சனி, 2 மே, 2009

பல் பாதுகாப்பு

மேல் பற்களை மேலிருந்து கீழாகவும், கீழ் பற்களைக் கீழிருந்து மேலாகவும் துலக்க வேண்டும். பற்களின் மேல் பாகத்தைச் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும்!

வறட்சியான நாட்களில் எச்சில் அதிகமாகச் சுரக்காது. அந்நேரங்களில் இனிப்பு உணவுகளைச் சாப்பிட்டால் அவை கரையாமல் பற்களில் ஒட்டிக்கொள்ளும். அது போன்ற சமயங்களில் உடனடியாக நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்!

மூன்று மாதங்கள் அல்லது பிரஷ்ஷின் உறுதி குலைந்து பிரிஸ்டில்கள் விரிவடையும் சமயம்... இவற்றில் எது முதலில் வந்தாலும் அப்போதே பிரஷ்ஷை மாற்ற வேண்டும்!

சோடா அல்லது ஆசிட் கலந்திருக்கும் குளிர்பானங்களைக் குடிக்கும்போது ஸ்டிரா பயன்படுத்துங்கள். அவ்வகைக் குளிர்பானங்கள் பற்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளாமல் இருப்பது நலம்!

பற்களுக்குள் இடைவெளி இருப்பின் அதற்கென இருக்கும் பிரத்யேக பிரெஷ் கொண்டு பல் துலக்க வேண்டும்.

பற்களின் மேல் கறுப்பாகப் படியும் கறை நாளடைவில் மஞ்சளாக மாறுவதுதான் பற்கள் சுத்தமாக இல்லாததற்கான அறிகுறி!

பல் குத்தும் குச்சிகளைப் பயன்படுத்துவது தவறு. அவைதான் பற்குழியை ஏற்படுத்தும்!

குளிர்பானங்கள், காபி, டீ போன்றவற்றால் பற்கள் நிறம்இழந்தால் செயற்கை நிறமூட்டிகள் மூலம் பற்களை மீண்டும் வெண்மையாக்கிக் கொள்ளலாம்!

மிக இளம் வயதிலிருந்தே புகைப் பழக்கம், ஆல்கஹால் அருந்தும் பழக்கமிருந்தால் நிறமூட்டிகள் பற்கள் இழந்த வெண்மையை ஈட்டெடுக்காது!

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக இரண்டு முறை பல் துலக்கலாம். அதற்கு மேல் துலக்கினால் ஈறுகள் வலுவிழந்துவிடும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக