நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். ( HDL) கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும்.
நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.
சோம்பலை உதற முடியும்!
மாதவிலக்கின் போது பெண்கள் உடலில் இரும்புச்சத்து குறைவதால் மிகவும் களைப்புடன் இருப்பார்கள். உடற்பயிற்சியின் போதும் இந்தச் சத்து உடலில் குறைகிறது. ஐந்து உலர்ந்த திராட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம் முதலியவற்றை தினமும் சாப்பிட்டால் போதும். இதன் மூலம் உடலில் இரும்புச் சத்து எளிதாகக் கிகிக்கப்படும். உடலும் மனமும் படு சுறுசுறுப்பாக நாள் முழுவதும் இருக்கும்.
சக்தி வாய்ந்த உணவு மருந்துகள்
நமது உடலின் லைசின் என்ற அமினோ அமிலம் குறைந்தால், தலைவலிக்கு வரவேற்புக் கொடுத்த மாதிரிதான். லைசின் குறையாமல் பாதுகாத்து வருகிறது வைட்டமின் சி. இதைத் தடுக்க தினமும் இந்த வைட்டமின் மாத்திரையை டாக்டர் யோசனைப்படி சாப்பிடலாம். இதைவிடச் சிறப்பு சி வைட்டமின் அதிகமுள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்தால் தலைவலி வராது. அந்த உணவுகள், பட்டாணி, சோளம், உளுத்தம் பருப்பு, முருங்கைக்கீரை மற்றும் காய், முட்டைக் கோஸ், பாகற்காய், நாட்டு நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சுச்சாறு, தேங்காய், தேங்காய்ப்பால், ஆட்டு ஈரல், பால்கோவா, நல்ல பசும்பால் ஆகியவற்றில் போதுமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளது.
மூலிகைக் கடைகளில் அமுக்கிரா பவுடர் (இதுதான் உண்மையில் வாயாக்ராவாக உருவெடுத்துள்ளது) கிடைக்கிறது. மாதவிலக்கு முடிந்த மறுநாளிலிருந்து தினமும் இரவில் பாலுடன் இந்தப் பவுடரில் ஆறு கிராம் பவுடரைச் சேர்த்து அருந்த வேண்டும். இதன் மூலம் கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படலாம்.
ஜலதோஷம் தொடரக்கூடாது!
தொடர்ந்து ஜலதோஷம், மூக்கில் சளி என்றால் தொற்று நோய்க்கிருமிகள் உங்கள் மூக்கு வழியாக உடலுக்குள் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்று பொருள். எனவே, இதைத் தடுக்க வைட்டமின் சி மட்டுமல்ல, வைட்டமின் உள்ள உணவுப் பொருள்களும் உடனடியாகத் தேவை. வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவற்றை மாத்திரைகளாகப் பயன்படுத்துவது நல்லது.
இல்லை எனில், ஜலதோஷம் குணமாகும்வரை இந்த இரு வைட்டமின்களும் தாராளமாக உள்ள தட்டைப் பயறு, சோயா மொச்சை, வெண்ணெய், முட்டைக்கோஸ், முருங்கைக் கீரை, ஆரஞ்சு, மாம்பழம், கேரட் முதலியவற்றை உணவில் நன்கு சேர்த்து வந்தால், ஜலதோஷம் குணமாகி நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
மலச்சிக்கல் தீர!
பேதி மருந்து சாப்பிடுவதற்குப் பதிலாக 1/4 கிலோ திராட்சையை (அனைத்து இரகங்களும் உகந்தவை) இரவு சாப்பிடலாம். காலைவரை வேறு உணவு வேண்டாம். மலச்சிக்கல் உள்ளவர்கள், ஜீரணக் கோளாறு உள்ளவர்கள் இதே அளவு திராட்சையை வாரம் இருமுறை சாப்பிடவும். இதனால் குடல் முழுவதும் சுத்தமாகும். போனஸாக இதயமும் பலப்படும்!
மேலும் சில துளிகள்.
1. வெந்தயம் அதிக நார் சத்து (50 சதவிதம்) கொண்டவை. இவை சர்க்கரை நோயாளிகளின் இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும், இரத்தத்திலுள்ள அதிக கொலஸ்ட்ராலையும் குறைக்கின்றது.
2. இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது. இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.
நன்றி கே.எஸ். சுப்ரமணியம்.
ungal payantharu sevai thodara vaalththukkal
பதிலளிநீக்கு