சனி, 21 மார்ச், 2009

பிளாக் மேஜிக்

கூந்தல் "பிளாக் மேஜிக்"
*************************************

மருதாணி பவுடர் - 100 கிராம்
நெல்லி பவுடர் - 10 கிராம்
பிஞ்சு கடுக்காய் பவுடர் - 10 கிராம்

இவற்றுடன் 25 கிராம் டீ டிகாஷனை சேர்த்து, 1 எலுமிச்சம் பழத்தை பிழிந்து முதல் நாள் இரவே ஊறவையுங்கள். மறுநாள் தலையில் இந்த மாஸ்க் போட்டு நன்றாக காய்ந்ததும் அலசிவிடுங்கள் . வராம் ஒரு முறை இந்த மாஸ்க்கை தவறாமல் போட்டுப் பாருங்கள். கொங்ச நாளிலேயே இருக்கிறா நரைமுடிகள் பழுப்பு நிறத்துக்கு மாறி விடும். இந்த பழுப்பு நிறம் மெல்ல மெல்ல கறுப்பாக மாறிவிடும். மேலும் நரை கிட்ட நெருங்காமல் துரத்திவிடும்.

இதை போட நேரம் இல்லையா? ஒரு சுலப வழி

பிஞ்சு கடுக்காய்,நெல்லிக்காய்,கருவேப்பிலை மூன்றையும் ஒரே அளவில் எடுத்து கொள்ளவும். மூன்றும் மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணையை எடுத்து சூடு பண்ணி, அதில் மூன்றையும் ஊறவிடுங்கள். தலைக்கு குளிக்கும் போதெல்லாம் இந்த எண்ணையை சற்று சூடு பண்ணி, தலையில் நன்றாக தேய்த்து சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக