செவ்வாய், 2 நவம்பர், 2010

பாகற்காய் சூப்

தேவையான பொருட்கள்

பெரிய பாகற்காய் - 1
எலுமிச்சம்பழம் - 1 மூடி
காய்ச்சிய பால் - 1/2 கப்
நெய் ‍ 1 தேக்க‌ர‌ண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
சூப் பவுடர் - 1 தேக்க‌ர‌ண்டி
தாளிக்க -
சோம்பு - 1/4 தேக்க‌ர‌ண்டி
மிளகு - 1/4 தேக்க‌ர‌ண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்க‌ர‌ண்டி
பட்டை - 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை

பாகற்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் அலச வேண்டும். சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக விட வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு சோம்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இத்துடன் வெந்த பாகற்காய், சூப் பவுடர் சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும். அதனுடன் உப்பு சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும். கடைசியாக பால் சேர்த்து கொத்துமல்லி தூவி பரிமாற வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக