இடுப்பளவு குறைய வேண்டும் என்பது இன்றைய மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. நம் நாட்டில் பெரும்பாலும் ஆண்களோ, பெண்களோ தங்கள் இடுப்பளவைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. அப்படியே எப்போதாவது நினைத்தாலும், சரியான பயிற்சி என்ன என்பது நிறைய பேருக்குத் தெரிவதில்லை.
இடுப்பளவு, வயிறு அளவு ஆகியவற்றை ஏன் குறைக்க வேண்டும்?
இந்தக் கேள்வி சிலருக்குத் தோன்றலாம்.
ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால் இடுப்பு, வயிறுப் பகுதில் உள்ள கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால் மாரடைப்பு அதிகம் வருகிறது என்கிறார்கள். ஆகவே இந்த இடுப்பு, வயிறு அளவுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது மிக அவசியம்.
இடுப்பளவை எப்படிக் குறைக்கும் வழிகள்:
1. ஹிந்து ஸ்குவாட்ஸ் - (சாதாரண ஸ்குவாட்ஸ்தான்) - இந்தப் பயிற்சியானது ஆக்ஸிஜன் தேவையை அதிகப்படுத்தி கொழுப்பை சக்தியாக எரிப்பதனால் இடுப்பில் உள்ள கொழுப்பு குறைகிறது. இதற்கு எந்த விலையான உபகரணங்களும் தேவையில்லை.
நேராக நிற்கவும். பின் அப்படியே தோப்புக்கரணம் போட உட்காருவது போல் கீழே (சிட்அப்ஸ்) குதிகால்வரை அமர்ந்து மறுபடியும் எழுந்திருக்கவும். ஆரம்பத்தில் சிரம்மாக இருந்தாலும் கொஞ்சம் பழகினால் ஈஸியாக வரும். நாம் பள்ளியில்
செய்ததுதானே!
இதனை 100 தடவை வேகமாக 5 நிமிடத்துக்குள் செய்தால் நல்லது.
மறுபடி 100 தடவை 10 நிமிடத்தில் செய்ய வேண்டும்!
2. மேடான பகுதியில் ஏறுதல் - மேடான சாலையிலோ, அல்லது ட்ரெட்மில்லில் 10-15 டிகிரி உயர்த்தி வைத்தோ 15 நிமிடம் நடக்கவும். எளிமையாகத் தெரிகிறதா? செய்து பாருங்கள்.
3. இந்தப் பயிற்சியில் தொப்புள் பகுதி குழிவாக மூச்சை உள்வாங்கி தொப்புள் பகுதி முதுகெலும்பை தொடுவதுபோல் மூச்சை இழுத்துப் பிடிக்கவும். 15-லிருந்து 60 வினாடி வரை அவ்வாறு வைத்து இருக்கவும். 1.75 இன்சிலிருந்து 3 இன்ச் வரை ஒரு மாதம் தொடர்ந்து செய்தால் இடுப்பளவு குறையும்.
4. பக்கவாட்டில் - நேராக நிற்கவும். இடுப்பை இடதுபுறம் முடிந்தவரை வளைக்கவும். வலதுபுறம் வளைக்கவும். இதனை மாறிமாறி செய்யவும்.
5. நேராக நிற்கவும் - இடுப்பை இடது புறம் வளைக்கவும் (TWIST). முடிந்தவரை வளைக்கவும். பின்பு நேராக வந்து வலதுபுறம் இடுப்பை (திருகவும்)வளைக்கவும்.
மூன்று பயிற்சியையும் ஒருமாதம் செய்தால் இரண்டு அங்குலம் இடுப்பு குறைவது உறுதி.
தினமும் 8 குவளை தண்ணீர் அருந்தவும். பழங்கள், காய் அதிகம் சாப்பிடவும். இதனுடன் பொதுவான பயிற்சி, நடை, ஓட்டம் ஆகியவையும் சேரும்போது நிச்சயம் இடுப்பளவு குறையும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக