புதன், 30 மார்ச், 2011

மனம் மகிழுங்கள் - 37முயற்சி திருவினையாக்கும்!

சுறுசுறுப்பிற்கு எப்பொழுதுமே எறும்பை உதாரணமாகச் சொல்வோம். எறும்பு படு சுறுசுறுப்புதான். எதில் சுறுசுறுப்பு? தனக்கெனச் செய்து கொள்ள வேண்டிய வேலைகளில்! அதேபோல் புழு, பூச்சி, மிருகங்கள் என்று உலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்துமே ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டவாறுதான் உள்ளன. சுறுசுறுப்போ, மெத்தனமோ ஏதோ ஒரு வேலை; அல்லது காரியம் - கூடு கட்டுதல், பசிக்கு இரை தேடுதல், தன் ஜோடியிடம் காதல், தேவைப்பட்டால் நீரில் 'சளக்'கென்று ஒரு குளியல். யாரும் சொல்லாமல், கட்டளையிடாமல், வற்புறுத்தாமல் தங்கள் வேலையைச் செய்து கொண்டே இருக்கின்றன. பிறகு நிம்மதியான உறக்கம்.

இதிலுள்ள அடிப்படைத் தத்துவம் நமக்கு முக்கியமானது. அது, ‘மகிழ்வாய் இருக்க வேண்டுமெனில் முயற்சியெடுத்துக் காரியமாற்றும் மனப்பக்குவம்.’

ஒரு காரியம் செய்ய வேண்டியிருக்கிறது. ‘அதற்கு மெனக்கெடணுமே’, ‘முயற்சி எடுக்கணுமே’ என்று தள்ளிப்போட்டால், செய்யத் தவறினால் என்னவாகும்? காரியம் ஆகாது. தவிர அது நம்மைப் பாதிக்கும்.

எளிமையான உதாரணம் ஒன்று: ஓரிரு நாட்களாய்க் காய்ச்சல். சுக்குக் கஷாயம், கை வைத்தியம் எதிலும் சரியாகவில்லை. என்ன செய்வது? எழுந்து சட்டையை மாட்டிக் கொண்டு, பை நிறையப் பணத்தை அடைத்துக் கொண்டு டாக்டரிடமும், அவருக்கே அவருக்கான பார்மஸிக்கும் செல்ல வேண்டும். அதெல்லாம் பிடிக்கவில்லை என்று தள்ளிப்போட்டாலோ, போக மறுத்தாலோ நிலைமை சீராகி விடுமோ? ஆகாது. பிரச்சினை நம்மை மேலும் பாதிக்கும்.

தேர்வு எழுத படிக்க வேண்டும். படகு ஓட்ட துடுப்புப் போட்டால்தான் நகரும்.

உடனே ‘மோட்டார் போட்?’ என்று வம்பு செய்யாதீர்கள். அதற்குப் பெட்ரோல் பங்க் சென்று டீசல் வாங்கி வைத்திருக்க வேண்டும். நீரை அள்ளி ஊற்றினாலெல்லாம் வேலைக்காவாது.

ஆக, எந்தவொரு காரியத்திற்கும் ஏதோ ஒருவகையிலான முயற்சி முக்கியம். அந்த முயற்சி சிறக்க நமது மனோபாவம் முக்கியம்.

ஒரு முயற்சி என்று இறங்கும்போது காரியம் நடைபெறுகிறது என்பது ஒரு விஷயம். அதனூடே மற்றும் சில நிகழ்கின்றன. முயற்சி நம்மைச் சோதிக்கும்; நம் திறனை நாம் பரீட்சித்துப் பார்க்க உதவும்; நமக்குப் பாடம் கற்பிக்கும்.

எப்படி என்கிறீர்களா? இல்லறம் என்றொரு முயற்சியில் இறங்குகிறீர்களில்லையா? இப்பொழுது யோசித்துப் பாருங்கள்.

எனவே ஒரு முயற்சியில் இறங்கும்போது அதை அனுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு காரியத்தைச் செய்து முடிக்கவேண்டும் என்பதற்காக மட்டும் ஒரு முயற்சியில் இறங்கினால் அதில் மகிழ்விருக்காது. தவிர அம்முயற்சி ஏதேனும் காரணத்தால் கைகூடவில்லையெனில் மனம் சோர்ந்து போய்விடும்.

ஒரு விற்பனையாளன் தனது தொழில் நிமித்தமாய்ப் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்க முடிகிறது; பேச முடிகிறது; பழக முடிகிறது. மக்களைச் சந்தித்துப் பேசிப் பழகுவதால் ஏற்படும் அனுபவத்தை உணர்ந்து அவன் மகிழ்வுடன் தன் பணியைப் புரியும்போது அவனது மனம் உற்சாகமடைகிறது. அதனால் ஒரு நாள் குறிப்பிட்ட அளவிலான விற்பனை இல்லாது போனாலும் அவனது மனம் அதீதச் சோர்வடையாது; ஏமாற்றம் அடையாது.

ஈடுபடுவது எந்தக் காரியமாக இருந்தாலும் அதை அனுபவித்து உணர்ந்து மகிழ்வுடன் செய்யும்போது அந்த வேலையின் முடிவு இரண்டாம் பட்சமாகி ஏற்படும் திருப்தியும் மகிழ்வும் இருக்கிறதே அது முக்கியமானதாகிவிடுகிறது. இதைப் பொதுவாய் ஆங்கிலத்தில் job satisfaction என்போம். மனத்திருப்தியற்று ஒரு வேலையில் ஈடுபட்டால் அதில் லட்சலட்சமாய்ச் சம்பாதித்தாலும் மகிழ்வு தொலைந்து காணாமல் போய்விடும்.

"பணம்; பணம்" என்று நிற்காமல் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோமே அது சொத்தைத் தரும். சுகத்தைத் தரும். மகிழ்வைத் தருமோ?

ஒரு செயலின் முடிவை மட்டுமே எண்ணி அளவுக்கதிகமாக அதில் கவனம் செலுத்தினால் நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து விடுவோம். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை மட்டுமே மனதில் ஓடி ஓடி, செய்து கொண்டிருக்கும் காரியத்தை, அந்த நிமிடத்தை, அந்த நொடியை உணர்ந்து மகிழ மறந்துவிடுவோம். ஏனெனில் மகிழ்வு என்பது ஏதோ ஓர் இடத்தில் ஏதோ ஒரு குறிப்பிட்ட தருணத்தில் என்று நமக்காகக் காத்திருப்பதில்லை.

எனவே முயற்சியின் இறுதியில் ஏற்படப் போகும் முடிவை நினைத்துப் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் ஈடுபடும் முயற்சியை உணர்ந்து மகிழக் கற்றுக் கொண்டால் செய்யும் காரியம் தானாகவே இன்பமானதாக ஆகிவிடும்.

வாரம் முழுதும் மனைவி உங்களுக்குச் சமைத்துப் போடுகிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை நீங்கள் அவருக்கு இன்ப அதிர்ச்சி தர முடிவு செய்கிறீர்கள். அவர் உறக்கத்திலிருந்து எழுவதற்கு முன் நீங்கள் எழுந்து, தலைக்குக் குளித்து, அடுக்களைக்குச் சென்று காலையுணவு சமைக்கிறீர்கள். சமையல் அனுபவம் இல்லாத நீங்கள் அன்று அபூர்வமாய் ஈடுபடும் முயற்சியில் அந்த அனுபவத்தை உணர்ந்து, மகிழ்ந்து லயிப்புடன் செய்ய முனைந்து பாருங்கள். அது மிகப்பெரும் மன மகிழ்வை உங்கள் மனதில் ஏற்படுத்தும்.

அதன்பின் உங்கள் மனைவி எழுந்துவந்து அந்த உணவைச் சாப்பிட்டுவிட்டுப் பாராட்டினால் அது போனஸ். இல்லையென்றால் பெரிய பிரச்சினையில்லை. நீஙகள் அதிகம் மனவருத்தம் அடையப் போவதில்லை. ஏனெனில் உங்கள் மனதில் அன்றைய சமையல் பணியை, அந்தப் புது முயற்சியை ரசிப்பதற்கு மனதைத் தயார்படுத்திவிட்டீர்கள். அதுவே உங்கள் மனதில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

மனத் திருப்திக்காக ஒரு காரியம் புரியும்போது, அதில் ஈடுபடும்போது, அம்முயற்சி தானே நல்ல முடிவை தேடித்தரும். முயற்சி திருவினையாக்கும் என்பது இயற்கையின் விதி. ஆயினும் ஏதேனும் காரணத்தால் முடிவுகள் தாமதமானாலோ, அல்லது நீங்கள் நினைத்ததைப்போல் காரியம் அமையவில்லை என்றாலோ, அது உங்கள மன அமைதியைக் குலைக்காது. காரியத்தில் உள்ளார்ந்து ஈடுபட்ட திருப்தி மனதில் பரவியிருக்க, முடிவு வரும்போது வரட்டும் என்று அடுத்த முயற்சியில் இறங்கிவிடுவீர்கள்.

எல்லாம் சரி! ஒரு காரியத்தை விரும்பி திருப்திகரமாகப் புரிவது எப்படி? அதை நீங்கள் மனதில் ஒரு தீர்மானமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழியில்லை.

ஒரு சிந்தனையாளர் கூறினார், "மன மகிழ்வின் இரகசியம் என்ன விரும்புகிறோமோ அதைச் செய்வதில் இல்லை; எதைச் செய்ய நேரிடுகிறதோ அதை விரும்புவதில் உள்ளது."

னம் மகிழ, தொடருவோம்...

Thanks to : www.inneram.com

செவ்வாய், 29 மார்ச், 2011

தொந்தியை குறைக்க யோகா மற்றும் உடற்பயிற்சி - II

போன இடுகைல எந்த யோகாசனம் செஞ்சா தொந்தி குறையும் என்று சொன்னேன். இப்ப எந்த மாதிரியான உடற்பயிற்சி செய்தா குறையுமுன்னு பார்க்கலாம்.

சுலபமான வழி தான். தரையில் படுத்துக்குங்க. மெதுவா உங்க காலை மேல தூக்குங்க. முதுகு தரையில் இருக்க வேண்டும். காலை மடக்க கூடாது. கால் நேராக தான் இருக்க வேண்டும். நாம்மளால மடங்காம கால தூக்க முடியுமா? சரி சின்ன பயிற்சி செய்வோமே.

இரண்டு காலையும் மடக்கி தரையில் படுங்க. பின் வலது காலை மட்டும் நேராக நீட்டவும் 10 வினாடி இருக்கவும் பின் வலது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். பின் இடது காலை நேராக நீட்டவும் 10 வினாடி இருக்கவும் பின் இடது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும், 5 முறை இவ்வாறு செய்யவும். (கீழ் இருக்கற படத்தை பாருங்க)

சரி கால் முட்டிய மடக்காம கால நேர முடியுது அடுத்து என்ன பண்றது? தரையில் படுங்க. பின் இரண்டு காலையும் தரையில் இருந்து முட்டி மடங்காம நேரா தூக்குங்க. (கீழ் இருக்கற படத்தை பாருங்க). எவ்வளவு உயரத்துக்கு? தரையில் கால் படாம இருக்கணும் அதான் அடிப்படை. 30 வினாடி அந்த நிலையிலேயே இருங்க. நேரம் ஆக ஆக வயிறு இறுகும் உங்களால் காலை தூக்குனாப்பல வைச்சிருக்க முடியாது. 10, 15, ...., 60 வினாடின்னு நேரத்தை அதிகரிச்சுக்கலாம். நேரத்தை அதிகரிக்க முயற்சி பண்ணுங்க. 5 முறை இப்படி பண்ணுங்க.




கையை தூக்கலாமா? தூக்கலாம். கால முட்டி மடங்காம நேரா தூக்கனும் என்பது தான் அடிப்படை. கையை கீழ் இருக்கும் படத்தின் படி தூக்கலாம் கையை மேல தூக்கும் போது தலை தூக்கியிருக்க வேண்டும். கை கால் தூக்கப்பட்ட நிலையில் 30 வினாடி இருங்கள். 10, 15, ...., 60 வினாடின்னு நேரத்தை அதிகரிச்சுக்கலாம். நேரத்தை அதிகரிக்க முயற்சி பண்ணுங்க. 5 முறை இப்படி பண்ணுங்க.


கையை அப்படியே வைச்சிருக்கறதா? அது ஒரு முறை மற்றொரு முறையில் கையை ஆட்டலாம். கீழ் இருக்கும் படத்தை பாருங்க. அது மாதிரியாட நிலையில் இருந்து கொண்டு கையை கீழையும் பின் சிறிது மேலையும் தூக்கவேண்டும். ஆனா கால்?? எந்த நிலைக்கு கை போனாலும் கால்நிலை மட்டும் மாற கூடாது. முடியலையே அப்படிங்கீங்களா? உங்களுக்கு சலுகை உண்டு. தமிழ் நாட்டுல இருந்து கிட்டு இலவசம் சலுகை இல்லாமலா? அதாவது அடிப்படை என்பது கால் முட்டி மடங்காம நேரா தூக்கனும் என்பது இல்லையா? கைய ஆட்டறது எல்லாம் கால் நேரா இருக்கறப்ப ஏதாவது பண்ணனுமேனு தான்





இன்னொரு வழி இருக்கு ஆனா இது தொப்பையை குறைக்க மேலுள்ள வழியை போல் விரைவாக வேலை செய்யாது. ஆனா காவல் காரர் மாதிரியான கெட்டி தொப்பைகளுக்கு உரியவர்கள் இதை செய்யலாம். அதை அடுத்த இடுகையில் பார்க்கலாம்.

தொந்தியை குறைக்க யோகா மற்றும் உடற்பயிற்சி - 1

நான் தொந்திய குறைச்சு அனுப இடுகை போடலாம்ன்னு இருந்தேன். என் தொந்தி குறையற வழியை காணாம். நேரப்பற்றாக்குறை. அதனால குறைக்கும் வழிமுறைகளை சொல்லறேன்.

முதல்ல யோகா.
பத்மாசனம் தெரியுமில்ல?? அது இப்படி தான் இருக்கும்.தியானம் பண்ணுபவர்கள் அமரக்கூடிய ஆசனம்.






செய்யும் வழி முறை


முதல்ல வலது காலை தூக்கி இடது தொடையின் மீது போடனும் பின் இடது காலை தூக்கி வலது தொடையின் மீது போடனும்.

கடினமா இருக்கா. பத்மாசனத்துக்கு நம்மை பழக்கப்படுத்த முதல்ல நாம ஆர்தரா பத்மாசனம்பண்ணுவோம்.


ஆர்தரா பத்மாசனம்

வலது காலை தூக்கி இடது தொடை மீது போடுவோம். இடது கால் அப்படியே இருக்கட்டும். 5 நிமிடம் இந்த நிலையிலேயே இருங்க. பின் இயல் நிலைக்கு வந்துவிட்டு இடது காலை தூக்கி வலது தொடை மீது போடுங்க. அந்த நிலையில் 5 நிமிடம் இருங்க. 5 நிமிடம் என்றது நமக்காக தான்.15 வினாடி, 30 வினாடி, 1 நிமிடம் என்று அதிகரித்து கொள்ளவும். சில நாட்கள் இந்த நிலைகளை முயன்று விட்டு பத்மாசனத்தை முயன்று பாருங்க. முடியலையா? ஆர்தரா ஆசனத்தை சில நாள் தொடருங்க பின் பத்மாசனத்தை முயன்று பாருங்க. முயற்சி செய்துக்கிட்டே இருந்தா பத்மாசனம் கைக்குள்ள (கால்குள்ள) வந்துரும்.

பத்மாசனம் 5 நிமிடம் செய்யும் திறன் வந்தவுடன் உத்திட பத்மாசனம் செய்யலாம். இது தான் தொந்திய குறைக்கும் ஆசனம்.

பத்மாசனம் போட்டு அமர்ந்த பிறகு கையை கீழ் ஊன்றி மேல் எழ வேண்டும். அது தான் உத்திட பத்மாசனம். கை மட்டும் தான் நிலத்தை தொட்டுக்கிட்டு இருக்கவேண்டும். இந்த நிலையில் 1 நிமிடம் இருக்கவும். 2, 5, 10, 15, ...வினாடிகள்ன்னு அதிகரிச்சுக்கலாம்.

இந்த ஆசனம் செய்து பாருங்க, உங்க வயிறு தானா உள்ள போகும். ஆசனம் பண்ணும் போதே வயிறு உள்வாங்கும். மூச்ச தம் கட்டி தான் இந்த ஆசனம் பண்ணமுடியும்.

குறிப்பு - சம்மனம் போட்டு உட்காரமுடியாதவர்கள் முதலில் சம்மனம் போட்டு உட்கார பழகவும். பின் மற்ற யோகாசனங்களை முயற்சிக்கலாம்.

திங்கள், 28 மார்ச், 2011

மனம் மகிழுங்கள் -36 - ஈடுபாடு

ஆங்கிலத்தில் commitment என்றொரு சொல் உண்டு. ஒரு செயலைப் பொறுப்பாய் மேற்கொள்ளுதல் என்று தமிழில் சொல்லலாம். வாழ்க்கையில் இது முக்கியம். எந்த செயல் புரிய முனைந்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் பொறுப்பாய் நிறைவேற்றி முடிக்கும் மனோபாவம் வேண்டும். மனமிருந்தால் செய்வேன்; இல்லையெனில் 'என் வழி தனி வழி' என்றெல்லாம் ஒரு செயலில் இறங்கினால் அது இரண்டுங்கெட்டான் வழி.

ஈடுபாட்டுடன் செய்யப்படும் செயல்களே மன நிறைவளிக்கும்; மகிழ்வைத் தரும்.

திருமணம் புரிந்து கொள்கிறோம். எனக்கு மூடிருந்தால் கணவனுக்குரிய/மனைவிக்குரிய பொறுப்புகளை கவனிப்பேன்; மற்ற நேரத்தில் 'Please Do Not Disturb' என்று போர்டு மாட்டிக் கொள்ள முடியுமா? பிறகு குடும்பம் என்னாவது?

ஒருவர் எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் - commit ஆகாமல் - தயங்கித் தயங்கி நின்றால் எந்தச் செயலையும் அவரால் சாதிக்க முடியாது. ‘செய்யலாமா வேண்டாமா’ என்ற மனோபாவத்துடனேயே இருந்து கொண்டிருந்தால் உலகம் அவரை ‘ஸீரியஸாக’ எடுத்துக் கொள்ளாது.

“இந்தக் காரியத்தில் நான் இறங்கப் போகிறேன்; என்ன ஆனாலும் சரி செய்து முடிக்கப் போகிறேன்” என்று களத்தில் இறங்கிப் பாருங்கள். அதன்பிறகு நடைபெறுவது மாயம். மனதில் ஏற்படும் திடமான அந்த உறுதிமொழி நீங்கள் மேற்கொள்ளும் காரியத்தில் உங்களை முழு மனதுடன் ஈடுபட வைக்கும். பின்னர் எதிர்படும் தடங்கல்கள், பிரச்சனைகள் போன்றவற்றையெல்லாம் மனம் எதிர்கொள்ளும் விதமே தனி.

ஏனெனில் -

“எப்படியும் இந்த ஒலிம்பிக்ஸில் நான் தங்கப்பதக்கம் வாங்கியே தீருவேன்” என்று ஒருவர் முடிவெடுத்துவிட்டால், அதற்கடுத்து அவரது செயல்பாடுகளெல்லாம் அதற்கான முயற்சிகள், பயிற்சிகள் என்று அவ்ர் சுவாசிப்பது அந்தத் தீர்மானமாகவே ஆகிவிடுகிறது. அதையே, “இந்த முறை தங்கப்பதக்கம் வாங்க முயல்வேன்” என்று சொல்லிப் பாருங்கள். மனம் தோல்விக்குப் பாதித் தயார்!

இரண்டு வாக்கியங்களையும் உச்சரித்துப் பார்த்தால் மன அதிர்விலேயே வித்தியாசம் தெரியும்.

இவ்விதி, அலுவலாகட்டும் தொழிலாகட்டும் தாம்பத்யமாகட்டும் அனைத்திற்கும் பொது.

ஆக, எந்த ஒரு காரியத்திற்கும் அதைப் பொறுப்பாய் மேற்கொண்டு முடிக்கும் ஈடுபாடு அவசியம். அது இன்றிக் குடும்பம் இல்லை; தொழில் இல்லை; அரசாங்கம் இல்லை.

சரி! இது அமைந்துவிட்டால் எல்லாமே இன்ப மயமா?

பொறுப்பான ஈடுபாடு மட்டுமே வெற்றியை அளிக்கும்; காரியம் சித்தியடைய உதவும் என்று நம்பினால் தப்பு.

ஏன் அப்படி?

சோதனை என்பதைப் பற்றி ஒருமுறை பார்த்தோம். சோதனைகள் வாழ்க்கையின் அங்கம். இப்புவியானது நீரால், ஆக்ஸிஜனால் மட்டும் நிரம்பியிருக்கவில்லை. பிரச்சினைகளும் சோதனைகளும் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் வியாபித்து நிறைந்திருப்பதே இப்புவி. அவற்றையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும்; கடக்க வேண்டும்.

மூச்சிரைக்க ஓடி எப்படியாவது வெற்றிக் கோட்டை நோக்கி மூக்கை நீட்டிவிட commitment எனப்படும் பொறுப்பான ஈடுபாடு இன்றியமையாதது. அப்படி இல்லையெனில் ‘ஆளை விடப்பா’ என்று தப்பித்து ஓடிவிடவே மனம் விரும்பும்.

எப்படியும் உடல் எடையைக் குறைத்தே தீருவது என்று முடிவெடுத்து ஈடுபாட்டுடன் உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் இருந்து கொண்டிருப்பீர்கள். “இன்னுமா டயட் முடியலை. இந்த ஒருமுறை மட்டும் சாப்பிடு; ஒன்றும் ஆகிவிடாது” என்று நண்பரொருவர் உங்களது நாசியருகே அசல் நெய்யில் செய்த பால்கோவாவைக் கொண்டுவந்து நீட்டுவார். மகா சோதனையான அந்தச் சில நிமிடங்களை நாக்கை, நாசியை, விரலை கண்ணை மூடிக்கொண்டு கடந்து விட்டீர்கள் என்றால் போதும். ஆனால் எப்போதும் வாழ்க்கையில் சோதனைகளும் பிரச்சினைகளும் இந்தளவு எளிமையாய் அமைவதில்லை.

கொசுறாய் ஒரு நல்லது நடக்கும். யதார்த்தத்தில் மக்களிடம் ஒரு குணம் உண்டு. மெச்சத் தகுந்ததை மெச்சுவது.

கடும் மனப் போரட்டத்திற்குப் பின் பால்கோவாவை நிராகரித்தீர்களில்லையா, அதைக் கண்டு அந்த நண்பர் உங்கள் மனவுறுதியை மெச்சத் தயங்கப் போவதில்லை. அதற்கு நேர்மாறாய் அவர் நடந்து கொண்டால் அவரது நட்பை நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும் என்பது வேறு விஷயம்.

மனைவி தன் கணவனை நேரெதிரில் என்ன வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். “சமைச்சு எல்லாம் தயாராத்தானே இருக்கு, எடுத்து வெச்சு சாப்பிடக்கூடவா தெரியாது.” ஆனால் நீங்கள் நினைத்தே பார்த்திருக்க மாட்டீர்கள்; உங்களது முதுகுக்குப் பின் “என்ன லேட்டானாலும் சரி; நான் பரிமாறாமல் அவர் சாப்பிட்டதே இலலை. அவருக்கு எல்லாமே நான் செஞ்சாத்தான் நடக்கும்.”

கூடுதல் குறைவு இருக்கலாம். மக்கள் மெச்சத் தகுந்ததை மெச்சவே செய்வார்கள்.

அடுத்து -

பொறுப்பாய் ஈடுபாட்டுடன் செயல்படுவேன் என்பதற்கு அர்த்தம் அனைத்துப் பணிகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதோ, யார் எது கேட்டாலும் முடியாது என்று வாக்களிப்பதோ அன்று. அதெல்லாம் சில நாள், சில மாதம், அதிகம் போனால் ஓரிரு ஆண்டுகள் தாங்கும். அதன்பிறகு மனமும் உடலும் சோர்ந்து உங்களது காரியங்களை செய்து கொள்வதற்கே மனம் சுரத்தற்றுப் போகும்.

என்னென்ன காரியங்களில் பங்கெடுக்க முடியும், என்ன செயல்களெல்லாம் உங்களுக்குச் சாத்தியம் என்று தேர்ந்தேடுத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைத் திட்டமிட்டு அவற்றிற்கான பொறுப்பை மேற்கொள்வதே சிறந்தது. இல்லையெனில் மிஞ்சுவது தலைவலி மட்டுமே.

எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுமுன் தீர யோசியுங்கள். அதைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் பொறுப்பேற்றுக் கொண்டு முழு மனதுடன் ஈடுபட்டு நிறைவேற்றுங்கள்.

தினமும் பள்ளிக்கூடம் சென்றால்தான் கல்லூரி, பட்டம் என்று வெளியேற முடியும். மழைக்கு மட்டுமே ஒதுங்கினால்
மட்டுமே ஜலதோஷத்திலிருந்து தப்பலாம்.

னம் மகிழ, தொடருவோம்...

Thanks to : www.inneram.com

புதன், 23 மார்ச், 2011

POINTS ON HOW TO IMPROVE YOUR LIFE

Personality
1. Don’t compare your life to others’. You have no idea what their journey is all about.
2. Don’t have negative thoughts of things you cannot control. Instead invest your energy in the positive present moment.
3. Don’t over do; keep your limits.
4. Don’t take yourself so seriously; no one else does.
5. Don’t waste your precious energy on gossip.
6. Dream more while you are awake.
7. Envy is a waste of time. You already have all you need.
8. Forget issues of the past. Don’t remind your partner of their past mistakes. That will ruin your present happiness.
9. Life is too short to waste time hating anyone. Don’t hate others.
10. Make peace with your past so it won’t spoil the present.
11. No one is in charge of your happiness except you.
12. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
13. Smile and laugh more.
14. You don’t have to win every argument. Agree to disagree.

Community
15. Call your family often.
16. Each day give something good to others.
17. Forgive everyone for everything.
18. Spend time with people over the age of 70 & under the age of 6.
19. Try to make at least three people smile each day.
20. What other people think of you is none of your business.
21. Your job will not take care of you when you are sick. Your family and friends will. Stay in touch.

Life
22. Put GOD first in anything and everything that you think, say and do.
23. GOD heals everything.
24. Do the right things.
25. However good or bad a situation is, it will change.
26. No matter how you feel, get up, dress up and show up.
27. The best is yet to come.
28. Get rid of anything that isn’t useful, beautiful or joyful.
29. When you awake alive in the morning, thank GOD for it.
30. If you know GOD you will always be happy. So, be happy.

வீட்டிலேயே செய்யலாம் பிசினஸ்!



தகிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க குளிர்பான கடைகளில் குவிகிறது கூட்டம். மக்களின் இந்தத் தேவையையே தனது பிசினஸூக்கான அஸ்திவாரமாக்கி ஜெயித்தவர்தான் சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த சௌமியா.

கிட்டத்தட்ட சென்னை முழுக்க பல கடைகளுக்கும் சப்ளை ஆகின்றன, இவர் கைகளால் தயாராகும் பிரிசர்வேட்டிவ் ஜூஸ் வகைகள்!

''குடும்பம், குழந்தைகள்னு இயல்பா நகர்ந்துட்டு இருந்துச்சு வாழ்க்கை. குழந்தைங்க கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் எனக்குள்ள பிசினஸ் ஆசை முளை விட்டுச்சு. அந்த ஆசைக்கு நான் காலேஜ் படிச்சப்ப கத்துக்கிட்ட இந்தத் தொழில் 'ஜூஸ்' ஊத்த, ஒரு நல்ல தொடக்கம் கிடைச்சுது. நம்ம சென்னையில வருஷத்துக்கு முக்கால்வாசி நாள் வெயில்தானே.. அதான், அந்த கதிரவன் கடாட்சத்துல மூணு வருஷமா நல்லபடியா போய்க்கிட்டிருக்கு என்னோட ஜூஸ் பிசினஸ்'' என்றவரிடம், திராட்சைப் பழ ஜூஸ் செய்யும் விதத்தை விசாரித்தோம்..

தேவையான பொருட்கள்: திராட்சைப் பழம் - அரை கிலோ, சர்க்கரை - ஒரு கிலோ, சிட்ரிக் ஆசிட் - ஒரு டீஸ்பூன், டோனோவின் எஸன்ஸ் - ஒரு டீஸ்பூன், சோடியம் பென்ஸோயேட் - அரை டீஸ்பூன்.

இவற்றையெல்லாம் எடுத்து வைத்து, விளக்கத்தை சொல்லியபடி, மடமடவென ஜூஸை செய்யத் துவங்கினார்..

''அரை கிலோ திராட்சைப்பழத்தை உதிர்த்து, கழுவிக்கணும். அதை கரண்டியால ஓரளவுக்கு மசிச்சுட்டு, அடுப்புல வச்சு பத்து நிமிஷம் சூடாக்கணும். அடுப்புலருந்து இறக்கி, ஆறுனதும் அதுலயிருந்து சாறு எடுத்துக்கணும்.

சாறு எப்படி எடுக்குறதுனு பார்க்கலாம்.. ஆறின பழத்தை மிக்ஸியில நல்லா அடிச்சுக்கணும். இதை கொஞ்சம் பெரிய துளை இருக்குற வடிகட்டியில வடிகட்டணும். அப்போதான், வெறும் சாறு மட்டும் இறங்காம, கொஞ்சம் சதையும் கலந்து அடர்த்தியா இறங்கும். ஜூஸ் பார்க்குறதுக்கு ஃப்ரெஷ் ஜூஸ் மாதிரி தெரியணும் இல்லையா? அதுக்குத்தான் இந்த ஏற்பாடு!'' என்றவர், ஜூஸர் இருப்பவர்கள் அதைப் பயன்படுத்தினால், ஜூஸ் இன்னும் நன்றாக வரும் என்றொரு டிப்ஸூம் கொடுத்தபடியே தொடர்ந்தார்..

''ஜூஸ் மேக்கர்ல, மேற்புறம் பிளேடும் அடிப்புறம் வடிகட்டியும் இருக்--கும். சாறு இறங்க கீழ ஒரு பாத்திரத்தை வச்சு, அது மேல ஜூஸரை வச்சு, பழங்களைப் போடணும். மேலே உள்ள கைப்பிடியை சுத்திட்டே வந்தா, கீழ இருக்கற பாத்திரத்தில ஜூஸ் சேரும்.

அடுத்ததா அரை லிட்டர் தண்ணியை கொதிக்க வெச்சுக்கணும். அதுல ஒரு கிலோ சர்க்கரையை கொட்டி, ஒரு டீஸ்பூன் சிட்ரிக் ஆசிட்-ஐ சேர்க்கணும். சர்க்கரை கரைஞ்சு நல்லா கொதிச்சதுமே, அதை இறக்கிடணும். இந்த சர்க்கரை கரைசலை நல்லா ஆறவிட்டு, அதுல வடிகட்டி வச்சிருக்குற பழச்சாறை சேர்க்கணும்.

இப்போ, இதுல டோனோவின் எஸன்ஸ் ஒரு டீஸ்பூனும், பிரிசர்வேட்டிவ்வான சோடியம் பென்ஸோயேட் அரை டீஸ்பூனும் கலக்கணும். இதை ஒரு சுத்தமான பாட்டில்ல ஊத்திடணும். அவ்வளவுதான். ஜூஸ் ரெடி!'' என்றவர், இந்த ஜூஸை பயன்படுத்தும் விதத்தையும் விளக்கினார்..

''பிரிசர்வேட்டிவ் போட்டிருக்கறதால, அது ஜூஸோட செட் ஆக ரெண்டு நாள் ஆகும். அதுக்கு அப்புறமாத்தான் எடுத்து பயன்படுத்தணும். இந்த ஜூஸ் ஒரு வருஷம் வரை அப்படியே இருக்கும். ஃப்ரிட்ஜ்ல வெச்சா ஒன்றரை வருஷம் வரை இருக்கும். ஒரு பங்கு ஜூஸூக்கு மூணு பங்கு தண்ணி கலந்து குடிக்கலாம்.

இந்த முறையில அரை லிட்டர் ஜூஸ் செய்ய அதிகபட்சமே 25 ரூபாய்தான் செலவாகும். அதை குறைந்தபட்சம் 50 ரூபாய்க்கு விக்கலாம்.. டபுள் மடங்கு லாபம் கேரன்ட்டி!'' என்றவர் இன்னும் சில டிப்ஸ்களை கொடுத்தார்..

''வாங்குறது, விக்கிறது இந்த ரெண்டுலயும் கவனமா இருந்தா இன்னும் அதிக லாபம் பார்க்கலாம். அதாவது எந்த பழங்கள் எந்த சீஸன்ல விலை கம்மியா கிடைக்கும்னு பார்த்து வாங்கி ஜூஸ் செஞ்சு வைக்கணும். இதுல செலவு 60%-க்கும் மேலயே மிச்சமாகும். அந்த சீஸன் போனதுக்கு அப்புறமா அதை விக்கணும். இதுல சூப்பர் லாபம் கிடைக்கும். மே, ஜூன் மாசங்கள்ல மாம்பழ ஜூஸையும், ஜூன், ஜூலையில எலுமிச்சை ஜூஸை-யும், செப்டம்பர்ல சாத்துக்குடி, ஆப்பிள், திராட்சை ஜூஸ்-களையும் செய்யலாம்..'' என்றவர், மார்க்கெட்டிங் விவரங்களையும் தந்தார்..

''தெரிஞ்ச வீடுகள்ல தொடங்கி, ஜூஸ் கடைகள், பலசரக்கு கடைகள்னு எல்லா இடத்துலயும் கொடுக்கலாம். சேல்ஸ் கேர்ள்ஸ் சிலரைப் பிடிச்சு, அவுங்ககிட்ட கொடுத்துவிடலாம். அப்பறம் என்ன.. அமர்க்கள பிக் அப் தான்!'' - ஸ்வீட்டாக முடித்தார் சௌமியா.

இன்னும் விபரங்களுக்கு இதோ இருக்கே சௌமியாவோட தொடர்பு எண்.. 9840609790.

செவ்வாய், 22 மார்ச், 2011

மாலை நேரம் - பாடல் வரிகள்...

மாலை நேரம்

மழை தூறும் காலம்

என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்

நீயும் நானும் ஒரு போர்வைக்குள்ளே


சிறு மேகம் போலே மிதக்கிறேன் ஓடும் காலங்கள்

உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணங்கள்

தொடர்கிறதே


இது தான் வாழ்க்கையா


ஒரு துணை தான் தேவையா


மனம் ஏனோ என்னையே கேட்கிறதே




ஓஹோ காதல் இங்கே ஓய்ந்தது


கவிதை ஒன்று முடிந்தது


தேடும் போதே தொலைந்ததே - அன்பே


இது சோகம் ஆனால் ஒரு சுகம்


நெஞ்சின் உள்ளே பரவிடும்


நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே


இதம் தருமே..


உன் கரம் கோற்கையில்


நினைவு ஓர் ஆயிரம்


பின் இரு கரம் பிரிகையில்


நினைவு நூறாயிரம்


காதலில் விழுந்த இதயம்


மீட்க முடியாதது


கனவில் தொலைந்த நிஜங்கள்


மீண்டும் கிடைக்காதது


ஒரு காலையில் நீ இல்லை


தேடவும் மனம் வரவில்லை


பிரிந்ததும் புரிந்தது


நான் என்ன இழந்தேனென..


இந்தப் பாடலை தரவிறக்கம் செய்ய




வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...!


"வேலை வாய்ப்புள்ள கல்வியை கற்க வேண்டும். வேலைக்குச் செல்ல வேண்டும். போட்டி போட்டு சம்பாதிக்க வேண்டும்..." என்ற எண்ணம் பெரும்பாலான இளம்பெண்களிடம் இருந்து கொண்டிருக்கிறது. அப்படியானால் பெண்கள் படிப்பதும் வேலைக்குச் செல்வதும் பணத்துக்காக மட்டும் அல்ல.

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு வாழ்க்கைத் துணைவியாக வரும் பெண் படித்து வேலைபார்ப்பவராக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அதற்கு, பெண் மூலமும் வருவாய் வர வேண்டும் என்ற ஒரே காரணம் மட்டுமல்ல. வேலைக்குச் செல்லும் பெண்கள் வாழ்க்கையை எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் நிறைந்தவர்களாகவும், உலக அனுபவம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். வேலை பார்க்கும் பெண்களுக்கு வெளிஉலக அனுபவங்கள் நிறைய கிடைக்கின்றன. அந்த அனுபவங்களும் குடும்பத்திற்கு அவசியம் என்பதால், வேலைக்குச் செல்லும் பெண்களை திருமணம் செய்துகொள்ள ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் இந்தியாவில் வேலை பார்த்து சம்பாதிக்கும் பெண்கள் 39 சதவீதம் இருப்பதாக "நேஷனல் பேம்லி ஹெல்த் சர்வே" குறிப்பிடுகிறது. இது மிகக் குறைந்த அளவாகவே இருக்கிறது.

வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைப் பற்றி நன்றாக திட்டமிடுகிறார்கள். காலையில் விழிக்கும் நேரத்திலிருந்து அவர்கள் ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டு அந்தந்த நேரத்தில் செய்து முடிக்கிறார்கள். இதனால் திட்ட மிடுதல், சுறுசுறுப்பாக செயல்படுதல், தனது வேலைகளை முடிக்க நிறைய சிந்தித்தல் ஆகிய மூன்று சிறப்புகள் அவர்களிடம் இணைகின்றன. இவர்களது சிந்தனை செயல் வேகத்திற்கு தக்கபடி உழைக்க உடல் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், தங்களுக்கு ஆரோக்கிய குறைபாடு இருப்பதை இவர்கள் விரைவாகவே உணர்ந்துகொண்டு அதற்கான சிகிச்சைகளை பெறுகிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொள்வதன் பின்னணியும் இதுதான்.

இவர்கள் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்திலிருந்து தான் வேலை பார்க்கும் இடத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இதனால் பயணம், அதில் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழி கண்டுபிடிக்கும் ஆற்றல், பயணத்திற்கான முன்னேற்பாடுகள், நெருக்கடியான நேரத்திலும் தகவல் தொடர்பு கொள்ளும் ஆற்றல் போன்றவை இவர்களிடம் வளர்கிறது.

வேலைக்குப் போகும் பெண்களின் தோற்றப் பொலிவு அருமையாகவே இருக்கிறது. வீட்டிலேயே இருக்கும் பெண்களுக்கு முகம் பார்க்க இரண்டு கண்ணாடிகள் என்றால், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருபது கண்ணாடிகள் இருக்கின்றன. அழகு விஷயமானாலும், உடை விஷயமானாலும், அணிந்துகொள்ளும் நகை விஷயமாக இருந்தாலும் அதில் அவர்கள் புதுமையானவர்களாகவும், "அப் டூ டேட்" ஆகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி அவர்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் விஷயத்தில் முன்னோடிகளாக இருப்பதால், அது தொடர்பாக எழும் தன்னம்பிக்கையிலும் அவர்கள் முன்னிலை வகிக்கவே செய்கிறார்கள்.

வேலை பார்க்கும் இடத்தில் பலதரப்பட்ட சக பணியாளர்களோடு பழகுதல், குழுவாக உழைத்தல், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்லுதல், பல்வேறு நெருக்கடிகளில் வரும் பொதுமக்களை சந்தித்தல், உயர் அதிகாரி தன் சமபொறுப்பில் பணியாற்றுகிறவர்கள் தனக்கு கீழ் பணியாற்றுகிறவர்கள் ஆகிய ஒவ்வொருவரிடமும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற பக்குவம் போன்றவை வேலை பார்க்கும் பெண்களுக்கு கிடைக்கிறது. இதனால் பலதரப்பட்ட மனிதர்களை புரிந்துகொண்டு அனுசரித்து வாழும் பக்குவத்தை அவர்கள் பெறுகிறார்கள். ஒரே கல்வியை கற்றுக்கொள்ளும் இரண்டு பெண்களில் ஒருவர் வேலைக்குச் செல்பவராகவும், இன்னொருவர் வீட்டிலே இருப்பவராகவும் இருந்தால் வீட்டில் இருக்கும் பெண்ணிடம் இருக்கும் அந்த உயர்ந்த கல்வி மெல்ல மெல்ல மங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தன் கல்வித்திறனுக்கு ஏற்ற வேலையைத் தேடிக்கொள்ளும் பெண் படித்த கல்வியை மறக்காமலும், அது தொடர்பான அனுபவக் கல்வியை கூடுதலாக பெறுபவராகவும் இருக்கிறார்.

முன்பெல்லாம் உயர்கல்வி கற்கும் பெண்கள் சொந்த ஊரிலே வேலை கிடைக்க வேண்டும் என்று ஏங்கியதுண்டு. இப்போது மொழிப்புலமையும், கல்விச் சூழலும் அவர்களை வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியத் தூண்டுகிறது. வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்க்கும் பெண்களின் அறிவாற்றல் எல்லை மிகப் பரந்த நிலையில் உள்ளது. அதிலும் குறிப்பாய் விமானப் பணிப்பெண் பயிற்சிகளில் சேர்ந்து, பணி ரீதியாக விண்ணில் பறந்து கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த பயிற்சியில் சேர வரும் பெண்களிடம் கேட்டால், "பயணத்திற்காக பறப்பது செலவு. இதையே படித்துவிட்டு பறப்பது பணத்தை மட்டுமல்ல, உலகளாவிய அனுபவங்களையும் ஈட்டித் தருகிறது..." என்று உரக்கச் சொல்கிறார்கள்.

பழைய காலத்தில் கணவர் பணம் சம்பாதித்துக் கொண்டு வருவார். அதை சிக்கனமாக செலவு செய்பவராக மட்டுமே பெண் இருந்தார். இன்று பணம் சம்பாதிக்கும் பெண்கள், அதை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதில் கணவருக்கே (அல்லது குடும்பத்தினருக்கே) ஆலோசனை சொல்பவர்களாக இருக்கிறார்கள். சேமிப்பு மட்டுமல்ல பணத்தை பயனுள்ள வழிகளில் செலவிட கற்றுக்கொடுப்பதிலும் இன்றைய பெண்கள் முன்னோடிதான்.

இப்படி எண்ணற்ற "பிளஸ் பாயிண்ட்"டுகள் இருந்தாலும், வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியப் பெண்களில் 48 சதவீதம்பேர் இப்போதும், "கணவர் விரும்பினால் நான் என் வேலையை விட்டுவிடுவேன்" என்கிறார்கள். "கணவர் சொன்னாலும் வேலையை விடமாட்டேன்" என்று சொல்லும் பெண்கள் 52 சதவீதம் இருந்தாலும் அவர்கள் மனைவி, அம்மா ஆகிய இரு பொறுப்புகளையும் வெகு சிரமமெடுத்து சுமக்கிறார்கள். அந்த பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவர்களில் 94 சதவீதம் பேர் வேலையை விட தயாராக இருப்பதாக சர்வேயில் தெரிவிக்கிறார்கள்.

"நல்ல மனைவி" என்ற பொறுப்புக்கு எந்த விதத்திலும் பங்கம் வந்துவிடக்கூடாது என்பதில் தென்னிந்திய பெண்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள். எவ்வளவு படித்து, உயர்ந்த வேலைக்கு சென்றாலும் என்ன விலை கொடுத்தாவது "நல்ல மனைவி" என்ற பட்டத்தை பெற்றுவிடவேண்டும் என்ற ஆசை அவர்களிடம் இருப்பதை பாராட்டித்தான் ஆக வேண்டும். அவர்கள் நல்ல மனைவி என்ற பட்டத்தை பெற்றுவிட சமையல் அறைக்குள் வந்திருக்கும் புதிய நவீன கருவிகள் நன்றாகவே கை கொடுக்கின்றன. அலுவலகத்தில் ராணியாக இருந்தாலும், வீட்டுக்கு வந்து சமைக்கும்போது "இங்கும் நான் ராணிதான்" என்று மெய்ப்பிக்க வேண்டியிருக்கிறதே! ஆனாலும் அது சுகமானதே...

Thanks to :Dinakaran.

அவல் தோசை

தேவையானவை:

கெட்டி அவல் - 1 கப்

புளித்த மோர் - 1 கப்

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவைகேற்ப

பெருங்காயத் தூள் - சிறிது

எண்ணெய்

செய்முறை: அவலை சுத்தம் செய்து மோரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்.

பின்னர் தேவையான அளவு நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, உப்பு, பெருங்காயத் தூள் சேர்க்கவும்.

ப.மிளகாயை பொடியாக கட் செய்து மாவில் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து மிதமான தீயில் தோசை வார்க்கவும்.

குறிப்பு: புளிப்பு மோர் இல்லையெனில் எலுமிச்சை சாறு பிழிந்து செய்யலாம்.

Thanks to : Tamilkudumbam

மனம் மகிழுங்கள் -35- இடரார்ந்த வாழ்க்கை!

முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோமே...... குழந்தைகள் எந்தவொரு செயலுக்கும் எதைப்பற்றியும் யோசிப்பதில்லை; தோன்றிவிட்டதா, செய்து முடிக்க வேண்டும். கட்டிலிலிருந்து குதிப்பது, படிக்கட்டுக் கைப்பிடிச் சுவரில் வழுக்கிக் கொண்டே வருவது, மரத்திலுள்ள மாங்காய் மீது கல்லெறிகிறேன் என்று யார் மண்டையையாவது உடைப்பது, எத்தனைமுறை அதட்டியிருந்தாலும் திருட்டுத்தனமாய்ச் செங்கல் தூள் உண்பது - இன்னதுதானென்று வரையறுத்துச் சொல்ல முடியாத செயல்கள்.

என் நண்பர் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்டமுறை செல்ஃபோனை மாற்றியதாக நினைவு. என்ன என்று கேட்டதற்கு, "என் மகன் டாய்லெட்டில் ஃபோனை போட்டுவிடுகிறான்" என்றார் சிரித்துக் கொண்டே. அவர் மகனுக்கு ஃபோனை ஃப்ளஷ் செய்து பார்ப்பது பிடித்தமான விளையாட்டு போலிருக்கிறது.

பிள்ளைகளின் செயலின் தன்மைக்கேற்ப வால்தனம்; லூட்டி; ரௌடித்தனம் என்று பெரியவர்கள் நாம் வகைப்படுத்திக் கொள்கிறோம் பக்கத்துவீட்டுப் பிள்ளையென்றால் ரௌடித்தனம், நம் பிள்ளையென்றால் வால்தனம் என்பது நம் சண்டித்தனம். அது வேறு விஷயம்.

வாழ்க்கையில் நம் குறிக்கோளை எட்டுவதற்கு இடர்களைக் கடக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. இடரற்ற வாழ்க்கை என்பதே இல்லை. இந்த இடர்களோ எப்பொழுதுமே நம் மன மகிழ்வைக் குறிவைப்பவை. இனிமையான இடர் என்று ஏதாவது உள்ளதா என்ன? "அப்பாடா! இன்றைக்கு லாரி ஸ்ட்ரைக்! சரக்கு அனுப்ப வேண்டிய தொல்லையும் இல்லை; இன்று தொழில் நடத்தவேண்டிய ரோதனையும் இல்லை" என்று எந்த முதலாளி சிரிக்கப் போகிறார்?

எல்லாமே கஷ்டம், அசௌகரியம், உளைச்சல், அலைச்சல இத்தியாதி. "நான் எந்தவொரு இடரையும் ஏற்க முடியாது. நான் நினைத்தது அப்படியே நடக்க வேண்டும்" என்று யாராவது நினைத்தால் என்னவாகும்? ஒன்றும் ஆகாது. அவர் நினைத்த குறிக்கோள் ‘வேலைக்காவாது’. இப்புவியின் விதியானது ‘இடருக்குப் பிறகே வெகுமதி’.

குழந்தைகள் ஒரு செயல் புரிய அதுசார்ந்த இடர், துன்பம், அபாயம் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. குழந்தைகளாய் இருக்கும்போது நினைத்ததை அடைய எந்தவித இடரையும் யோசிக்காமல் கொள்ளாமல் எதிர்கொள்ளும். நாம் வளர வளர மாறிப்போகிறோம். இடித்துக் கொள்வோம், விழுந்து விடுவோம் என்றெல்லாம் தயங்காமல் தட்டுத் தடுமாறி நடை பழகிக்கொள்ளவில்லை? ஆனால் பெரியவர்களாக ஆனதும் அடுத்த அடி எடுத்துவைக்க யோசிக்கிறோம். எச்சரிக்கையும் பாதுகாப்புணர்வும் மிகவும் மேலோங்கிவிடுகிறது. கையில் ரிமோட்டைத் தூக்கி வைத்துக் கொண்டு சானல் மாற்றிச் சானல் பார்த்து ரசித்துவிட்டு நமது வாழ்க்கை அப்படியே எழுதிவைத்த திரைக்காட்சி போல் ஒரே சீராய் ஓடவேண்டும் என்று விரும்புகிறோம்.

இங்கு இடர்கள் என்றால் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வலியச் சென்று துன்பத்தை விலைக்கு வாங்குவதன்று இடர். வயதிற்கேற்ற பக்குவமும் எச்சரிக்கையும் இயற்கை. அனாவசியங்களை விட்டு, துர்ச்செயல்களை விட்டு, ஆபத்தான காரியங்களை விட்டு ஒதுங்கப் பாதுகாப்புணர்வு அவசியம், முக்கியம்.

"என்ன பெரிய இடர், ஆபத்து! ஒருகை பார்க்கிறேன்" என்று வாகனங்கள் பறக்கும் சாலையின் நட்டநடுவே சென்று நின்றுகொண்டால் என்னாவது? உயிர் பாக்கியிருந்தால் உடம்பில் கையோ காலோ மீந்திருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

கட்டடத்தில் தீப்பற்றிக் கொள்கிறது; தீ கடுமையாய்ப் பரவிக் கிடக்க வாசல் வழியாக வெளியேற வாய்ப்பில்லை; அப்பொழுது இரண்டாவது மாடியில் இருப்பவர் என்ன செய்வார்? கைகால் உடைந்துவிடும் என்றெல்லாம் தயங்கப் போவதில்லை. கண்ணை மூடிக்கொண்டு குதித்து விடுவார். இங்கு உயிர் முக்கியம். எனவே ஆபத்தைக் கடக்க உள்ள ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தியே ஆகவேண்டும். அதற்காக லிஃப்ட் இயங்கவில்லை என்பதற்காக மாடியிலிருந்து குதித்தால்?

சில சாதனைகளுக்காக, குறிக்கோளுக்காக, முன்னேற்றத்திற்காக மேற்கொள்ள வேண்டிய செயல்களுக்கு இடர்கள் ஏற்படுமே என்று பயந்து, சுணங்கிப் போகாமல், செயலற்றவராய் இல்லாமல் செய்ய வேண்டிய செயல்களை, செய்து முடிக்க வேண்டும். முழுக்க முழுக்கப் பாதுகாப்பும் அபாயமற்ற நிலையும் கவலையற்ற வாழ்வும் என்பதெல்லாம் எவரொருவருக்கும் இவ்வுலகில் அமைந்திருக்கவில்லை என்பதை உணர்ந்து நாம் இடர்களை எதிர்கொள்ள வேண்டும்.

உழைப்புக்கேற்ற பலன். அதைப்போல் துன்பம் சுமந்து, இடர்களை எதிர்கொண்டு செயலாற்றி முடிக்கும்போது கிடைக்கிறதே நிறைவு அது பலன். மகிழ்வளிக்கும் பலன்.

லாபம் ஈட்ட வேண்டும் என்றுதான் தொழில் தொடங்குகிறோம். நட்டமும் ஏற்படலாம். அதற்காக நட்டம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று நான் தொழிலே செய்வதில்லை என்று ஒருவர் சொன்னால் என்ன நினைப்பீர்கள்?

தொழிலில் ஏற்படும் இடர்களை எதிர்கொண்டால் தானே லாபம். கட்டிலில் இழுத்துப் போர்த்திப் படுத்துக் கொண்டால் பணியாற்றும் ஊழியர்களா லாபம் ஈட்டி நம் காலடியில் வைத்துவிட்டுச் செல்வார்கள்?

வாழ்க்கையை இரண்டுவிதமாக வாழலாம். பிறந்து விட்டோம், வாழ்ந்து கிடப்போம் என்பது ஒருவகை. அடுத்தது ஓர் உன்னதக் குறிக்கோளுடன் உண்மையிலேயே வாழ்வது.

‘தேமே’ என்று வாழ்வதில் சுவையுமில்லை, மகிழ்வுமில்லை. அது அஃறிணை வாழ்க்கை.

பின்னதில் இடர் உண்டு; துன்பம் உண்டு; துயர் உண்டு.

தோல்வி அடைபவர்களைவிட, சாதனை புரிபவர்கள்தாம் அதிகம் இடர்களை எதிர்கொள்கிறார்கள். அதிகப்படியாய் இன்னல்களை எதிர்கொள்பவரால்தான் அதிகமான சாதனைகள் புரிய முடிகிறது.

ஒருவர் வரலாற்றில் இடம்பெறுவது அவர் புரிந்த சாதனையினால்தானே தவிர அவர் அதுவரை பட்ட துன்பத்தினால் அன்று. முந்தைய அத்தியாயத்தில் பார்த்தது போல், எடிசனை நாம் அறிந்து கொள்வது அவர் கண்டுபிடித்த லைட் பல்பிற்காகத்தானே தவிர அவர் ஆயிரம்முறை அடைந்த தோல்விகளினால் அல்ல.

மொத்தத்தில்,

தெருவைக் கடப்பதிலிருந்து, இல்வாழ்க்கை அமைத்துக் கொள்வதிலிருந்து, ஹோட்டலில் பூரி கிழங்கு உண்பதிலிருந்து - அனைத்திலும் இடருண்டு; ஆபத்துண்டு. அதையெல்லாம் எதிர்கொண்டு வாழ்ந்து நமது இலட்சியத்தையோ குறிக்கோளையோ அடைவதில்தான் சாதனை உள்ளது; மனதிற்கு நிறைவான மகிழ்வும் உள்ளது.

னம் மகிழ, தொடருவோம்...

Thanks to :inneram.com

திங்கள், 21 மார்ச், 2011

இட்லி பிங்கர்


Print E-mail

தேவையானவை;

முட்டை-2

இட்லி 3
மிளகு தூள் 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

1. இட்லியை பிங்கர் சைசில் கட் பன்னவும்.

தனி பாத்திரத்தில் முட்டையை உடைத்து அத்துடன் மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

முட்டையுடன் கட் பண்ணிய இட்லியை போடவும்.

தோசை கல்லில் நெய் ஊற்றி முட்டையில் போட்ட இட்லியை பொட்டு பொன்னிரம் வரும் வரை ப்ரை பன்னவும்.

சுவையான இட்லி பிங்கர்ரெடி

குறிப்பு; மிளகுக்கு பதிலாக சக்கரை சேர்த்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


Thanks to : tamilkudumbam

வியாழன், 17 மார்ச், 2011

மனம் மகிழுங்கள்! - 34 - பாடங்களாகும் தவறுகள்!

இரண்டாம் உலகப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். பரிசோதனைச் சாலையில் மும்முரமாய் சோதனையில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானியை அவருடைய ஜெர்மானிய ராணுவ அதிகாரிகள் ஒருநாள் கூப்பிட்டு அனுப்பினார்கள். அப்பொழுது அவர் ராக்கெட் தயாரிக்கும் முயற்சியில் இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட அவகாசம் கொடுத்திருந்தும் ராக்கெட் எதையும் அவர் கண்ணில் காட்டுவதாய் இல்லை. சட்புட்டென்று ஏதாவது கண்டுபிடித்துக் கொடுத்தால் லண்டன் நகரில் போட்டுத் தீபாவளி கொண்டாடலாம் என்று துடித்துக் கொண்டிருந்தார்கள் ஜெர்மானிய ராணுவத்தினர்.

"என்னய்யா ஆச்சு?" விசாரித்தார்கள்.

"இதுவரை 65,121 தவறுகள் செய்திருக்கிறேன்; கண்டுபிடித்துவிடுவேன்" என்றார்.

அந்தப் பதில் அவர்களுக்குச் சகிக்கவில்லை.

"நீ கண்டுபிடித்து முடிக்க இன்னும் எத்தனைத் தவறுகள் செய்ய வேண்டியிருக்கும்?"

"ம்ம்ம்... எப்படியும் மேற்கொண்டு ஓர் ஐயாயிரம் தவறுகள் நிகழலாம்."

அவர் ராக்கெட் விஞ்ஞானி வெர்னர் வான் ப்ரௌன் (Wernher von Braun). ஜெர்மனியைச் சேர்ந்தவர். பிறகு கூறினார், "65,000 தவறுகள் செய்தால்தான் ஒரு ராக்கெட் கண்டுபிடிக்கும் தகுதியே உருவாகிறது. இப்பொழுதுதான் அந்தத் தகுதி எனக்குக் கிடைத்துள்ளது. ரஷ்யா இதுவரை 30,000 தவறுகள் மட்டுமே செய்துள்ளது. அமெரிக்கா ஒரு தவறும செய்யவில்லை. தெரிந்து கொள்ளுங்கள்."

அன்றுவரை ராக்கெட் தொழில்நுட்பத்தில் ரஷ்யா பாதியளவு மட்டுமே முன்னேறியிருந்தது; அமெரிக்கா அத்துறையில் அப்பொழுது ஒன்றுமேயில்லை.

அவர் பேச்சு பொய்யாகவில்லை. இறுதியில் வெற்றிகரமாய் அவர் ஏவுகணையைக் கண்டுபிடித்துக் கொடுக்க அதை வைத்துக்கொண்டு ஜெர்மனி கெட்ட ஆட்டம் போட்டது. எதிரி நாடுகளைக் கதிகலங்க அடித்தனர்; ஒருவழியாய் உலகப் போர் முடிவுக்கு வர, பார்த்தார் வெர்னர்; ரஷ்யர்களிடம் மாட்டிக் கொண்டு வதைபடுவதைவிட அமெரிக்கா பரவாயில்லை என்று அமெரிக்கப் படையினரிடம் சரணடைந்தார். அவரைப் பத்திரமாகப் பொத்தித் தன் ஊருக்கு அழைத்து வந்த அமெரிக்கா அவரது அறிவுக்கு வேண்டிய தீனியைப் போடவே முதன்முதலில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி வைக்க நாஸா உருவாக்கிய ராக்கெட்டிற்கு இவரது அறிவும் உழைப்பும் அடிப்படையாயின. பணம் தவிர ஏகப்பட்ட விருதெல்லாம் சம்பாதித்துக் கொண்டு 1977-ல் தமது 65ஆவது வயதில் இறந்து போனார் விஞ்ஞானி வெர்னர்.

எதற்கு இந்தக் கதை? அதில் அடிநாதமாய் நமக்குத் தகவல் பொதிந்துள்ளது.

"நாம் இழைக்கும் தவறுகள் நமக்கு ஆசான்."

நமது ஒவ்வொரு தவறும் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தராமல் விடுவதில்லை. "தோல்வி வெற்றியின் முதல் படி" என்பது அதனால்தான்.

தாமஸ் ஆல்வா எடிசன் கதையும் நமக்கெல்லாம் தெரியும். ஏகப்பட்ட முறை அவரது முயற்சி தோல்வி அடைந்து ஒருவழியாய் அவர் பல்ப் கண்டுபிடித்து முடித்ததும் "லைட் எரியும் பல்பை எப்படித் தயாரிக்கக்கூடாது என்பதை நான் ஆயிரக்கணக்கான வழிகளில் கற்றுக் கொண்டேன்" என அவர் கூறியது மிகப் பிரபலமானது.

வெற்றியாளர்கள் தவறிழைத்தால் கற்கிறார்கள். அடுத்தமுறை தவறு நிகழ்ந்தால் அடுத்த முறையும் கற்கிறார்கள். அதற்கு அடுத்த முறை தவறினால்? அப்பொழுதும் விடுவதில்லை, கற்கிறார்கள். இப்படி ஒவ்வொரு தவறிலும் விடாமல் கற்றுக் கொண்டே இருக்கிறார்களா, அதனால் வெற்றியடைகிறார்கள்.

தோல்வியாளர்கள் ஒவ்வொரு தவறையும் பெரிதாக எடுத்து அலட்டிக் கொண்டு மாய்ந்து போகிறார்கள். அத்தோல்வி அந்நிகழ்வில் உணர்த்தும் மறுபக்கத்தைக் காணத் தவறிவிடுகிறார்கள். தவறுகளைக் குற்றமாய்க் கருதிக் கூனிக் குறுகிப் போகிறார்கள்.

பார்க்கப்போனால் வெற்றியைவிடத் தோல்விகளே நாம் அதிகம் கற்றுக்கொள்ள உதவுகின்றன. தோல்வி ஏற்பட்டால் மட்டுமே ஒரு கண்ணுக்கு அழுதுவிட்டு, மூக்கைச் சிந்தித் துடைத்துவிட்டு, யோசிக்கிறோம்; சுய ஆராய்ச்சி செய்து கொள்கிறோம்; புதிய திட்டமொன்றைத் தீட்டி எடுத்துக்கொண்டு அடுத்த முயற்சிக்குப் புத்துணர்வுடன் எழுந்து நிற்கிறோம். வெற்றி என்றால், மகிழ்ச்சியில் கத்திவிட்டு, கொண்டாடிவிட்டு மறந்து விடுகிறோம்.

அதற்காக இந்தத் தர்க்கத்தைப் பள்ளி, கல்லூரிப் படிப்பில் உபயோகிக்காதீர்கள். ஆண்டுதோறும் தேறாமல் தவறிப்போய் ஒரே வகுப்பில ‘டேரா’ போட்டால் அது வேறு பிரச்சினை; வீட்டில் கிடைப்பது வேறு பட்டம்.

மனிதர்களாகிய நாம் தவறிழைக்கக் கூடியவர்களே என்பதை முதலில் உணர்ந்து கொள்வது நல்லது. நமது காரியம் தவறிப்போகும் போது தட்டி விட்டுக் கொண்டு எழுந்து தவறைத் தாண்டிச் சற்று எட்டிப் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். தவறுகளெல்லாம் உண்மையில் தவறுகளல்ல; பாடம் என்பது புரியும். அது என்ன கற்றுத் தருகிறது என்பதைப் புரிந்து கொண்டால் அடுத்த முறை அந்தத் தவறு நிகழாது. இறுதியில் காரியம் கைகூடும்.

தவறே செய்யாமல் வாழ வேண்டும் என்றால் முடியுமா? எக்காரியமும் செய்யாமல் நல்லதொரு திண்ணையாகப் பார்த்துத் ‘தேமே’ என்று உட்கார்ந்திருந்தால் மட்டுமே சாத்தியம்.

தோல்வியும் தவறுகளும் அவமானமல்ல! எதையும் முயன்று பார்க்காமல் அமைதியாக இருப்பதுதான் அவமானம்.

தவறுகளை அவமானம் எனக் கருதும்போது மனம் உடைந்து போகிறது. அப்படியல்லாமல் பாடம் கற்க முயன்றால்?

ஏற்படுவது சுறுசுறுப்பும் மகிழ்வும்.

Thanks to :www.inneram.com

புதன், 16 மார்ச், 2011

மனம் மகிழுங்கள்! - 33 - பிரச்சினைகளும் வரமே

"பொழுது விடிஞ்சு பொழுதுபோனா நாள்தோறும் ஏதாவது பிரச்சனை!"


இப்படி, அல்லது இதைப் போன்று ஒரு வசனம் - நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயம். தெருவில் வண்டி தள்ளி காய்கறி வியாபாரம் செய்பவரிலிருந்து மிகப் பெரும் தொழிலதிபர்வரை அவரவர் செல்வாக்கு, வசதிக்கேற்பப் பிரச்சினை, பிரச்சினை.

உலகில் யாருக்கு இல்லை பிரச்சினை?


"இதையெல்லாம் விட்டுத் தள்ளிட்டு எங்காவது கண்காணாத ஓர் ஊருக்கு ஓடிப்போய், அக்கடான்னு கிடக்கலாம்னு தோணுது" விரக்தியின் உச்சத்தில் இப்படியானதொரு சலிப்பும் சகஜமே.

என்ன செய்வது? பிரச்சினைதான்! பிக்கல் பிடுங்கல்தான்! தெளிவான வானம், அமைதியான கடல், தூய்மையான மணல் என்று உலகின் ஏதாவது மூலையில் அரவமற்றுக் கிடக்கும் கடற்கரையில் துண்டுவிரித்து, கண்ணில் கூலிங்க்ளாஸ் மாட்டிக் கொண்டு கண்மூடிப் படுத்துக்கொள்ள மனம் விம்மி விம்மி ஏங்கிக் கிடக்கிறது!

சரி, ஏதோ குருட்டாம் போக்கில் அப்படியொரு வாய்ப்பு அமைந்து கடற்கரை மணலில் ‘மக்க, மல்லாக்க’ப் படுத்துக் கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எத்தனை நாள் அல்லது வாரம் அல்லது மாதம் அப்படிக் கிடக்க முடியும்? யாரால் அப்படிச் சும்மாவே இருக்க முடியும்? எருமை மாடு? ம்ஹும்! அதுவும்கூட சிறிது நேரத்திற்குப்பின் எழுந்து ஆட்டோக்காரன் வசவையெல்லாம் சட்டை செய்யாமல் தெருவில் நடக்க ஆரம்பித்துவிடும். யோசித்துப் பாருங்கள். அவ்விதம் கால் நீட்டிப் படுத்துக்கொண்டு, எதுவுமே செய்யாமல் காலின் கட்டைவிரலையே மூன்றேகால் மாதம் பார்த்துக் கொண்டிருந்தபின் என்னவாகும்? போரடிக்கும். யாரையாவது கடித்துத் தின்றுவிடலாம் போலிருக்கும். ஏன் அப்படி?

மனிதன் அப்படித்தான். நம்முடைய வடிவமைப்பின் அம்சம் அது. நம் டிஎன்ஏ கூறுகளில் அது ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளது. பிரச்சினையைத் தீர்ப்பது, புதுப் பிரச்சினையைத் தேடுவது, குழப்பிக் கொள்வது, அதைத் தீர்ப்பது, ஏதாவது கண்டுபிடிப்பது என்பது நம் ‘கூடப் பிறந்த குணம்’.


பிரசசினைகள் இந்தப் பிரபஞ்சத்தின் ஓர் அங்கம். அவை நம்மைத் தார்குச்சியால் குத்துவதைப்போல் குத்திக் குத்தி ஓட்டிக்கொண்டிருக்க, தினந்தோறும் நாம் ஏதாவது கற்றுக்கொண்டே இருக்கிறோம். இல்லையென்றால் இதுவரை மனிதன் கண்டுபிடித்தவை என்பதை ஒரு கைவிரல்களுக்குள் அடக்கிவிடலாம்.

விரல்கள் என்றதும் மனிதன் கண்டுபிடித்த முதலாவது சமையல்கலை கதையொன்று நினைவுக்கு வருகிறது.

ஆதிமனிதன் காடுகளில் கிடைக்கும் பழங்களையும் கிழங்குகளையும், அதற்குத் தொட்டுக் கொள்ள எலி, முயல் போன்ற சிறு பிராணிகளையும் பச்சையாகவே உண்டு காலம் தள்ளியிருக்கிறான்.

ஒருநாள் காட்டில் தீப்பிடித்துக் கொண்டு மரங்கள் நன்றாக கொழுந்துவிட்டு எரிந்திருக்கின்றன. அதில் சில மிருகங்கள் ‘சுட்ட கறி’யாகிவிட்டன. சூடு ஆறாத ஒரு மிருகத்தில் போய் நம்ம ஆதிகால உறவினர் கையை வைக்க, மிருக மாமிசம் கையில் பச்சக்கென்று ஒட்டியிருக்கிறது. சூடு தாங்காமல் ‘ஆ’ என்று கத்தி கைவிரல்களை வாயில் வைக்க ...

கையை எடுத்துவிட்டு ‘ஆகா!’ என்று கத்தியிருக்கிறான். முன்னர் உண்டது போலன்றி இப்பொழுது மாமிசம் தனி ருசி. தீயில் வெந்த ஒரு கிழங்கை எடுத்துக் கடித்துப் பார்க்க ... ‘அடடே! இது புது ருசி!’

இப்படியாக விரல்களின் சூட்டுக்கான பிரச்சினையில் மாமிசங்களையும் கிழங்குகளையும் "சுட்டுத் தின்னும்" சமையல் கலை பிறந்ததென்கிறது ஒரு கதை.

முதலில் தெரியாமல் தவறுகள் செய்வோம்; பிறகு தெரிந்து செய்வோம். பிறகு நமக்கே அலுத்துப்போய்ப் பாடங்களைக் கற்றுக் கொண்டு, கொஞ்சமாய்த் திருந்தி "அடுத்தது என்ன?" என்று தேடுவோம். விரும்பியோ விரும்பாமலோ அனுபவஸ்தனாகி விடுவோம்.

கல்லாகவோ, மரமாகவோ, எருமை மாடாகவோ இருந்தால் பிரச்சினையே இல்லாதிருக்கலாம். ஆனால் யாருக்கு எருமை மாடாக மாற ஆசையிருக்கும்?

தோசைக்கல், மசாலா தோசை சமைத்துத் தராது, வேண்டுமானால் அந்தக் கல்லில் நாம் கல்தோசை சுடலாம்!

மரம் மந்திரியாகாது, லஞ்சம் வாங்காது.

மனிதன் இப்புவியில் வாழவும் முன்னேறவும் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டாய இணைப்பு - பிரச்சினை!

அன்பு, பாசம், காதல், மகிழ்வு, சோகம், நடப்பது, காலில் விழுவது, அப்படியே காலை வாருவது போன்ற நம் இயற்கைத் தன்மைகளுடன் பிரச்சினையும் நம் தன்மை. அதாவது, பிரச்சினைகள் மனிதனுக்கு வரம். நம்ப முடியவில்லையா?

கண்ணை மூடிக்கொள்ளுங்கள்; நன்றாக மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி வெளியிடுங்கள். ஆச்சா? இப்பொழுது கண்ணைத் திறந்து சுற்றுமுற்றும் பாருங்கள். ‘எப்பவுமே லேட்டாய் வந்து தொலையும் பஸ்ஸில்’ ஆரம்பித்து எத்தனைக் கண்டுபிடிப்புகள்? கால் செருப்பில் ஆரம்பித்து, கட்டைவிரல்ரேகை தேய எஸ்எம்எஸ் அனுப்பும் உபகரணம் என்று எத்தனை எத்தனை? எல்லாமே ஏதோ ஒருவனின் பிரச்சினைக்குத் தீர்வாய் முளைத்தவை. அது நல்லதா கெட்டதா, உபயோகமா இல்லையா என்பது இக்கட்டுரையின் பிரச்சினையில்லை. பிரச்சனை! அதை மனிதன் எதிர்கொண்டது; அதற்கொரு நிவாரணம் கண்டுபிடித்தது - அதுதான் இங்குப் பேச்சு.

ஒவ்வொரு பிரச்சினையும் நாம் புதிதாய் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள வைக்கும் ஆசான். நமக்கு அவை சவால்களைச் சமர்ப்பிக்கின்றன. நாம் சமாளிக்கிறோம், கற்கிறோம்; கண்டுபிடிக்கிறோம்.

குழந்தையாய் இருக்கும்போதே இது ஆரம்பித்துவிடுகிறது. எதையாவது பிடித்து இழுப்பது, கடிப்பது, ஆசையாய்த் தூக்கி நம்மைச் செல்லம் கொஞ்சும் மாமா மடியில் ‘உச்சா’ போய்விட்டுச் சிரிப்பது, என்று ஏதாவது சவால் வேண்டும். குழந்தையொன்று அப்படி எதுவுமே செய்யாமல் சப்பாத்திக்குப் பிசைந்து வைத்த மாவைப்போல் அமைதியாய் குந்தியிருந்தால் நிச்சயம் பெற்றோர் ஏகப்பட்ட கவலையுடன் அக்குழந்தையை தூக்கிக் கொண்டு டாக்டரிடம் ஓடுவார்கள்.

சற்று வளர்ந்துவிட்டால், ஆட்டம், ஓட்டம், மரத்திலிருந்து தலை கீழாகத் தொங்குவது என்று வால்தனம். திட்டும் வசவும் விழும் அடியும் - அதையெல்லாம் ஒரு பொருட்டாய்க் கருதாது துடைத்தெறிந்துவிட்டு மறுநாள் மீண்டும் அதே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!

இப்படி நம்முடைய பால்யப் பருவத்தில் பற்பல சவால்களுடன் வளரும் நாம், பெரியவர்களானதும் பிரச்சினைகளை அதே வீரியத்துடன் எதிர்கொள்ளத் திணருகிறோம்; சில சமயம் பேனையே பெரியவண்டைப்போல் நாமே ஊதிப் பெரிதாக்கி, அதை நினைத்து நம்மையறியாமல் அஞ்சுகிறோம்.

ஆனால் நம் குழந்தைகளிடம் என்ன எதிர்பார்க்கிறோம்?

ஐந்து வயதே நிரம்பிய நம் குழந்தையை டாக்டராக்கிவிட வேண்டும், என்ஜினீயராக்கிவிட வேண்டும் என்று தலையணை அளவு தடிமனான புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு பாடம் சொல்லித் தருகிறோம்! 18 x 18 எவ்வளவு சொல்லு பார்ப்போம் என்று அதட்டல் வேறு. தம் பிள்ளைக்கு ஃபர்ஸ்ட் ராங்க் தவிர வேறு எதுவும சரிவராது என்று 45 மாணவர்கள் உள்ள அந்த வகுப்பின் அத்தனைப் பெற்றோருக்கும் பேராசை.

எப்படி சாத்தியம்?

இப்படி நம் பிள்ளை ஒரு சாதனையாளன்/சாதனைச்செல்வி ஆகியே தீர வேண்டும் என்று அந்தப் பிள்ளையின் சக்திக்கு மீறிய பிரச்சினைகளைப் புகுத்தும் நாம், காபி மிஷினின் பட்டனைத் தட்டினால் கப்பில் கொட்டும் காப்பிபோல் வலிக்காமல் கொள்ளாமல் நம் வாழ்க்கையானது நகர வேண்டும் என்று விரும்புகிறோம்.

பிரச்சினையானது குடும்பத்தில் இருக்கலாம், அலுவலகத்தில் இருக்கலாம். சக ஊழியரிடம், அண்டை வீட்டுக்காரனிடம் இருக்கலாம். பொருளாதாரம், உடல் நலம், டூட்டி முடித்து இரவில் வீடு திரும்பும்போது அழிச்சாட்டியமாய்த் துரத்தும் தெரு நாய் என்று விதவிதமாய், கலர் கலராய் இருக்கலாம். அதையெல்லாம் எப்படி நாம் உள்வாங்கி எதிர்கொள்கிறோம் என்பது நம் அனுபவத்தை நிர்ணயிக்கிறது. அது நம் பக்குவத்தை வளர்க்கிறது.

பக்குவப்பட்டுவிட்ட மனம் மகிழ்வைத் தொலைக்காது!

Thanks to : www.inneram.com

செவ்வாய், 15 மார்ச், 2011

ஜவ்வரிசி போண்டா




தேவையானவை

ஜவ்வரிசி - 1 கப்
நன்கு புளித்த தயிர் -1 கப்
கடலை மாவு -1 தே*க்கர*ண்டி
அரிசி மாவு -1 தே*க்கர*ண்டி
துருவிய இஞ்சி -1 தே*க்கர*ண்டி
கறிவேப்பிலை, மல்லித்தழை -சிறிதளவு
உப்பு -ருசிக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஜவ்வரிசியுடன் உப்பு, தயிர் சேர்த்து ஊறவையுங்கள். 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவேண்டும்.

பின்னர் அதனுடன் பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு, மல்லித்தழை சேர்த்து (இட்லி மாவை விட சற்று) கெட்டியாகக் கலந்து கொள்ளுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து ஜவ்வரிசி கலவையை சிறு சிறு போண்டாக்களாகக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுங்கள்.

Thanks to : www.hi2web.com

மனம் மகிழுங்கள்-32 - குறையெல்லாம் குறையல்ல

- நூருத்தீன்

கி.மு. நான்காம் நூற்றாண்டில் பண்டைய கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் டெமாஸ்தெனஸ் (Demosthenes) என்றொரு அரசியல்வாதி இருந்தார். அலெக்ஸாண்டரின் ஆளுமைக்கு எதிராகப் புரட்சியெல்லாம் முயன்று பார்த்தவர். இவரிடம் திறமை ஒன்று இருந்தது - ஆளை அசத்தும் பேச்சு.

சரி, அதற்கு என்ன இப்போ?

அவர் சிறுவனாய் இருந்தபோது அவரிடம் ஒரு குறை இருந்தது. திக்கித் திக்கித்தான் பேசுவார். வாக்கியங்களைத் தடையின்றி முழுமையாய்ப் பேச அவரால் முடியாது. அந்தக் காலத்தில் எந்த ENT ஸ்பெஷலிஸ்ட்டைப் போய்ப் பார்ப்பது? எனவே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. வாயில் சிறு, சிறு கூழாங்கற்களை அடைத்துக் கொண்டு கிரேக்க மொழியில் ‘அணில், ஆடு, இலை’ என்று பேசிப் பழக ஆரம்பித்தார் டெமாஸ்தெனஸ். அசரவில்லை; சோர்ந்து போகவில்லை; தினந்தோறும் கடுமையான பயிற்சி. சாப்பிடும்போது மட்டும் கல் நீக்கிச் சோறு சாப்பிடுவாரோ என்னவோ, விடாத பயிற்சி. முடிவு? வாய்மேல் பலன் கிடைத்தது. இவர் ஒரு மிகச் சிறந்த சொற்பொழிவாளராக, பேச்சாளராக மாறிப்போனார். இன்றும் வரலாற்றுப் புத்தகங்களில் அந்தச் சிறப்புத் தகுதியுடனேயே குறித்து வைக்கப்பட்டுள்ளார்.

நம் எல்லோரிடமும் குறையுண்டு. அது உடல் குறையாக இருக்கலாம். மனதில் இருக்கலாம்; செயலில் இருக்கலாம்; சிந்தனையில் இருக்கலாம். ஏதோ ஒன்று, ஒன்றுக்கு மேற்பட்டு என்பது மட்டும் நிச்சயம். ஆனால் அந்தக் குறை நம் இலட்சியத்தை, குறிக்கோளை, மன மகிழ்வை எவ்விதத்திலும் தடுத்துவிடக் கூடாது; அப்படித் தடுப்பதுதான் உண்மையான குறை.

இறைச் சக்திக்கு அப்பாற்பட்டு, நம்முடைய இலக்கை நாம் அடைந்துவிடாமல் தடுக்கக்கூடிய ஒன்று இருக்குமெனில் அது ‘என்னால் முடியாது’ என்ற நம் எண்ணம் மட்டுமே! அதனால்தான் ‘என்னால் முடியும் தம்பி’ என்று நம்பிக்கையுடன் செயலாற்றுபவர்களெல்லாம் சாதிக்கிறார்கள். ‘என்னத்த செஞ்சு, என்னத்த சாதிச்சு’ என்று அலுத்துக் கொள்பவர்கள் மட்டும் ‘என்னத்த கண்ணய்யா’ ஆகிவிட வேண்டியதுதான்.

‘நான் தேர்வில் ஃபெயிலாகவே போகிறேன், நம்பிக்கையே இல்லை’ என்று ஒரு மாணவன் நினைத்தால் அவனது மனது அவனை வெற்றிக்குத் தயாராக்கப் போவதில்லை. பசை தடவி ஒட்டிய போஸ்டராக அவனது மனமெங்கும் அவநம்பிக்கை மட்டுமே பரவி ஒட்டிக்கொள்ளும். படிக்க, கற்றுக்கொள்ள என்று எந்த முயற்சியும் எடுக்கவிடாமல் அவனைச் சோர்ந்து போகச் செய்து, அவனது தீர்க்கதரிசனம் மெய்ப்படச் செய்யும்.

‘எனக்குத்தான் அப்பவே தெரியுமே’ என்று மதிப்பெண் பட்டியலைப் பார்த்து மனம் கெக்கலிக்கும்.

அதே மற்றொருவர், ‘எனக்கு என் இலட்சியம் முக்கியம். நிச்சயம் அதில் எனக்கு வெற்றி கிடைக்கும்’ என்று திடமாக நம்பிவிட்டால் அதற்காக அவரை அவரது மனது தயாராக்கிவிடும். ‘என்ன செய்யவேண்டுமானாலும் சரியே. நீண்ட நேரம் உழைக்கணுமா, கண் விழிக்கணுமா, எல்லாத்துக்கும் தயார்’ என்று கைமுறுக்கி, தொடை தட்டி நிற்பார்; சாதிப்பார்!

இவை இரண்டிலும் அதற்குரிய பலாபலன் ஒன்று உண்டு. என்ன அது?

‘நான் அம்பேல்’ என்று நினைப்பவருக்குத் தற்காலிக சுகமும் சௌகரியமும் ஏற்பட்டுவிடுகிறது. எவ்விதப் பொறுப்பையும் அவர் சுமக்கத் தேவையில்லை; ‘என்னால் முடியல இதைக் கொஞ்சம் செய்து கொடேன்’ என்று பிறரிடம் உதவி பெற்றுக்கொள்ள முடிகிறது; வெற்றிக்குத் தேவையான சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, முறைப்படுத்தப்பட்ட செயல்கள் என்று எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் இஷ்டத்திற்குத் திரிய முடிகிறது. சில சமயம் ‘ஐயோ பாவம்’ என்று பிறரிடம் அனுதாபமும் பெற்றுக்கொள்ள முடிகிறது.

இரண்டாமவர் இறுதியில் வெற்றியடைந்திருந்தாலும் அதற்காக அவர் செலவிட்டதும் தாங்கியதும் நிறைய. உழைப்பு, நேரம், பொறுப்புச் சுமை, சங்கடங்கள், தடங்கல்கள் இத்தியாதி.

ஆனால் முடிவில் யார் அதிக மன மகிழ்வுடன் இருப்பார்? அது ஊரறிந்த ரகசியம்.

நமக்கு எந்தக் குறையிருந்தாலும பிரச்சனையில்லை. ஆனால் நமக்கு நாமே எழுதிக் கழுத்தில் மாட்டிக்கொள்கிறோமே ‘நம்மாலாகாத் தன்மை’ என்ற அடையாள அட்டை – அதுதான் குறை! உண்மையிலேயே பெருங்குறை! அதன் விளைவு நம்மையே சாரும். நம் கழுத்தில் நாம் மாட்டிக்கொள்ளும் அந்த விலங்கைக் கழட்டித் தூரக் கடாசிவிட்டால் போதும். மகிழ்வான வாழ்விற்கு அதுவே நாம் செய்யும் மிகப் பெரும் உபகாரம். அதன்பிறகு நம்முடைய ஊனமோ, பலவீனமோ, எந்தக் குறையும் பெரிதாகத் தெரியாது.

இதற்கு வரலாறு நிறைய உதாரணங்களை நம் மேசையின்மேல் தூக்கி எறிகிறது. அதிலொன்றுதான் நாம் மேலே பார்த்த டெமாஸ்தெனஸ். கி.மு. நான்காம் நூற்றாண்டாவது ரொம்ப தூரம். சற்று நெருக்கத்தில் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு வருவோம்.

அமெரிக்காவில் ஒரு மனிதர் இருந்தார். ஏதாவது வியாபாரம் செய்து பிழைப்போம் என்று தம்முடைய 22ஆவது வயதில் தொழிலொன்றைத் தொடங்கினார் அவர். தோல்வியில் முடிந்தது.

வியாபாரம் சரிவரவில்லை, போகட்டும். சட்டமன்றத்திற்குப் போய் நாட்டிற்காவது உதவலாம் என்று தேர்தலில் போட்டியிட்டார்; அதிலும் தோல்வி. அது அவருடைய 23ஆவது வயது.

வயிறு பசித்தது. மீண்டும் தொழில் செய்துபார்ப்போம் என்று வியாபாரம் ஆரம்பித்தார். ம்ஹும்! மீண்டும் போண்டி. வயது 25.

அதற்கு அடுத்த ஆண்டு மனைவி இறந்து போனார். 27ஆவது வயதில் அவருக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டது. மீண்டும் அரசியலுக்குப் போவது என்று முடிவெடுத்து மூன்று முறை முயன்று மூன்று முறையும் தோற்றார். அதெல்லாம் 34, 37, 39 வயதுகளில்.

46ஆவது வயதில் மீண்டும் தோல்வி. 47 ஆவது வயதில் துணை ஜனாதிபதியாகலாம் என்று முயற்சி செய்தால் அதுவும் தோல்வி. 49ஆவது வயதில் மற்றொரு தோல்வி.

படிக்கும் நமக்கே மூச்சு வாங்கலாம். மனிதர் அசருவதாய் இல்லை. இறுதியில் அவரது 52ஆவது வயதில், “கூப்பிட்டாயா?” என்று வெற்றி எட்டிப் பார்க்க அமெரிக்க ஜனாதிபதியானார் அவர். அதன்பிறகு வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்து தலைநகர் வாஷிங்டனில் பெரிய சிலையாக அமர்ந்து கொண்டார்.

ஆம்! அவர் ஆபிரஹாம் லிங்கன்!

மனதின் இலக்கை எட்ட நமது குறைகள் தடையே அல்ல.

தடையெல்லாம் “என்னால் முடியாது” எனும் எண்ணம் மட்டுமே. அதுதான் குறை.

அதை நீக்குங்கள். மனம் மகிழ்வை உணரும்.

Thanks to : www. innneream.com

திங்கள், 14 மார்ச், 2011

பாகற்காய் ஜூஸ் - bitter gourd juice



தேவையானவை

பாகற்காய் – ஒரு விரல் நீள துண்டு
மிளகு – 4
சீரகம் – கால் தேக்கரண்டி
உப்பு – சிறிது
லெமன் ஜூஸ் – அரை ஸ்பூன்

செய்முறை

பாகற்காயை துண்டுகளாக நறுக்கி அத்துடன் மிளகு,சீரகம்,உப்பு சேர்த்து மிக்சியில் தேவைக்கு தண்ணீர் ஊற்றி (அரை டம்ளர்) அடிக்கவும்.
நல்ல நுரை பொங்க அடித்து அதை வடிக்கட்டவும்.
லெமென் பிழிந்து குடிக்கவும்.
அந்த அளவிற்கு கசப்பு தெரியாது.

Thanks to : Web

வெள்ளி, 11 மார்ச், 2011

கட்டா


தேவையானவை: கடலை மாவு & 1 கப், மிளகாய்த் தூள் & அரை டீஸ்பூன், சீரகம் & கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் & கால் டீஸ்பூன்,எண்ணெய் & 2 டேபிள் ஸ்பூன், உப்பு & தேவைக்கு.

தாளிக்க: புளிக்காத தயிர் & ஒன்றரை கப், கடலை மாவு & 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் & கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் & 4, கடுகு & கால் டீஸ்பூன், சீரகம் & கால் டீஸ்பூன், பெருங்காயம் & கால் டீஸ்பூன், கறிவேப்பிலை & சிறிது, எண்ணெய் & 3 டேபிள் ஸ்பூன், நெய் & 1 டீஸ்பூன்.

செய்முறை: ஒரு கப் கடலை மாவுடன் மிளகாய்த் தூள், சீரகம், மஞ்சள் தூள், எண்ணெய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள்.

தனியாக 5 கப் அளவுக்கு தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள்.

அடுத்து, கடலை மாவு கலவையிலிருந்து சிறிது எடுத்து, ஒரு அடி கனத்துக்கு நீளவாக்கில் கயிறு போல் திரட்டுங்கள். இதேபோல் எல்லா மாவையும் செய்து, கொதிக்கும் தண்ணீரில் போடுங்கள்.

நடுத்தர தீயில் 10 நிமிடம் நன்கு வேகவிடுங்கள். வெந்ததும், தண்ணீரில் இருந்து தனியே எடுத்து ஆற விட்டு, ஒரு அங்குலத் துண்டுகளாக அவற்றை வெட்டுங்கள்.

தயிருடன் 1 டேபிள்ஸ்பூன் கடலை மாவு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு, எண்ணெய், நெய் காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் கிளறி, தயிர் கரைசலை யும் சேர்த்துக் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருங்கள். கொதிக்கும்போது வேகவைத்த கடலை மாவு துண்டுகளைச் சேர்த்து, இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். இதை சப்பாத்திக்கு சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள், அடுத்து உங்கள் வீட்டில் தினம்தினம் இந்த சைட் டிஷ்தான் வேண்டும்என்று அடம் பிடிப்பார்கள்.