வியாழன், 26 பிப்ரவரி, 2009

வாழைக்காய் மசாலா தயிர் கூட்டு

தேவையானவை:
முற்றிய மொந்தன் வாழைக்காய் -- 3
கெட்டி தயிர் -- 400 கிராம்
பச்சை மிளகாய் -- 8 (காம்பு நீக்கி கீறிக்கொள்ளவும்)
சின்ன வெங்காயம் -- 10 (தோல் நீக்கி வட்டத்தில் அரிந்து கொள்ளவும்)
உப்பு -- தேவையான அளவு
அரைக்க
தேங்காய் துருவியது -- 1/2 மூடி

பூண்டு -- 6 பல்
முந்திரி பருப்பு - 6
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
பட்டை -- 1 சிறிய துண்டு
ஜாதிக்காய் -- 1 சிறிய துண்டு
மிளகாய் பொடி -- 1 டேபிள் ஸ்பூன்
மல்லி பொடி -- 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி -- 1 டீ ஸ்பூன்
தாளிக்க
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
பட்டை -- 1 சிறிய துண்டு
கறிவேப்பிலை -- 1 கொத்து
நெய் -- 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் -- 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வாழைக்காய்களை அடியும் நுனியும் வெட்டி குக்கரில் ஒரு விசில் விட்டு வேகவைத்து எடுத்து தோல் உரித்து
சின்ன சின்ன துண்டுகளாக்கவும்

அரைக்க கொடுத்துள்ள எல்லாவற்றையும் நன்கு மைபோல் அரைத்து தயிருடன் கலந்து கொள்ளவும்

வானலி வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவையை தாளித்து பின் அதில் பச்சை
மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் அரிந்து வைத்துள்ள வாழைக்காய் சேர்த்து
வதக்கவும்.

பின் அரைத்து வைத்துள்ள மசாலா தயிரை சேர்த்து 100 மில்லி தண்ணிர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விட்டு
இறக்குங்கள்

வித்தியாசமான சுவையுடன் கூடிய வாழைக்காய் கூட்டு தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக