வந்தபின் புலம்புவதைவிட வருமுன் காப்பதே சிறந்தது என்னும் சிந்தனையோடு பிரிட்டனில் கூகுல் ஸ்டிரீட்வியூ வாகனம் உள்ளே நுழையக்கூடாது என போர்க்கொடி தூக்கி கூகுல் வானத்தை பின்வாங்கவும் வைத்துள்ளனர்.
கூகுல் எர்த்,மேப்ஸ் வரிசையில் கூகுல் ஸ்டிரீட்வியூ சேவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. அமெரிக்காவில் அறிமுகமான சேவை மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்த்ப்பட்டு வருகிறது. சமிபத்தில் பிரிட்டனிலும் இந்த சேவை அறிமுகமாகியுள்ளது.
ஸ்டிரீட்வியூ என்பது நகரங்களில் உள்ள தெருக்களை புகைப்பட காட்சிகளாக பார்க்க உதவும் சேவை. வீடுகளைகூட குளோசப்பில் காண முடியும்.
கூகுலின் மற்ற எந்த சேவையையும் விட இந்த சேவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெருவோர காட்சிகளையும் .வீடுகளையும் யார் வேண்டுமானால் பார்க்கலாம் என்பது அந்தரங்கம் மிதான தாக்குதலாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எதிர்பாராத பிரசனைகள் ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
சமிபத்தில் பிரிட்டனில் கூகுல் ஸ்டிரிட்வியூவை பார்த்துவிட்டு ஒரு வீட்டின் மேற்கூறையில் வேயப்பட்டிருந்த ஓடுளை ஒருவர் திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தெற்கு இங்கிலாந்தில் உள்ள பிர்வுட்டன் என்னும் ஊருக்கு குகுலின் ஸ்டிரிட்வியூவை வாகனம் காமிராவோடு வரிகை தந்தபோது அந்த ஊர் மக்கள் விழத்துக்கொண்டு போர்க்கொடி தூக்கினர்.அந்த வாகனம் ஊருக்குள் நுழையக்கூடாது என்று மனிதசங்கிலி அமைத்து போராடினர்.விளைவு கூகுல் வாகனம் பின்வாங்கிவிட்டது.
இத்தகைய சர்ச்சைகள் எதிர்ப்புகளை மீறி கூகுல் இத்திட்டத்தில் உறுதியாக உள்ளது. இஅத புதிய சேவையின் தன்மையை புரிந்துக்கொள்ள நாளாகும் என கூகுல் நம்பிக்கையோடு கூறுகிறது.
SAMPLE SITE : http://maps.google.com/help/maps/streetview/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக