மூக்கின் இருபக்கமும், மூக்கின் நுனியிலும் இருக்கும் பிளாக் ஹெட்சை போக்க சில வழிகள்
பிளாக் ஹெட்ஸ் முகத்தில் வர காரணமே முகத்தில் வியர்வை,தூசியினால் முகத்தில் சேர்ந்த அழுக்கு வெளி வராமல் அங்கங்கே தங்கிவிடும். இதனால் முகத்தில் கருமை வருகிறது.. இது மூக்கின் மீது சிறு முடி போல் இருக்கும்.
பியூட்டி பார்லரில் இதுக்குனு ஒரு கம்பி வைத்து மூக்கில் அழுத்தி தேய்ப்பாங்க। அது மூக்கில் தழும்புகள் வந்துவிடும்॥ ஆகையால் அப்படி செய்யவேண்டாம்
அரிசி மாவு, தயிர் கலந்து மூக்கின் மீது நன்றாக தேய்க்கவும். ஒருவாரம் தொடர்ந்து இதை போல் செய்தால் பிளாக் ஹெட்ஸ் மறைந்து போகும்.
வீட்டிலே செலவே இல்லாமல் ஓர் டிப்ஸ்
நன்றாக கொதிக்கும் நீரில் (ஆவிபிடிக்கும் பதம்) மூக்கை மட்டும் நன்றாக காட்டி வியர்வை வர சின்ன சில்வர் ஸ்பூனின் பின் பகுதியினை (கூர்மையான
வளைந்த பகுதி) மூக்கின் பிளாக் ஹெட்ஸ் மீது அழுத்தி இழுத்தால் அதில் வந்துவிடும். வெள்ளை துணியில் துடைத்து பார்த்தால் அதில் இருக்கும்.
இந்த குறிப்பு இணையத்தில் இருந்து சேகரித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக