திங்கள், 28 பிப்ரவரி, 2011
பாலக் பனீர்
சோலே மசாலா
சனி, 26 பிப்ரவரி, 2011
கும்பகோணம் கடப்பா
தேவையானவை: பயத்தம்பருப்பு - ஒரு கப், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், உருளைக்கிழங்கு - 1, கறிவேப்பிலை, பிரிஞ்சி இலை - சிறிதளவு, எண்ணெய் - 2 ஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு.
செய்முறை: பயத்தம்பருப்பை வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். மிளகாய் வாசனை போனதும், வேக வைத்த பயத்தம்பருப்பு, வேக வைத்து மசித்த உருளைகிழங்கை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். பிரிஞ்சி இலை, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.
கும்பகோணம் கடப்பா: நன்றாக செய்ய வருகிறது... டேஸ்ட்டும் அபாரம்!
கீர்....
தேவையான பொருட்கள் : பால் - ஒரு லிட்டர், துருவிய கேரட் - 11/2 கப், சர்க்கரை - ஒரு கப், மெல்லிய ரவை - 3 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - சிறிது, குங்குமப்பூ - சிறிது.
செய்முறை : துருவிய கேரட்டை பாலில் நன்கு மென்மையாகும் வரை வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கரையும் வரை கிளறி விடவும். பிறகு ஸ்டவ்வை சிம்மில் வைத்து ரவையை கட்டி தட்டாதபடி, பாலுடன் கலக்கவும்.
இத்துடன் முந்திரிப் பருப்பைச் சேர்த்துக் கலவை திக்காகும் வரை கொதிக்க விடவும். பிறகு சிறிது இளஞ்சூடான பாலில் குங்குமப்பூவைக் கரைத்து, இறக்கும்முன் சேர்க்கவும். இதனைக் குளிர வைத்து பரிமாறவும்.
அன்னாசிப் பழ கீர்
தேவையான பொருட்கள் : நன்கு பழுத்த அன்னாசிப்பழம் - ஒன்று, சர்க்கரை - ஒரு கப், பாதாம் பருப்பு - 50 கிராம், பால் - 1/2 லிட்டர், பேரீச்சம்பழம் - 100 கிராம், முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை -தலா 25 கிராம், குங்குமப்பூ - சிறிதளவு, ஏலக்காய் பொடி - லு டீஸ்பூன்.
செய்முறை : அன்னாசிப்பழத்தை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.பேரீச்சம்பழத்தையும் கொட்டை நீக்கி நறுக்கவும். இரண்டையும் மிக்ஸியில் அரைத்து, சாறை வடித்தெடுக்கவும். இதில் சர்க்கரையைக் கலந்து அடுப்பில்வைத்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். பழச்சாறு கொதித்துக் கெட்டியானதும் கீழே இறக்கவும்.
பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து, தோல் நீக்கி மையாக அரைக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுக்கவும். பாலை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சி அத்துடன், அரைத்த பாதாம் பருப்பு, பழச்சாறு இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சை, குங்குமப்பூ, ஏலக்காய் பொடி ஆகியவற்றைப் போட்டு, சிறிது நேரம் கிளறி கீழே இறக்கிப் பரிமாறவும்.
கோதுமை கீர்
தேவையான பொருட்கள் : உடைத்த கோதுமை - 50 கிராம், சர்க்கரை - 4 டீஸ்பூன், காய்ச்சிய பால் - 21/2 கப், தண்ணீர் - ஒரு கப், க்ரீம் - 1/2 கப், ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன், பாதாம் பருப்பு - 25 கிராம், வெள்ளித்தாள் -2, நெய் - 3 டேபிள் ஸ்பூன், உலர் திராட்சை, பிஸ்தா பருப்பு - தலா 10 கிராம், பன்னீர் - சில துளிகள்.
செய்முறை : நெய்யில் பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை மூன்றையும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.அதே நெய்யில் உடைத்த கோதுமையைக் கொட்டி லேசாக நிறம்மாறும் வரை வறுத்து அத்துடன் ஏலக்காய்ப் பொடி, சர்க்கரை, தண்ணீர் விட்டு வேக விடவும்.
வெந்தபின் அடுப்பிலிருந்து இறக்கி, பால், பன்னீர், க்ரீம், பொரித்த பருப்புகள் எல்லாவற்றையும் சேர்த்துக் கிளறவும். இதன் மீது வெள்ளித் தாளை விரித்து அலங்கரித்து சூடாகவோ, குளிர்ச்சியாகவோ பரிமாறவும்.
பழக்கலவை சேமியா கீர்
தேவையான பொருட்கள் : பால் - 6 கப், பொடியாக நறுக்கிய மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழம் (சேர்த்து) - 2 கப், சர்க்கரை - ஒரு கப், மெல்லிய உடைத்த சேமியா, ஒரு கப் க்ரீம் - ஒரு கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்.
செய்முறை : சேமியாவை நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். பாலை சுண்டக் காய்ச்சவும். அத்துடன் வறுத்த சேமியா சேர்த்து, வேக விடவும். பிறகு ஸ்டவ்வை சிம்மில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாகச் சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி க்ரீம், பழக்கலவை, வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறி, ஃப்ரிட்ஜில் ஒருமணி நேரம் வைத்துப் பரிமாறவும்.
பாதாம் கீர்
தேவையான பொருட்கள் : பாதாம் பருப்பு - 100 கிராம், சர்க்கரை - ஒரு கப், பால் - 3 கப், ஏலக்காய்ப் பொடி - ஒரு டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 25 கிராம், சாரப் பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 1 டேபிள் ஸ்பூன், பச்சைக் கற்பூரம், கேசரிக்கலர் - சிறிதளவு.
செய்முறை : முந்திரிப் பருப்பு, சாரப்பருப்பு, பிஸ்தா பருப்பு மூன்றையும் நெய்யில் வறுத்துக்கொள்ளவும். பாதாம் பருப்பை ஊற வைத்து, தோல் நீக்கி தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். அதனை 3 கப் நீர் விட்டுக் கலக்கி அடுப்பில் வைத்துக் கிளறவும். பச்சை வாசனை மாறியதும், சர்க்கரையைப் போட்டுக் கிளறவும். சர்க்கரை நன்றாக கரைந்தபின் பாலை ஊற்றவும்.பிறகு மற்ற எல்லாப் பொருட்களையும் போட்டுக் கிளறிக்கொண்டே இருக்கவும். கெட்டியாக வந்ததும் கீழே இறக்கவும். இதனை சூடாகவோ, குளிர்ச்சியாகவோ பரிமாறலாம்.
உளுத்தம் கீர்
தேவையான பொருட்கள் : பால் - 250 மி.லி, உளுத்தம் பருப்பு - 100 கிராம், பச்சரிசி (அ) பாஸ்மதி அரிசி - 100 கிராம், தேங்காய்த் துருவல் - ஒரு கப், துருவிய வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்ப் பொடி, கேசரிக் கலர், நெய், சுக்குப்பொடி - தலா 1/2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு- தேவையான அளவு.
செய்முறை : உளுத்தம் பருப்பை நெய்யில் சிவக்க வறுத்து, அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கவும். முந்திரிப் பருப்பையும் நெய்யில் வறுக்கவும். தேங்காய்த் துருவலை அரைத்துப் பாலெடுக்கவும். சக்கையை பிழிந்து தனியே வைக்கவும்.ஊறிய உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியுடன் தேங்காய் சக்கையைச் சேர்த்து, தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
அரைத்த விழுதைப் போல், இரண்டு மடங்கு தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் விட்டுக் கொதிக்க விடவும். அதில் அரைத்ததை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கட்டிபிடிக்காமல் கிளறவும்.கூடவே வெல்லத்தையும் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும்.
பத்து நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கி, ஏலக்காய்ப் பொடி, முந்திரிப் பருப்பு, கேசரிக்கலர், சுக்குப்பொடி சேர்த்துக் கலக்கவும். கடைசியாக தேங்காய்ப் பாலையும் சேர்த்துக் கலக்கவும். இந்த உளுத்தம் கீர் உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும்
கோதுமை பணியாரம் & அரிசி அடை
செய்முறை: தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். கோதுமை மாவு, சர்க்கரை, பழம், ஏலக்காய், உப்பு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தேங்காய்ப் பால் விட்டு பிசைந்து கொள்ளவும். பணியார சட்டி குழிகளில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒரு கரண்டி மாவு ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறம் வெந்ததும் எடுக்கவும்.
அதிக சத்துள்ள பணியாரம் இது.
________________________________________
Asparagus Pachai poriyal (Asparagus stir Fry)
Asparagus has No Fat, contains No Cholesterol and is low in Sodium.
Vegetable Soup with Asparagus
Kalaikkose Pirattal (Brussels sprouts curry )
புதன், 23 பிப்ரவரி, 2011
சீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்
சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.
கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:-
- மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடைகுறையும்.
- சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்றுகுணமாகும்.
- கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்.
- ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்குநிற்கும்.
- சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.
- மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
- சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
- சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
- கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால்,தொடர் விக்கல் விலகும்.
- பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செச்ரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி+ சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.
- வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.
- சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
- சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லாஉடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.
- "ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து"
- தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்'தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.
காளான் புலாவ்
தேவையானப் பொருள்கள்:
பச்சரிசி (அ) பாசுமதி அரிசி - ஒரு கப்
காளான் - 15
பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் - 5
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு - 2 பற்கள்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
முந்திரி - 5
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
- அரிசியைத் தண்ணீரில் ஒரு 10 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடித்துவிடவும்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு சூடேறியதும் அரிசியைப் போட்டு வதக்க வேண்டும். ஈரப்பசை நீங்கி அரிசி நிறம் மாறும் சமயம் அடுப்பை நிறுத்திவிடவும்.
- பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊறவைத்து எடுத்துக்கொள்.
- காளானை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்.
- வெங்காயம் நறுக்கி வைக்கவும்.
- இஞ்சி,பூண்டைத் தட்டி வைக்கவும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.
- தாளிப்பு முடிந்ததும் வெங்காயத்தை முதலில் சேர்த்து வதக்கவும்.
- அடுத்து காளான்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.
- இவை வதங்கும்போதே மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
- எல்லாம் நன்றாக வதங்கியபிறகு தண்ணீர் ஊற்றி உப்பு,காரம் சரிபார்த்து கலக்கி மூடி வைக்கவும்.
பாசுமதி அரிசியானால் ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீரும்,பச்சை அரிசியானால் ஒன்றுக்கு இரண்டரை பங்கு தண்ணீரும் தேவை.
- தண்ணீர் நன்றாக சூடேறி ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறிவிட்டு மீண்டும் மூடி வைக்கவும்.
- மீண்டும் கொதி வரும்போது மூடியைத் திறந்து எலுமிச்சை சாறு விட்டு லேசாகக் கிளறிவிட்டு மிதமானத் தீயில் ஒரு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
இப்பொழுது அடுப்பை நிறுத்திவிட்டு ஒரு தோசைத் திருப்பி(அ)முள் கரண்டியால் சாதத்தைக் கிளறிவிட்டு மூடி வைக்கவும்.
இப்பொழுது சுவையான காளான் புலாவ் தயார். இதற்கு தயிர்,வெங்காயப் பச்சடி நன்றாகப் பொருந்தும்.
ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011
அழகு குறிப்புகள் தேன்
வேலைக்கு செல்லும் பெண்கள் பார்லர் போக நேரம் இல்லை என்றால் தேனின் உதவியுடன் எப்படி பேசியல் பண்ணி கொள்ளுவது என்று கீழே பாருங்கள் .
டோநர் (Toner ):
வெள்ளரிக்காய் ஜூஸ் 2 டீஸ்பூன் + தேன் 1 டீஸ்பூன் இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் போர்ஸ் (pores ) எல்லாம் போய் முகம் நல்ல மெதுவாக (soft) இருக்கும் .
ஸ்கரப் (scrub):
ஒட்ஸ்( oats) 2 டீஸ்பூன் + தேன் 2 டீஸ்பூன் + பாதாம் பவுடர் 1 டிஸ்பூன் + தயிர் 2 டிஸ்பூன் நான்கையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 10 நிமடத்திற்கு சர்குலர் மோஷனில் தேய்க்கவும் .பிறகு 10 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி இரண்டு வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத டெட் ஸ்கின் (deadskins) எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும் .
ப்ளீச் (Bleach):
தேன் 2டீஸ்பூன் + லேமன் ஜூஸ் 2டீஸ்பூன் இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத தழும்புகள் எல்லாம் போய் முகம் சிவந்து தெரியும் .
க்லன்சர் (cleanser):
1/4 நீuஜீ தேன் + சோப் (liquid soap) 1 டீஸ்பூன் + கிளசரீன் (glycerin)) 1 டீஸ்பூன் மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவவும்.இப்படி 2 வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் தேவை இல்லாத கரும் புள்ளிகள், முகப்பறு எல்லாம் போய் முகம் பளபளப்பாக இருக்கும் .
குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது
சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது. நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு...
"பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, "இதை கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்கணும். இந்த சின்ன டவலால கவனமா துடைச்சுடு...' என்று, குழந்தையிடம் டவலை கொடுத்தாள். தன்னிடம் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்ட பெருமை முகத்தில் ததும்ப, அந்த குழந்தை தரையை சுத்தமாக துடைத்து, பெருமிதத்துடன் அம்மாவைப் பார்த்தது.
அதோடு, "இதே பாட்டில்ல குழாயிலிருந்து முழுதும் தண்ணி பிடிச்சு, கொட்டாம பிரிஜ்ஜில கொண்டு வைக்க இப்ப பழகிக்கோ...' என்று சொல்லி, குழந்தையை குழாயின் அருகில் அழைத்துப் போனார்.
அந்த தாயை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். "குழந்தைகளை வளர்க்கும் முறைகளை விளக்கும் ஒரு புத்தகத்தில் படித்ததை, நான் நடைமுறையில் பயன்படுத்துகிறேன். இந்த முறைகளை பின்பற்றுவதால், குழந்தை, தான் செய்த தவறை உணர்கிறது. தவறு செய்தால், துடைப்பது போன்ற தண்டனையை தான் அனுபவிக்க வேண்டும் என்று மென்மையாக குழந்தையை உணர வைக்க முடிகிறது. மீண்டும், அதே தவறை செய்யாமலிருக்க, பெற்றோராகிய நாம் தான் குழந்தையை பழக்க வேண்டும். அதற்கு தான் குழாயில் தண்ணீர் பிடித்து பழகச் சொன்னேன்...' என்று, அவர் விளக்கிய போது, ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் வளர்ப்பில் இம்மாதிரி மென்மையான முறைகளை பின்பற்றலாமே என்று தோன்றியது. புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது... படிக்கும் நல்ல விஷயங்களை, தக்க தருணத்தில் நடைமுறைப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற உண்மை புரிந்தது.
(நன்றி. தினமலர்)