தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1 கப்
பால் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
1. கடலை மாவுடன் பொடித்த சர்க்கரை, நெய் கலந்து கட்டிகளின்றி நன்றாகப் பிசைந்து, மைக்ரோவேவ் பாத்திரத்தில் கலவையை எடுத்துக் கொள்ளவும்.
2. மைக்ரோவேவில் இரண்டரை நிமிடம் அதிக வெப்பநிலையில் வைக்கவும்.பாத்திரத்தை திறந்து வைக்கவும்.
3. பின் பாத்திரத்தை வெளியில் எடுத்து பாலை ஊற்றி நன்றாக கிளறிக் கொள்ளவும்.
4. மீண்டும் இரு நிமிடங்கள் மைக்ரோவேவில் வைத்து, பின் ஒரு தட்டில் கலவையை ஊற்றவும்.
5. கலவை மீது சில தேக்கரண்டி நெய் விட்டு, சற்று ஆறியபின் துண்டுகளாக்கவும்.
மிகவும் சுவையுடன், குறைந்த நெய்யில் எளிதாக செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக