புதன், 22 ஏப்ரல், 2009

அவல் தோசை

தேவையானவை:
கெட்டி அவல் - 1 கப்
புளித்த மோர் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைகேற்ப
பெருங்காயத் தூள்
சிறிது எண்ணெய்.

செய்முறை:
அவலை சுத்தம் செய்து மோரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் தேவையான அளவு நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, உப்பு, பெருங்காயத் தூள் சேர்க்கவும். ப.மிளகாயை பொடியாக அரிந்து மாவில் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து மிதமான தீயில் தோசை வார்க்கவும்.

குறிப்பு: புளிப்பு மோர் இல்லையெனில் எலுமிச்சை சாறு பிழிந்து செய்யலாம்.

Home Made KFC

தேவையானவை :
பெரிய கோழி துண்டுகள் - 4
தண்ணீர் -மூழ்கும் அளவு
உப்பு - 3 டேபிள் ஸ்பூன்
பால் - 1 கப்
முட்டை - 1
மைதா - 2 கப்
உப்பு - 1 டீஸ்பூன் (இந்த உப்பு ரெசிபிக்கி)
கருப்பு மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
ரீபைன்ட் எண்ணை (பொரிப்பதற்கு)

செய்முறை :
கோழியில் 3 டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

முட்டையும் பால் 1 கப்பயும் கலந்து வைத்து கொள்ளவும்.

வேறொரு தண்ணீர் இல்லாத பாத்திரத்தில் மைதா,மிளகுத்தூள், உப்பு - 1 டீஸ்பூன், அனைத்தையும் கலந்து வைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் முக்கால் அளவிற்கு எண்ணை ஊற்றி என்னை சூடுவந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து, உப்பில் ஊறிய கோழித்துண்டுகளை சுத்தமாக தண்ணீர் இல்லாமல் துடைத்து , முட்டை கலவையில் நன்கு நனைத்து, பிறகு மைதா கலவையில் பிரட்டி , மீன்டும் முட்டையில் நனைத்து மீண்டும் மைதாவில் நன்கு பிரட்டி,எண்ணையில் கோழித் துண்டுகளை போட்டு மூடி போட்டு 15 - 20 நிமிடம் வைக்கவும்.

பொரிந்ததும் மூடி திறந்து கோழித்துண்டுகளை திருப்பி போட்டு மீண்டும் மூடி போட்டு 25 - 30 நிமிடம் பொரித்து எடுக்கவும்

சுவையான KFC ரெடி.

திங்கள், 20 ஏப்ரல், 2009

Rap Upma

Deliciously: Megha’s kitchens

Ingredients: Rava, Vermicelli, Cashewnut, Potato, Corn (fresh or forzen), Carrot, Onion, Urdh dal, Curry leaves, Mustard, Sunflower oil, ghee, salt and water.

Dry heat the rava and vermicelli 2 cups each with little ghee and keep it in a separate tray, at the same time allow 1.5 liters of water to boil in separate container and add handful of corns to it.

Chop the onion, carrot, potato, pour four-five tablespoon of sunflower oil to the fry pan and add mustard, urdh dal and cashew nut and curry leaves. Allow it to fry for some time and then add the chopped onions – 2 Nos, carrot – 1No and potatos-1 No, till the onion turns to golden colour keep frying. After seeing the onions turning golden colour add the fried rava and vermicelli to the pan and keep stirring for 5 minutes till it gets mixed well with the vegetables.

Pour the boiled water with corn to pan, add salt to taste and add a pinch of turmeric and kesar powder. Stir well for 3 minutes and switch off the gas.

Add coriander leaves for further good smell and keep the Rap upma closed for 5 minutes.

Now the Rap upma is ready to serve, you may take it with coconut chutney, cut mango pickle, garlic pickle, and prawns pickle.
நன்றி - Sri ராம்.
முயற்சி திருவினையாக்கும் - இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகளை எதிர்ப்பார்க்கிறோம்.

திங்கள், 13 ஏப்ரல், 2009

Universal Principles of Success

Success is not something that only a chosen few can achieve. Everyone can be successful in every area of his or her life. You just need to know how to do things in such a way as to make sure you succeed every time. Success comes as a result of forming certain habits, and continuing in them.


1. Vision
2. Belief
3. Responsibility
4. Affirm
5. Commitment
6. Set a SMART goal
(Specific, Motivational, Attainable & Attractive, Realistic and Timed)
7. Plan and Take Action
8. Persistence
9. Gratitude
10.Become a giver



Knowledge is not powerful until you act on what you know.

Think about that. Better yet, act on it! You'll be glad you did.

ABCs for a Successful career

Avoid negative sources, people, places, things and habits
Believe in yourself .
Consider things from every angle .
Don't give up and don't give in .
Enjoy life today, yesterday is gone and tomorrow may never come .
Family and friends are hidden treasures, seek them and enjoy their riches .
Give more than you planned to .
Hang on to your dreams .
Ignore those who try to discourage you.
Just do it.
Keep trying no matter how hard it seems it will get easier.
Love yourself first and most.
Make it happen.
Never lie, cheat or steal, always strike a fair deal.
Open your eyes and see things as they really are.
Practice makes perfect.
Quitters never win and winners never quit.
Read study and learn about everything important in your life.
Stop procrastinating.
Take control of your own destiny.
Understand yourself in order to better understand others.
Visualize it.
Want it more than anything.
Xcellerate your efforts.
You are unique of all God's creations nothing can replace you.
Zero in on your target and go for it !

வியாழன், 9 ஏப்ரல், 2009

HANDBOOK 2009

- a handbook for each and every year indeed !

Health:

1. Drink plenty of water.
2. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar.
3. Eat more foods that grow on trees and plants and eat less food that is manufactured in plants.
4. Live with the 3 E's -- Energy, Enthusiasm, and Empathy.
5. Make time to practice meditation, yoga, and prayer.
6. Play more games.
7. Read more books than you did in 2008.
8. Sit in silence for at least 10 minutes each day.
9. Sleep for 7 hours.
10. Take a 10-30 minutes walk every day. And while you walk, smile.

Personality:

11. Don't compare your life to others'. You have no idea what their journey is all about.
12. Don't have negative thoughts or things you cannot control. Instead invest your energy in the positive present moment.
13. Don't over do. Keep your limits.
14. Don't take yourself so seriously. No one else does.
15. Don't waste your precious energy on gossip.
16. Dream more while you are awake.
17. Envy is a waste of time. You already have all you need.
18. Forget issues of the past. Don't remind your partner with his/her mistakes of the past. That will ruin your present happiness.
19. Life is too short to waste time hating anyone. Don't hate others.
20. Make peace with your past so it won't spoil the present.
21. No one is in charge of your happiness except you.
22. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
23. Smile and laugh more.
24. You don't have to win every argument. Agree to disagree.

Society:

25. Call your family often.
26. Each day give something good to others.
27. Forgive everyone for everything.
28. Spend time with people over the age of 70 & under the age of 6.
29. Try to make at least three people smile each day.
30. What other people think of you is none of your business.
31. Your job won't take care of you when you are sick. Your friends will. Stay in touch.

Life:

32. Do the right thing!
33. Get rid of anything that isn't useful, beautiful or joyful.
34. GOD heals everything.
35. However good or bad a situation is, it will change.
36. No matter how you feel, get up, dress up and show up.
37. The best is yet to come.
38. When you awake alive in the morning, thank GOD for it.
39. Your Inner most is always happy. So, be happy.

Last but not the least:

40. Please EMail this to everyone you care about

*** Thanks Ms. Jocelyn ***

புதன், 8 ஏப்ரல், 2009

அந்த 7 கெட்டப் பழக்கம்

இன்றைய இளைய சமூதாயத்தில் பலரது நோக்கமும் வேலை, வேலை மற்றும் வேலை மட்டுமே. இப்படி எல்லாவற்றையும் மறந்து ஓடி ஓடி கண்மூடித்தனமாக உழைத்துக் கொண்டிருப்பவர்களையே 'வொர்க்கஹாலிக்' என்கிறோம். அத்தகையோரிடம் உள்ள 7 கெட்டப் பழக்கங்களை பட்டியலிட்டிருக்கிறார், மருத்துவ பேராசிரியர்கள்.

அந்த 7 கெட்டப் பழக்கம் இதோ...

'சாப்பிடா' ராமன்!

நிதானமாக அமர்ந்து ரசித்து புசிக்கும் பழக்கம் இல்லாமல், ஓடிக் கொண்டே சாப்பிடுபவர்கள் இவர்கள். இதனால், உடலுறுதி வெகுவாக பாதிக்கப்படும்.

'ரிலாக்ஸில்லா' ராசா!

மன அழுத்தம் என்பது சில நேரங்களில் நன்மை தரலாம். இது, நாம் உஷாராகி செயல்பட எச்சரிக்கை மணி என்று கருதி செயல்படாலாம். ஆனால், அதிகப்படியான மன அழுத்தம் அபாயத்தை ஏற்படுத்திவிடும். ரிலாக்ஸாக இருப்பதற்கே மறந்துவிடும் வகையில் பணியில் மூழ்குவது மன அழுத்தத்துக்கு வித்திடும்.

'தூங்காத' கைப்பிள்ளை!

தூக்கத்தைத் தொலைத்துக் கூட வேலை செய்வொர் நம்மில் பலர். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், 7 மணி நேரம் தூக்கம் தேவை. இது இல்லையென்றால்... மறதி, முடிவெடிப்பதில் தெளிவின்மை, உடல் பருமன் இப்படி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் தொல்லைகள்..!

'எக்ஸ்ட்ரா சைஸ்' ஏகாம்பரம்!

நாளொன்று 30 நிமிடமாவது உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அந்த நேரத்தை கூட செலவிடாமல் உடற்பயிற்சி மேற்கொள்ளாதது நல்லதல்ல.

'கரும'ராஜா!

கருமமே கண்ணாக இருப்பது எப்போதும் டேஞ்சர். ஜூரம் போன்ற உடல் நலக் குறைவு ஏற்பட்ட போதுகூட அசராமல் அலுவலகத்துக்குச் செல்வது வொர்க்கஹாலிக்கின் உச்சகட்டம்!

உடம்பு சரியில்லையா... லீவு போட்டுட்டு ஓய்வு எடுப்பதே நல்லது.

'ஆஃப்' ஆறுமுகம்!

வொர்க்கஹாலிக் என்று சொல்லிக் கொள்பவர்கள் பலரிடம் இருக்கும் பழக்கம்... சோர்வைப் போக்க 'டிரிங்'! இது ஓவராகிப் போனால், எல்லாமே ஓவராகிப் போய்விடும். ஜாக்கிரதை!

'நோ செக்கப்' சிவராசு!

என்னதான் ஆரோக்கியமாக இருந்தாலும், வருடத்துக்கு ஒரு தடவை கம்ப்ளீட் மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது அவசியம். அடித்துப் போடும் படியாக ஜூரம் இருந்தாலே கிளினிக் பக்கம் ஒதுங்க மறுக்கும் வொர்க்கஹாலிக்ஸ்... வருடம் ஒரு தடவை முழு செக்கப் செய்வதையும் தவிர்க்கின்றனர். இதுவும் நல்லதில்ல.

வாழ்வின் வெற்றியின் ரகசியம்

வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிகவும் சுலபம் தான்.. அதற்காக நாம் கொஞ்சம் முயற்சி செய்யனும்..

நாம் செய்கின்ற வேலையினை அதிக படுத்துங்க.. எல்லோரையும் விட இரண்டு மடங்கு அதிகமாக உழைக்கவும்.

மனதிர்க்கு இதமான வேலைகளை சோம்பலின்றித் தொடர்ந்து செய்யுங்கள்.

உங்களுக்கு யாரவது செய்த சின்ன உதவியாக இருந்தாலும் நன்றி சொல்ல மறக்காதிங்க.

நல்ல விஷயங்கள் யாரு சொன்னாலும் ஏற்றுக்கொள்ளுங்க.

குடும்பத்தில் அனைவருடன் கலந்து பேசி நல்ல முடிவினை எடுங்க. அன்புக்கு கட்டுபடுங்க.

துயரத்தில் இருக்கும் மனிதர்களை ஆறுதல் வார்த்தைகள் சொல்லி அன்பு காட்டுங்க.

யாரையும் பாராட்டும் பொழுது வாயளவில் பாராட்டாமல் மனதளவில் பாராட்டுங்கள்.

இதை நாம் முறையாக கடைபிடித்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிக சுலபமாகிவிடும்


-நெட்டில் சுட்டது.

தோல் பளபளப்பாக!

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

--------------------------------------------------------------------------------
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

--------------------------------------------------------------------------------
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

--------------------------------------------------------------------------------
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

--------------------------------------------------------------------------------
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

--------------------------------------------------------------------------------
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

--------------------------------------------------------------------------------
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

--------------------------------------------------------------------------------
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

--------------------------------------------------------------------------------
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

--------------------------------------------------------------------------------
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

--------------------------------------------------------------------------------
ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

--------------------------------------------------------------------------------
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

--------------------------------------------------------------------------------
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

--------------------------------------------------------------------------------
பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

--------------------------------------------------------------------------------
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

--------------------------------------------------------------------------------
பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

--------------------------------------------------------------------------------
தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.

--------------------------------------------------------------------------------
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

--------------------------------------------------------------------------------
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

திங்கள், 6 ஏப்ரல், 2009

கூகுலுக்கு எதிராக மனித‌ச்சங்கிலி


வந்தபின் புலம்புவதைவிட வருமுன் காப்பதே சிறந்தது என்னும் சிந்தனையோடு பிரிட்டனில் கூகுல் ஸ்டிரீட்வியூ வாகனம் உள்ளே நுழையக்கூடாது என போர்க்கொடி தூக்கி கூகுல் வானத்தை பின்வாங்கவும் வைத்துள்ளனர்.

கூகுல் எர்த்,மேப்ஸ் வரிசையில் கூகுல் ஸ்டிரீட்வியூ சேவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. அமெரிக்காவில் அறிமுகமான சேவை மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்த்ப்பட்டு வருகிறது. சமிபத்தில் பிரிட்டனிலும் இந்த சேவை அறிமுகமாகியுள்ளது.

ஸ்டிரீட்வியூ என்பது நகரங்களில் உள்ள தெருக்களை புகைப்பட காட்சிகளாக பார்க்க உதவும் சேவை. வீடுகளைகூட குளோசப்பில் காண முடியும்.

கூகுலின் மற்ற எந்த சேவையையும் விட இந்த சேவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெருவோர காட்சிகளையும் .வீடுகளையும் யார் வேண்டுமானால் பார்க்கலாம் என்பது அந்தரங்கம் மிதான தாக்குதலாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எதிர்பாராத பிரசனைகள் ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

சமிபத்தில் பிரிட்டனில் கூகுல் ஸ்டிரிட்வியூவை பார்த்துவிட்டு ஒரு வீட்டின் மேற்கூறையில் வேயப்பட்டிருந்த ஓடுளை ஒருவர் திருடிச்சென்றது பரபர‌ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தெற்கு இங்கிலாந்தில் உள்ள பிர்வுட்டன் என்னும் ஊருக்கு குகுலின் ஸ்டிரிட்வியூவை வாகனம் காமிராவோடு வரிகை தந்தபோது அந்த‌ ஊர் மக்கள் விழத்துக்கொண்டு போர்க்கொடி தூக்கினர்.அந்த வாகனம் ஊருக்குள் நுழையக்கூடாது என்று மனிதசங்கிலி அமைத்து போராடினர்.விளைவு கூகுல் வாகனம் பின்வாங்கிவிட்டது.

இத்தகைய சர்ச்சைகள் எதிர்ப்புகளை மீறி கூகுல் இத்திட்டத்தில் உறுதியாக உள்ளது. இஅத புதிய சேவையின் தன்மையை புரிந்துக்கொள்ள நாளாகும் என கூகுல் நம்பிக்கையோடு கூறுகிறது.
SAMPLE SITE : http://maps.google.com/help/maps/streetview/

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

செட்டிநாட்டு பூண்டு குழம்பு

தேவையானவை : 1
பூண்டு - 12 பல்
சின்னவெங்காயம் - 20
தக்காளி - 1 பெரியது
கரிவேப்பிலை - 5
புளி - 1 எலுமிச்சியளவு
மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூண்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூண்
மிளகாய்பொடி - 1 டீஸ்பூண்
உழுந்து - 1 டீஸ்பூண்
கடுகு - 1 டீஸ்பூண்
தேங்காய்பால் - 2 டேபில் ஸ்பூண்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு

தேவையானவை 2

மல்லி - 2 டேபிள்ஸ்பூண்
ஜீரகம் - 1 டீஸ்பூண்
கசகசா(வெள்ளை) - 1 டீஸ்பூண்
மிளகு - 1/4 டீஸ்பூண்
காய்ந்தமிளகாய் - 3
இஞ்சி - 1 துண்டு
எண்ணெய் - 1 டீஸ்பூண்

அடுப்பில் கடாயை வைத்து 1 ஸ்பூண் எண்ணெய் ஊற்றி தேவையானவை 2 ல் உள்ளவற்றை தனி தனியாக வறுத்து அதை மிக்சியில் போட்டு நன்றாக பொடித்து வைக்கவும்.

சின்ன வெங்காயம், பூண்டு(நீளவாக்கில்), தக்காளி நறுக்கி கொள்ளவும்.அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூண் எண்ணெய் ஊற்றி கடுகு, உழுந்து, கரிவேப்பிலை போட்டு தாளிக்கவும் .

பின்னர் பூண்டு போட்டு சிறிது வதக்கி வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். நன்கு வதங்கியவுடன் மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,காயம் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் பொடித்து வைத்துள்ள பொடியை போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.தேங்காய் பால் சேர்த்து 1 கப் தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்து வற்றி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

அருமையான செட்டிநாடு பூண்டுகுழம்பு ரெடி


வியாழன், 2 ஏப்ரல், 2009

உறவுகள் மேம்பட ...

குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் எற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க.......

1. நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். [ Ego ]

2. அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள். [ Loose talks ]

3. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள் விட்டுக்கொடுங்கள். [ Diplomacy ]

4. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துதான் ஆக வேண்டும் -என்று உணருங்கள். [ Tolerance ]

5. நீங்கள் சொன்னதே சரி.செய்ததே சரி என்று வாதாடாதீர்கள் குருகிய மனப்பான்மையை விட்டு விடுங்கள். [ Adamant argument ]

6. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் [ Carrying Tales ]

7. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் [ Superiority Complex ]

8. அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசை படாதீர்கள் [ Ovar Expectation ]

9. எலோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்

10. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்

11. அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

12. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் [ Flexibility ]

13. மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். [ Misunderstanding ]

14. மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும் இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும்- தவறாகதீர்கள் [ courtesy ]

15. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

16. பேச்சியிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும்,தேவையில்லாத- மிடுக்கையும்- காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

17. அவ்வபோது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

18. பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல்- நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள்.