ஞாயிறு, 11 நவம்பர், 2012Anaivarukkum Engal Iniya
Deepa Thirunaal Nalvazhthukkal
Happy Diwali 2012

புதன், 16 மே, 2012

கலர்ஃபுல் அரிசி கொழுக்கட்டை


தேவையானவை:

பு.அரிசி - 200 கிராம்
தேங்காய் - 3 தேக்கரண்டி
முந்திரி பருப்பு சிறிது
கடலை பருப்பு சிறிது
மிளகாய் - 2
கடுகு, உ.பருப்பு தாளிக்க
பெருங்காயம் சிறிது
கேரட் - 1
உப்பு தேவையானளவு

செய்முறை:

புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உ.பருப்பு, கடலை பருப்பு , மிளகாய், பெருங்காயம் போட்டு தாளிக்கவும். அத்துடன் முந்திரி பருப்பு, கேரட் துறுவல் மற்றும் தேங்காய் போட்டு வதக்கவும்.

ஒரு பங்கு அரிசிக்கு ஒரு பங்கு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும். தண்ணீர் கொத்திக்கும் போது, அரைத்து வைத்துள்ள மாவை போட்டு கிளறவும்.

மாவு பதத்திற்க்கு வந்த பின், அடுப்பை நிறுத்தவும். இட்லி பாத்திரத்தில் இந்த மாவை பிடித்து வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.

சுவையான கலர்ஃபுல் அரிசி கொழுக்கட்டை ரெடி.......

செவ்வாய், 15 மே, 2012

ஜவ்வரிசி கஞ்சி


தேவையானவை:


ஜவ்வரிசி 50கிராம்
மோர் சிறிது
உப்பு தேவையானளவு

செய்முறை:

ஜவ்வரிசியை எண்ணெய் இல்லாமல் வறுத்து ஆற வைக்கவும். இதை மிக்ஸியில் போட்டு பொடி பண்ணவும்.

இதில் தண்ணீர் ஊற்றி கஞ்சி பதத்திற்க்கு காய்ச்சவும்.

ஆறிய பின்பு சிறிது மோர் மற்றும் உப்பு போட்டு குடிக்கவும்.

வெயிலுக்கு ஏற்ற குளுமையான உணவு.

Special பூரி

தேவையானவை:

கோதுமை 1 கப்
ரவா - 2 ஸ்பூன்
சிறிது தயிர்
தேவையான அளவு உப்பு, எண்ணெய்

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, அரைமணி நேரம் ஊறவைத்து, விரும்பிய வடிவத்தில் பிரட்டி எடுத்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

பூரி நல்ல உப்பி வர, ஒரு ப்ரட் ஸ்லைஷ் ஓரம் நீக்கி மிக்ஸியில் பொடியாக்கி மாவுடன் சேர்க்கவும்.


திங்கள், 14 மே, 2012

Mothers DayHappy Mother's Day.

என் அம்மாவுக்கு........ என் சிறிய பரிசு.....

Love You Mum.............

Megha

மசாலா சப்பாத்தி


தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி
பச்சைமிளகாய் -1
இஞ்சி - சிறிதளவு
உப்பு தேவையானளவு
சிறிது தயிர் (புளிப்புக்காக)

செய்முறை:


கொத்தமல்லி தழை, புதினா, பச்சைமிளகாய், இஞ்சி இவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

கோதுமைமாவு,தயிர், உப்பு இவற்றுடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து, அரை மணி நேரம் ஊரவைத்து, சப்பாத்தி போடவும்.

மிகவும் சுவையான மசாலா சப்பாத்தி தயார்.

Welcome BackWelcome Back....