சனி, 11 டிசம்பர், 2010

அன்னாசி பழக்கறி

தேவையானவை:
அதிகம் பழுக்காத அன்னாசி - ஒன்று
தேங்காய் துருவல் - 100 கிராம்
சோம்பு, சீரகம் - சிறிதளவு
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகாய் வற்றல் - இரண்டு
மஞ்சள் பொடி - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தயிர் - இரண்டு ஸ்பூன்

செய்முறை

அன்னாசி பழத்தை தோல் சீவி, சதுர துண்டுகளாக வெட்ட வேண்டும். தேங்காய் துருவல், சோம்பு, பச்சை மிளகாயை லேசாக தண்ணீர் விட்டு, அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகாய் வற்றல் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பழத்துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அரைத்த கலவை, மஞ்சள் பொடி, உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிட வேண்டும். அடுப்பிலிருந்து இறக்குவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்பாக, இரண்டு ஸ்பூன் தயிரை சேர்க்க வேண்டும். இடியாப்பத்திற்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக