சனி, 18 ஜூன், 2011

செல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்

கண்டிப்பாக இந்த தலைமுறையினர் பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும். எவ்வளவு சொகுசான வாழ்க்கை எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்போன்கள் வசதி இன்னும் பிரமாதம் பெரும்பாலானாவர்கள் இந்த செல்போன்களுக்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதில் உள்ள வசதிகளால் இந்த செல்போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த செல்போன்களில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இந்த செல்போன்களின் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இந்த செல்போன் கதிர் வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் செல்போன் உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விஷயம் நாம் செல்போன் உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

இந்த செல்போன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்று சில வழிமுறைகளை கீழே காண்போம்.

  • முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.
  • ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.
  • குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

  • உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
  • காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
  • தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
  • நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
  • செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
  • செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
  • செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
  • செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.
  • போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.
மேற்கூறிய முறைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக செல்போன்களின் கதிவீச்சில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

Thanks to : http://www.vandhemadharam.com

வடைக்கதையும் வைரமுத்துவும்...!

காக்கா வடைக்கதை கவிஞர் வைரமுத்து தன் கவிதை நடையில் சொன்னால் எப்பிடியிருக்கும் ஓர் உல்டா கற்பனை,,, படித்ததில் பிடித்தது..

புழுதி படிந்த ஒரு கிராமத்தில், யௌவனக் கிழவி ஒருத்தி, வடை சுட்டு விற்று வந்தாள். அந்த மோக வடைக்காகத் தாகம் கொண்டு வந்தது ஒரு கார்மேகக் காகம்! ‘சில்லறை கொடுக்காமல் வடை கேட்டால், உன்னைக் கல்லறைக்கே அனுப்பி விடுவேன்’ எனச் சினந்தாள் அந்தச் சிங்காரக் கிழவி. ஆனால், பாட்டி பாராத சமயம், அந்த அந்தகக் காகம் சந்தன மின்னல் போல் பாய்ந்து, அந்தக் கந்தக வடையைக் கவர்ந்து சென்றது.
எங்கே சென்றது? அது ஒரு தாவணி மேகங்கள் சூழ்ந்த காடு; பொன்மாலைப் பொழுது. பச்சைப் புல்வெளி ஓரம், பன்னீர்க் குடங்களின் சாரம்! ஒரு ரோஜாப்பூ ஆளான நேரம். அங்கே சென்றது காகம்!

விதைக்குள் இருந்து வந்த விருட்சம், அங்கே வளர்ந்து நின்றது பல வருஷம். அதன் கிளைகளில் சென்று அமர்ந்தது அந்தச் சொப்பனக் காகம்!

அந்தக் கனவு வடையைத் தன் வீரிய விரல்களுக்கு இடையே வைத்து, நேரிய நயனத்தால் சுற்றுமுற்றும் பார்த்தது; கூரிய அலகால் கொத்திச் சாப்பிட முனைந்தது. அப்போது...

பூவுக்குள் பூகம்பம் போல் புறப்பட்டு வந்தது ஒரு நரி! அந்த நரி, நர்த்தக நரி! நாலடியார் நரி! நீதியறிந்து சேதி சொல்லும் போதிமரத்துச் சாதி!

நர்த்தக நரி கார்மேக காகத்தைப் பார்த்தது; உடல் வியர்த்தது. நரியின் மனத்தில் ஒரு வெறி வேர் விட்டது! அந்த ராஜ வடையை அபகரிக்க, அதன் நந்தவனத்து மூளை நாச வேலை செய்தது. நரி அதுவாகக் காகம் அருகே மெதுவாக... ஒரு இதுவாகச் சென்றது!

“ஓ, உலக அழகியே! உள்ளூர் மோனலிஸாவே! கறுப்பு முந்திரியே! கந்தர்வ சுந்தரியே! நீ பார்க்கவே எவ்வளவு அழகு! நீ மட்டும் கானம் இசைத்தால், எருதுக்கும் விருது கிடைக்கும். சர்ப்பம்கூட கர்ப்பம் தரிக்கும்!” என்றது.

இந்த இடத்தில்தான் சரித்திரம் பிறக்கிறது; பூகோளம் புரள்கிறது. நரியின் தேவ எண்ணத்தில் ஈட்டி பாய்ந்தது. கார்மேகக் காகம் நரியை வெறுத்தது; பாட்டை ஒறுத்தது; அது பின்வருமாறு பதிலிறுத்தது...

“நான் வைரமுத்துவின் வீட்டு வாசலில் வளர்ந்த காகம். மெட்டிருந்தால்தான் பாடுவேன்; இல்லையேல் இல்லை!” என்று சொல்லிப் பறந்தது; நரியின் சூது இறந்தது!

கதை முடிவில், பாரதிராஜாவின் குரலில் வைரமுத்துவின் வாசகங்கள்...

‘ஓ, புழுதியின் புத்திரர்களே! இது ஒரு யுகப் புரட்சி! இன்னும் இருநூறு வருஷங்களுக்கு இந்த வாடகை வடை கதை வைரமுத்துவின் வாசலுக்கு விலாசம் சொல்லிக்கொண்டே இருக்கும். அங்கு ஆனந்தங்கள் பரவசம்! அனுமதி இலவசம்!’

நன்றி : இணையத்தில் இருந்து

திங்கள், 6 ஜூன், 2011

இஞசி - கொத்தமல்லி சாறு

தேவையானவை:

கொத்தமல்லி தழை - 1 கைபிடி அளவு
இஞ்சி - சிறிது
மிளகு தூள் - சிறிது
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

கொத்தமல்லி தழை மற்றும் இஞ்சியை மிக்சியில் போட்டு, தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டவும். அதனுடன் மிளகுதூள் , உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, காலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

வெயில் நாளுக்கு ஏற்ற அருமையான பாணம்.

பெண்கள் இதை தொடர்ந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சனையும் சரியாகும்.






பிரெட் சமையல்

1. பிரெட் காரப்பணியாரம்

தேவையானவை: வெங்காயம், கேரட் - தலா 2, சால்ட் பிரெட் துண்டுகள் - 6, இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் விழுது - தலா ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவவும். பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். இதனுடன் தயிர், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி பேஸ்ட், உப்பு சேர்க்கவும். கேரட், வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி சேர்த்து, எல்லாவற்றையும் கலந்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். பணியாரக் குழியில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்த்து தொட்டு சாப்பிடலாம். சாஸ், சட்னி போன்றவையும் நன்றாக இருக்கும்.

2. புலாவ் வித் பிரெட்
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், கேரட், வெங்காயம் - தலா 2, பீன்ஸ் - 50 கிராம், குடமிளகாய் - 1, பிரெட் துண்டு - 2, நெய்யில் வறுத்த பிஸ்தா, முந்திரி - தலா 10, புதினா - ஒரு கைப்பிடி, கொத்தமல்- சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பங்கு அரிசிக்கு இரு மடங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் நெய் விட்டு... பச்சைப் பட்டாணி, வெங்காயம், பீன்ஸ், குடமிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும். பிஸ்தா, முந்திரி, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கிளறவும். வெறும் கடாயில் புதினாவை வதக்கவும். வதக்கிய எல்லாவற்றையும் சாதத்துடன் கலக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் பொரித்துச் சேர்க்கவும்.

வெங்காயம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி இதற்கு அருமையாக இருக்கும்.

3.பிரெட் பாயசம்
தேவையானவை: ஸ்வீட் பிரெட் துண்டுகள் - 6, நெய்யில் வறுத்த முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பால் - 500 மில்லி.

செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆற வைத்து... பொடித்த பிரெட் தூள், வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். விரும்பினால் சிறிது கேசரி பவுடர் சேர்க்கலாம்.

4.பிரெட் பக்கோடா
தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, வெங்காயம் - 2, இஞ்சித் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 1, முந்திரிப்பருப்பு - 10 (உடைத்துக் கொள்ளவும்), வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - ஒரு கைப்பிடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். பிரெட்டை பொடித்து, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து, பிசைந்த மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

5. பிரெட் போண்டா

தேவையானவை: கடலை மாவு - 150 கிராம், பிரெட் துண்டுகள் - 10, உருளைக்கிழங்கு - 4, வெங்காயம் - 2, இஞ்சித் துருவல் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 1, கடுகு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசிக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளித்து... இஞ்சித் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, பிரெட் தூள், உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். உருளைக் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, கரைத்த மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

6. பிரெட் வெஜிடபிள் கட்லெட்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, கேரட், உருளைக்கிழங்கு - தலா 2, குடமிளகாய் - 1, கொத்தமல்- சிறிதளவு, பச்சை மிளகாய் - 1, எண்ணெய் - கால் டீஸ்பூன், நெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து மசிக்கவும். பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். குடமிளகாயைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். குடமிளகாயையும், கேரட்டையும் எண்ணெயில் லேசாக வதக்கவும். இதனுடன் உருளைக்கிழங்கு, பிரெட் தூள், நறுக்கிய கொத்தமல்லி, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு கட்லெட் வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். தோசைக்கல் (அ) நான் ஸ்டிக் தவாவில் போட்டு நெய் தடவி சுட்டெடுக்கவும்.

சில்சாஸ் இதற்கு சூப்பர் காம்பினேஷன்.

7. பிரெட் பூரண போளி

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, மைதா மாவு, பொடித்த வெல்லம் - தலா 150 கிராம், தேங்காய் துருவல் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன், கேசரி பவுடர் - சிறிதளவு.
செய்முறை: பிரெட்டை பொடித்து, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகப் பூரணம் போல் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா மாவில் கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, சிறு அப்பளங்களாக இடவும். இதனுள் பூரண உருண்டைகளை வைத்து மூடி, ஒரு வாழை இலை (அ) பிளாஸ்டிக் ஷீட்டில் நெய் தடவி போளிகளாக தட்டவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து, இருபுறமும் நெய்விட்டு சுட்டெடுக்கவும்.

பருப்பு சேர்க்காத இந்த பிரெட் போளி, ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும். பண்டிகை நாட்களில் முந்தைய நாளே தயாரித்து வைத்து விடலாம்.

8. பிரெட் வெஜிடபிள் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, குடமிளகாய், கேரட் - தலா 1, தக்காளி, வெங்காயம் - தலா 2, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, வெண்ணெய் - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கேரட், குடமிளகாய், வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி, கரம் மசாலாத்தூள், பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும். ஒரு பிரெட் துண்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, வதக்கிய காய்கறிக் கலவையை அதன் மேல் வைத்து, மற்றொரு பிரெட் துண்டால் மூடி டோஸ்ட் செய்யவும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரெசிபி இது. சூடாக சாப்பிட டோஸ்ட்... ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும்.

9. கல்கத்தா ஜீரா

தேவையானவை: பிரெட் - ஒரு பாக்கெட், சர்க்கரை சேர்க்காத பால் கோவா - 100 கிராம், நெய் - 150 கிராம், சர்க்கரை - 250 கிராம், பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, குங்குமப்பூ - சிறிதளவு.
செய்முறை: பிரெட் ஓரங்களை 'கட்’ செய்து நீக்கிவிட்டு, பிரெட்டை பாலில் நனைத்து உடனே ஒரு அகலமான தட்டில் வைத்து, அதனுடன் கோவாவை சேர்த்து மூடி, சிறிய கட்லெட் போல் தட்டவும். கடாயில் நெய் விட்டு, அதில் கட்லெட்களைப் போட்டு பொரித்தெடுக்கவும். சர்க்கரையைப் பாகு காய்ச்சி, கம்பி பதம் வந்ததும் பொரித்து வைத்த கட்லெட்டின் மேல் ஊற்றி... குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

இது, வித்தியாசமான ஸ்வீட்... வெரி டேஸ்ட்டி!

10.பிரெட் சமோசா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, மைதா மாவு - 150 கிராம், பீன்ஸ் - 10, கேரட், வெங்காயம் - தலா 2, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் - தலா 1, கரம் மசாலாத்தூள் - சிறிதளவு, இஞ்சித் துருவல் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். மைதா மாவில் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். வெங்காயம், பீன்ஸ், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கி... பீன்ஸ், கேரட், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். இதில் பிரெட் தூள், உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்த மைதா மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, உள்ளே உருண்டையை வைத்து, சமோசா வடிவில் மூடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து ஒவ்வொரு சமோசாவாக போட்டு பொரித்தெடுக்கவும்.

மாலை வேளையில் சூடாக சாப்பிட நன்றாக இருக்கும். சைட் டிஷ் தேவை இல்லை.

11. பிரெட் பஜ்ஜி

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, கடலை மாவு - 100 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - 50 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பிரெட் துண்டை நான்கு துண்டுகளாக 'கட்’ செய்யவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜிமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதில் பிரெட் துண்டுகளைத் தோய்த்து காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
வெங்காய சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

12. பிரெட் அல்வா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, சர்க்கரை - 100 கிராம், பால் - 500 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி, சிறிது கெட்டியானதும் பிரெட் பொடியை சேர்த்துக் கிளறி, சர்க்கரை சேர்த்து கெட்டியாகக் கிளறவும். வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் போட்டு, நெய் விட்டு மேலும் கிளறி இறக்கவும்.

பால் மற்றும் பிரெட் இரண்டும் சேர்ந்து வித்தியாசமான சுவையை உண்டாக்கும் அல்வா இது.

13.பிரெட் அடை

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, இட்அரிசி - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 2, தக்காளி, வெங்காயம் - தலா 1, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இட்அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து கொள்ளவும். அதனுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பிரெட் சேர்த்து அரைக்கவும். இதில் உப்பு சேர்த்துக் கலந்து, அடை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை காய வைத்து, அதில் மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

பூண்டு வாசனை பிடிக்கும் என்றால், அரைக்கும்போது இரண்டு பூண்டுப் பல் சேர்க் கலாம்.

14. பிரெட் ஸ்பிரிங் ரோல்

தேவையானவை: மைதா மாவு - 100 கிராம், பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் (வெங்காயத்தாள்), வெங்காயம், குடமிளகாய், கேரட் துருவல் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் பிரெட் தூள் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... கேரட், குடமிளகாய், வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், பிரெட் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். மைதா மாவை சப்பாத்தி மாவு போல பிசைந்து, சிறு அப்பளங்களாக இட்டு, வதக்கிய கலவையை நடுவில் வைத்து பாய் போல் சுருட்டவும். இருபுறமும் தண்ணீரைத் தொட்டு மூடி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தக்காளி சாஸுடன் சாப்பிட ஸ்பிரிங் ரோல்... சூப்பர் ரோல்!

15. பிரெட் வடை

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, உளுத்தம்பருப்பு - 100 கிராம், வெங்காயம் - 2, இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும். உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

இதற்கு புதினா சட்னி நன்றாக இருக்கும். திடீர் விருந்தினர்கள் வந்துவிட்டால் பிரெட் தூளுடன் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்துப் பிசைந்தும் இதே முறையில் செய்யலாம்.

16. பிரெட் சூப்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 4, தக்காளி - 6, மிளகுத்தூள் நெய் - தலா அரை டீஸ்பூன், வெண்ணெய், சோள மாவு - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கோஸ் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு தோல் உரித்து, மிக்ஸியில் அரைக்கவும். கோஸ் துருவலை நெய் விட்டு வதக்கி, தக்காளி சாறு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து லேசாக சூடாக்கவும். பிரெட்டை பொடித்து சேர்க்கவும். இதனுடன் சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி கொத்தமல்லி, வெண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

சூடாக குடித்தால் 'சூப்’பராக இருக்கும். காய் வேக வைத்த தண்ணீரை வீணாக்காமல், அதைச் சேர்த்தும் சூப் தயாரிக்கலாம்.

17. பிரெட் சப்பாத்தி

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, மைதா மாவு - 150 கிராம், வெண்ணெய் - 2 டீஸ்பூன், பால் - 100 மில்லி, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை: பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன் வெண்ணெய், பால், சர்க்கரை, பொடித்த பிரெட் சேர்த்துப் பிசைந்து, பதினைந்து நிமிடம் மூடிவைக்கவும். இதை சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் லேசாக நெய் தடவி சுட்டு எடுக்கவும்.

இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம். பிரெட், சர்க்கரை பால் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்.

18. பிரெட் குணுக்கு

தேவையானவை: பிரெட் - 10 துண்டுகள், வெங்காயம், பேபிகார்ன் - தலா 2, பச்சை மிளகாய், வேக வைத்த உருளைக்கிழங்கு - தலா 1, பொடியாக நறுக்கிய புதினா - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டை உதிர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பேபிகார்ன், வேக வைத்த உருளைக்கிழங்கு, புதினா, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, பொன்னிற மாக வேக வைத்து எடுக்கவும்.

சாஸ் தொட்டு சாப்பிடலாம். வாயில் போட்டதும் 'நறுக்’கென இருக்கும் இந்தக் குணுக்கு.

19. பிரெட் கேக்

தேவையானவை: பிரெட் - 6 துண்டுகள், நெய்யில் வறுத்த மைதா மாவு - 100 கிராம், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 கிராம்., சர்க்கரை - 200 கிராம்.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். பாதாம், முந்திரியை ஊற வைக்கவும். பாதாமை தோல் உரித்து, முந்திரி சேர்த்து நைஸாக அரைக்கவும். சர்க்கரையை, மூழ்கும்வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, சிறிது கொதித்ததும் மைதா மாவை சிறிது சிறிதாக போடவும். பிரெட் தூள், முந்திரி - பாதாம் விழுது, நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

20.பிரெட் சாலட்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, கேரட், வெள்ளரிக்காய், தக்காளி - தலா 1, முளைக்கட்டிய பாசிப்பயறு, முளைக்கட்டிய கொண்டைக்கடலை - தலா 50 கிராம், எலுமிச்சம்பழம் - 1, பொடியாக நறுக்கிய கொத்தமல்- சிறிதளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேரட், வெள்ளரி, தக்காளியை வட்டமாக நறுக்கவும். பிரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய பிளேட்டில் வைத்து நடு நடுவே வெள்ளரி, தக்காளி, கேரட், முளைகட்டிய பயறு, கொண்டைக்கடலை, உப்பு, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்சேர்க்கவும். எலுமிச்சைச் சாறு பிழிந்து பரவலாக விடவும்.

காலை நேர பரபரப்பில் ஈஸியாக தயாரிக்கலாம். முழுமையான ஊட்டச்சத்துடன் கூடிய பிரேக்ஃபாஸ்ட்டாக இருக்கும்.

21. பாவ் பாஜி

தேவையானவை: பாவ் பிரெட் (பேக்கரியில் கிடைக்கும்) - 2 பாக்கெட், பீன்ஸ் - கால் கிலோ, குடமிளகாய், தக்காளி - தலா 1, கேரட், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் - தலா 2, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், வெண்ணெய் - 100 கிராம், கரம் மசாலாத் தூள், நறுக்கிய கொத்தமல்- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பீன்ஸை நீளவாக்கில் மெல்லியதாகவும்... கேரட், குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாகவும் நறுக்கவும். பீன்ஸ், கேரட்டுடன் உப்பு சேர்த்து வேகவிடவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரிக்கவும். கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து... குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும். இதனுடன் வேக வைத்த பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, வதக்கிய தக்காளி, குடமிளகாய், கொத்தமல்சேர்த்து நன்றாக மசித்துப் பிசையவும். பாவ் பிரெட்டை நடுவில் வெட்டி, மசித்த கலவையை உள்ளே வைத்து, சிறிது வெண்ணெய் தடவி தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுக்கவும்
.
பிரெட்டை, இந்த மசாலா கலவையைத் தொட்டும் சாப்பிடலாம். சைட் டிஷ் தேவை இல்லை.

22. பிரெட் ஜாமூன்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 4, சர்க்கரை கலக்காத பால் கோவா, பால் பவுடர் - தலா 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். இதனுடன் கோவா, பால் பவுடர் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து சிறு உருண்டைகளாக உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சர்க்கரையை, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி... கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து, பொரித்த ஜாமூன்களைப் போட்டு வைத்து, சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.

பால் பவுடருக்குப் பதிலாக ஜாமூன் மிக்ஸ் சேர்த்தும் இதை செய்யலாம்.

23. பிரெட் ரெய்தா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 4, புளிக்காத தயிர் - 250 மில்லி, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், வெங் காயம், தக்காளி, கொத்தமல்- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.

இதே முறையில் ஸ்வீட்கார்ன், பழங்கள் சேர்த்து தித்திப்பு ரெய்தாவும் செய்யலாம்.

24, புதினா - கார்லிக் பட்டர் டோஸ்ட்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, புதினா - ஒரு கைப்பிடி, உரித்த பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் - 1, வெண்ணெய் - 100 கிராம், உப்பு - சிறிதளவு, நெய் - 6 டீஸ்பூன்.

செய்முறை: புதினாவுடன், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும். இதில் வெண்ணெய், உப்பு சேர்த்து நன்றாகக் குழைத்து, பிரெட்டின் இருபுறமும் தடவவும். பிரெட்டை தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு மொறுமொறுப்பாக எடுக்கவும்.

இதற்கு சாஸ் சிறந்த காம்பினேஷன். பூண்டு, புதினா வாசனையுடன் சுவையும் அட்டகாசமாக இருக்கும்.

25. பிரெட் ஊத்தப்பம்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, புழுங்கல் அரிசி - 150 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி, வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் - தலா 1, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கவும். கேரட்டை துருவவும். அரிசி, உளுந்தை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். இதனுடன் பிரெட் சேர்த்து நைஸாக அரைக்கவும். சிறிது எண்ணெயில் வெங்காயம், கேரட், பச்சை மிளகாயை வதக்கி... உப்பு சேர்த்து, மாவில் கலக்கவும்.
தோசைக்கல்லை காய வைத்து மாவை சிறு ஊத்தப் பமாக ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

தேங்காய் சட்னி இதற்கு சூப்பராக இருக்கும்.

26, பிரெட் நெய் அப்பம்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 2 (பொடித்துக் கொள்ளவும்), அரிசி மாவு - 4 டீஸ்பூன், கோதுமை மாவு - 3 டீஸ்பூன், ரவை - 2 டீஸ்பூன், வாழைப்பழத் துண்டுகள் - 4, பொடித்த வெல்லம் - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன், தேங்காய்ப்பால் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, பிரெட் தூள், வெல்லத்தூள், ஏலக்காய்த் தூள், வாழைப்பழத் துண்டுகள் எல்லாவற்றையும் சேர்த்து, தேங்காய் பால் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். அப்பம் தயாரிக்கும் குழியில் நெய் தடவி, சிறு கரண்டியால் மாவை ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

தேங்காய் துருவல் சேர்த்தும் மாவைக் கரைக் கலாம்.

27. பிரெட் உப்புமா

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 10, வெங்காயம், கேரட் - தலா 2, பச்சை மிளகாய் - 1, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டில் சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு சேர்த்து உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகுத்தூள் போட்டு தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் சேர்த்து வதக்கி, உதிர்த்த பிரெட், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

விருப்பப்பட்டால் பட்டாணி, குடமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.

28. பிரெட் பீட்ஸா

தேவையானவை: பீட்ஸா பிரெட் - 1, சீஸ் - 4 துண்டுகள், கேரட், குடமிளகாய், வெங்காயம் - தலா 1, நெய் - 6 டீஸ்பூன்.
செய்முறை: பிரெட்டை தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் தடவி சுட்டு, வட்டமாக 'கட்’ செய்யவும். சீஸ், குடமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, பிரெட்டின் மீது சுற்றிலும் லேயர் லேயராக வைக்கவும். இடைவெளியில் கேரட் துருவலை பரவலாக போட்டு, அப்படியே சாப்பிடவும்.

அடை மாவிலும் அடை தட்டி இதே முறையில் அலங்கரித்து கொடுக்கலாம். அடம் பிடிக்கும் குழந்தையும் ஆர்வமாக சாப்பிடும்.


29. பிரெட் கிரேவி

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, இஞ்சி - சிறிய துண்டு, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 1, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், கொத்தமல்- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி... தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்து அரைக்கவும். பிரெட் தூள், இஞ்சிக் கலவை விழுது, பட்டாணி விழுது எல்லாவற்றையும் கலந்து, உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். இறக்கு வதற்கு முன்பு கொத்த மல்லியை நறுக்கி மேலா கத் தூவவும்.

சப்பாத்தி, தோசைக்கு தொட்டுச் சாப்பிட அருமை யாக இருக்கும்.

30.பிரெட் சீஸ் பால்

தேவையானவை: பிரெட் துண்டுகள் - 4, கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு - தலா 100 கிராம், சோள மாவு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், சீஸ், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எல்லா மாவையும் போட்டு உப்பு, பிரெட் தூள், மிளகுத்தூள் மிளகாய்த்தூள், சீஸ் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.

இதே முறையில் காரம் சேர்க்காமல் செய்து, ஜீரா பாகில் போட்டுக் கொடுக்கலாம்.

Thanks to - அவள் விகடன்