ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

எது அழகு?


கண்ணுக்கு மை அழகுதான் - ஆனால்
பெண்ணுக்கு பெண்’மை’ தான் அழகு!
கவிதைக்கு பொய் அழகுதான் - ஆனால்
காதலுக்கு மெய்தான் அழ்கு!

எல்லோருக்கும் இளமை அழகுதான் - ஆனால்

எப்போதும் திறமைதான் அழகு!
வல்லவனுக்கு வலிமை அழகுதான் - ஆனால்
நல்லவனுக்கு பொறுமைதான் அழகு!

கவர்ச்சிக்கு புதுமை அழகுதான் - ஆனால்
காட்சிக்கு எளிமைதான் அழகு!
வாழ்க்கைக்கு வளமை அழகுதான் - ஆனால்
வறுமையிலும் நேர்மைதான் அழகு!

-- எப்பவோ படித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக