செவ்வாய், 17 மார்ச், 2009

ஐபாட், ஐபோன் இவற்றை டிவியுடன் இணைப்பது எப்படி?



நீங்கள் பயன்படுத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் பல்லூடகக் கையடக்கக் கருவியானது (Multimedia handhelds) அதற்கு உரிய சிறிய திரைக்கான வடிவமைப்பில் சிறந்ததே.

ஆனால் அதில் நீங்கள் ஏராளமான புகைப்படங்கள், காணொளிகள் (Video) போன்றவற்றைப் பதிந்து இருப்பீர்கள். சிறியதிரையில் பார்த்துப் பழகிய நமக்கு ஒரு மாறுதலுக்காக இந்தப் படங்களை, வீடியோக்களை பெரிய TV திரையில் நல்ல தரத்துடனும் காண்பதற்கான ஒரு கருவியைப் பற்றி இங்கே காணப்போகிறோம்

ஆரடி நீளமுள்ள ஒரு showTIME என்றழைக்கப்படக்கூடிய AV Cable தான் அது.

கார்களில் பயன்படுத்தக்கூடிய உயர்தரமான ஒலிக்கருவிகளைத் தயாரிப்பதில் முன்னனி வகிக்கும் Scosche நிறுவனம் சமீபத்தில் iPhone மற்றும் iPod Touchக்கான AV cableஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் iPhone, iPod போன்றவற்றின் ஒலி / ஒளியை TV யில் கண்டு / கேட்டு மகிழலாம்.

iPod touch Gen2, iPod nano Gen 4, iPod touch, iPod nano Gen3, iPhone, iPhone 3G and iPod with video போன்ற கருவிகளுடன் இந்த AV cable ஒத்திசைவு கொண்டுள்ளது.

உயர்தரமான கருவியாகவும், எந்தவிதமான திறனிழப்பும்(no signal loss) ஏற்படாத வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது

Schosche கடைகளில் இது 39.99$ மதிப்பில் கிடைக்கிறது.

முகவரி :

http://www.scosche.com/products/sfID1/210/sfID2/321/productID/1622

ஒளிக்களஞ்சியம் : I’m a PC - Microsoft வெளியிட்ட சமீபத்திய விளம்பரங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக