சனி, 23 ஏப்ரல், 2011

மாணவர்களுக்கு பயன்தரும் இணைய தளங்கள்

இன்று எம்மை தேடி அத்தனையும் எங்களின் இருப்பிடத்துக்கே வந்து கொன்ன்டிருக்கிறது. அன்று நாம் கல்வி பெற கல்லூரிகள், நுலகங்கள்
என தேடி செல்ல வேண்டி இருந்தது. இன்று அவ்வாறு இல்லை இணையம் மூலம் அத்தனையும் உங்கள் உங்களின் இல்லத்திலே பெறமுடியும்.
அந்த வகையில் மாணவர்களுக்கு பயன்தரும்
இணைய தளங்களை பட்டியலிடுகிறேன்.

1 . http://www.textbooksonline.tn.nic.in/ இதனை
தமிழ அரசின் கல்வி அமைச்சு இதனை உருவாக்கியுள்ளது .
இதிலே 12 ம் வகுப்பு வரை தமிழ் , அறிவியல் ,
கணக்கு என பாடப்புத்தகங்கள் சேமிக்கப்பட்டுள்ளன,


2 . http://www.alfy.com/ இதில் சிறுவர்களுக்கான
விளையாட்டுக்கள், மற்றும் நிறம்திட்டுதல்
வீடியோ கிளிப்ஸ் என விளையாட்டுடன்
கற்றலை மேம்படுத்துகிறது. இந்த தளம் .
3 . http://www.coolmath4kids.com/ இந்த தளம்
குழந்தைகளின் கணித அறிவு ஆற்றலை
விளையாட்டுடன் கற்று தருகிறது.
4 http://kids.yahoo.com/இது குழந்தைகளுக்காக
யாஹூ நிறுவனத்தின் படைப்பாகும்.
5 . http://kalvimalar.dinamalar.com/tamil/default.asp இது

தினமலர் நாளிதழின் கல்விக்கான படைப்பாகும்
இதிலே மாணவர்களுக்கான தகவல்கள் குவிந்து
இருக்கின்றன .

6 . http://www.educationatlas.com/படிக்கும் திறனைச்

சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து
கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல்,
உங்களுடைய தனிப்பட்ட படிக்கும் திறன் குறித்து
அறிந்து கொள்ளுதல் அவற்றினை மேம்படுத்துதல்
போன்றவற்றினை இத்தளம் சிறப்பாக கூறுகிறது.
7 .http://www.learn-english-online.org/LessonA/LessonA.htm
ஆங்கில அறிவினை ஆரம்பத்தில் இருந்தே வளர்த்து
கொள்வதற்கான தளம்.
8. http://www.tamilnotes.com/ தமிழ் இலக்கண அறிவை வளர்த்து
கொள்வதற்கான இணையம்

Thanks to :mahaa-mahan.blogspot.com

Egg சப்பாத்தி ரோல்

என்றைக்கெல்லாம் எனக்கு சீக்ரம் தூக்கம் வருதோ அன்றைக்கெல்லாம் இது தான் எங்க வீட்டு டின்னர் (இந்த சப்பாத்தி-ய மட்டும் என் கணவர்-கிட்ட இருந்து பிரிக்க முடியல. இல்லேன்னா தோசை-ய சுட்டு குடுத்துட்டு சீக்கிரம் kitchen-ஐ மூடிவிடலாம்-ன்னு ரொம்ப பீல் பண்ணுவேன்).
ரொம்ப பெரிய வேலையெல்லாம் இல்லீங்க. முட்டை பொரியல் செய்து கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட்டிங்குடன் பரிமாற வேண்டியது தான்.

தேவையான பொருட்கள்
 1. எண்ணெய் - 4 ஸ்பூன்
 2. கடுகு, உளுந்து, கருவேப்பிலை - கொஞ்சம்
 3. பெரிய வெங்காயம் - 2 - பொடியாக அரிந்தது
 4. பச்சை மிளகாய் - 1
 5. முட்டை - 3
 6. மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
 7. உப்பு
 8. மிளகு தூள் - 2 ஸ்பூன்
செய்முறை
 • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
 • முட்டை அனைத்தையும் உடைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முட்டை வேகும் வரை வதக்கவும்.
 • கடைசியாக மிளகுதூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடலாம்.


ம்ம்ம்ம் இப்போ மெயின் மேட்டர்-ருக்கு வருவோம்.

ரோல் செய்ய:
 • சப்பாத்தி
 • லெமன் ஜூஸ்
 • பொடியாக அரிந்த வெங்காயம்
ஒவ்வொரு சப்பாத்தி நடுவிலும் முட்டை பொரியலை பரப்பி, கொஞ்சம் வெங்காயம், அரை மூடி லெமன் ஜூஸ் தெளித்து படத்தில் இருப்பது போல் ரோல் செய்து பரிமாறவும்.

Thanks to :karaikudisamayal.blogspot.com

இயற்கை கலரிங் செய்முறை !“பொதுவாகவே, தலைக்கு அடிக்கடி கலரிங் பண்ணுகிறவர்களுக்கும் ஹேர்டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு, வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி நரைத்தல் என்று பல பிரச்னைகள் ஏற்படும். இந்த கூந்தல் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு உண்டு.


“கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் முடி நார்மல் நிலைக்கு வரவேண்டும் அதற்கான சிகிச்சை இது…..


1. டீயை வடிகட்டி, அதன் டிகாஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம் இருமுறை தலைக்குக் குளியுங்கள். முதல் தடவை டிகாஷனை மட்டும் தேய்த்துக் குளியுங்கள். இரண்டாவது தடவை டிகாஷனுடன் 2 கடுக்காய் தோலையும் போட்டு கொதிக்க வைத்து, உபயோகியுங்கள்.


2. இதுபோல் ஒரு மாதம் தொடர்ந்து குளித்து வந்தாலே முடியின் வறட்டுத்தன்மை போய்விடும். கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக கருமையாகவும் மாறும். டிகாஷன் சிகிச்சை முடிந்த பிறகு இதைத் தொடங்குங்கள்.

*

3. அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்!

தேங்காய்க் கீற்று 2
வெள்ளைமிளகு 1 டீஸ்பூன்

இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதமான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன் பொடுகுத் தொல்லையும் போகும்.

*

4. கூந்தல் கருகருவென்று வளருவதற்கு:

இளம் மருதாணி இலை 50 கிராம்
நெல்லிக்காய் கால் கிலோ
வேப்பங்கொழுந்து 2 கிராம்…

மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக்குங்கள். இந்த விழுதை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுங்கள். எண்ணெய் தெளிந்து தைலமாகிவிடும். தினமும் தலை வாரும் முன் இந்த தைலத்தைத் தடவி வந்தால் எல்லா பாதிப்பும் மறைந்து, கூந்தல் கருகருவென வளரத் தொடங்கும்.

*

5. இயற்கை கலரிங் முறை:

சீயக்காயுடன் ஒரு பீட்ரூட்டின் சாறை கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.

இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து பாருங்கள். மூன்றே மாதத்துக்குள் உங்கள் கூந்தல் மினுமினுப்பதை உணர்வீர்கள். அதன் பிறகு ஹேர்டையோ, கலரிங்கோ செய்ய வேண்டிய அவசியமே வராது.

Thanks to :azhkadalkalangiyam.blogspot.com

அவசரகால முதலுதவிகள்!


திடீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினால் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான காலகட்டங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் ஆபத்திலிருந்து நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும்.

மாரடைப்பு:

மாரடைப்பிற்கான அறிகுறிகள்:

நெஞ்சுவலி. நெஞ்சினைக் கசக்கிப்பிழிவதுபோல் திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே தோன்றுதல்.

இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுதல்.

கத்தியால் குத்துவது போன்று மார்பில் வலி ஏற்படுதல்.

படபடப்பு. மூச்சுவிடச் சிரமப்படுதல் வாந்தி அல்லது கடுமையான அஜீரணம் ஏற்படுதல். காரணம் இல்லாமல் வியர்த்துக் கொட்டுதல். தலைசுற்றுதல் மற்றும் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு.

முதல் உதவி சிகிச்சை:

மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவரைப் படுக்க வையுங்கள். ஆம்புலன்சை வரவழையுங்கள்.

ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் குடிக்கச் செய்யுங்கள். நாக்குக்கு அடியிலும் ஒரு சார்பிட்ரேட் மாத்திரையை வையுங்கள்.

பாதிக்கப்பட்டவருக்கு சுவாச மூச்சு நின்று போயிருந்தால் செயற்கை சுவாசம் கொடுக்க ஆரம்பியுங்கள். தலையைப் பின்பக்கம் உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி மூச்சுக்குழலை நேராக இருக்குமாறு செய்து பாதிக்கப்பட்டவரின் மூக்கின் இரு நாசித்துவாரங்களையும் அழுத்தி மூடிக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள் வாயைப் பொருத்திக்கொண்டு மெதுவாக காற்றை உட்செலுத்துங்கள்.

நாம் காற்றை உள்ளிழுக்கும் போது நம் மார்புப்பகுதி மேல் நோக்கி அசைவதுபோல பாதிக்கப்பட்டவரின் மார்புப்பகுதி மேல்நோக்கி அசைகிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், மேற்கண்ட முறையில் மீண்டும் மீண்டும் செயற்கை சுவாசம் கொடுங்கள். பாதிக்கப்பட்டவர் மூச்சுவிடத் தொடங்கும் வரை இப்படி தொடர்ந்து கொடுங்கள்.

தீக்காயத்திற்கான முதல் உதவி:

சாதாரண தீக்காயமாக இருந்தால் அதற்குரிய களிம்பு மற்றும் ஸ்பிரே மூலம் குணப்படுத்தலாம்.

தீக்காயத்தில் தொடர்ச்சியாக தண்ணீரை ஊற்றிக் குளிர்ச்சியாக வைத்திருங்கள்.

பாதிக்கப்பட்டவருக்குத் தலைசுற்றல், தளர்ச்சி, தாங்கமுடியாத ஜுரம், நடுக்கத்தோடு உளறுதல் மற்றும் உடல் வியர்த்து, விரைத்து குளிர்ந்துபோனால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

வெட்டுக்காயம்:

சின்னஞ்சிறு வெட்டுக்காயமானால் காயத்திலுள்ள தூசித் துகள்களை அப்புறப்படுத்திவிட்டு ஆன்ட்டிபயாட்டிக் களிம்பினைக் காயத்தின்மீது போடலாம். காயத்தை சுற்றிக் கட்டு போடுங்கள். தினமும் புது பேண்டேஜ் துணிகொண்டு கட்டுப் போடுங்கள்.

வெட்டுக்காயம் நீண்டநாட்களாக ஆறாமல் இருந்து, அதிலிருந்து சீழ் வடிதல், மற்றும் ஜுரம் வந்தால் உடனடியாக டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

குறிப்பு:

கண்ணாடிப்பிசிறு போன்றவை ரொம்ப ஆழத்தில் உள்ளே சென்றிருந்தால் அதை அகற்ற நீங்கள் முயற்சி செய்யவேண்டாம்.

எலும்பு முறிவு:

கையிலோ அல்லது காலிலோ அடிபட்டு எலும்பு முறிவு ஏற்படும்போது கை அல்லது கால் விரல்களில் உணர்ச்சி இருக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், நரம்பு மண்டலம் அல்லது முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டிருக்கும். அதனால், உடனடியாக பாதிக்கப்பட்டவரை டாக்டரிடம் கொண்டு செல்ல வேண்டும். டாக்டர் பார்க்கும் வரை கை கால்களை அசைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கைவிரல் அல்லது கால் விரல்களில் காயம்பட்டிருந்தால் விரல்களை அசைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

எலும்புமுறிவுக் காயத்தில் எலும்பு வெளியே தெரிந்தால், அதைச் சுத்தமான துணியால் மூடி டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் அழுத்தி நீவுதலோ அல்லது வெளியில் தெரிகின்ற எலும்பினை உள்ளே பழைய நிலைக்கு அமுக்கி வைக்கவோ, நேரே நிறுத்தி வைக்கவோ முயற்சி செய்யாதீர்கள். எலும்புமுறிவுக் காயத்திற்கு மேல் அல்லது கீழ் உள்ள மூட்டுக்களை ஆட்டவோ அசைக்கவோ கூடாது.

டாக்டரை பார்ப்பதற்கு முன்னால், எலும்புமுறிவு ஏற்பட்டவருக்கு தண்ணீரோ வேறு எந்த நீராகாரமோ அல்லது உணவோ கொடுக்கக்கூடாது.


Thanks to : Dinakaran.com

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

இருட்டுக்கடை அல்வா

தேவையான பொருள்கள்:
சம்பா கோதுமை – 200 கிராம்
சர்க்கரை – 750 கிராம்
நெய் – 400 கிராம்

thirunelveli iruttuk kadai halwa (ready for sales)
செய்முறை:
 • சம்பா கோதுமையை முதல் நாளே தண்ணீரில் ஊறவைத்து கிரைண்டரில் நன்றாக அரைக்க வேண்டும்.
 • நைசாக அரைக்க அரைக்க கோதுமை பாலாக வர ஆரம்பிக்கும். அதை ஒரு துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
 • அடுப்பில் அடிகனமான கொஞ்சம் பெரிய வாணலியாக வைத்து, அதில் பாலை ஊற்றிக் காய வைக்கவும்.
 • பால் லேசாகச் சூடானதும், சர்க்கரைச் சேர்த்துக் கிளற ஆரம்பிக்க வேண்டும். கிளறுவதை இனி நிறுத்தவே கூடாது.
 • கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும்போது, சுத்தமான நெய்யைச் சேர்த்துக் கிளற வேண்டும்.
 • விடாமல் கிளறிக்கொண்டே இருந்தால், அல்வா நல்ல குங்குமச் சிவப்பில் வரும்.
 • இறுகலான பக்குவத்தில் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும், இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி, ஆறவைத்து உபயோகிக்கலாம்.
* கல் உரல் அல்லது கிரைண்டரில் தான் அரைக்கலாம். மிக்ஸியில் அரைக்கக் கூடாது
* முந்திரி மாதிரி பருப்புகள், கலர் எதுவும் சேர்க்கக் கூடாது.

திங்கள், 18 ஏப்ரல், 2011

மனம் மகிழுங்கள்- 39 - விடாமுயற்சி!

மிழில் ஒரு பழமொழி உண்டு; கேள்விபட்டிருப்பீர்கள்; "அடிக்க அடிக்க அம்மியும் நகரும்."

அதை ஏன் போட்டு அடித்துக் கொண்டிருக்க வேண்டும்? துணைக்கு ஒருவரை அழைத்து நகர்த்தி வைத்துவிட்டுப் போனாலென்ன? இங்கு தூக்கி வைப்பதன்று பிரச்சினை. விடாமுயற்சி! அதுதான் பேச்சு இங்கு!

விடாமுயற்சி என்றால் என்ன? அது வேறொன்றுமில்லை; ‘சாதனையின் ஆணிவேர்!‘

ஒருவருக்கு ஏகப்பட்ட திறமைகள் இருக்கலாம். ஆனால் அவை மட்டுமே அவரை சாதனையாளராக உருவாக்குவதில்லை. உலகில் திறமையாளர்களுக்கா பஞ்சம்? சொந்தத்தில், உங்கள் தெருவில், எதிர் வீட்டில், பக்கத்து வீட்டில் என்று எத்தனையோ திறமையாளர்கள் இருக்கலாம். அந்த அவர்கள் அத்தனைப்பேரும் சாதிக்கிறார்களா? இல்லையே!

ஒருவர் சிறந்த அறிவாளியாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே அவரது சாதனைக்கு உதவாது. அன்று புலவர்கள் பலர் தங்களது அறிவை மன்னனைப் புகழ்ந்து பாடப் பயன்படுத்தினார்கள் என்றால் இன்று அரசியல் தலைவரை. ......

என்ன பிரயோசனம்?

ஒருவர் கல்வியில் சிறந்து விளங்கலாம். ஒரு முழ நீளத்திற்கு அவரது பெயருக்குப் பின்னால் அவர் படித்துப் பெற்ற பட்டங்கள் ஒட்டிக் கொண்டிருக்கலாம். அத்தனைக் கல்வியாளர்களும் சாதனையாளர்களா? சொல்லப்போனால் மாணவருக்குக் கற்றுத்தரும் ஆசிரியரே கல்வியறிவில் சிறப்பானவர் தாமே? அவர், ‘ஏணி, தோணி, வாத்தியார்...’ என்று அப்படியேதானே இருக்கிறார்?

குறிப்பிட்ட சாதனை என்ற ஒன்றைப் புரிய வேண்டுமெனில், இலட்சியமொன்றை அடைய வேண்டுமெனில், தேவை விடாமுயற்சி. தகுதிகளும் திறமைகளும் எண்ணற்ற வகையில் அமையப் பெற்றிருந்தாலும் விடாமல் முயற்சி செய்தால் தவிர எந்தக் காரியமும் முதல் முயற்சியிலேயே வெற்றி அடைவதில்லை.

உலகின் சாதனையாளர்கள் இந்த இரகசியத்தை நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள். ருசியான சமையலுக்கு உப்பு, காரம் போல விடாமுயற்சி தமது இலட்சியத்திற்கு முக்கியமான ஓர் ஆக்கக்கூறு என்று உணர்ந்து கொள்கிறார்கள்.

‘அதெல்லாம் ச்சும்மா’, ‘எனது அறிவும் திறமையுமே சாதனையை எனது வீட்டிற்கு இட்டு வந்து என் தோளில் ஆளுயர மாலையைப் போtடச்செய்யும்’ என்று நம்புபவர்கள் வாழ்க்கையில் அசுவாரசியமாகிப் போகிறார்கள்.

மேற்படிப்பு, தொழில், ஆராய்ச்சி என்று ஏதோ ஒரு புதிய திட்டம் உங்களுக்குத் தோன்றுகிறது. அல்லது ஏதோ ஓர் ஏடாகூட சிந்தனை தோன்றி, குதிரை ஏற்றம் கற்றேத் தீருவது என்று முடிவெடுக்கிறீர்கள். அந்த ஆர்வத்தில், உற்சாகத்தில் பரபரவென அதற்கான முதற்கட்ட ஆயத்தம் செய்தாகிவிட்டது. அடுத்த கட்டமாய் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும் ஆரம்பித்து விடுகிறீர்கள். அதுவரை எல்லாம் ஓக்கே!

அடுத்து அந்தச் செயலின் ‘ப்ராக்டிக்கலான இன்னல்கள்’ முகத்தில் வந்து அறையும். பிரச்சினைகள், சவால்கள், என்று ஒன்று மாற்றி ஒன்று உங்களை ஆக்கிரமிக்கும்.

குதிரையில் ஏறி அமர்ந்தால் அது கார் ஸீட் போல் சொகுசாய் இருக்காது என்பது ஒருபுறமிருக்க, “ஹை ஹை” என்றால் அந்த ஜந்துவோ உங்களைக் கீழே தள்ளிவிட்டுத்தான் மறுவேலை என்று அடம்பிடிக்கும்.

அடக்கி, ஆண்டு, விடாது அயராது பயிற்சி எடுத்து முடித்தபிறகே ஒருவழியாய்க் குதிரை ஏற்றம் பிடிபடும். அதற்குள் பாதி அல்லது முக்கால்வாசி இளைத்திருப்பீர்கள்.

உலகிலுள்ள ஒவ்வொருவரிடமும் இப்படி ஏதாவது ஓர் ஆவல், முயற்சி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதில் பெரும்பாலானவர்கள், ‘விட்டதடா ஆசை’ என்று பாதியிலேயே ‘ஜகா’ வாங்கிவிடுகிறார்கள். அதுதான் சோகம். மீதமுள்ள மிகச் சிலர் மட்டுமே தாங்கள் நினைத்ததை விடாது முயன்று, சாதித்து முடிக்கிறார்கள்.

‘விடாது முயற்சி செய்’ என்று எழுதுவதும் வாசிப்பதும் எளிது. ஆனால் நாம் நினைத்ததை அடைய எதிர் கொள்ளும் சோதனைகளும் பிரச்சினைகளும் இருக்கின்றனவே, அவை எப்பொழுதுமே இலேசானதாக அமைவதில்லை. இலட்சியத்திற்கு, திட்டத்திற்கு ஏற்ப அவற்றின் வீரியமும் பரிமாணமும் பெரிசாகவே இருக்கும். தாண்ட வேண்டும்! அதையெல்லாம் ‘விட்டேனா பார்’ என்று எதிர்கொண்டு தாண்ட வேண்டும்.

எந்த நாடாக இருந்தாலும் சரி, எந்த ஊராக இருந்தாலும் சரி, அங்கெல்லாம் உள்ள எந்த ஒரு சாதனையாளரையும் எடுத்துக் கொண்டு அவரது வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். அடிநாதமாய் விடாமுயற்சி என்பது பரவி ஊடுருவி இருப்பதைக் காணலாம்.

சொல்லப்போனால் அத்தகைய வரலாற்றைப் படிக்கவே நீங்களும் விரும்புவீர்கள். சாதிக்காமல் தோற்றுப் போனவர்களின் வரலாறு என்ன ஆவலை உங்கள் மனதில் ஏற்படுத்தும்?

ஆனால் -

விடாமுயற்சிக்கும் வீண் பிடிவாதத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்! இல்லையென்றால் பலன் எதிர்மறை!

ஆற்றைக் கடக்கப் படகில் சென்று கொண்டிருக்கும்போது படகில் ஓட்டை விழுந்துவிட்டால், "ம்ஹும்! அதெல்லாம் முடியாது; நான் குதிக்க மாட்டேன்" என்று சொன்னால்?

நீங்கள் வெறுக்கும் உத்தியோகத்தில் விடாப்பிடியாய் ஒட்டிக் கொண்டிருப்பதைவிட நல்லதொரு வாய்ப்பு அமையும்போது மாறிக் கொள்வதே சாமர்த்தியம். சில சமயங்களில் சில விஷயங்களைக் கை கழுவுவதே வெற்றிக்கு வழி வகுக்கும்.

அதை சரியாக உணர்ந்து கொண்டு விடாமுயற்சியுடன் இலட்சியத்தைப் பின் தொடர்ந்தால் - மன மகிழ்வே!

Thanks to :www.inneram.com

சனி, 16 ஏப்ரல், 2011

பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க

Windows XP நம்மவர்கள் அதிகம் பயன்படுத்தும் OS. என்னதான் windows 7 வந்துவிட்ட போதிலும் இதை நாம் மறக்கவில்லை. எப்போதும் OS இன்ஸ்டால் பண்ணுவதற்க்கு நமக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் ஆகக் கூடும். இதை பத்து நிமிடத்தில் முடித்தால் எப்படி இருக்கும். வாங்க முடிப்போம்.

 • OS cd யை உள்ளே போட்டு ஃபார்மட் ஸ்டெப் முடிக்கவும்.
 • இப்போது உங்கள் கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும்.
இப்போது கீழே உள்ளது போல டெஸ்க்டாப்பில் வரும். • இப்போது command Prompt இல் சிறு வேலை உள்ளது.


 • Shift F10 ஐ பிரஸ் செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம்.


 • இங்கு "taskmgr" என டைப் செய்வதன் மூலம் "task Manager" க்கு வரலாம்.

அது கீழே உள்ளது போல தோன்றும்.
(Processes பகுதி. )
 • இங்கு Setup.exe என்பதை நீங்கள் காணலாம்,

 • அதனை Right click செய்யவும் அதில் Set priority --> real time என்பதை தெரிவு செய்யவும்.


அவ்ளோதான்.

வியாழன், 14 ஏப்ரல், 2011

புத்தாண்டு வாழ்த்து


அனைவருக்கும் எமது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....

அன்புடன்,

மேகா மகேஷ்

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

மனம் மகிழுங்கள் - 38 திருப்புமுனை!

ம் அனைவருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் அது நிகழ்ந்திருக்கும். மந்தமாகவே சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை; தினமும் ஒரே மாதிரி எழுந்து, பல் துலக்கி, காப்பி குடித்து, குளித்து, உண்டு, அலுவலகம் சென்று திரும்பி, மீண்டும் வீடு, உணவு, டிவியில் அடாசு ஸீரியல் என்று இப்படி மெத்தனமாய்க் காலம் நகர்ந்து கொண்டிருக்கும்போது திடீரென வாழ்வில் ஒரு திருப்பம் - உங்கள் பாதையை மாற்றியமைக்கும் திருப்பம் - அமைந்திருக்கும்.

எங்காவது கேட்டிருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள். மிகப் பெரிய தொழிலதிபர் ஒருவர் கூறியிருப்பார், "இனிமேல் என் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்திருந்தேன். மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்ல டிக்கெட் வாங்க நினைத்திருந்தேன். அப்பொழுதுதான்..."

திரையுலகைச் சார்ந்த பல பிரபலங்களிடமும் இத்தகைய பேட்டிகளைக் காணலாம்.

பெரிசோ சிறிசோ நிகழும். என் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கிறது. சற்று யோசித்துப் பார்த்தால் உங்களது வாழ்க்கையிலும் இப்படியொன்று நிகழ்ந்திருக்கலாம். இல்லையென்றால் சற்றுப் பொறுங்கள்; நாளை, நாளை மறுநாள் நிகழ்ந்துவிடும்.

வாழ்க்கையின் இலட்சியத்தை எட்டும் பயணத்தில் ‘திருப்புமுனை’ அறிவது அவசியம். நம் கண்ணுக்குத் தெரியாத விதி அது. அது நிகழும்போது ஒருவரது வாழ்க்கையையே மாற்றி விடுகிறது. ஆனால் இதில் சூட்சமம் என்னவென்றால் அவர் அத்தகைய தருணம்வரை மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு போராடி வந்திருக்க வேண்டும். பாதியிலேயே அவர் கையைத் தூக்கிவிட்டால் அரைக் கிணறுதான்.

இறைவன் நம் கர்மத்திற்கு ஏற்பவே பலன் அளிக்கிறான். மனிதன் தனது குறிக்கோளை அடைய மெனக்கெடும்போது அந்த மெனக்கெடல் நிசந்தானா என்று இறைவனின் சோதனை அமையும். சோதித்து, சோதித்து மனிதனின் ஊக்கமும் விடாமுயற்சியும் தளராது தொடர்ந்து கொண்டிருந்தால் சடாரென அத்திருப்புமுனை அவன் பாதையின் எதிரே வந்துவிடுகிறது.

அதுவரை இருள் படர்ந்து சோகமயமாய்க் காட்சியளித்த உலகம் ஒரு நொடியில் வண்ணமயமாய் மாறிவிடும். "எல்லாமே சங்கடமாகவும் பிரச்சினையாகவும் இருக்கிறது. காரியங்கள் எவையும் கைகூட மறுக்கின்றன. எதைத் தொட்டாலும் துலங்கமாட்டேன் என்கிறது.." என்பதான நிலையில் இருந்தால் அதன் அர்த்தம் "இதோ வரப்போகிறது அது... வெற்றி அந்த முனையில் காத்திருக்கிறது" என்று நம்புங்கள் என்கிறார்கள் உளவியலாளர்கள். அதை மனிதன் உணர ஆரம்பித்துவிட்டால் சோகங்கள் இலேசாகிவிடும். மனம் மகிழ்வுடன் முயற்சியைத் தொடரும்; அசராது.

கடினமான பாதையைக் கடந்தால்தான் திருப்புமுனை!

படாதபாடு படுத்தும் இன்னல்களெல்லாம் நம் இலட்சியத்தை அடையத் தேவையான சுமைகள்!

என்று மனம் உணர ஆரம்பித்து விட்டால் நாம் துவண்டு விடாமல் தாக்குப்பிடிக்க அவை உதவும்;

எனவே எவ்வளவுக்கு எவ்வளவு பிரச்சினைகளோ அந்தளவிற்கு நீங்கள் பெருமைப்படலாம், காரியம் கைகூடப் போகிறதென்று.

சரி, திருப்புமுனை வந்தாச்சு! "இனி எல்லாம் வசந்தமே" என்று சுபம் போட்டுவிடலாமா? அது அப்படியன்று.

நாம் மாறினால் மட்டுமே நம் உலகம் மாறும். தானாய் எல்லாம் மாறும் என்று நினைத்து அமர்ந்திருந்தால் அது பொய். பழைய பொய். மாயமாய் வானிலிருந்து ஓர் ஒளி வந்து நம் வாழ்க்கையின் கும்மிருட்டிற்குத் தோரண விளக்கு அமைத்துவிடாது!

"வாழ்க்கையில் நொடித்துப் போயுள்ளேன். நான் மீண்டு எழ வேண்டுமானால் எனக்கு 20 இலட்ச ரூபாய் முதல் இருந்தால்போதும்; தொழில் செய்து முன்னேறி விடுவேன்" என்று ஒருவர் கூறுகிறார். அன்றிரவு அவரில்லத்தில் கூரையைப் பிய்த்துக் கொண்டு ஒரு மூட்டை விழுகிறது; திறந்துப் பார்த்தால் 20 இலட்ச ரூபாய் பணம்.

அடுத்து அவர் நிலை மாற வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்? அவர் சொன்னதைப் போல் அதைக் கொண்டு தொழில் புரிய வேண்டும். அதை விடுத்து அதிர்ஷ்டம்தான் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்ட ஆரம்பித்துவிட்டதே, இனி என்ன தொழில் வேண்டிக்கிடக்கு என்று சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் பணத்தை மட்டும் செலவு செய்ய ஆரம்பித்தால்?

மூட்டை மட்டுமே மிஞ்சும். சுருட்டி முகத்தைத் துடைத்துக் கொள்ளலாம்.

நம்மை மாற்றிக் கொள்ள நாம் மனதினுள்ளே உறுதி பூண்டு அதைச் செயலில் காட்டினாலொழிய வாழ்க்கையில் என்ன திருப்புமுனை ஏற்பட்டாலும் அது நம் நிலையை மாற்ற உதவாது.

இதற்குச் சுருக்குவழி, குறுக்குவழி, ‘சைடு’ வழி என்று எதுவும் கிடையாது. நாம் நம்மை மாற்றிக்கொண்டு செயலில் இறங்க வேண்டும்.

உடனே ஒருவர் இப்படிக் கேட்கலாம். "நான் என்னதான் தலைகீழாக நின்றாலும் எனது விதியில் தோல்வி என்று எழுதி வைக்கப்பட்டிருந்தால் அதுதானே வந்துவிடியும். பிறகு நான் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்; மெனக்கெட வேண்டும்?"

இருக்கலாம். ஆனால் செயல் உங்களது வாழ்க்கையின் கடமை. உங்கள் விதி பணி செய்து கிடப்பதே! அதுதான் மன நிறைவு தரும்; மன மகிழ்வு தரும்.


Thanks to :www.inneram.com

சனி, 9 ஏப்ரல், 2011

ஐபிஎல் 4 அட்டவணை

Ha ha ha...... நாங்களும் கிரிக்கெட் பார்ப்போம்ல....

ஏப்ரல் மாத போட்டிகள்

ஏப்ரல் 8, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை ( சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி)

ஏப்ரல் 9, மாலை 4 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஹைதராபாத்

ஏப்ரல் 9, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொச்சி

ஏப்ரல் 10, மாலை 4 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி

ஏப்ரல் 10, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் - நவி மும்பை

ஏப்ரல் 11, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெக்கன் சார்ஜர்ஸ் - கொல்கத்தா

ஏப்ரல் 12, மாலை 4 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ் - ஜெய்பூர்

ஏப்ரல் 12, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் - பெங்களூர்

ஏப்ரல் 13, மாலை 4 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மொகாலி

ஏப்ரல் 13, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - நவி மும்பை

ஏப்ரல் 14, இரவு 8 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஹைதராபாத்

ஏப்ரல் 15, மாலை 4 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஜெய்பூர்

ஏப்ரல் 15, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - மும்பை

ஏப்ரல் 16, மாலை 4 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை

ஏப்ரல் 16, இரவு 8 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் - ஹைதராபாத்

ஏப்ரல் 17, மாலை 4 மணி: பூனே வாரியர்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ் - நவி மும்பை

ஏப்ரல் 17, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா

ஏப்ரல் 18, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொச்சி

ஏப்ரல் 19, மாலை 4 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs டெக்கன் சார்ஜர்ஸ் - டெல்லி

ஏப்ரல் 19, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர்

ஏப்ரல் 20, மாலை 4 மணி: மும்பை இந்தியன்ஸ் vs பூனே வாரியர்ஸ் - மும்பை

ஏப்ரல் 20, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - கொல்கத்தா

ஏப்ரல் 21, இரவு 8 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மொகாலி

ஏப்ரல் 22, மாலை 4 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா

ஏப்ரல் 22, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை

ஏப்ரல் 23, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் - டெல்லி

ஏப்ரல் 24, மாலை 4 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஹைதராபாத்

ஏப்ரல் 24, இரவு 8 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - ஜெய்பூர்

ஏப்ரல் 25, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பூனே வாரியர்ஸ் - சென்னை

ஏப்ரல் 26, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி

ஏப்ரல் 27, மாலை 4 மணி: பூனே வாரியர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - நவி மும்பை

ஏப்ரல் 27, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs டெக்கன் சார்ஜர்ஸ் - கொச்சி

ஏப்ரல் 28, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி

ஏப்ரல் 29, மாலை 4 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஜெய்பூர்

ஏப்ரல் 29, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs பூனே வாரியர்ஸ் - பெங்களூர்

ஏப்ரல் 30, மாலை 4 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs டெல்லி டேர்டெவில்ஸ் - கொச்சி

ஏப்ரல் 30, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் - கொல்கத்தா

மே மாத போட்டிகள்

மே 1, மாலை 4 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பூனே வாரியர்ஸ் - ஜெய்பூர்

மே 1, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெக்கன் சார்ஜர்ஸ் - சென்னை

மே 2, மாலை 4 மணி: மும்பை இந்தியன்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப் - மும்பை

மே 2, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - டெல்லி

மே 3, இரவு 8 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஹைதராபாத்

மே 4, மாலை 4 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை

மே 4, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - நவி மும்பை

மே 5, மாலை 4 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கொச்சி

மே 5, இரவு 8 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ் - ஹைதராபாத்

மே 6, இரவு 8 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கிங்ஸ் XI பஞ்சாப் - பெங்களூர்

மே 7, மாலை 4 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா

மே 7, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை

மே 8, மாலை 4 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - பெங்களூர்

மே 8, இரவு 8 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs பூனே வாரியர்ஸ் - மொகாலி

மே 9, இரவு 8 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜெய்பூர்

மே 10, மாலை 4 மணி: டெக்கன் சார்ஜர்ஸ் vs பூனே வாரியர்ஸ் - ஹைதராபாத்

மே 10, இரவு 8 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ் - மொகாலி

மே 11, இரவு 8 மணி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஜெய்பூர்

மே 12, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி டேர்டெவில்ஸ் - சென்னை

மே 13, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs கிங்ஸ் XI பஞ்சாப் - இன்டோர்

மே 14, மாலை 4 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூர்

மே 14, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் vs டெக்கன் சார்ஜர்ஸ் - மும்பை

மே 15, மாலை 4 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs டெல்லி டேர்டெவில்ஸ் - தரம்சாலா

மே 15, இரவு 8 மணி: கொச்சி டஸ்கர்ஸ் கேரளா vs ராஜஸ்தான் ராயல்ஸ் - இன்டோர்

மே 16, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் vs டெக்கன் சார்ஜர்ஸ் - நவி மும்பை

மே 17, இரவு 8 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - தரம்சாலா

மே 18, இரவு 8 மணி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - சென்னை

மே 19, இரவு 8 மணி: பூனே வாரியர்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - நவி மும்பை

மே 20, இரவு 8 மணி: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் -மும்பை

மே 21, மாலை 4 மணி: கிங்ஸ் XI பஞ்சாப் vs டெக்கன் சார்ஜர்ஸ் - தரம்சாலா

மே 21, இரவு 8 மணி: டெல்லி டேர்டெவில்ஸ் vs பூனே வாரியர்ஸ் - டெல்லி

மே 22, மாலை 4 மணி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூர்

மே 22, இரவு 8 மணி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா

குவாலிபையர் 1

மே 24, இரவு 8 மணி: முதல் தேர்வு அணி vs இரண்டாவது தேர்வு அணி - மும்பை

எலிமினேட்டர்

மே 25, இரவு 8 மணி: 3வது இடம் பிடித்த அணி vs 4வது இடம் பிடித்த அணி - மும்பை

குவாலிபையர் 2

மே 27, இரவு 8 மணி: எலிமினேட்டரில் வென்ற அணி vs குவாலிபையர் ஒன்றில் தோற்ற அணி - சென்னை

இறுதிப் போட்டி

மே 28, இரவு 8 மணி: குவாலிபையர் ஒன்றில் வென்ற அணி vs குவாலிபையர் 2ல் வென்ற அணி - சென்னை

Thanks to Thatstamil.com

புதன், 6 ஏப்ரல், 2011

ஆப்பிள் சூப்


தேவையானவை:
ஆப்பிள் 1
தக்காளி 2
பால் 1 கப்
மைதாமாவு 1 டீஸ்பூன்
மிளகுதூள் 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையானது
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்


செய்முறை:

ஆப்பிளைத் துருவி பாலில் வேகவைக்கவும்.

தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்துக் கொள்ளவும்.

வேகவைத்த ஆப்பிளையும்,தக்காளியையும் மிக்சியில் அடிக்கவும்.

மைதாமாவை லேசாக வறுத்து ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்கவைக்கவும்.

அதனுடன் ஆப்பிள்,தக்காளி விழுதை சேர்க்கவும்.நன்றாக கிளறவும்.

பின்னர் உப்பு,சீரகத்தூள்,மிளகு தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

இறக்கிய பின் வெண்ணையை மேலே போடவும்.

Thanks to : annaimira.blogspot.com

ஓட்ஸ் இட்லி

தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
ரவை 1 கப்
தயிர் 1 1/2 கப்
காரட் 2
உருளைக்கிழங்கு 1
பீன்ஸ் 10
பட்டாணி 1/2 கப்
இஞ்சி 1 துண்டு
முந்திரிபருப்பு 10
நெய் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:ஓட்ஸையும் ரவையயும் தனித்தனியாக எண்ணையில்லாமல் வறுக்கவும்.

பின்னர் தனித்தனியாக தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோலுரித்து துருவிக்கொள்ளவும்.
இஞ்சியை தோலுரித்து துருவிக்கொள்ளவும்.
பீன்ஸை பொடியாக நறுக்கிகொண்டு பட்டாணியுடன் microwave ல் சிறிது உப்பு சேர்த்து 3 நிமிடம் வைக்கவும்.

முந்திரிபருப்பை சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 1 1/2 கப் தயிர் விட்டு
அதனுடன் தண்ணீரில் ஊறவைத்த ஓட்ஸையும் ரவையையும் சிறிது உப்புடன் சேர்த்து மீண்டும் 15 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
15 நிமிடம் கழித்து தயிரில் துருவிய காரட்.உருளைக்கிழங்கு,இஞ்சி,வேகவைத்த பட்டாணி,பீன்ஸ்,வறுத்த முந்திரி எல்லாவற்றையும் சிறிது உப்புடன் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
இட்லி தட்டில் எண்ணைய் தடவி ஓட்ஸ் இட்லி மாவை ஊற்றி ஆவியில் 12 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
இதற்கு side dish வெங்காய காரச்சட்னி .

Thanks to : annaimira.blogspot.com

நெல்லி மோர்

தேவையானவை:

மோர் 1 கப்

நெல்லிக்காய் 2

கறிவேப்பிலை சிறிதளவு

பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

உப்பு தேவையானது

-----

செய்முறை:நெல்லிக்காயை microwave bowl ல் சிறிது தண்ணீர் வைத்து "H" ல் ஒரு நிமிடம் வைத்து எடுத்தால் நன்கு வெந்திருக்கும்.

மிக்சியில் அரை கப் மோர்,வேகவைத்த நெல்லிக்காய்,உப்பு,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும்.

பின்னர் மீதமுள்ள அரை கப் மோரை சேர்த்து இரண்டு சுற்று சுற்ற வேண்டும்.

நெல்லி மோர் வெய்யிலுக்கு ஏற்றது.

நெல்லிக்காய் ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.

Thanks to : annaimira.blogspot.com