கோதுமை பணியாரம்
தேவையானவை: கோதுமை மாவு & ஒரு கப், சர்க்கரை & அரை கப், தேங்காய் & அரை மூடி, பூவன் பழம் & 1, ஏலக்காய்த்தூள் & சிறிதளவு, உப்பு & சிறிது.செய்முறை: தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். கோதுமை மாவு, சர்க்கரை, பழம், ஏலக்காய், உப்பு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தேங்காய்ப் பால் விட்டு பிசைந்து கொள்ளவும். பணியார சட்டி குழிகளில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒரு கரண்டி மாவு ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறம் வெந்ததும் எடுக்கவும்.
அதிக சத்துள்ள பணியாரம் இது.
________________________________________
திடீர் அரிசி அடை
புழுங்கல் அரிசியைக் கழுவி, ஈரமாக இடித்து காயவைத்து அரைத்த மாவு 2 கப்புடன், ஒரு கப் தேங்காய்ப் பால் சேர்த்து கலக்கவும். உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் அரைத்துப்போட்டு, அடை போல் தட்டி, தோசைக் கல்லில் போட்டு, தேங்காய் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக