ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

சமையல் - மஷ்ரூம் சூப்

தேவையானவை: மீடியம் சைஸ் மஷ்ரூம் - 3. எண்ணெய் - அரை டீஸ்பூன். மைதா - ஒன்றரை டீஸ்பூன். இஞ்சி, பூண்டு விழுது - கால் டீஸ்பூன். மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன். சோள மாவு - 2 டீஸ்பூன். உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை: மஷ்ரூமைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். சோள மாவு, மிளகுத் தூளைத் தனித்தனியே சிறிது தண்ணீரில் கலந்துகொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு மைதா மாவைப் போட்டு வறுத்து, மூன்று கப் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய மஷ்ரூமைப் போட்டு, நன்றாக வெந்ததும் கரைத்த சோள மாவு, மிளகுத் தூள், உப்பு சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்!

பின் குறிப்பு: இது விகடன் ல் சுட்டது.

1 கருத்து: