செவ்வாய், 10 நவம்பர், 2009

சோயாவின் மகிமை

தற்சமயம் நம் உணவில் இடம் பிடித்துள்ள சோயா அதிகப் புரதச் சத்தும், குறைந்த கொழுப்புச் சத்தும் கொண்டுள்ளது. இதன் மூலம், அதிக புரதத்தைக் குறைந்த செலவில் அடையலாம். சோயா பொருட் களைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் இதய நோய்கள் மற்றும் புற்றுநோயை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். மேலே குறிப்பிட்டுள்ள நோய்களைத் தவிர்த்து எழும்புகளை பலப்படுத்து வதுடன் பெண்கள் மற்றும் நீரழிவு நோயாளிகளுக்கு உகந்தது சோயா.

உண்மைகளும் நன்மைகளும் :


சோயாவிலுள்ள PUFA எனப்படும் Poly Unsaturated Fatty Acids இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.

சோயாவில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.

சோயா உணவு கெட்ட கொலஸ்டிரால் என்னும் LDL (Low Density Lipo proteins) அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்டிரால் எனப்படும் HDL (High Density Lipoproteins) அளவைக் கூட்டுவதன் மூலம், மாரடைப்பைக் குறைக்கிறது.

தினசரி சோயா உட்கொள்வதன் மூலம் பல்வேறு வகையான புற்று நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

முக்கியமாக நாள்பட்ட பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்துவதில் சோயா பெரும் பங்காற்றுகிறது.

சோயா உணவு மாதவிடாய் நின்ற பின் உடலில் ஏற்படும் சங்கடங் களைக் குறைத்து, எலும்புகளின் சீரழிவைத் தடுக்கிறது. சோயா உடல் முதிர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது.

இரும்புச்சத்தும், கால்ஷியமும் நிறைந்துள்ளதால், இவ்வுணவு கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்றது.

சோயாவில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டின் எனப்படும் வைட்டமின் ஏ சத்து சருமத்தை மென்மையாக்குவதுடன், கண் சம்பந்தமான முக்கியமான மாலைக் கண் நோயைத் தடுக்கிறது. குழந்தைகளுக்குத் தினமும் சோயா உணவில் சேர்க்கப்படும் போது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம்.

குழந்தைகளுக்கு மாற்று உணவாக சோயா தொடர்ந்து தரப்பட்டு வந்தால் உடல் எடை, உயரம் மற்றும் நினைவாற்றல் கூடுவதுடன் இரத்த நிறமிகளின் (ஹீமோகுளோபின்) எண்ணிக்கையும் உயரும்.

சோயா உணவு கால்ஷியம், மக்னீஷியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக் களைக் கொண்டிருப்பதால், பற்களை உறுதிப்படுத்துவதுடன் நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்கிறது.

சோயா உணவு யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தி மூட்டுவலியைக் (ஆர்த்ரைட்டிஸ்) குறைத்து சிறுநீரகக் கோளாறிலிருந்து பாதுகாக்கிறது.

¼ கிலோ சோயா வடகத்திலுள்ள புரதம் 3-5 லிட்டர் பால் அல்லது 1 கிலோ மாமிசம் அல்லது 24 முட்டைகளின் புரதத்திற்கு சமமானது.

அனைத்துப் பருப்புகளிலும் உள்ள புரதச் சத்தைவிட மும்மடங்கு புரதச்சத்து சோயா வடகத்திலுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கும் இது மிக அவசியமான ஊட்டச்சத்து உணவு.

வல்லாரை சம்பல்

தேவையான பொருட்கள்:

வல்லாரை கீரை - 1 கட்டு
சின்ன வெங்காயம் 10 பொடியாக நறுக்கியது
கேரட் - 1 துருவியது
தேங்காய் - 1 மேசைக்கரண்டி
லெமன் - பாதி
ப.மிளகாய் - 1 பொடியாக நருக்கியது
மாசி பொடி - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு

செய்முறை:

கீரையை பொடியாக நறுக்கி அதனுடன் மேல் கொடுத்துள்ளவற்றை சேர்த்து நன்றாகப் புரட்டவும்.

திரட்டிப்பால்

தேவையான பொருட்கள்

கன்டன்ஸ்ட் மில்க் - 1 டின் (14 அவுன்ஸ்)
தயிர் - 2 மேசைகரண்டி
நெய் - 2 மேசைகரண்டி

செய்முறை

1. முதலில் மைக்ரோவேவ் பவுலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் ஊற்றிக்கொள்ள வேண்டும்.
2. பின் மைக்ரோவேவ்வில் 7 நிமிடம் வைத்துக்கொள்ளவும்.
3. இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை வெளியே எடுத்து கிளறி விடவும்.


கார சாரமான முட்டை பிரை



தேவையான பொருட்கள்

முட்டை - 7
1. உப்பு தூள் முக்கால் தேக்கரண்டி
2. இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
3. மிளகு தூள் -ஒரு தேக்கரண்டி
4. மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
5. எண்ணை - பொரிக்க தேவையான அளவு
6. பட்டர் (அ) டால்டா - அரை தேக்கரண்டி

1. தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.

2. முட்டையை கழுவி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அரை தேக்கரண்டி உப்பு போட்டு 10 நிமிடம் வேகவைத்து கொள்ளவும்.

3. மசாலாக்களை சிறிது தண்ணீர் தெளித்து கலக்கி கொள்ளவேன்டும். முட்டையை வெந்ததும் குளிர்ந்த தண்ணீர்க்கு மாற்றி மெதுவாக அவசர படாமல் பிரித்தெடுக்கவும்.

4. இரண்டாக கட் பண்ணி மசாலாக்களை இரு புறமும் தடவவும்.

5. ஐந்து நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

6. ஒரு நான் ஸ்டிக் தவ்வாவில் எண்ணை ஊற்றி தீயை குறைத்து விட்டு எல்லா முட்டைகளையும் போட்டு முன்று நிமிடம் மொருக விட வேண்டும்.

7.எல்லா முட்டைகளையும் திருப்பி பொட்டு மறுபடி வேக விட வேண்டும்.திருப்பியதும் வெடிக்க ஆரம்பிக்கும்.

8. தீயை குறைத்து முடி போட்டு முன்று நிமிடம் பொரிய விட வேண்டும்.

9.முடியை திரந்து மறுபடி ஒரு முரை திருப்பி போட்டு ஒரு நிமிடம் பொரிய விட்டு எடுத்து விட வேண்டும்.

10.சுவையான பாயில்ட் முட்டை பிரை தயார்.

குறிப்பு

இது ஒரு நல்ல கார சாரமான முட்டை பிரை.சில பேருக்கு பாயில்ட் எக் பிடிக்காது அப்போது அதை இப்படி செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது வெரும் மிளகு மட்டும்சேர்த்து நல்ல நெய்யில் பொரித்து கொடுக்கவும்.
பொரித்து முடித்ததும் அந்த மசாலா எண்ணை மிகவும் சுவையாக இருக்கும் அப்படியே சாதம் போட்டு பிறட்டி சாப்பிடலாம்.
எண்ணை ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணையும் பயன் படுத்தலாம்.
இது தயிர்சாதம், எல்லா வகையான் கட்டு சோறுகள்,ரசம் சாதம், பருப்பு சாதம் அனைத்திற்கும் பொருந்தும். மாலை நேரம் பசி எடுத்தால் கூட குளிர் காலத்தில் சாப்பிட சுவையாக இருக்கும்.

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.


வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.