செவ்வாய், 7 டிசம்பர், 2010

பாகற்காய் சாலட்


தேவையானப் பொருட்கள்:

பொடியாக நறுக்கிய பாகற்காய் - ஒரு கப்,

பொடியாக நறுக்கிய தக்காளி -3/4 கப்,

மிளகு,சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,

உப்பு - சுவைக்கேற்ப,

நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்.

தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை:

பொடியாக நறுக்கிய பாகற்காய், தக்காளி இரண்டையும் கலந்து, அதில் மிளகு&சீரகத்தூள், நல்லெண்ணெய் விட்டு கலந்து முதல் நாள் இரவே ஊறவைக்கவும். 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அப்பொழுதுதான் கசப்பு தெரியாது. மறுநாள் வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து, ஊற வைத்த பாகற்காயைபோட்டு லேசாக பிரட்டி எடுக்கவும். தேவைப்பட்டால் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக