திங்கள், 2 மார்ச், 2009

சத்துமாவு பொடி (குழந்தைகளுக்கு)

தேவையான பொருட்கள்

கேழ்வரகு - அரை கிலோ
சம்பா கோதுமை - ஐம்பது கிராம்
புழுங்கல் அரிசி - ஐம்பது கிராம்
பாதம் - ஐம்பது கிராம்
ஜவ்வரிசி - இருபத்தைந்து கிராம்

உடைத்த கடலை - இருபத்தைந்து கிராம்

செய்முறை


கேழ்வரகு,கோதுமை,அரிசி,உடைத்த கடலை,ஜவ்வரிசி,எல்லாம் தனிதனியாக லேசா கை பொருக்கும் அளவுக்கு வருத்து ஆறவைக்க வேண்டும். ஆறியதும் மிஷினில் கொடுத்து திரித்து மறுபடியும் ஆறவைத்து ஒரு நல்ல ஏர் டைட் கண்டைனரில் போட்டு வைக்கவேண்டும்.


குறிப்பு:

டெய்லி ஒரு ஒரு மேசைகரண்டி எடுத்து ஒன்னறை கப் பால் + தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சி சர்க்கரை ஒரு சொட்டு நெய் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும் நல்ல சத்தான பாணம். இத்துடன் நீங்கள் வேறு ஏதும் சத்தான அயிட்டம் சேர்ப்பதாக இருந்தால் கூட சேர்க்கலாம்


என்னை போன்ற குட்டிப் பாப்பாக்கள் விரும்பி குடிப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக