வெஜிடேரியென்:
சப்பாத்தி ரெடியாக இருந்தால் மசாலா செய்து ரோல் பண்ணி எடுத்துச் செல்லலாம்.மசாலவும் முன்பே தயாரித்து வைத்துக்கொள்ளலாம்,
காப்சிகம் ரோல்:
எண்ணை, வெங்காயம் நறுக்கியது,இஞ்சி பூண்டு பேஸ்ட்,தக்காளி, காப்சிகம் ,கறி மசாலா,மல்லி இலை,உப்பு எல்லாம் சேர்த்து வதக்கி எடுத்தால் மசாலா ரெடி.
சப்பாத்தியில் ரோல் செய்து சாப்பிடவும்.
காளிஃப்ளவர் ரோல்:
எண்ணை,வெங்காயம்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,காளிஃப்ளவர்,பெப்பர்,மஞ்சள் தூள்,உப்பு,மல்லி இலை சேர்த்து வதக்கினால் மசாலா ரெடி.
சப்பாத்தியில் ரோல் செய்து சாப்பிடவும்.
பேபிகான் மசாலா;
வெங்காயம் தாளித்து,பேபி கான் கட் பன்னியது,கேரட்.பீன்ஸ்கட் பண்ணியது ,மஞ்சல் தூள்,மிளகாய்த்தூல் ,கரம் மசாலா,,உப்பு சேர்த்து வதக்கி மல்லீலை சேர்த்தால் மசாலா ரெடி.
சப்பாத்தியில் ரோல் செய்து சாப்பிடவும்.
நான் வெஜிடேரியன்:
எக் ரோல்:
1 முட்டை,பாதி வெங்காயம்,கால் தக்காளி கட் பண்ணியது,மல்லி இலை,உப்பு ,மிளகு போட்டு ஆம்லட் செய்து சப்பாதி ரோல் செய்து சாப்பிடவும்.
டூனா ரோல்:
எண்ணை ,வென்காயம்,தக்காளி,சில்லி பவுடர்,உப்பு, டின் டூனா,சேர்த்து வதக்கினால் மசாலா ரெடி.
சப்பாத்தியில் ரோல் செய்து சாப்பிடவும்.
கீமா ரோல்:
எண்ணை,வெங்காயம்,இஞ்சி பூண்டு,பேஸ்ட்,பீஸ்,தக்காளி,உப்பு,குக் செய்த கீமா சேர்த்து வதக்கினால் மசாலா ரெடி.
சப்பாத்தியில் ரோல் செய்தால் கீமா பீஸ் ரோல் ரெடி.
குறிப்பு:கட் பண்ணவேண்டியதை கட் பண்ணிக்கொள்ளவும்,மற்றபடி வதக்கவேண்டியது தான்.தினமும் வெரைட்டி யாக சப்பாத்தி ரோல் சாப்பிடலாம் ,போரடிக்காது.
இந்த மசாலவையே ப்ரெட் டோஸ்ட் க்கும் பயன்படுத்தலாம்.மசாலவை ப்ரெட்டில் வைத்து டோஸ்டரில் அமுக்கி எடுத்தால் வெரைட்டி ப்ரெட் சாண் ட்விச் ரெடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக