தேவையான பொருட்கள்:
பாலக் [பசலைக்கீரை] : 1 கட்டு.
வெங்காயம் : 2
தக்காளி : 2
பச்சை மிளகாய் : 1 அல்லது 2
இஞ்சி : 1 துண்டு
மிளகாய்த் தூள் : அரை டீ ஸ்பூன்
மல்லித் தூள் : 1 டீ ஸ்பூன்
கரம் மசாலா : ½ டீ ஸ்பூன்
சீரகம் : ½ டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி : ¼ டீ ஸ்பூன்
உப்பு : தேவைக்கேற்ப
எண்ணை : சிறிதளவு [வதக்க]
பனீர் : 200 கிராம்
செய்முறை:
”பாலக்” கீரைக் கட்டினைப் பிரித்து, இலைகளைத் தனியாக ஆய்ந்து, தண்ணீரில்நன்கு சுத்தம் செய்யவும். குக்கரில் வெயிட் போடாமல் 10 நிமிடங்களுக்குஆவியில் வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்சியில் மையஅரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சீரகம் போட்டு தாளித்து அரைத்து எடுத்தவிழுதினைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். வதக்கிய பின் அதில்மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப்போட்டு நன்கு வதக்கவும்.
வெந்து இருக்கும் பாலக் கீரையை எடுத்து ஆற வைத்து மிக்சியில் நன்குஅரைக்கவும். அரைத்து எடுத்த பாலக் கீரை விழுதை வாணலியில் வதங்கிஉள்ள க்ரேவியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
பிறகு பனீரை நன்கு தண்ணீரில் சுத்தம் செய்து, சின்னச் சின்னத் துண்டுகளாய்வெட்டி எடுத்து கொதித்துக் கொண்டு இருக்கும் பாலக் கலந்த க்ரேவியில்போடவும். போட்டு ஒரு கொதி வந்த பிறகு இறக்கி வைத்து சூடாகப்பரிமாறவும். பனீர் போட்ட பிறகு நிறைய கொதிக்க விட்டால், பனீர்கெட்டிப்பட்டு சுவை மாறிவிடக்கூடும். இந்த பாலக் பனீர் ஃபுல்கா ரொட்டி,சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக