தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - கால் கிலோ
மோர் - 300- 500 மில்லி
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1டீஸ்பூன
அரிசி - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2+1
மிளகு - கால்ஸ்பூன்
சீரகம் - அரைஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - தலா அரைடீஸ்பூன்
வெந்தயம் - கால்ஸ்பூன்
பெருங்காயப்பொடி - 2 பின்ச்
எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 6
கருவேப்பிலை- 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு
து.பருப்பு,க.பருப்பு,அரிசி மூன்றையும் வறுத்து கொள்ளவும்,இளஞ்சிவப்பாக எடுக்க வேண்டும்.
பின்பு அதே வாணலியில் மிளகாய் வற்றல்,மிளகு,சீரகம் போட்டு வறுத்து எடுத்து,பின்பு தேங்காய் துருவல் போட்டு வறுத்து எடுக்கவும்.
பின்பு வறுத்த அனைத்து பொருட்களும் ஆறிய பின்பு பொடி செய்து அத்துடன் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
வெங்காயம்,வெண்டைக்காய் சுத்தம் செய்து கழுவி நறுக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உ.பருப்பு,வெந்தயம்,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.பெருங்காயப்பொடி சேர்த்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.நன்கு காய் வதங்க வேண்டும்.
வெண்டைக்காய் வதங்கிய பின்பு வறுத்தரைத்த விழுதை சேர்க்கவும்.
ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்,கொதிக்க விடவும்.
மோர் சேர்த்தவுடன் குழம்பு பதமாக ஆகிவிடும்.நுரை கூடி கொதி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக