தேவையானவை: கடலை மாவு & 1 கப், மிளகாய்த் தூள் & அரை டீஸ்பூன், சீரகம் & கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் & கால் டீஸ்பூன்,எண்ணெய் & 2 டேபிள் ஸ்பூன், உப்பு & தேவைக்கு.
தாளிக்க: புளிக்காத தயிர் & ஒன்றரை கப், கடலை மாவு & 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் & கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் & 4, கடுகு & கால் டீஸ்பூன், சீரகம் & கால் டீஸ்பூன், பெருங்காயம் & கால் டீஸ்பூன், கறிவேப்பிலை & சிறிது, எண்ணெய் & 3 டேபிள் ஸ்பூன், நெய் & 1 டீஸ்பூன்.
செய்முறை: ஒரு கப் கடலை மாவுடன் மிளகாய்த் தூள், சீரகம், மஞ்சள் தூள், எண்ணெய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள்.
தனியாக 5 கப் அளவுக்கு தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள்.
அடுத்து, கடலை மாவு கலவையிலிருந்து சிறிது எடுத்து, ஒரு அடி கனத்துக்கு நீளவாக்கில் கயிறு போல் திரட்டுங்கள். இதேபோல் எல்லா மாவையும் செய்து, கொதிக்கும் தண்ணீரில் போடுங்கள்.
நடுத்தர தீயில் 10 நிமிடம் நன்கு வேகவிடுங்கள். வெந்ததும், தண்ணீரில் இருந்து தனியே எடுத்து ஆற விட்டு, ஒரு அங்குலத் துண்டுகளாக அவற்றை வெட்டுங்கள்.
தயிருடன் 1 டேபிள்ஸ்பூன் கடலை மாவு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள்.பிறகு, எண்ணெய், நெய் காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் கிளறி, தயிர் கரைசலை யும் சேர்த்துக் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருங்கள். கொதிக்கும்போது வேகவைத்த கடலை மாவு துண்டுகளைச் சேர்த்து, இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். இதை சப்பாத்திக்கு சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள், அடுத்து உங்கள் வீட்டில் தினம்தினம் ‘இந்த சைட் டிஷ்தான் வேண்டும்’ என்று அடம் பிடிப்பார்கள்.
வெள்ளி, 11 மார்ச், 2011
கட்டா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக