சனி, 30 அக்டோபர், 2010

மனம் மகிழுங்கள்-9

சென்ற அத்தியாயத்தில் பாராட்ட வேண்டியதன் அவசியம் பற்றியும் அதை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் பார்த்தோம். சிலர் பாராட்டை எதிர்மறையாய்ப் பிறரிடமிருந்து இழுத்துப் பெறுவார்கள். உளவியல் மொழியில் reverse psychology.

“எனக்கு இந்த கிரிக்கெட் அவ்வளவு சரியாக விளையாட வரலை.”

“ஏன்? நீ நல்லாதானே ஆடறே?”

“அப்படியெல்லாம் இல்லை. பௌலிங் ஓக்கே. பேட்டிங்தான் சொதப்புது.”

“அன்னிக்குக் கூட நீ 45 நாட் அவுட். அதுலே 1 சிக்ஸர், மூன்று பவுண்டரி. பேட்டிங்தான் கலக்குறியே.”

“உனக்கு பெரிய மனசு. பாராட்டி ஊக்கப்படுத்தப் பார்க்குறே.”

“இல்லே இல்லே. உண்மையிலேயே நீ நல்லா தான் ஆடுறே.”

“எனக்கு அப்படித் தோணலே.”

எரிச்சலூட்டும் இத்தகைய உரையாடலை எங்காவது நீங்கள் கேட்டிருக்கலாம், அல்லது அப்படியொருவரை சந்தித்திருக்கலாம். இது போலித் தன்னடக்கப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. நம்மிடம் இந்தக் குறை இருந்தால் என்ன செய்வதாம்? இத்தகைய போலித் தன்னடக்கத்தைத் தவிர்த்துவிட்டு நம்மைப் பற்றிய உண்மையான மதிப்பை உணர்ந்து அதற்கேற்ப உரையாடிப் பழக வேண்டும்.

சிறப்பான சுயபிம்பம் உள்ள மக்கள் போலித் தன்னடக்கம் கொள்ளமாட்டார்கள்; பாராட்டிற்காக அலைய மாட்டார்கள். நேர்மையாய்த் தம்மை வந்தடையும் பாராட்டை உவப்புடன் ஏற்றுக் கொள்ளவார்கள் – மெய்யான தன்னடக்கத்துடன்!

முந்தைய அத்தியாயங்களில் உடல் நலம் பற்றிப் பார்த்தோம். மன நலனுக்கும் உடல் நலனுக்கும் எக்கச்சக்க நட்பு உள்ளதாம்; அவை இணைபிரியாத் தோழிகளாம்.

ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு “அப்செட்“ ஆகும்போது அவருள் வேதியியல் மாற்றம் நிகழ்ந்து அவரது உடலினுள் ஒருவகையான ரசாயனம் உருவாகிறது. எந்த விஞ்ஞானி வீட்டில் அப்செட் ஆனரோ தெரியாது – மெனக்கெட்டு வந்து அதை ஆராய்ச்சி செய்திருக்கிறார் பாருங்களேன். கடுமையான பயத்திலோ, அல்லது கோபத்திலோ உள்ள ஒருவரிடமிருந்து இரத்தத்தைப் பரிசோதனைக்காக உறிஞ்சி, சோதனைக் கூடத்திலுள்ள பன்றிகளுக்குச் செலுத்திப்பார்த்தபோது அவை இரண்டு நிமிடங்களில் இறந்துபோனதை அராய்ச்சியாளர்கள் கண்டனர்.

“அட! கொலை செய்ய இது நல்ல உபாயமாக இருக்கே!” என்று ஊசியுடன் கிளம்பிவிட வேண்டாம். ஆராய்ச்சியின் உள்ளார்ந்த விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை, அது இங்கு முக்கியமும் இல்லை. உடலின் உள்ளே நிகழும் ரசாயன மாற்றம் சிலாக்கியமானதல்ல. அதுதான் முக்கியம்.

ஓர் உயிரைக் கொல்லும் பலம் வாய்ந்த ரசாயனம் நமக்குள் எத்தகைய உபாதைகளையெல்லாம் தோற்றுவிக்கும்? “அளவிற்கதிகமான பயம், கோபம், எரிச்சல், ஏமாற்றம், மன உளைச்சல் ஆகியன தோற்றுவிக்கும் ரசாயனம் மனிதனின் உயிரையும் பதம்பார்க்க வல்லது!” என ஆராச்சியாளர்கள் கவலையோடு தெரித்துள்ளனர்.

யாருக்கு இதெல்லாம் இல்லை? “செத்தேன் நான்,” என்று உடனே கவலையும் பயமும் வேண்டாம். இங்கு நமது நோக்கம் உண்மையை உணர்ந்து அறிந்து கொண்டு மனம் மகிழ்வது.

பயம் ஏற்படின் அது பந்தாய் வயிற்றில் உருள்வதும் கோபம் எல்லை மீறினால் அது தலைக்கேறி வானத்திற்கும் பூமிக்குமாகக் குதிப்பதும் - உள்ளும் புறமுமாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித மாற்றங்கள் நிகழ்கின்றன. சிலருக்குத் தன் காதல் துணையைக் கண்டதும் வயிற்றில் ஏதோ உணர்ச்சி. “பட்டாம்பூச்சி பறக்குதுபா!”

பயம், கோபம், காதல் என்றில்லை, மனதினுள் ஏற்படும் எந்தவொரு எண்ணமும் ஒவ்வொரு நொடியும் உடலில் வேதியியல் மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றது. நீங்கள் காரோட்டிக் கொண்டே செல்லும்போது உங்களுக்காகவே காத்திருந்தது போல் திடீரென்று ஒரு ஆட்டோக்காரன் உங்கள் எதிரே புகுந்து சட்டென்று ப்ரேக்கும் போட்டால் உங்களுக்குள் என்னென்ன நிகழ்கின்றன? உடல் முழுதும் ஒரு மின்சார அதிர்வு ஏற்பட்டு, உடனடியாக மூளை மெஸேஜைக் காலுக்கு அனுப்பிப் ப்ரேக்கை அழுத்தி, அல்லது கைகள் கார் ஸ்டீரிங்கை படுவேகமாய்த் திருப்பி...

என்ன உல்லாச மூடில் அதுவரை இருந்திருந்தாலும் சரி, சட்டென அனைத்தும் தொலைந்து, கெட்டக் கோபத்தில் சன்னலுக்கு வெளியே தலையை நீட்டி, உங்களது கண்ணியத்திற்கேற்ப வாயிலிருந்து வாழ்த்துரை வெளிப்படும். அந்த திடீர்க் கணத்தில் வயிற்றில் ஓர் உணர்ச்சி எழுந்ததே என்ன அது? அதைத் தோற்றுவித்தது எது? அது ஒரு ரசாயனம்.

ஆக, மனதிற்கும் உடலுக்கும் வயர்லெஸ் கனெக்ஷன் உண்டு. இயற்கை WiFi. எனவே மனதில் நிகழும் மாற்றம், உடலில் வெளிப்படுகிறது.

மனஉளைச்சல், சினம், அச்சம் இவற்றையெல்லாம் கிலோ கணக்கில் மனதிற்குள் வைத்துக் கொண்டு, உடல் ஆரோக்கியத்தையும் கூடவே குடித்தனம் வைத்துக்கொள்ள முடியாது; முடியவே முடியாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஏனெனில் உடல் ஆரோக்கியம் என்பது மன ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பு. தீர்க்கப்படாத பிரச்சனைகள் ஏதும் மனதிற்குள் உழன்றால் அதை உடல் ஆரோக்கியம் காட்டிக் கொடுத்துவிடுகிறது.

இதெல்லாம் இப்பொழுது படித்தாலும், நாமறியாமல் நமது பள்ளிப்பருவத்திலேயே நமக்கு இது நிகழ ஆரம்பித்துவிடுகிறது. எனது நாலாவது வகுப்பில் ஒருமுறை நான் தேர்வுக்குப் படிக்காதபோது, எனக்குக் காய்ச்சல் வருவதைப் போலாகி, நான் அழுவதைப் பார்த்த என் தந்தை டீச்சரிடம் ஸ்பெஷல் பர்மிஷன் பெற்று, என்னை வகுப்பில் அமர்த்திவிட்டு வந்தார்கள். சிலருக்கு வீட்டுப் பாடம் முடிக்கவில்லை, கணக்கு மண்டையில் ஏறவில்லை என்று ஏதாவது ஒரு காரணம் அமையும்போது, மனது நினைக்கிறது, “சே! உடம்புக்கு முடியாமல் போனால் லீவ் எடுத்து விடலாம்.”

மாயம் நிகழ ஆரம்பிக்கும் உடனே உள்ளுணர்வு உடலுக்குக் கட்டளையிட, தலைவலிப்பது போலிருக்கும்; காய்ச்சல் அடிப்பது போலிருக்கும். பெற்றோர் நெற்றியைத் தொட்டுப் பார்த்து ஓக்கே சொல்லிவிட்டால் போதும், “ஹையா! இன்னிக்கு ஸ்கூலுக்கு மட்டம்.”

என்ன? இதெல்லாம் உங்கள் சிறுவயதில் நடக்கவில்லையா? ஒன்று நீங்கள் பொய் சொல்ல வேண்டும். அல்லது, “அநியாயத்திற்கு நீங்கள் நல்லவர்.”

அடுத்தது -

நமது நம்பிக்கை, எதிர்பார்ப்பு போன்ற உணர்வுகள் உள்ளனவே..? அவையும் கூட நம்மை நோயில் ஆழ்த்திவிடும்.

உலகெங்கும் உலா வந்த பன்றிக் காய்ச்சல் – அது – தானாய்ப் பரவியது பாதி; பயத்தில் பரவியது மீதி. அதைப்போல் நம் பெற்றோருக்கு நீரிழிவு, இதய நோய், போன்ற குறிப்பிட்ட சில நோய்கள் இருந்திருந்தால், அவை பரம்பரையாய்த் தொடரும் சாத்தியக் கூறுகள் உள்ளன என்ற காரணத்தினாலேயே நமது மனது உடலுக்குக் கட்டளையிட்டு விடுகிறது. நமக்குக் குறிப்பிட்ட வயதில் அந்த நோய்கள் வந்துவிடும் என்று மனதும் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராய் இருக்க, உள்ளுணர்வு அதற்கேற்ப உடலைத் தயார் செய்துவிடுகிறது.

எதிர்மாறாய் உடல நலனுக்கும் அப்படியே. சிலர் சொல்லக் கேட்டிருக்கிறீர்களா, “எனக்கு ஜலதோஷமே ஏற்பட்டதில்லை. விக்ஸ் வாசனையே எனக்குத் தெரியாது.” அந்த மன வலிமையே அவர்களது உடலுக்குப் போதிய எதிர்ப்புச் சக்தியைத் தோற்றுவித்து, ஜலதோஷத்தை அவர்களிடம் நெருங்க விட்டிருக்காது.

மனதால் உடல்நலம் கெடுவது ஒருபுறமிருக்க, உடல்நலம் கெடுவதில் மனதிற்கு ஒரு சௌகரியமுமிருக்கிறது. இதையும் நமது பால்ய பருவத்திலயே நாம் அனுபவார்த்தமாய்ப் படித்துத் தேர்ந்துவிடுகிறோம்.

குழந்தைகளுக்கு உடல்நலமின்றிப் போகும்போது என்னாகிறது? அது பிறருடைய கவனத்தையும் அக்கறையையும் அவர்கள்பால் முழுதுமாய் ஈர்க்கிறது. ஜுரம், தலைவலி, இருமல் என்று படுத்துவிட்டால், அப்பா, அம்மா காட்டும் பாசம், தாத்தா, பாட்டி காட்டும் அக்கறை, கோபத்தையும் சண்டையையும் ஒதுக்கி வைத்துவிட்டுப் பணிவிடை புரியும் அண்ணன், அக்கா என்று அடுத்த சிலநாட்களுக்கு அந்தக் குழந்தைதான் வீட்டில் விஐபி.

இது நம் அனைவருக்கும் நமது இளம் பிராயத்தில் ஏதோ ஒருவகையில் நிகழ்ந்திருக்கும். அது நமது மனதிற்கு இதத்தையும் ஆறுதலையும் அளிக்க, நாம் வளர்ந்த பிறகும் அதுவே தொடர்கிறது. மனதிற்கு அன்பும் ஆதரவும் தேவைப்படும்போது அதைப் பிறரிடமிருந்து ஈர்ப்பதற்காய், உடல்நலம் தானாய்க் கெட்டுப்போகிறது. சிலர் செயற்கையாய் அதை முயலலாம். இவையாவும் நாம் உணர்ந்து சுதாரிப்புடன் நடப்பதைவிட நாம் அறியாமலேயே நமக்குள் நிகழ்கின்றன.

“அன்பும் பாசமும் சரியாய்ப் பகிர்ந்துகொள்ளப்படும் மனிதர்களிடையே இத்தகைய உள்ளுணர்வால் உருவாகும் நோய்கள் ஏற்படுவதில்லை. அவர்கள் எப்பொழுதுமே தங்களைப் பாதுகாப்பாகவே உணர்ந்து கொள்வதால் அவர்களது மனதும் மகிழ்கிறது, உடலும் நலமாய் இருக்கிறது,” என்கிறார்கள் மருத்துவர்கள்.

அடக்கிவைக்கப்பட்ட மனக்கிளர்ச்சியும் உணர்ச்சிகளும் உடல்நலனை நிச்சயம் பாதிக்கின்றன.

“என்னைப் பற்றிக் கவலைப்பட யார் இருக்கிறார்கள்?”, “நான் யாருக்கும் முக்கியமற்ற ஒரு ஜட வஸ்து”, “மற்றவர்கள் என்னை உதாசீனப்படுத்துவதும் புறக்கணிப்பதும் - அதெல்லாம் எனக்குப் பழக்கப்பட்டு விட்டது”, ”நான் வெளியே சிரிப்பது தான் உங்களுக்குத் தெரிகிறது; உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறேன்”...

இத்தகைய எண்ணங்கள் உங்களது மனதில் தோன்ற ஆரம்பித்தால்….. அது உடல்நலப் பேரழிவின் ஆரம்பம்!

அதற்காக?

இதென்ன சுற்றுப்புறச் சூழல் மாசால் உலகம் நாசமாவதைப் போல் சாதாரண விஷயமா? ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கூட்டம் போட்டுப் பேசிக் கலைவதற்கு? நமது மனம்! நமது உடல்! எனவே, நாம் தீர்வை அறிந்து செயல்படுத்தியே தீரவேண்டும்.

உடல் ஆரோக்கியத்திற்கும் ஊக்கத்திற்கும் அடிப்படை ஆக்கபூர்வ எண்ணங்கள் ஆகும் - positive thoughts. அதுதான் பூஸ்ட். 'Secret of our energy.'

அடுத்தது மிக முக்கியம். “நான் ஆரோக்கியமாய்த் திகழத் தகுதியானவன்” என்பதை நம்ப வேண்டும். மேம்போக்காக அல்ல, அழுத்தந்திருத்தமாய் நம்ப வேண்டும்.

அதற்கு மாறாய் நம்முடைய உள்மனதில், “நான் நல்லவனல்ல”, “நான் ஏகப்பட்ட கெட்டக் காரியங்கள் செய்துள்ளேன்”, “நான் தண்டிக்கப்பட வேண்டியவன்”, போன்ற பின்னடைவான எண்ணங்கள் - negative thoughts - இருந்தால், அதற்கான உன்னத எதிர்வினை தான் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போவது. ஒன்று தற்காலிகமாக: அல்லது ஆயுள் முழுதும்.

இதைச் சிறிது தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. இஷ்டத்திற்குக் கெட்ட காரியம் செய்துவிட்டு, அதை செல்போனில் படமும் எடுத்து, ப்ளூ ட்டூத்தில் இலவசமாய் ஊரெங்கும் வினியோகித்துவிட்டு, கோர்ட்டில் ஜட்ஜிடம் பாஸிட்டிவ்வாகப் பேசக்கூடாது. சட்டம் கண்ணைக் குத்தும்!

வேலையோ, தொழிலோ, அலுவலோ, ஹாபியோ நமக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும். நியாயமான மகிழ்வை வாழ்க்கையில் அமைத்துக் கொள்ளவேண்டும். இவை இரண்டும் இல்லையெனில், மனம் மாமியார் ஆகிவிடும். மருமகளை நச்சரிப்பதுபோல் தொடர்ந்து விடாமல் குறைபட ஆரம்பித்துவிடும்.

உடலோ மனதின் அடிமை. எனவே ஒவ்வாத சூழலில் இருந்து துன்பப்படும் மனதைக் காப்பாற்ற அது எப்படியாவது பாடுபடும். அதற்கு அது தேர்ந்தெடுக்கும் முதல் உபாயம் தனது ஆரோக்கியத்தை இழந்து மனதைக் காப்பதே!

நெடுக உடல்நலம் கெடுதலையும் மனதையும் சம்பந்தப்படுத்திப் பார்த்துக் கொண்டே வந்தோம். நன்றாக ஒரு விஷயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். இதன் அர்த்தம் உலகில் உள்ள அனைத்து வியாதிகளும் மனதால்தான் ஏற்படுகிறது என்பதில்லை. எனவே பைபாஸ் சர்ஜரி தேவைபடும் நோயாளியைப் பார்த்து, “மனைவி ஆட்டுக்கால் சூப் வைத்து உங்களுக்குக் காதலோடு ஊட்ட வேண்டும்,” என்று டாக்டர் சீட்டெழுதித் தரமுடியாது.

விஷயம் என்ன? உடல் ஆரோக்கியமாய்த் திகழ மனதின் பங்கு மிகமிக இன்றியமையாதது. அவ்வளவுதான். அதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

நமது எண்ணங்களும் உணர்ச்சிகளும் தான் நமது உடல்நலச் சூழ்நிலையை வடிவமைக்கின்றன. எனவே அதை எத்தகைய உகந்த சூழ்நிலையாய் வடிவமைப்பதென்பது நமது எண்ணங்களிலும் உணர்ச்சிகளிலும் அடங்கியுள்ளது.

தவிர இந்த உடல் ஆரோக்கியம் என்பது இலவச இணைப்பில்லை. அது உங்களது பிறப்புரிமை. ஆரோக்கியம் என்பது என்ன? அது நோயற்ற உடல்நலம் என்பது மட்டுமின்றி, அதையும் தாண்டிப் புனிதமானது. ஊக்கம், உடல் வலிமை, உள்ளுரம், உடலுரம் என்பனவெல்லாம் ஆரோக்கியம் சார்ந்தவை தான். வாழ்க்கை என்பதே போராட்டம் தான். ஆனால், ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போது, வாழ்க்கைக்கான போராட்டம் என்பதையும் தாண்டி உங்களால் ஆக்கபூர்வமாகச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, ஊக்கம் உங்களுக்குள் இருக்க வேண்டும்.

மேலே இதுவரை படித்ததை அடிப்படையாகக் கொண்டு நமது மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை நாம் உற்று நோக்கினால் நமது உடல் எந்தளவு மனநிலையால் பாதிப்படைகிறது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். நமது உள்ளுணர்வானது நமது உடலின் நிலையை ஒவ்வொரு நொடியும் கண்காணித்து வருகிறது. நமது உடலோ மனதின் அடிப்படையிலேயே தொடர்ந்து மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

சுருக்கமாய், நமது மனது தான் நமது உடலின் சிற்பி. நமது உடல் தான் நமது எண்ணங்களின் பிரதிபலிப்பு!

பயம், கோபம், வெறுப்பு, சோகம், அயர்ச்சி, கிலேசம் மற்ற இனந்தெரியா உணர்ச்சி இதில் எந்தவொன்றால் மனம் பீடிக்கப்பட்டாலும் அதை உடல் வெளிக்காட்டிவிடும். ஆக மனதின் நோய் உடலின் நோயாக மாறிவிடும்.

எனவே,
• ஆரோக்கியமானவற்றைச் சிந்தியுங்கள்.
• உங்களது சிந்தனையில் எப்பொழுதும் உங்களை ஆரோக்கியமானவராகவே கருதுங்கள்.
• இன்பமான எண்ணங்களை மட்டுமே மனதில் நிறுவுங்கள்.
• ஆரோக்கிய உடல்நலம் உங்களது பிறப்புரிமை என்பதை உணருங்கள்.
• நீங்கள் ஆரோக்கியமாக இருக்க உங்களுக்கு அனைத்துத் தகுதியும் உள்ளது. அறியுங்கள்.
• அனைத்திற்கும் மேலாக உங்களை நீங்களே நேசியுங்கள்; அன்பாக நடத்திக் கொள்ளுங்கள்.

உங்களது தற்போதைய நிலை எதுவானாலும் அதை உளப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு சிறப்பான முறையில் மனதை வடிவமைத்துக் கொள்ள முடியும் என்பதை உறுதியாக, மிக உறுதியாக நினையுங்கள்.

னம் மகிழ, தொடருவோம்...

வியாழன், 28 அக்டோபர், 2010

மனம் மகிழுங்கள்-8

கிளி ஜோஸ்யம் தெரியுமா?

அதிர்ச்சியெல்லாம் வேண்டாம். இத்தொடரின் பேசுபொருளை மாற்றும் உத்தேசமெல்லாம் இல்லை. கிளி ஜோஸ்யம் பார்த்திருக்கிறீர்களோ இல்லையோ,அந்தக் கிளியை எல்லோருக்கும் தெரியும். தத்தித் தத்தி வெளியே வந்து, லொட லொடவென்று கஸ்டமரிடம் இஷ்டத்திற்கு அளந்து கொண்டிருக்கும் தன் எஜமானனின் பேச்சையெல்லாம் பொருட்படுத்திக் கொள்ளாமல், கடனே என்று ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, ஓரிரு நெல்மணிகளை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு சமர்த்தாய்க் கூண்டிற்குள் சென்றுவிடும். அடைபட்டுள்ள கூட்டிலிருந்து வெளியே வந்தால் கூட அந்தக் கிளிக்குத் தப்பிப் பிழைத்துப் பறந்துபோகத் தோன்றுவதேயில்லை. அட, இறக்கையை வெட்டியிருந்தாலும் தாவிக்குதித்தாவது தப்பியோட முயலவேண்டுமே! ம்ஹும்! கூண்டு, சீட்டு, நெல்,கூண்டு, சுபம், சுகம் என்று வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டது.

ஏன் இப்படி? அதன் மனது அப்படிப் பழக்கப்பட்டு, அதுதான் வாழ்க்கை என்று அதன் மனதிற்குள்முடிவாகிவிட்டது. அதுதான் விஷயம்!

அதைப் போல், நமது சுயபிம்பம் நமக்குள் நம்மைப் பற்றிய ஒரு மனக் கருத்தைக் கட்டமைக்கிறது. அந்த மனக் கருத்துக் கட்டமைப்பு நமது உள்ளுணர்வில் படர்ந்திருக்கிறது. அந்த உள்ளுணர்வு நமது நடத்தையை நிர்ணயிக்கிறது; அந்த உள்ளுணர்வே நமது செயல்பாடுகளுக்கான திட்டங்களை வகுத்துவிடுகிறது. ஆக இவையனைத்தும் நம்முடன் பின்னிப் பிணைந்து விடுகின்றன. புரியலையோ?

எல்லோருக்கும் புரிகிற மாதிரி பார்த்துவிடுவோம்.

நம்மைப் பற்றியே நாம் தப்பான அல்லது தாழ்வான மனக் கருத்தில் இருந்தால், அது அப்படியே நமக்குL உள்ளுணர்வாகப் படிந்துவிடுகிறது. நம் மேல் நமக்கே வெறுப்பு ஏற்படுகிறது. அதனால் நம்மை நாமே மேலும் வெறுக்க ஆரம்பித்து, சிகரெட், தண்ணி, என்று கெட்ட சமாச்சாரங்களுடன் நமக்கு உறவு ஏற்படுகிறது. அல்லது அதற்குப் பதிலாக ஓர் ஒழுங்கு முறையின்றிக் கண்டதையும் உண்பது, கண்ட நேரத்தில் உறங்குவது, வண்டி ஓட்டிக் கொண்டு போனால் ஏதாவது விபத்தை நிகழ்த்துவது, அல்லது அவ்வப்போது “எனக்கு உடம்புக்கு முடியலப்பா”” என்று படுத்துக் கொள்வது,இப்படியான நடத்தைகள்.

மனம் போன போக்கிலெல்லாம் ஒருவன் தட்டுக்கெட்டு அலைய முடியாது. அவ்விதம் கெட்டு அலைய அவன் உள்ளுணர்வு தான் திட்டமிட்டு அலைக்கழித்திருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். இதற்குமுன் மன வடிவமைப்புகளைப் பற்றி விளக்கியபோது அதைப் பார்த்தோம். அதன்படித் திரும்பத் திரும்ப ஒருவர் விபத்தில் ஈடுபடுவதெல்லாம் யதேச்சையில்லை; அவரதுஉள்ளுணர்வு அவருக்கு அளிக்கும் தண்டனையாம். அதற்காக அடுத்த முறை, ப்ளாட்பாரத்தில் நடந்து கொண்டிருப்பவர் மேல் பைக்கை ஏற்றிவிட்டு, “ப்ச்! என் உள்ளுணர்வு என்னைத் தண்டிக்குது பிரதர்”” என்றால் செல்லுபடியாகாது, ஜாக்கிரதை!

ஆக உளவியலாளர்கள் சொல்வது யாதெனில், “பிரதானமாய் நீங்கள் உங்களைப் பற்றி ஆக்கபூர்வமாகவே நினையுங்கள். நல்லன நினையுங்கள்! அதற்காக உங்களது அனைத்துச்சக்திகளையும் பிரயோகப்படுத்துங்கள்; மனம் மகிழ்வீர்கள்“ என்பதாகும்.

அதை விட்டு, ”நான் பூட்ட கேஸ்! எனக்கு நல்லா வேணும்’,” என்று நினைத்தால் உங்களது உள்ளுணர்வு உங்களுக்கு நாசவேலை நிகழ்த்த ஆரம்பித்துவிடும். மனதிலிருந்து மகிழ்ச்சி விடைபெறும். தப்பித்தவறி அப்படியே நல்ல விஷயம் ஏதாவது நடக்க நேர்ந்தாலும், “எனக்கு அதற்கு ஏது கொடுப்பினை?” என்று மனம் முணக, அந்த நல்ல காரியம் நடைபெறாது! நடைபெறாமல் உங்கள் உள்ளுணர்வு உங்களை உந்தி, நீங்கள் தன்னிச்சையாய்ச் செயல்பட்டு அதைத் தடுத்திருப்பீர்கள்.

எனவே நமது மனதை ஆக்கபூர்வமாக, எப்பொழுதுமே 'பாஸிட்டிவ்'வாக வைத்துக் கொள்ள முயலவேண்டும்.

மளிகைக் கடை லிஸ்ட்டெல்லாம் பார்த்திருப்பீர்களே! கொஞ்சம் அலுப்புப் பார்க்காமல் கீழ்க்கண்ட லிஸ்டைப் படித்துப் புரிந்து கொண்டால் நமது மனதிற்கு நல்லது. அதிலுள்ள ஒன்றோ அதற்கும்மேற்பட்ட சங்கதிகளோ நம்மிடம் இருந்தால், நிச்சயம் நாம் திருந்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பொறாமை

நம்மைப் பற்றியே நாம் தவறாய்ப் பேசிக் கொள்வது, எண்ணிக் கொள்வது

குற்ற உணர்ச்சியிலேயே இருப்பது
மற்றவர்களைப் பாராட்ட மறுப்பது
பிறர் அளிக்கும் பாராட்டை ஏற்க மறுப்பது
நம்முடைய சுய தேவைகளை உதாசீனப்படுத்துவது
அடிப்படைத் தேவைகளைக் கேட்டுப்பெறாமல் இருப்பது
அன்பு, பாசம் ஆகியனவற்றைப் பிறரிடம் வெளிப்படுத்த இயலாமற் போவது
அன்பு, பாசம் ஆகியனவற்றைப் பிறர் அளிக்கும் போது அதை உணர்ந்து மகிழாமலிருப்பது
மற்றவர்களிடம் குறை காண்பது
மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பது
அடிக்கடி நோய்வாய்ப்படுவது

இதையெல்லாம் தாண்டி மீண்டுவர, "மாற்றம்" வேண்டும். ஆனால் அந்த மாற்றம் நமக்குள் நிகழ நாம் முயன்றால் எப்படித் தடை ஏற்பட்டுக் கஷ்டப்படுத்தும் என்று முன்னரே பார்த்தோம்.

தரமற்ற சுயபிம்பத்திற்கான குணம் ஒன்று உண்டு. அந்த மனிதனிடம் உருவாகியுள்ள ஆக்கபூர்வமற்ற குணத்தை (negative attitude) மாறவிடாமல் பொத்திப் பாதுகாக்கும். அதிலிருந்து மீண்டு வரவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். முன்னெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் மனமானது பழையதையே நினைத்து, புலம்பி, அரற்றிப் பின்னுக்கு இழுக்கப் பார்க்கும். கஷ்டம்தான்,ஆனால் செய்யத்தான் வேண்டும்.

எனவே நமக்கு உதவச் சில வழிகளை உரைக்கிறார்கள் உளவியலாளர்கள்.

· பாராட்டை ஏற்றுக் கொள்ளுங்கள் - உங்களைப் பாராட்டுபவர்கள், வாழ்த்துபவர்களிடம் நன்றி பகர்ந்துவிட்டு அவற்றை ஏற்று மனதில் நிரப்பிக்கொள்ளுங்கள்.

· பாராட்டுங்கள் - பைசா செலவழிக்காமல் மனம் உற்சாகமடைய, மற்றவர்களிடம் தென்படும் நல்லவைகளைப் பார்த்து மகிழ்ந்து அவர்களைப் பாராட்டுங்கள், வாழ்த்துங்கள். அவர்களது முகம் மலரும்போது, உங்கள் மனதிற்குள் என்ன நிகழ்கிறதென்று உணருங்கள்.

· உங்களைப் பற்றி நீங்களே நல்லவிதமாகப் பேசுங்கள் - அப்படி ஒன்றுமே இல்லையென்று நினைக்கிறீர்களா; வாயைப் பொத்திக் கொள்ளுங்கள்.

· உங்களைப் புகழ்ந்து கொள்ளுங்கள் - ஏதேனும் ஒரு நற்காரியம் செய்துவிட்டீர்களானால் உங்களை நீங்களே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். பசியுடனிருக்கும் ஏழையொருவருக்கு நீங்கள் பன்னும் டீயும் வாங்கித் தந்திருக்கலாம்; பார்வையற்ற ஒருவர் சாலையைக் கடக்க உதவியிருக்கலாம்; மனைவி எழும் முன் குளித்து முடித்து, ஈரத்தலையுடன் நீங்கள் காப்பி போட்டு உங்கள் மனைவிக்குக் கொடுத்திருக்கலாம். எதுவாயிருந்தாலும் உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள்.

· உங்களையும் உங்கள் செயல்களையும் வேறுபடுத்திக் கொள்ளுங்கள் - ஏதேனும் தவறாய்ச்செய்துவிட்டால், நிகழ்த்திவிட்டால், அந்தச் செயலை மட்டும் வெறுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மறுமுறை அந்தத் தவறை எப்படித் தடுப்பது என்று மட்டும் சிந்தியுங்கள். அந்தத் தவறுக்காக உங்களை நீங்களே திட்டி, மாய்த்துக் கொள்ளாதீர்கள். அது உங்களது சுயபிம்பத்தைக் கெடுக்கும். திருத்தப்பட வேண்டியது உங்களது செயல் தான்.

· உங்களது உடலைப் பேணுங்கள் - புடவையா, சுடிதாரா அல்லது வேட்டியா, சட்டையா விதம் விதமாய் ஏகப்பட்டது இருக்க, அவற்றையெல்லாம் அணிவதற்கு உங்களிடம் இருப்பது ஒரே உடல். அதை ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். உடல் நலமில்லாமல் போனால் எப்படி மனம் மகிழும்?

· நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று மக்களிடம் தெரிவித்துவிடுங்கள் - தெரிவித்து விடுங்கள் என்றால் “மச்சான் நீ கேளேன், “மாமா நீ கேளேன், என்று அலைந்து அலைந்து சொல்வதில்லை. மாறாக, நீங்கள் உங்களை எப்படி நடத்திக் கொள்கிறீர்களோ, அதைப் போல் மற்றவர்களையும் நடத்துங்கள். அது அவர்களுக்கு வேண்டிய தகவலை தெரிவித்துவிடும்.

· சான்றோருடன் சங்காத்தம் வைத்துக் கொள்ளுங்கள் – நீங்கள் விரும்பும் பெண்ணின் தம்பியை, அந்த வீட்டு வேலைக்காரியை , அவர்களுக்கு சவாரி வரும் ஆட்டோக்காரரை எல்லாம் இதில் சேர்க்கக்கூடாது. அவர்கள் நெசமாலுமே சான்றோராக இருப்பின் அது வேறு தரம்!

· புத்தகம் வாசியுங்கள் – அடாசு டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் இவற்றிலிருந்து விடுதலை பெற்று நல்ல புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிக்கலாம்.

· என்னவாக ஆக விரும்புகிறீர்களோ அதையே நினையுங்கள் – எப்பொழுதுமே உங்கள் மனதில் நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்களோ அதையே நினையுங்கள். தானாய் அதை நோக்கி நகர்வீர்கள். மனதிற்கு ஈர்ப்புச் சக்தி உண்டு என்பதை உணர்வீர்கள். ஆனால் கவனம் முக்கியம். எந்த ஊரில் சீட்டுக் கம்பெனி ஆரம்பிக்கலாம் என்றெல்லாம் நினைக்கக் கூடாது.

னம் மகிழ, தொடருவோம்...


புதன், 27 அக்டோபர், 2010

மனம் மகிழுங்கள்-7

நமது சுயபிம்பத்தின் வடிவத்தை நாம் அறிவது எப்படி? நமது மதிப்பை உணர்வது எப்படி?

சுயபிம்பத்தின் வடிவத்தை அறிவது ரொம்பவும் ஈஸிங்க. சுற்றுமுற்றும் பார்த்தாலே போதும். நமது நண்பர்கள் தெரிவார்கள். அவர்களுள் நாம் தெரிவோம். நமக்குத் தெரிந்த பழமொழி தான், “உன் நண்பனைச் சொல்; நீ யாரென்று சொல்கிறேன்.”

இயற்கையாகவே நாம் சில குறிப்பிட்ட வகை மனிதர்களோடு அன்னியோன்யமாய் உறவாட ஆரம்பித்திருப்போம். அவர்கள் யார்? நாம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அப்படி நம்மை நடத்துபவர்கள்!

பெரிசுகள் சொல்வார்களே, “அதான்யா! இனம் இனத்தோட சேரும், பணம் பணத்தோட சேரும்.”

கொஞ்சம் இலக்கியத்தரமாய்ச் சொன்னால் "சேரிடம் அறிந்துசேர்!"

தரமான வடிவுடைய சுயபிம்பவாதிகள், தாங்கள் சிறப்பான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். அது கர்வமில்லை; நாகரீகமாய், கௌரவமாய் நடத்தப்பட வேண்டும் எனும் நியாயமான விருப்பம். அவர்கள் தங்களைத் தாங்களே தரமானவர்களாய்க் கருதுவதால், தங்களைச் சுற்றித் தரமான பிம்பத்தை உருவாக்கிக் கொள்வார்கள். அது தரமான மக்களை அவர்களுக்கு நண்பர்களாய் உருவாக்கித் தந்துவிடும்.

அதை விட்டு, “நான் பூட்ட கேஸு! எந்த மேட்டரை நான் உருப்படியா செஞ்சிருக்கேன். நமக்கு அறிவே அம்புட்டுதேங்” என்று நினைத்தால் அத்தகைய செயல்பாடுகள் தான் உங்களிடமிருந்து வெளிப்படும். அதற்கேற்பத்தான் உங்களைச் சுற்றி மக்கள் அமைவார்கள்; அதற்கேற்பவே உங்களையும் நடத்த ஆரம்பிப்பார்கள்.

இது சுயபச்சாதாபம்!

இத்தகைய சுயபச்சாதாபம் எத்தனை நாள் நீடிக்கும்? எத்தனை நாள் வரை நீங்கள் மாறாமல் இருக்கிறீர்களோ அத்தனை நாள் வரை! மாற்றம் தொடங்க வேண்டியது உங்களிடமிருந்து தான். சட்டசபையில் யாரும் தீர்மானம் போட்டு வந்து உங்களை மாற்றப் போவதில்லை.

தம்மைக் கண்ணியமாய்க் கருதுபவர்கள், கண்ணியமாகவே நடந்து கொள்வார்கள். கண்ணியவான்களுடனே நட்புப் பாராட்டுவார்கள். அவர்களும் இவர்களைக் கண்ணியமாகவே நடத்துவார்கள்.

பான்பராக் பாஸ்கருக்கு, சல்பேட்டா சங்கருடன் தான் அன்னியோன்யம் ஏற்படுகிறது. தொழிலதிபருக்கு மந்திரியுடன்! வேண்டுமானால் பாஸ்கரும் சங்கரும் கூட மந்திரிக்கு நெருங்கியவராய் இருக்கலாம். ஆனால் அது வேறு சமாச்சாரம். மந்திரியின் அண்டர் க்ரவுண்ட் சமாச்சாரம்.

நாம் புரிந்துகொள்ள வேண்டியது யாதெனில், ”நம்மைப் பிரதிபலிக்கும் கண்ணாடி நம்மைச் சுற்றியுள்ள மக்கள் வட்டம்.” உங்கள் சுயபிம்பம் 'க்வாலிட்டி'யானது என்றால் உங்களது நட்பு வட்டமும் 'க்வாலிட்டி' தான்.

உளவியலாளர்கள் ஒரு கருத்துச் சொல்கிறார்கள், "பெண்களின் சுய பிம்பத்தின் தரம் குறைவு."

எப்படி?

உருப்படாதவனையோ, குடிகாரனையோ அவர்கள் கணவனாய் அடையும் போதும் அடித்து உதைக்கும் புண்ணியவானைப் புருஷனாய் அடையும் போதும் “கல்லானாலும் கணவன், புல்லானும் புருஷன்” என்று அவர்கள் அடங்கிக் கிடப்பதற்கு அதுதான் காரணம் என்கிறார்கள். கலாச்சாரம், மண்ணின் மகிமை, பெண்ணின் பெருமை என்பதெல்லாம் அதற்கு நாம் மாட்டும் போலி முகமூடிகள் எனலாம்.

இத்தகைய பெண்கள் “எல்லாம் என் விதி!” என்று சுயபச்சாதாபத்தில் கிடப்பவர்கள். இவர்கள் தங்கள் சுய பிம்பத்தை மாற்றிக் கொள்ளும் வரை அவர்கள் வாழ்க்கை மாறப் போவதில்லை. அப்படி மாறும் போது அவர்கள் வாழ்விலும் மாற்றம் நிகழும். புருஷன் திருந்தலாம்! அல்லது புருஷனேகூட மாறலாம்!

இதெல்லாம் சுய பிம்பத்தின் வடிவம். ஆச்சா?

அடுத்து சுய மதிப்பின் தரத்தைப் பார்ப்போம்.

நம் அனைவருக்கும் மதிப்பு தேவைப்படுகிறது. அன்பு, அக்கறை தேவைப்படுகிறது. பிறர் நம்மை மரியாதையோடு நடத்தவேண்டும் என்று மனம் எதிர்பார்க்கிறது. ஏன்?

அது தான் மனதின் இயற்கை வடிவம்!

நமக்கு மதிப்புக் கிடைக்க ஏதும் சிறப்புத் தகுதியோ, பெரும் பதவியோ நமக்கு இருக்க வேண்டிய அவசியமல்லை. அது பிறப்புரிமை போல் அன்பு, அக்கறை சமவிகிதத்தில் கலந்து அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்கிறார்கள். எப்படி?

பிறந்து சில மாதங்களே ஆன கைக் குழந்தை பசியால் அழும்போது தாய் என்ன செய்வார்? ஓடோடிப்போய்த் தாய்ப்பாலோ, புட்டிப் பாலோ புகட்டுவார். அந்தக் குழந்தைக்குத் தேவை பால். அது புகட்டப்பட வேண்டும். அவ்வளவே!

அதற்குமுன் குழந்தையின் முன் சப்பனமிட்டு அமர்ந்து, “இதோ பார் குட்டி! நான் பால் தரவேண்டுமென்றால் நீ சமர்த்தாக இருக்கோனும். கண்ட நேரத்தில் சூச்சா, மூச்சா போகக்கூடாது. ஏபிசிடி சரியாச் சொல்லோனும். அப்பத்தான் கான்வெண்டில் ஈஸியா இடம் கிடைக்கும்,” என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருப்பாரோ? அந்தச் சிசுவின் வயிற்றுக்குப் பாலும் நிபந்தனையற்ற அன்பும் பாசமும் அரவணைப்பும் தேவை. இது அடிப்படையாய் அனைவருக்கும் புரிகிறது; செய்கிறார்கள்.

அதேபோல்தான் வளர்ச்சியடைந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அன்பும் பாசமும் அரவணைப்பும் தேவைப்படுகின்றன.

பெரும்பாலோர் என்ன நினைத்துக் கொள்கிறார்கள்? “நாம் சமர்த்தாகவும் புத்திசாலியாகவும் அழகாகவும் சாதாரண மக்களுக்குப் புரியாத வகையில் பேசக் கூடிய அறிவு ஜீவியாகவும் இருந்தால் தான் இதற்கெல்லாம் லாயக்கு; இல்லையெனில் நாம் ஒரு செல்லாக் காசு! நாம் மதிப்பற்றவர்கள்!”

அது தப்பு! அந்த நினைப்பு ரொம்பத் தப்பு!

ஒவ்வொருவரும் அவரவர் மதிப்பை நல்ல விதமாகவே உணர வேண்டும். அதே போல் பிறருடைய மதிப்பையும் நல்லவிதமாகவே கருதி அன்பு செலுத்த வேண்டும்.

“நீங்கள் சந்திக்கக் கூடிய நான்கில் மூன்று பேர், உங்களிடமிருந்து பரிவிரக்கம் வேண்டி ஏங்குகிறார்கள். நீங்கள் அதை அவர்களுக்குக் கொடுங்கள் அவர்கள் உங்களிடம் அன்பு கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்” என்கிறார் டேல் கர்னெகி (Dale Carnegie).

அதைச் சற்று மாற்றி நம் ஊரில் “கட்டிப்புடி வைத்தியம்“ என்கிறார்கள்.

ஆனால், ப்ளஸ் டூவில் கோட்டை விட்டுவிட்டு, ஆண்டாண்டு காலமாய்ச் சும்மா ஊர் சுற்றித் திரிந்து கொண்டு, “வீட்டில் இன்னமும் அம்மா நிலா காட்டிச் சோறு ஊட்ட வேண்டும்” என்று நினைத்தால் அது சுய மதிப்பினால் அல்ல? அப்பாவிடம் அதற்கு வேறு அழகான பட்டப் பெயர் உண்டு.

இயற்கையாகவே நம் எல்லோருக்கும் பிறர் மேல் அன்பு, அபிமானம், அக்கறை உண்டு. ஒவ்வொருவருக்கும் அந்த அளவின் விகிதாச்சாரம் மாறும்.

இந்த டிவி சீரியல்கள் இருக்கின்றனவே? அவை என்ன செய்கின்றன? மக்களுடைய 'அந்த' அடிப்படைக் குணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கின்றன. பிழியப் பிழிய அழும் சோகக் காட்சிகள்; கண்ணீர் வடிய வடியப் பார்க்கும் தாய்க் குலங்கள். என்ன காரணம்? அந்த நிழல் பிம்பங்களின் மேல் ஏற்படும் அன்பு, அக்கறை, பாசம். அந்த நிழல் பிம்பங்களின் தியாகமும் சோகமும் இன்னலும் மக்களின் ஆழ்மனதை அப்படியே ஈர்க்கின்றன. “அய்யோ! பாவம்”, என்று அடிமனதிலிருந்து அக்கறை பீறிட்டு எழுகிறது, கண்ணீர் முட்டுகிறது.
அந்தக் கண்ணீரின் அளவைப் பொறுத்து தொடரின் 'டிஆர்பி' எகிறி, வேறொருவர் பாக்கெட்டில் பணமாய்க் கொட்டுவது தனிக் கதை.

உலகின் ஏதோவொரு மூலையில் பஞ்சம், இயற்கை சீற்றத்தினால் அழிவு, அதனால் நிர்க்கதியான மக்கள்……. எனச்செய்தித்தாளில் படிக்கும் போதும் தொலைக்காட்சியில் காணும் போதும் மனம் பதைத்து உள்ளே வலிக்கிறதே ஏன்? அடிப்படையில் எல்லோருக்கும் உதவ, அனைவரையும் அரவணைக்க மனம் விரும்புகிறது. அவரவர் வாய்ப்பு வசதிக்கேற்ப உதவியானது பொருளாகவோ பணமாகவோ ஆறுதல் வார்த்தைகளாகவோ வெளிப்படுகிறது.

ஆச்சரியமில்லை.

அதுதான் அடிப்படை மனித இயல்பு.

விஷயம் யாதெனில் அப்படி நீங்கள் பிறரிடம் மதிப்பு, அன்பு, அக்கறை செலுத்துவதைப் போல் பிறர் உங்களிடமும் மதிப்பு, அன்பு, அக்கறை செலுத்த நீங்களும் ஒரு தகுதியான மனிதனே! இதற்கென நாலைந்து பக்க பயோடேட்டாவும் சிறப்புத் தகுதிகளும் தேவையில்லை. அவையெல்லாம் வேலைக்கு அப்ளை செய்ய மட்டுமே!

இந்த அகண்ட பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு தரமான மனிதர். அது போதும். சக மனிதர்களிடமிருந்து அன்பும் பாசமும் பெற அது போதுமானதாகும். அது தான் உங்களது அடிப்படை மதிப்பு.

மற்றபடி உங்களுக்கு இலவசமாய்க் கிடைக்கும் டி.வி., முட்டை, பல்பொடி, செருப்பு ஆகியன வந்தடைவது வேறு மதிப்பினால். அதை இத்துடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
னம் மகிழ, தொடருவோம்...


திங்கள், 25 அக்டோபர், 2010

மனம் மகிழுங்கள்-6


பிம்பம் எனும் சமாச்சாரத்தைச் சென்ற வாரம் பார்த்தோம். அதன் விதி -- சுயபிம்பம் “தரமானதாக” இருக்க வேண்டும். அதற்கு அடுத்த விதியும் ஒன்று உண்டு.

சுயபிம்பம் “உண்மையிலேயே” தரமானதாக இருக்க வேண்டும்.

என்ன வித்தியாசம்?

சகிக்கவே முடியாத கேரக்டர் உள்ள ஒருவர் -- பொய், புரட்டுவாதம் எல்லாம் மனிதருக்குத் தண்ணீர்பட்ட பாடு. ஆனால் தம்மைப் பற்றி காந்தி, நேரு ரேஞ்சிற்கு மிக உசத்தியாக நினைத்துக் கொண்டு, காந்தி சொல் கேட்டுத் தண்டி யாத்திரைக்கு மக்கள் படை புறப்பட்டுச் சென்றது போல், தம் பேச்சிற்கு ஏற்பவும் மக்கள் ஆடவேண்டும் என்று நினைத்தால், அது அகங்காரம்! “தான்” எனும் அகங்காரம்! FM நேயர்களும் புரியும்படி சொல்வதென்றால் ஈகோ!

ஈகோ உள்ள நிறையப் பேரை உங்களுக்குத் தெரிந்திருக்கும்! ஏனெனில் அரசியலில் இதெல்லாம் சகஜமாச்சே!

“தான்”, “இறுமாப்பு”, “ஆணவம்” போன்ற சில வார்த்தைகள் அகராதிகளில் உள்ளன. அவை நோய் ஆகும். ஆனால் விசித்திரமான நோய். அந்த நோய் யாரிடம் உள்ளதோ அவரைத் தவிர மற்றவர்கள் தான் அந்த நோயினால் பாதிக்கப்படுவார்கள். இந்த “ஈகோ”வாசிகளி்ன ஆசையெல்லாம் மிகவும் எளிதானது.

தாங்கள் மட்டுமே எப்பொழுதும் பேசப்படுபவர்களாக இருக்க வேண்டும்; தம்மைச் சுற்றி நாலுபேர் எதையாவது சொல்லிப் புகழாரமிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்; செய்தியில், மேடையில் தங்களுடைய பெயர் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்!

அங்கீகாரத்திற்கு அவர்களின் மனம் ஆலாய்ப் பறக்கும்.

சக மனிதர்கள், அவர்களது நலன் எதுவும் அவர்களுக்கு பொருட்டே இல்லை. இவர்கள் தாம் மேற்சொன்ன இரண்டாவது விதியில் காலியாகிவிடுபவர்கள்!

அதில் பாஸ் ஆக வேண்டுமென்றால், சரியான “அகராதிப் பிடித்த” சொற்களான “தான்”, “இறுமாப்பு”, “ஆணவம்”, ஆகியனவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டு, கவனமாகத் தூக்கிக் கடாசி விட்டால் போதும். ஆரோக்கியமான சுயபிம்பம் என்னவென்று தெரிந்துவிடும்!

அப்படி நீங்கள் தரமான சுயபிம்பவாதியாகப் பாஸானவுடன் “ஆத்தா! நான் பாஸாயிட்டேன்!” என்று கூவுகிறீர்களோ இல்லையோ, சில விஷயங்கள் உங்கள் வாழ்வில் நிகழும். கஷ்டப்பட்டு பாஸ் செய்துள்ளீர்கள் boss. எனவே எல்லாம் நல்ல விஷயம் தான்.

முதலாவது தடுக்கவே இயலாமல் ஆனந்தமான மனநிலை ஒன்று உருவாகி, வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைச் சாதிக்க வழிவகுக்கும்.

சாதனை என்றதும் நோபல், ஆஸ்கர், அல்லது நடிகருடன் உரசிக்கொண்டு எடுத்த போட்டோ போன்றவை அல்ல. நாலே முக்கால் நிமிடம் பாட்டுப் பாடினால் பெரிய கோடீஸ்வரனாக ஆகிவிடுவேனா என்று அபத்தமாகவும் கேட்கக்கூடாது.

தன்னலமற்ற எந்தச் சிறு உபகாரமும் கூட சாதனையே! ஏனெனில், சுத்தமற்ற மனங்கள் தன்னலத்தை விடுவதில்லை! தானமோ, தர்மமோ; உழைப்போ, உபகாரமோ; தரமான சுயபிம்பவாதி ஆனந்தமாய்ச் செயல்பட ஆரம்பித்திருப்பான். அந்த முயற்சிகளும் சாதனைகளும் பெருமையையும் மனநிறைவையும் அவனது மனதினுள் உண்டாக்கும்!

ஆயினும்.............

“இதெல்லாம் இருக்கட்டும். நான் ஒன்றும் உத்தமபுத்திரன் இல்லையே! என்னிடம் இன்னின்ன குறைகள் இல்லையா? வெளியில் பகிர்ந்துக் கொள்ளக்கூடியவையா அவை? அவற்றைச் சரிசெய்ய முயற்சி செய்வோம்,” என்று அடிமனம் சுயவிமர்சனம் ஒன்று வைக்கும்.

மேற்சொன்ன இரண்டு விதிகளுக்கும் பொருந்தி, தரப் பரிசோதனையில் வென்ற மனதல்லவா? எனவே அது தனது சாதனையைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளாது! இயற்கையாய்க் கூடவே உருவாகியுள்ள தன்னடக்கம் காரணம்.

அடுத்தொன்று நிகழும்.

நம்மைப் பற்றி நமக்கே உருவாகும் நல்லபிமானம்! நம்மை நாமே உண்மையாய் மதித்துக் கொள்ளும் நல்லபிமானம். அதன் தொடர்ச்சியாய் நம்மோடு வாழும் மக்களிடமும் மதிப்பு செலுத்தத் தோன்றும். நாம் நம்மை எப்படி மதிப்போமோ அப்படி மற்றவர்களையும் மதிக்கத் தோன்றும்! தரமான சுயபிம்பத்தின் சரியானதொரு அடையாளம் இது.

இத்தகைய நல்ல சுயாபிமானம் ஏற்பட்டுவிட்டால், மற்றவர்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டுமே என்ற அனாவசிய நிர்ப்பந்தம் எதுவும் இல்லாமல் நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் உற்சாகத்திற்கும் தேவையானதை செய்துகொள்ள மனம் வழிவகுக்கும். செய்ய ஆரம்பித்திருப்பீர்கள்.

உங்களுக்குப் பிடித்தமான ஆடை வாங்கலாம்! பிடித்தமான உணவு உண்ணலாம்! (அதற்கு முன் டாக்டரிடம் சென்று BP, சர்க்கரை, கொலஸ்ட்ரால் செக்-அப் செய்து கொள்வது உத்தமம்.) டி.வி. கனெகஷனைப் பிடிங்கிவிட்டு புத்தகம் வாசிக்கலாம்! பிடித்த ஊருக்குப் பிரயாணம் செல்லலாம்!

”சாத்தியமா அதெல்லாம்? சத்தியமாய்ச் சொல்கிறேன், எனக்கு ஈகோவின் ஸ்பெல்லிங் கூடத் தெரியாது. ஆனால், என்னைப் பற்றி எனக்கு நன்கு தெரியும்; ஆரோக்கியமாகவும் உணர்கிறேன். ஆனால் கூடவே ஆரோக்கியமாய்க் குத்துக்கல்லாட்டம் என் மாமியாரும் உண்டு. நான் எப்படி பதில் சொல்லும் நிர்ப்பந்தம் இல்லாமல் என் இஷ்டத்திற்கு எதையும் செய்வது?” என்று மருமகள்கள் யாராவது பின்னூட்டம் இடலாம்.

அதற்கு மாமியார், மாட்டுப்பெண் உறவு குறித்த புத்தகங்கள் கிடைக்கின்றனவா என்று வாசகர்கள் தேடிப்பார்க்க வேண்டியது தான்.

இங்கு சொல்லவந்த செய்தி - தரமான சுயபிம்பம் மனமகிழ்வுடனான வாழ்க்கைக்குத் தேவையானதைத் தானாய்ச் செய்ய ஆரம்பித்துவிடும். அதுதான் சாராம்சம்.

மட்டுமல்லாது, அந்த மனிதனின் தரத்தை உலகம் தானாய் உணர ஆரம்பிக்கும். பாராட்டுதல்கள் வரும். தானாய் வரும்!

தன்னைப்பற்றித் தனக்கே நம்பிக்கை இல்லாதவனுக்குத்தான் தம்பட்டமும் ஜால்ராவும தேவைப்படுகின்றன. மனித இனமே தன்னைப் பார்த்து அங்கலாய்க்க வேண்டும் என்று விரும்புகிறான். இதுவோ சுத்தமான மனது. இதற்கெதற்கு பாராட்டும் சால்வையும்?

எனில், பாராட்டு தவறா?

ஜெஸ் லய்ர் (Jess Lair) என்றொரு உளவியலாளர். உளவியல் குறித்த புத்தகமெல்லாம் எழுதியுள்ளார். அதில், “பாராட்டு என்பது மனித ஆன்மாவிற்கு இதமான சூரிய ஒளி போலாகும். அது இல்லாமல் மனிதனால் வளரவோ, பூக்கவோ முடியாது. ஆனால் நாமோ பிறர் மீது குற்றம் குறை சொல்லிச் சொல்லியே, கடுமையான குளிர் காற்றை இறைத்து அவர்கள் வளராமல் உறையச் செய்கிறோம். நம்முடைய சக மனிதர்களுக்குத் தேவையான இதமான பாராட்டுதல்களை அளிக்க ஏதோவொரு விருப்பம் இல்லாமலேயே இருக்கிறோம்” என்று குறிப்பிடுகிறார்.

பாராட்டு தவறில்லை. அது நேர்மையுடன் இருக்க வேண்டும். ஒரு கோப்பை காபிக்குத் தேவையான சர்க்கரை போல் அளவுடன் இருக்க வேண்டும். இவை இரண்டும் தவறினால் அதன் பெயர் முகஸ்துதி! முகஸ்துதி தப்பு! தப்பு மட்டுமல்ல பாபமும் ஆகும்!

ஆகவே பாராட்டும் அந்தப் பாராட்டை நன்றியுடன் ஏற்றுக்கொள்வதும் தான் நல்லது. மன மகிழ்விற்குத் தேவையானது.

ஏதோ ஒரு நல்ல காரியம் செய்ததற்காக ஒருவர் உங்களுக்கு மனமார நன்றி உரைத்து, உங்களை அளவோடு நேர்மையாய்ப் பாராட்டினால், அதை நளினமாய் நன்றியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். பாராட்டு சரியான சமாச்சாரத்துக்கா, உண்மையா, முகஸ்துதியா என்பதை உணர்ந்தால் போதும். தீர்ந்தது விஷயம். அதை “நன்றி” சொல்லி ஏற்றுக்கொள்வதுதான் இருவருக்கும் நல்லது.

அதை விட்டுவிட்டு, உங்களிடம் உள்ள குறைகளைப் பெரிதுபடுத்தி நினைத்துக் கொண்டு அதை ஏற்காமல் நிராகரிப்பது முறையில்லை. ஏனெனில் உலகில் குறையேயற்ற மனிதன் என்று யாரும் இருக்கிறார்களா என்ன?

உழைத்துப் படித்து தேர்வில் முதல் இடத்தில் வெற்றியடைந்த உங்களை ஒருவர் பாராட்டும்போது, “அப்படில்லாம் இல்லைங்க. குருட்டு அதிர்ஷ்டம். முதல் மார்க் கிடைத்து விட்டது” என்றுச் சொல்வீர்களோ? அப்படிச் சொன்னால், கேவலப்படுவது உங்கள் உழைப்பாயிற்றே? தவிர, மனதார பாராட்ட முனைந்த அவருக்கும் அதிர்ச்சி.

நீங்கள் குருவியாய்ச் சேகரித்து, பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு அழகாய் இருக்கிறதென்று மனமார ஒருவர் சொல்லும் போது, “என்னத்தை பெரிய வீடு கட்டிட்டேன்“, என்று சொல்வது முறையில்லையே!

உண்மையிலேயே அழகாய்த் திகழும் ஒரு பெண்ணிடம், “இந்த உடையும் உன் தோற்றமும் ஸூப்பர்; மெய்யாலுமே நீ ரொம்ப அழகா இருக்கே,” என்று தோழி மனதாரப் பாராட்டும் போது, கூச்சமாய் இருந்தாலும் மென்மையாய் நன்றியுடன் ஏற்றுக்கொள்வதே முறை. மாறாய், “அப்படியெல்லாம் இல்லை, என் உதடு கொஞ்சம் தடிப்பா இருக்கு. இடுப்பும் பாரேன் பெரிசு,” என்று பதில் அளித்தால் பாராட்டுபவருக்கு ஏற்படும் அதிருப்தி ஒருபுறமிருக்க அடுத்த முறை அவரைப் பார்க்கும் போதெல்லாம், அவரின் அத்தனை நிறைகளும் மறைந்து போய், அவரே எடுத்தியம்பிய குறைகள் தான் கண்ணில் பளிச்செனத் தென்படும்.

வேறு யாரிடமாவது அந்தப் பெண்ணை அடையாளம் சொல்ல வேண்டியிருந்தால், “அதாம்பா, உதடு கூட கொஞ்சம் தடிப்பா, இடுப்பு பெரிசா இருக்குமே. அவங்க தான்” என்று அடையாளம் சொல்லுமளவிற்கு ஆகிவிடும்.

பாராட்டுரை என்பது ஒரு அன்பளிப்பு, நன்கொடை. உங்களுக்கு வரும் அன்பளிப்பை அளிப்பவர் முகத்திலேயே நீங்கள் விட்டெறிவது எப்படித் தப்போ, அப்படித் தான் பாராட்டை நிராகரிப்பதும்.

எனவே நேர்மையான பாராட்டுதல்களை, நன்றியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். அது உங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும்.


னம் மகிழ, தொடருவோம்..


Jogging & lose weight

If you want to get into jogging and lose weight, try this 11 week 30 minute beginner treadmill workout program.

Aerobic exercise is good for so many things. Working up a sweat is good for your lungs, heart, blood vessels, brain, muscles, and skin.

In addition cardiovascular exercise (cardio) is important for maintaining a healthy weight and is essential for weight loss.

If you want to start working out, here is a 30 minute treadmill workout program.

Beginner Treadmill Workout Program
11 Weeks to Go from Walking to Jogging

This program is designed for the person who is not in good shape but wants to lose weight and really improve fitness levels.

This 11 week treadmill program is easy to follow. In the first week you simply start by walking on a treadmill for 30 minutes and by the 11th week you'll be jogging for 30 minutes.

Each week progresses by adding 30 seconds of jogging in 5 minute intervals, until by the 11th week you'll just jog for the entire 30 minutes.

You should complete each workout at least 3 times before moving on to the next week's workout. Also, adjust the speeds as you need to in order to complete the workout.

Here's the Beginner Treadmill Workout Program:

Week 1: Walk continuously for 30-60 minutes between 3.0 mph and 4.0 mph. Repeat this workout 3-4 times during the first week. This is just to get you going. If you're somewhat active you can skip this week and go straight to week 2.

The next 9 treadmill workouts are interval workouts. This just simply means that you walk then jog, then walk then jog for 30 minutes.

30 minute Interval Workouts (walk-jog-walk-jog)

Week 2: Walk for 4:30 between 3.0 and 4.0 mph then jog for 30 seconds at a speed between 4.5 and 5.0 mph. After jogging for 30 seconds go back to a walking speed for 4:30. Repeat this pattern 6 times until you reach 30 minutes.

Week 3: Walk for 4 minutes between 3.0 and 4.0 mph then jog between 4.5 and 5.0 mph for 1 minute. Repeat 6 times until you've completed 30 minutes.

Week 4: Walk for 3:30 minutes between 3.0 and 4.0 mph and then jog for 1:30 between 4.5 and 5.5 mph. Repeat 6 times until you've completed 30 minutes.

Week 5: Walk for 3 minutes between 3.0 and 4.0 mph and then jog for 2 minutes between 4.5 and 5.5 mph. Repeat 6 times until you've completed 30 minutes.

Week 6: Walk for 2:30 minutes between 3.0 and 4.0 mph and then jog for 2:30 minutes between 4.5 and 5.5 mph. Repeat 6 times until you've completed 30 minutes.

Week 7: Walk for 2 minutes between 3.0 and 4.0 mph and then jog for 3 minutes between 4.5 and 6.0 mph. Repeat 6 times until you've completed 30 minutes.

Week 8: Walk for 1:30 minutes between 3.0 and 4.0 mph and then jog for 3:30 minutes between 4.5 and 6.0 mph. Repeat 6 times until you've completed 30 minutes.

Week 9: Walk for 1 minute between 3.0 and 4.0 mph and then jog for 4 minutes between 4.5 and 6.0 mph. Repeat 6 times until you've completed 30 minutes.

Week 10: Walk for 30 seconds between 3.0 and 4.0 mph and then jog for 4:30 between 4.5 and 6.0 mph. Repeat 6 times until you've completed 30 minutes.

The last workout is a continuous treadmill workout.

Week 11: Jog for 30 minutes between 4.5 and 6.0 mph. Do your best not to take any breaks, but if you're really out of breath simply walk for 30 seconds to 1 minute and then go right back to your jogging speed.

Conclusion

By the end of this beginner treadmill workout program, you will be shocked by how much better you feel and how strong and fit you are.

Once you get in shape, stay consistent and keep working at it. Also, listen to your body. Stretch afterwards for 10-15 minutes, and wear good supporting shoes.

There's no time like the present, so pick a day in the very near future and start this 30 minute beginner treadmill workout program.

Good Habits....

1. Drink eight glasses of water a day.

2. Include two vegetables and one fruit in every meal.

3. Begin each meal with a raw vegetable salad.

4. Make a light snack of assorted sprouts.

5. Start the day with a glass of warm water and a dash of lime..

6. Use only fresh vegetables.

7. Once a week have only fresh fruits until noon, make lunch the first meal of the day.

8. Eat only freshly cooked meals, not refrigerated leftovers.

9. Include one green vegetable and one yellow vegetable in every meal.

10. Go on a juice fast for a day. Start with vegetable juice, and sip fruit for lunch and dinner..

11. Kick the old coffee habit. Have a glass of fresh fruit juice instead.

12. Cut out all deep-fried foods from your diet.

13. Cut down on high sugar products like soft drinks, ice-cream, candy and cookies in your diet.

14. Never skip a meal, even if you're on a diet. Eat a fresh fruit or have vegetable juice instead.

15. Avoid beverages like soda, coffee, colas and so on.

16. Include high fiber foods and plenty of fruits, vegetables and grains in planning your diet.

17. Use salt in moderation

18. Wash vegetables thoroughly in clean water before chopping.

19. Stream or boil vegetables (rather than fry or saute).

20. Retain peels of potato, cucumber, carrot and tomato while cooking.

21. Do take a moment off to mentally list out the nutritional value of the food you're about to eat.

22. Don't rush through your meals. Set aside enough time to appreciate, enjoy and digest your food.

23. Make every meal an enjoyable experience. Set dishes out attractively and chew slowly to appreciate the full flavor of the foods you eat.

24. Choose to be radiantly healthy. Keep yourself informed about the nutritive value of every food you buy.

25. Shop for groceries yourself. Notice the look, feel and smell of fresh fruit and vegetables and enjoy their intrinsic goodness.

26. Watch out for eating habits paired with emotional states, like reaching for a chocolate when youre depressed. Resist the urge and eat fruit instead.

27. Eat popcorn (rather than chips) while watching a movie.

28. Sit at the table at meal times. Don't read the paper or review bills while eating.

29. Make it a point to have dinner with the entire family at the table, and not in front of the TV.

30. Eat just to the point of the fullness. Don't stuff yourself!

31. Stop smoking.

32. Restrict alcohol consumption.

33. Get a good night's sleep, every night.

34. Enroll today in an exercise programme.

35. Take a brisk, 20 minute invigorating walk each morning.

36. Spend 10 minutes every morning and evening doing basic stretches.

37. Do not use elevators when you can climb the stairs.

38. Enroll in a TM programme today.

39. Focus on your breathing. Take a deep breath, then exhale slowly. Repeat a couple of times a day.

40. Learn to relax. Spend 20 minutes consciously relaxing each muscle of your body. . Spend 20 minutes a day in silent meditation, prayer or contemplation.

42. Learn the healing power of laughter. Watch a crazy movie, recall a joke or read a funny book and laugh out loud.

43. Tap the powers of your sub-conscious. Relax your body for 20 minutes and project the Perfect You're on your mind screen.

44. Balance your lifestyle. Devote equal time each week to work and fun.

45. Join kids in a sports activity and rediscover the joys of childhood.

46. Do keep in touch with friends. Call up or visit them and be at peace with the world.

47. Enroll in an activity (like dancing, swimming or roller skating...) you never indulged in because you were afraid of what people might say.

48. Forgive someone who you think has done you wrong and cleanse your spirit of rancor.

49. Do a nice turn to someone you don't know too well, but who could do with a friend.

50. Spend a quiet half-hour chatting with your family.

51. Listen to soothing music for 15 minutes at least each day.

52. Read a great book once a week.