திங்கள், 9 மார்ச், 2009

மீன் சம்பால்


தேவையான பொருட்கள்

மீன் - 1/2 கிலோ
தக்காளி - 2
பூண்டு - 2 பல்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
கொத்தமல்லி இலை - சிறிது
காய்ந்த பட்டை மிளகாய் - 6
உப்பு

மீனை நன்கு கழுவி மிளகாய்,உப்பு போட்டு 1/2 மணி நேரம் ஊற வைத்து அரை பொறியலாக பொறித்துக் கொள்ளவும்.
பூண்டை நசுக்கி பச்சை மிளகாய்,கொத்தமல்லியை அரிந்து வைத்து கொள்ளவும்.

மீனை பொறித்த எண்ணெயிலேயே வெங்காயத்தை வதக்கவும்.

பிறகு தக்காளி,பூண்டு போட்டு வதக்கவும்.
அத்துடன் புளித்தண்ணீரை சேர்த்து நன்கு கொதித்ததும் பொறித்த மீனை போட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சுவையான மீன் சம்பால் ரெடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக