திங்கள், 8 ஜூன், 2009

ரவா தோசை

தேவையானவை:

ரவா - 1 கப்
மைதா - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
மிளகு , சீரகம் , பெருங்காயம் சிறிது
உப்பு - தேவையான அளவு
முந்திரி - விருப்பத்திற்க்கு ஏற்ப

செய்முறை:

ரவை, மைதா, அரிசிமாவு 1:1:1 என்ற விகிதத்தில் கலந்து மிளகு, சீரகம், பெருங்காயம் , உப்பு போட்டு அரை மணி நேரம் ஊர வைத்து சுடவும். முந்திரியை சிறிது சிறிதாக உடைத்து
மாவில் கலந்து கொள்ளவும். மாவை சிறிது நீர்க்க கரைத்து மொள்ளவும்.( மாவு தோசையை விட தண்ணியாக).

குறிப்பு:
விருப்பப் பட்டால், சிறிது எண்ணையில், சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி மாவில் சேர்த்து கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக