திங்கள், 30 மார்ச், 2009

காக்கைச் சிறகினிலே...

காக்கைச் சிறகினிலே
நந்தலாலா - நின்றன்
கரியநிறந் தோன்றுதயே
நந்தலாலா; 1

பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா - நின்றன்
பச்சைநிறந் தோன்றுதயே
நந்தலாலா; 2


கேட்கு மொழியிலெல்லாம்
நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா
நந்தலாலா; 3

தீக்குள் விரலைவைத்தால்
நந்தலாலா - நின்னத்
தீண்டுமின்பந் தோன்றுதடா
நந்தலாலா. 4

--பாரதியார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக