புதன், 11 மார்ச், 2009

குண்டாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா நீங்கள்?

* உண்ணும் உணவின் அளவை திட்டமிட்டு, ஒரு அட்டவணை தயாரித்து, அதன்படி உட்கொண்டால், உடல் எடையை நாளடைவில் குறைக்கலாம். நம் உடலுக்குள் செல்லும் உணவானது கலோரிகளாக மாற்றப்படுகிறது. கலோரி என்பது, நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து கிரகிக்கப்பட்ட சக்தி. நாம் செலவிடும் சக்தியை விட உண்ணும் உணவு அதிகமாகும் போது, செலவிடப்படாத கலோரிகள் கொழுப் பாக மாறி, நம் உடலில் தங்கி விடுகிறது. எனவே, உடல் இளைக்க திட்டமிட்ட உணவை உண்டு, அதிகமாக உழைக்க வேண்டும்.


* வாரத்திற்கு ஒரு நாள், திரவ உணவை மட்டும் உட்கொள்ளலாம். தேவைப் பட்டால், பச்சை காய்கறிகளையும், பழங்களையும் அன்று சாப்பிடலாம்.


* கொழுப்புச் சத்து, மாவுச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை விலக்க வேண்டும்.


* பகல் தூக்கத்தை கண்டிப்பாக விலக்க வேண்டும்.


* காபி, டீ போன்றவற்றில் சர்க்கரை அதிகம் போடக்கூடாது. சர்க்கரை இல்லாமல் அருந்துவது மிகவும் நல்லது. உடல் பருமனாக உள்ளவர்கள் இனிப்பு பதார்த் தங்கள் உண்பதை தவிர்க்க வேண்டும்.


* எண்ணெய் பதார்த்தங்கள் உண்பதை தவிர்க்க வேண்டும். கொழுப்பு சத்து இல்லாத எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவது நல்லது.


* நொறுக்குத் தீனி சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.


* உணவில் காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும்.


* மற்ற உணவு வகைகளை விட கோதுமையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் மட்டுமின்றி, நீரிழிவு, இரத்த அழுத்தம் உடையவர்களுக்கும் கோதுமை ஏற்ற உணவு.


* கெட்டியான தயிரை விலக்கி, மோராக நீர்த்துச் சாப்பிடுவது நல்லது.


* இரவு வேளையில் திரவ உணவு உட் கொள்வது நல்லது. திட உணவை உட் கொண்டால், அதற்குப் பிறகு பால் அருந்துவது கூடாது.


* உறங்கச் செல்வதற்கு முன், பால் சாப் பிட்டால், பாலில் உள்ள கொழுப்பு சத்து அப்படியே தங்கி, உடல் எடையை அதிகப்படுத்தும்.



* வாழைத் தண்டை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி சேர்த்து வந்தால் உடல் எடை நாளடைவில் குறையும். வாழைத்தண்டு உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட நீரைப் போக்குகிறது.


* தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்தி வர, ஊளைச்சதை குறைந்து படிப்படியாக உடல் எடை குறையும்.


*ஒவ்வொரு வேளை உணவு உட்கொள்வதற்கு முன், பொறுக்கும் அள விற்கு சூடாக ஒரு டம்ளர் வெந்நீர் சாப்பிட்டால், உட் கொள்ளும் உணவின் அளவு குறைந்து படிப்படியாக உடல் எடை குறையும்.


*உணவுக் கட்டுப் பாட்டைத் தவிர, உடற்பயிற்சியும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. தினமும் காலை அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். இதனால், உடல் எடை குறைவதுடன், புத்துணர்ச்சியும் ஏற்படும்.


* அதிகாலை திறந்த வெளியில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. நீச்சல் பயிற்சி, சைக்கிள் பெடலிங், ஜாகிங் போன்றவை சிறந்த பலனளிக்கும்.


*பிராணாயாமம் அல்லது சுவாசப் பயிற்சியை முறைப்படிக் கற்று, தினமும் தவறாமல் செய்து வந்தால், தொந்தி விழுவதை தவிர்க்கலாம்.


முயன்றால் முடியாதது என்பது எதுவுமில்லை. எனவே, இவற்றை செய்து உங்கள் எடையை குறைக்க வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக