திங்கள், 14 பிப்ரவரி, 2011

விவேகானந்தர் - வீர வரிகள்


1. ஒரு லட்சியத்திற்காக நீ உன் உயிரையும் அர்பணிக்கக் கூடியவனாக இருந்தால் மட்டுமே நீ ஒரு தலைவனாக விளங்க முடியும்.





2. எதை நீ நினைக்கிறாயோ அதுவாகவே மாறிவிடுவாய். நீ உன்னை பலவீனன் என நினைத்தால் பலவீனன் ஆகிவிடுவாய். உன்னை வலிமை உடையவன் என நினைத்தால் வலிமை உடையவன் ஆகிவிடுவாய்.



3. கொடுக்கும் சக்தி உங்களிடம் இருக்கும் வரையில் கொடுங்கள். அத்துடன் விட்டுவிடுங்கள். அது ஆயிரம் மடங்காகப் பெருகி உங்களிடமே மீண்டும் வரும்.



4. பயமே மரணம். பயமே பாவம். பயமே நரகம். பயமே துன்பம். பயமே துன்மார்க்கம். பயமே தவறான வாழ்க்கை.



5. ஒரு செயலைச் செய்ய நீங்கள் துணிந்த பிறகு, உங்களை உலகமே வாளெடுத்து எதிர்த்து நின்றாலும், மேற்கொண்ட அச்செயலை கைவிடாதீர்கள்.



6. நீ உன்னுடைய லட்சியத்தை ஓராயிரம் தடவை கைக்கொள். ஆயிரம் முறை தோல்வி அடைந்தாலும் நீ மீண்டும் ஒருமுறை கைக்கொள்ள முயற்சி செய்திடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக