திங்கள், 14 பிப்ரவரி, 2011

நரிப்பயறு புளிக்குழம்பு





நரிப்பயறு - 1/2 கப்
தக்காளி - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
சிறிய கத்தரிக்காய் - 2
தேங்காய்த்துருவல் - 1 கப்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
சாம்பார்ப் பொடி - 1 தேக்கரண்டி
புளி - சிறு எலுமிச்சையளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு -தேவைக்கு


தாளிக்க...
கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை...

பயறை தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வச்சுக்கங்க.

காய்கறிகளை நறுக்கி வச்சுக்கங்க.

புளியைக் கரைச்சு வடிகட்டி வச்சுக்கங்க.

தேங்காய்த் துருவலுடன் சீரகம் சேர்த்து அரைச்சு வச்சுக்கங்க.

செய்முறை :-

அடுப்பில் வாணலியை வச்சு, தேவையான அளவு எண்ணெய் விட்டுக்கணும்.

தாளிக்கக்கொடுத்த பொருட்களைத் தாளிச்சு,அதில் வெங்காயம் பச்சை மிளகாயப் போட்டு
வதக்கணும். வெங்காயம் வதங்கியதும் கத்தரிக்காய், அப்புறம் தக்காளியையும் போட்டு வதக்கணும். தக்காளி கரைஞ்சு வரும்போது புளிக் கரைசலை ஊத்தி, அத்துடன் மசாலாப் பொடிகளைச் சேர்க்கவும். கலவை,ரெண்டு நிமிஷம் கொதிக்கவிட்டு, அரைச்ச தேங்காய் சீரக விழுதைச் சேர்க்கவும். வேகவைத்த பயறைச் சேர்த்து, தேவையான அளவு உப்புப் போடவும்.

குழம்பை மூடி, எண்ணெய் பிரியும்வரை சிறுதீயில் கொதிக்கவிட்டு இறக்கவும்.

நரிப்பயறு புளிக்குழம்பு ரெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக