சனி, 5 மார்ச், 2011

மூட்டு வலி

மூட்டு வலி

காலையில் காபி, டீ, பால் குடிப்பதற்குப் பதிலாக 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்

இஞ்சி ஒரு துண்டு மிளகு ஒரு தேக்கரண்டி, தனியா விதை இரு தேக்கரண்டி

இம்மூன்றையும் அம்மியில் தட்டி 3 டம்ளர் நீர் விட்டு பனை வெல்லத்துடன்

கொதிக்கவைத்து வடிகட்டி தொடர்ந்து காலை, மாலை பருகினால்,

மூட்டு வலியா? அதுன்னா என்ன? என்று கேட்பீர்கள்.


சளித்தொல்லை

மிளகு, துளசி,கற்பூரவல்லி இலை தேவையான அளவு எடுத்து

இவைகளோடு ஒரு சிறு துண்டு இஞ்சி சேர்த்து ஒன்றிரண்டாகத் தட்டி

இரண்டு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி இதனுடன்

பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து காலை, மாலை தொடர்ந்து மூன்று நாள்கள்

குடித்தால் சளித்தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக