திங்கள், 14 மே, 2012

மசாலா சப்பாத்தி


தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி
பச்சைமிளகாய் -1
இஞ்சி - சிறிதளவு
உப்பு தேவையானளவு
சிறிது தயிர் (புளிப்புக்காக)

செய்முறை:


கொத்தமல்லி தழை, புதினா, பச்சைமிளகாய், இஞ்சி இவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

கோதுமைமாவு,தயிர், உப்பு இவற்றுடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து, அரை மணி நேரம் ஊரவைத்து, சப்பாத்தி போடவும்.

மிகவும் சுவையான மசாலா சப்பாத்தி தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக