விவேகானந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவேகானந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 பிப்ரவரி, 2011

வாழ்க்கை ?



வாழ்க்கையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி சுவாமி விவேகானந்தர் கூறிய கருத்துக்கள் இதோ உங்களுக்காக!. தயவு செய்து இவற்றை படிக்காதீர்கள். புரிந்து கொள்ளுங்கள் அப்படி புரிந்து கொண்டால் நீங்கள் வாழ்க்கையை பார்க்கும் விதம் நிச்சயம் மாறும்.


வாழ்க்கை ஒரு போட்டி, சந்தியுங்கள்
வாழ்க்கை ஒரு பரிசு, ஏற்றுக்கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு சாகசமான செயல், சாதியுங்கள்
வாழ்க்கை ஒரு வேதனை, சமாளியுங்கள்
வாழ்க்கை ஒரு துன்பம், அதனைத் தோற்கடியுங்கள்
வாழ்க்கை ஒரு கடமை, அதனை நிறைவேற்றுங்கள்



வாழ்க்கை ஒரு விளையாட்டு, அதனை ஆடுங்கள்
வாழ்க்கை ஒரு ஆட்டம், அதை ஆடித்தான் பாருங்கள்
வாழ்க்கை ஒரு தருணம் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு பிரயாணம், அதை முடித்து வையுங்கள்
வாழ்க்கை ஒரு வாக்குறுதி, அதனை நிறைவேற்றுங்கள்
வாழ்க்கை ஒரு சக்தி, அதை உணருங்கள்
வாழ்க்கை ஒரு புதிர், அதை விடுவியுங்கள்
வாழ்க்கை ஒரு லட்சியம், அதை அடைவதை இலக்காக்குங்கள்.

விவேகானந்தர் - வீர வரிகள்


1. ஒரு லட்சியத்திற்காக நீ உன் உயிரையும் அர்பணிக்கக் கூடியவனாக இருந்தால் மட்டுமே நீ ஒரு தலைவனாக விளங்க முடியும்.





2. எதை நீ நினைக்கிறாயோ அதுவாகவே மாறிவிடுவாய். நீ உன்னை பலவீனன் என நினைத்தால் பலவீனன் ஆகிவிடுவாய். உன்னை வலிமை உடையவன் என நினைத்தால் வலிமை உடையவன் ஆகிவிடுவாய்.



3. கொடுக்கும் சக்தி உங்களிடம் இருக்கும் வரையில் கொடுங்கள். அத்துடன் விட்டுவிடுங்கள். அது ஆயிரம் மடங்காகப் பெருகி உங்களிடமே மீண்டும் வரும்.



4. பயமே மரணம். பயமே பாவம். பயமே நரகம். பயமே துன்பம். பயமே துன்மார்க்கம். பயமே தவறான வாழ்க்கை.



5. ஒரு செயலைச் செய்ய நீங்கள் துணிந்த பிறகு, உங்களை உலகமே வாளெடுத்து எதிர்த்து நின்றாலும், மேற்கொண்ட அச்செயலை கைவிடாதீர்கள்.



6. நீ உன்னுடைய லட்சியத்தை ஓராயிரம் தடவை கைக்கொள். ஆயிரம் முறை தோல்வி அடைந்தாலும் நீ மீண்டும் ஒருமுறை கைக்கொள்ள முயற்சி செய்திடு.