வெள்ளி, 11 டிசம்பர், 2009

முட்டை ரெஸிபி குழந்தைகளுக்கு

1.அவித்தமுட்டை

முட்டை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதில் இரண்டு பின்ச் உப்பு போட்டு ஏழு நிமிடம் மீடியம் தீயுல் வேக விட்டு வெண்னீரை வடித்து குளிர்ந்த தண்னீர் அதில் ஊற்றினால் முட்டை ஓட்டை சுலபமாக பிரித்தெடுக்கலாம்.

அதை கட் பன்னி லேசா உப்பு மிளகு தூள் தூவியும் கொடுக்கலாம்

தினமும் ஒரு முட்டை வேகவைத்து கொடுங்கள்.

2. எக் புட்டிங்

இரு முட்டையில் முன்று மேசை கரண்டி பால், ஒரு சொட்டு நெய்,கால் பின்ச் அளவு ஏலக்காய் தூள் ஒரு மேசை கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி அதை ஒரு சிறிய சில்வர் டிபன் பாக்ஸில் வைத்து முடி போட்டு குக்கரில் முன்று விசில் விட்டு இருக்கி விடுங்கள். ஆறியதும் துண்டு போட்டு குழந்தைகலுக்கு ஊட்டி விடுங்கள்.

3.மைதா மவு முட்டை தோசை

கால் கப் மைதா மாவில் ஒரு முட்டை, ஒரு பின்ச் உப்பு,ஒரு மேசை கரண்டி சர்க்கரை, ஏலகாய் தூள் அரை பின்ச் போட்டு நன்கு தோசை மாவு பதத்தில் கரைத்து நெயில் கருகாமாமல் ரொம்ப மொரு மொருன்னுனாகாமல் சிவற சுட்டெடுத்து சுட்டு கொடுங்கள்.

4. இனிப்பு முட்டை டோஸ்ட்

ஒரு முட்டையில் கால் டம்ளர் பால், இரண்டு மேசை கரண்டி சர்க்கரை,உப்பு ஒரு பின்ச்,ஏல்கக்காய் தூள் அரை பின்ச் போட்டு நன்கு கலக்கி பிரெட்டை அதில் தோய்த்து நெய் + எண்ணை கலவையில்சுட்டு கொடுக்க வேண்டும்.

5.குட்டி முட்டை தோசை
காரம் விரும்பும் குழந்தைகளுக்கு முட்டையில் ஒரு பின்ச் உப்பு,மிளகு தூள், கால் தேக்கரண்டிக்கு கம்மியா இஞ்சி பூண்டு பேஸ்ட்,மஞ்சல் டூள் கால் பின்ச் போட்டு நன்கு கலக்கி குட்டி குட்டி தோசை மாதிரியும் கொடுக்கலாம்.

நன்றி: வலை நண்பர்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக