தேவையானப் பொருட்கள்:
பெரிய உருளைக்கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய மல்லித்தழை - கால் கப்
மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
தூள் உப்பு - தேவைக்கேற்ப
மைதா மாவு - 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை பொடித்தது - அரை கப்
எண்ணெய் - 2 கப்.
செய்முறை:
- உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசித்து மல்லித்தழை, மிளகாய்தூள், தூள்உப்பு சேர்த்து பிசையவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அதில் மசாலாவையும் போட்டு சூடு வரக் கிளறி ஆற வைக்கவும்.
- மைதாவை ஒரு கரண்டி நீர் விட்டு கரைத்து கொள்ளவும். மசாலாவை வேண்டிய வடிவில் செய்து, கரைத்த மாவில் நனைத்து பொட்டுக்கடலை மாவில் புரட்டி வாணலியில் எண்ணெயை சுடவைத்து நன்கு சூடானதும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக