ஞாயிறு, 19 டிசம்பர், 2010

சிரித்த முகம் வேணும் அதனால ஆயுசு கூடும்


சிரித்த முகம் வேணும் அதனால ஆயுசு கூடும்.

"இந்த பஸ்ல எத்தனை வருஷமா கண்டக்டரா இருக்கீங்க??
"ஐந்து வருஷமாக இருக்கேங்க"
"நானும் பல காலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிட்டிருக்கேன்
எவளவோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப் படாம, சிரிச்ச முகத்தோட பயனிகள்ட்ட கிட்ட நடந்துக்கிற உங்கள மாதிரி கண்டக்டரை நான் பாத்ததே இல்லை"
"தொழில்ல எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணும் சார் அமெரிக்காவில் உள்ள நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
"என்ன சார் சொல்றாங்க??
"மனுஷன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா இருக்கும் போது உடம்புல ஒருவித அலைகளை உண்டாக்கி , நியுரோ பெப்டைடுகளை உண்டாக்குமாம், இது உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்படிபட்டவங்கதான் ஆரோக்கியமா அதிக நாள் வாழ்றாங்கலாம்... அது மட்டும் அல்ல... பொறாமை, ஆசை, கோபம், எல்லாத்தையும் கட்டுபடுத்தினா, ஆயிசு இன்னும் கூடும்னு ஆய்வுகள் சொல்லுது, உயிர் போற நேரத்துல கூட பயப்பட கூடாது சார்"
"அடேங்கப்பா இவளவு தெரிஞ்சி வச்சிருகிறதால தான் நீங்க எப்பமும் பதற்றப்படாம சிரிச்ச முகத்தோட வேலை செய்யிறீங்க போல!"
"ஆமாங்க"
ஆனா உங்ககிட்டே இருக்கிற இந்த நிதானம் உங்க டிரைவர்ட்ட இல்லன்னு நினைக்கிறேன்"
"ஏன் அப்படி சொல்றீங்க???"
"இப்ப இந்த பஸ் எப்படி போய்கிட்டு இருக்குன்னு பாருங்களேன், தாறுமாறா தறிகெட்டு ஓடுற மாதிரி தெரியுது, நீங்களாவது முன் பக்கம் போய் ப்ரேக் கிரேக் கழண்டு விழுந்திடுச்சான்னு பார்த்துட்டு வாருங்களேன் ப்ளீஸ்!"
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்கே போய் பார்த்துட்டு வந்துதான் உங்ககிட்டே பேசிட்டு இருக்கேன், வர்ற வழியில்தான் எங்கேயோ விழுந்திருக்கனும்னு நினைக்கிறன்!"
"எது.... பிரேக்கா?
"இல்லை........ டிரைவர்!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக