வெள்ளி, 17 ஜூலை, 2009

பேரீச்சை ஹல்வா

பேரீச்சை பழ அல்வா

தேவையான பொருட்கள்:

பேரீச்சை பழம் ........ 250கிராம்(விதை நீக்கியது)

பால் ......... 4கப்(காய்ச்சியது)

சர்க்கரை ......... 1/2 கப்

நெய் .......... 1/4கப்

முந்திரி .......... தேவையான அள்வு

உல்ர்ந்த திராட்சை...... தேவையான் அளவு



செய்மறை

முதலில் பேரிச்சை பழத்தை 1/2 மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

முந்திரி,திராட்சையை நெய்யில் வறுத்து வைக்கவும்.

அடி கனமான் பாத்திரத்தில் அரைத்த விழுது,சர்க்கரை, பால் இவற்றை போடவும்.

அடுப்பில் வைத்து நன்றாக கிளறவும்.தீயை சிம்மில் வைத்துக் கிளறவும்.

கெட்டியானதும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும்.நன்கு சுருண்டு அல்வா பதத்திற்க்கு வரும்போது முந்திரி,திராட்சை போட்டு இற்க்கிவிடுங்கள்.

அல்வா ரெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக