புதன், 11 மார்ச், 2009

Kitchen Tips - 2

* டீ போடும் போது, டீத்தூளுடன் சர்க்கரையை சேர்த்து கொதிக்க விடாதீர்கள்; டீயின் சுவை குறைந்து விடும்.

* கீரை மசியல் செய்ய, கீரையை கடையும் போது, அதனுடன் கால் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கடைய, கீரை தனி சுவையுடன் இருக் கும்.

* சாம்பார் மணக்க வேண்டுமா? சாம்பாரை இறக்குவதற்கு முன், ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் மல்லி, ஒரு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொரித்து, சிறிது கரகரப்பாக அரைத்து கலக்கினால், சாம்பார் "கம... கம...'வென இருக்கும்.

* வெங்காயக் குழம்பு, புளிக்குழம்பு தயாரிக்கும் போது, கடுகுடன் சிறிது சோம்பு சேர்த்து தாளிக்கவும். வாசனையுடன் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.

* சோடா உப்பை அடிக்கடி உணவில் சேர்க்காதீர்கள். வயிற்று உபாதைகளை ஏற்படுத்தக் கூடும்.

* ரவா தோசை ஓட்டலில் கிடைப் பது போல் "மொறுமொறு'வென இருக்க வேண்டுமா? ரவை, மைதா, அரிசிமாவு 1:1:1 என்ற விகிதத்தில் கலந்து மிளகு, சீரகம், பெருங்காயம், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சுடவும்.

* ரசத்தை இறக்கி வைத்ததும், ஒரு துளி நெய் சேர்த்து பச்சை கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கிப் போடுங்கள். மணமும், ருசியும் எடுப்பாய் இருக் கும்.

* ரஸ்க் அல்லது ட்ரை பிரட்டை மிக்சியில் நன்றாகப் பொடி செய்து, ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெயில் வறுத்து வைத்துக் கொள்ளுங்கள். வறுவல், கிரேவி போன்றவற்றில் உப்பு அதிகமாகிவிட்டால், ரொட்டித்தூள் சிறிது தூவி அதிகப்படி உப்பை சரிகட்டி விடலாம். சாதாரணமாகவே, வறுவல், கிரேவி போன்றவற்றிற்கு சுவை கூட்ட இந்த வறுத்த ரொட்டித்தூள் ஒரு ஸ்பூன் சேர்க்கலாம்.

சுகமான தூக்கத்திற்கு...

* தூங்கும் போது தலைக்கு இரண்டு தலையணை வைத்துக் கொள்ளாதீர்கள். முதலில் சுகமாய் இருக்கும் காலப்போக்கில் கழுத்து வலி நிச்சயம்.

* தலையணையே வைக்காமல் படுப்பது நல்லது. மூளைக்கு ரத்தம் சீராகச் செல்லும். கழுத்து வலியும் ஏற்படாது.

* பழகியாச்சே என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? அதிக உயரம் இல்லாத மெலிதான தலையணை வைத்துக் கொண்டு தூங்கப் பழகுங்கள்.

* அடுத்தது படுக்கை விஷயம். மிருதுவான மெத்தை நல்லது அல்ல. கடினமான மெத்தையே முதுகுக்கு நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக