக்கவாட்டில் - நேராக நிற்கவும். இடுப்பை இடதுபுறம் முடிந்தவரை வளைக்கவும். வலதுபுறம் வளைக்கவும். இதனை மாறிமாறி செய்யவும்.

5. நேராக நிற்கவும் - இடுப்பை இடது புறம் வளைக்கவும் (TWIST). முடிந்தவரை வளைக்கவும். பின்பு நேராக வந்து வலதுபுறம் இடுப்பை (திருகவும்)வளைக்கவும்.

மூன்று பயிற்சியையும் ஒருமாதம் செய்தால் இரண்டு அங்குலம் இடுப்பு குறைவது உறுதி.

தினமும் 8 குவளை தண்ணீர் அருந்தவும். பழங்கள், காய் அதிகம் சாப்பிடவும். இதனுடன் பொதுவான பயிற்சி, நடை, ஓட்டம் ஆகியவையும் சேரும்போது நிச்சயம் இடுப்பளவு குறையும்








புதன், 8 ஏப்ரல், 2009

தோல் பளபளப்பாக!

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

--------------------------------------------------------------------------------
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

--------------------------------------------------------------------------------
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

--------------------------------------------------------------------------------
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

--------------------------------------------------------------------------------
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

--------------------------------------------------------------------------------
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

--------------------------------------------------------------------------------
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

--------------------------------------------------------------------------------
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

--------------------------------------------------------------------------------
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

--------------------------------------------------------------------------------
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

--------------------------------------------------------------------------------
ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

--------------------------------------------------------------------------------
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

--------------------------------------------------------------------------------
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

--------------------------------------------------------------------------------
பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

--------------------------------------------------------------------------------
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

--------------------------------------------------------------------------------
பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

--------------------------------------------------------------------------------
தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.

--------------------------------------------------------------------------------
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

--------------------------------------------------------------------------------
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

ஞாயிறு, 22 மார்ச், 2009

20 - 20 For Ladies

உடல் அழகிற்கு சரும அழகு முக்கியம். அதற்கான 20 அசத்தல் ஆலோசனைகள்

* - ஒரு நாளைக்குக் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* - பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு பேஸ்ட் போல அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட பீட்ரூட் பேஸ்ட்டை முகத்தில் பூசி 5 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் சுமார் 10 நிமிடங்கள் கழித்து சோப்பை உபயோகித்தோ அல்லது கடலை மாவை உபயோகித்தோ முகம் கழுவ வேண்டும்.

* - சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து அதனுடன் 4 அல்லது 5 துளி பாலைச் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை முகம் மற்றும் உடலில் பூசிக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

* - மஞ்சள் தூள், சந்தனப் பொடி மற்றும் ஆலிவ் எண்ணை கலந்த கலவையை உடலில் பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.

* - பாலை உபயோகித்து சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். பாலின் ஈரப்பதம் சருமத்தை மிருதுவாக்குகிறது.

* - அறையில் எப்போதும் ஈரப்பதம் நிலவுமாறும், அறை வெப்ப நிலை அதிகமாக இல்லாதவாறும் பார்த்துக் கொண்டால் சருமம் உலர்ந்து போகாது.

* - வெந்நீரில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதில்லை. நீண்ட நேரம் ‘ஷவரில்’ நிற்பது சருமத்திற்கு நல்லது.குளித்த பிறகு துண்டை வைத்து முரட்டுத்தனமாக உடம்பை துடைக்கக் கூடாது. மென்மையாக உடம்பின் மேது துண்டை ஒற்றி எடுகக வேண்டும்.

* - வைட்டமின் ‘எ’ மற்றும் ‘சி’ அதிகமுள்ள உணவை உண்டு வந்தால் சருமத்துக்கு நல்லது.

* - கேரட்டைத் துருவி அவிக்க வேண்டும். பின் அதை வெளியே எடுத்து சருமத்தில் பூசிக் கொள்ள வேண்டும். இதனால் அழகான, வழுவழுப்பான சருமம் தோன்றும்.

* - பாலும், எலுமிச்சை சாறும் கலந்த கலவையை முகத்தில் பூசி இயற்கையான முறையில் ‘பிளீச்’ செய்யலாம்.

* - வெயில் நேரத்தில் வெளியே செல்வதால் முகம் கருத்து விடும். இதைத் தடுக்க, வெளியே போய் வந்தவுடன் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளிச் சாற்றை சம அளவில் கலந்து முகத்தில் பூசிக் கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கழித்தே குளிக்க வேண்டும்.

* - கடுகு எண்ணையை உடலில் பூசி 5 நிமிடங்களுக்கு தேய்க்க வேண்டும். அதற்குப் பிறகு கடலை மாவு அல்லது சோப்பை உபயோகித்துக் குளிக்க வேண்டும்.

* - கோதுமை மாவுடன் தயிரைக் கலந்து சருமத்தின் மீது பூசிக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளியுங்கள்.

* - ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் பாலாடையைக் கலந்து சருமத்தின் மீது பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.

* - உடலில் ‘ஃபுளோரின்’ பற்றாக் குறையால் சருமம் சொரசொரப்பாக மாறுகிறது. உணவை சமைத்து உண்பதால் உணவில் இருக்கும் ‘ஃபுளோரின்’ சத்து போய்விடுகிறது. இதைத் தடுக்கப் பச்சைக் காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது நல்லது. வெண்ணை, முட்டைக்கோஸ் போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* - ‘சோடியம்’ பற்றாக்குறையால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுகிறது. இதனால் சருமம் பிசுபிசுவென்றுஆகிறது. வெள்ளரிக்காய்க்கு ‘சோடியம்’ பற்றாக்குறையை தடுக்கும் சக்தி உண்டு. மேலும், கோடைகால்த்தில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் உடல் ஜில்லென்று குளுமையாகி விடுகிறது.

* - சருமத்தின் மீது சொறி சொறியாக வருவது ‘சிலிக்கான்’ பற்றாக் குரையின் அறிகுறியாகும்.பார்லி, தக்காளி, ஸ்டிராபெர்ரி பழம் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினை ஏற்படாது.

* - பாலாடையுடன் கடலை மாவை சேர்த்து கண், புருவம் மற்றும் உதடுகளைத் தவிர்த்து முகத்தின் இதர பகுதிகளில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் கழித்துக் குளித்தால் சருமம் மென்மையாக மாறும்.

* - நீரில் தேனைக் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் சருமம் மினுமினுப்பாக மாறும்.

சனி, 21 மார்ச், 2009

பிளாக் மேஜிக்

கூந்தல் "பிளாக் மேஜிக்"
*************************************

மருதாணி பவுடர் - 100 கிராம்
நெல்லி பவுடர் - 10 கிராம்
பிஞ்சு கடுக்காய் பவுடர் - 10 கிராம்

இவற்றுடன் 25 கிராம் டீ டிகாஷனை சேர்த்து, 1 எலுமிச்சம் பழத்தை பிழிந்து முதல் நாள் இரவே ஊறவையுங்கள். மறுநாள் தலையில் இந்த மாஸ்க் போட்டு நன்றாக காய்ந்ததும் அலசிவிடுங்கள் . வராம் ஒரு முறை இந்த மாஸ்க்கை தவறாமல் போட்டுப் பாருங்கள். கொங்ச நாளிலேயே இருக்கிறா நரைமுடிகள் பழுப்பு நிறத்துக்கு மாறி விடும். இந்த பழுப்பு நிறம் மெல்ல மெல்ல கறுப்பாக மாறிவிடும். மேலும் நரை கிட்ட நெருங்காமல் துரத்திவிடும்.

இதை போட நேரம் இல்லையா? ஒரு சுலப வழி

பிஞ்சு கடுக்காய்,நெல்லிக்காய்,கருவேப்பிலை மூன்றையும் ஒரே அளவில் எடுத்து கொள்ளவும். மூன்றும் மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணையை எடுத்து சூடு பண்ணி, அதில் மூன்றையும் ஊறவிடுங்கள். தலைக்கு குளிக்கும் போதெல்லாம் இந்த எண்ணையை சற்று சூடு பண்ணி, தலையில் நன்றாக தேய்த்து சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும்.

புதன், 11 மார்ச், 2009

பார்லர் போகாமலேயே பளிச்சிட வேண்டுமா?

சருமத்தில் ஏற்படும் கருமையை போக்க, பார்லியை தூளாக்கி, அத்துடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு, பால் ஆகியவற்றை கலக்க வேண்டும்.பின் அந்த கலவையை, வெயில் அதிகமாக படும் இடங்களான முகம், கழுத்து, கை, கால் ஆகிய இடங்களில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து, அவை காய்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சருமத்தில் ஏற்படும் கருமை மறைந்து போய்விடும்.

பியூட்டி பார்லருக்கு சென்று ப்ளீச், பேஷியல் போன்றவை செய்து கொண்டால் அதில் இருக்கும் ரசாயனங்களால், அந்த சமயத்துக்கு நல்லாயிருந்தாலும், நாள்பட முக அழகு கெட்டுவிடும் என்று எண்ணுபவரா நீங்கள்? உங்கள் வீட்டில் இருந்தபடி நீங்களே பேஸ் மாஸ்க் போட்டு உங்கள் முகத்தை பளபளப்பாக ஆக்கிக் கொள்ள முடியும்.
இதோ சில டிப்ஸ் உங்களுக்காக...

எண்ணெய் சருமத்திற்கான பேஸ் மாஸ்க்

மூன்று டீஸ்பூன் முல்தானி மட்டி, ஒரு டீஸ்பூன் தயிர், அரை தக்காளி, ஐந்து துளி ஆரஞ்சு எசன்ஷியல் ஆயில் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்த பின் முகத்தை கழுவ, எண்ணெய் பசை நீங்கி, முகம் பளபளக்கும். இந்த மாஸ்க், சாதாரண மற்றும் எண்ணெய் பசை சருமத்திற்கு உகந்தது. இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், அவை காய்ந்து இறுகி வறண்ட தன்மையை கொடுக்கும். இந்த தன்மை சருமத்தில் காணப்படும், அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சுவதோடு, அழுக்கையும் அகற்றுகிறது.

வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்


முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் சோளமாவு, இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஐந்து துளி ஜெரேனியம் எசன்ஷியல் ஆயில் ஆகியவற்றை கலந்து மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்
நன்கு பழுத்த வாழைப்பழத்துடன், முட்டையின் மஞ்சள் கருவை கலந்து, இரண்டு டீஸ்பூன் சன்பிளவர் ஆயில், ஐந்து துளி ரோஸ் எசன்ஷியல் ஆயில் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த வகை பேஸ் மாஸ்க் வறண்ட மற்றும் மென்மையான சருமத்திற்கு ஏற்றது.


ஒளிரும் சருமம் வேண்டுமா...


50 கிராம் திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், பப்பாளி, தக்காளி ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றை எடுத்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதோடு இரண்டு டீஸ்பூன் தயிர் மற்றும் மூன்று துளி எலுமிச்சை எசன்ஷியல் ஆயில் சேர்த்து, முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென ஒளிரும். ஒளிரும் சருமத்திற்கான இந்த மாஸ்க் பயன்படுத்திய பின் தோல் ஈரப்பதத்துடன், மென்மையாகவும், இளமையாகவும் காணப்படும். இவ்வகை மாஸ்க் அடிக்கடி முகத்தில் பூசினால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.


திங்கள், 2 மார்ச், 2009

Grape Cleanser

Grape juice makes an excellent cleanser for any skin type. Simply split one
or two large grapes, remove pips and rub the flesh over face and neck.
Rinse off with cool water.

Banana Wrinkle Fighter

Banana is wonderful as an anti-wrinkle treatment. Mash 1/4 banana until
very creamy. Spread all over face and leave for 15-20 minutes before
rinsing off with warm water followed by a dash of cold. Gently pat dry.

Egg & Olive Oil Hair Mask

Mix two whole eggs with four tablespoons of olive oil. Smooth through hair.
Wrap head with plastic wrap, and leave in hair for 10 minutes. Rinse well.

Egg & Honey Mask

Mix together 1 tablespoon honey, 1 egg yolk, 1/2 teaspoon almond oil and
1 tablespoon yogurt. Honey stimulates and smoothes, egg and almond oil
penetrate and moisturize, and yogurt refines and tightens pores.

Facial Mask

Squeeze half a lemon and mix the juice with one beaten egg white. Leave
on your face overnight or, for a quick pick-me-up, just 15 minutes. Splash
warm water on your face to rinse. It helps to removes blotches, because
the lemon works as a bleaching agent.