சனி, 21 மார்ச், 2009

வினிகர்

பொடுகுக்கு
தலையில் பொடுகால் அவதிப்படுபவர்கள், ஒரு தேக்கரண்டி வினிகரில் 3 தேக்கரண்டி தண்ணீர் விட்டு கலந்து, சிறிது சூடு பண்ணி தலையில் மசாஜ் செய்து, 15 நிமிடங்களுக்கு பின் குளித்தால் பொடுகு தொல்லை குறையும். வாரம் இரு முறை செய்தால் நல்ல பலன் தெரியும்.


for Baby - Pamper rash போக

குழந்தையை குளிப்பாட்டியபின் சிறிது நேரம் வினிகர் ஊற்றிய(2 ஸ்பூன்) தண்ணீரில் உட்கார வைத்தால் rash வராது.

ஜன்னல் பளபளக்க:

ஒரு லிட்டர் தண்ணீரில் 1டம்ளர் வினிகர் ஊற்றி ஜன்னல் கம்பிகளை துடைத்துவிட்டு ஒரு பேப்பர் கொண்டு துடைக்கவும்.

பாத்திரம் கழுவும்போது:

எதாவது பாட்டிலில் பாதியளவு தண்ணீர், பாதியளவு வினிகர் கலந்து பாத்திரம் கழுவ்வ பயன்படுத்தவும்.

குக்கரில் துர்நாற்றதை போக்க:
டம்ளர். குக்கர், பிளஸ்க் கறையாகவும், துர்நாற்றம் அடிக்கும் இதை போக்க வினிகர் கலந்து கழுவவும்.

பித்தாளை பாத்திரங்கள் பளபளக்க:

ஒரு பங்கு வினிகர் 5பங்கு தண்ணீர் கலந்து சுத்தம் செய்யவும்.

பெயின்ட் கரை போக்க:கண்ணாடிகளின் உள்ள பெயிண்டை போக்க சூடான வினிகர் கலந்து துடைக்கவும்.

மைக்ரோ ஓவனின் வாடை போக்க:

இறைச்சி செய்த பின்பு வரும் வாடையினை போக்க ஒரு கப்பில் சிறிது வினிகர் ஊற்றி 1 நிமிடம் ஹையில் வைத்து ஆப் செய்யவும்.

தரை பளபளக்க:

வீட்டின் தரைகளை சுத்தபடுத்தும் போது வினிகர் கலந்து துடைக்கவும்,

கேஸ் ஸ்ட்வ்வை சுத்தம் செய்ய

வினிக்ரை துணியில் ஊற்றி துடைக்கவும்.

பசை,கோந்து முதலியவை கட்டிவிட்டால் சிறிது வினிகரை கலந்து இறுக்கம் தளர்ந்து மீண்டும் உபயோகப்படுத்தலாம்.

வாஷ்பேசின் கறைகள் போக்குவதற்க்கு துணியில் வினிகர் முக்கி துடைத்தால் போதும்.

ஜன்னல் கண்ணாடியில் பெயின்ட் பட்டிருந்தால் வினிகர் சூடாக்கி தேய்க்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக